Advertisement

இடிந்து வரும் யூனியன் அலுவலகம்

கொட்டாம்பட்டி, கொட்டாம்பட்டி
யூனியன் அலுவலகத்தின் பல பகுதிகள் இடிந்து வருவதால், உயிர் பலி ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அலுவலகம் 1968 முதல் செயல்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அலுவலகத்தில் நிர்வாக பிரிவுக்கு செல்லும் வழியில் உள்ள சுவர், திட்டமதிப்பீடு பொறியியல் பிரிவு மேற்கூரை இடிந்து வருவதால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன.
கூட்டரங்கம், கோடவுனில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து
கம்பி துருப்பிடித்து 'எலும்புக்கூடாக' காட்சியளிக்கின்றன.
பி.டி.ஓ., பாலசந்தர் கூறுகையில், ''விரைவில் கட்டடத்தை சீரமைக்க திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட உள்ளது,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement