Advertisement

வைக்கோல் விலை ரூ.12 ஆயிரம் கால்நடை வளர்போர் கலக்கம்

பேரையூர், பேரையூர் தாலுகாவில் கடும் வறட்சியால்
வைக்கோல் விலை உயர்ந்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்பகுதியில் விவசாயிகள், கால்நடைகள் வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்துகின்றனர். போதுமான மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டுவிட்டன.
இதனால் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்பயிர்களை சாகுபடி செய்ய முடியாத நிலையில், விவசாயிகள் உள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்களும் வாடி வதங்கி விட்டது. சில இடங்களில்
மட்டும் அறுவடை பணிளை துவங்கியுள்ளனர்.
கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் இந்த பகுதிக்கு சென்று தங்கள் கால்நடைகளுக்கு
அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் அடித்தது போக, மீதமுள்ள வைக்கோல் போர்களை
விலைக்கு வாங்க வருகின்றனர். வைக்கோலுக்கு கடும்
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு ஏக்கர் வைக்கோல் விலை 12 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படுகிறது. பல விவசாயிகள் கால்நடை தீவனம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைக்கோல் ஏற்றி செல்ல 4,500 ரூபாய் மற்றும் டிராக்டர் வாடகை மற்றும் ஆட்கள் கூலி 4000 ரூபாய் உட்பட மொத்தம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கால்நடை விவசாயிகள் கூறியதாவது: மழை இல்லாததால் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை. வைக்கோல் கிடைப்பது மிக கஷ்டமாக உள்ளது.
விலை அதிகமாக உள்ளதால் வாங்க வழியில்லாமல் உள்ளோம். விவசாயம் ஒன்னும் இல்லாமல் போய் விட்டது. கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்தலாம் என நினைத்தோம். அதுக்கும் தீவனம் கிடைக்கவில்லை.
கால்நடைகளை விற்று விட்டு வெளியூர் செல்லலாம் என நினைக்கிறோம், என்றனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement