Advertisement

பூங்காவிற்குள் உரமாக்கும் மையம்

திருப்பரங்குன்றம், மதுரை ஹார்விபட்டி மாநகராட்சி பூங்காவிற்குள் குப்பையை உரமாக்கும் மையம் செயல்படுவதால் மக்கள் அதிருப்தியில்
உள்ளனர்.
பூங்காவின் ஒரு
பகுதியில் நடைமேடையை ஒட்டி குப்பை உரமாக்கும் மையம் உள்ளது. பூங்காவிற்குள் உள்ள மரம், செடிகளில் உதிரும் இலைகளை அந்த தொட்டிகளில் கொட்டி உரம் தயாரிக்கப்படுகிறது. அந்த உரம் பூங்காவிற்குள் உள்ள மரங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ராஜாராம்: பூங்காவிற்குள் காலை, மாலையில் பலர் 'வாக்கிங்' செல்கின்றனர். உரம் தயாரிக்கும் தொட்டிக்குள் இலைகள் மட்டுமின்றி அழுகிய காய்கறி குப்பை, மாட்டுச்சாணங்களை கொட்டுகின்றனர். கழிவுகள் துவாரங்கள் வழியாக வெளியே வழிகிறது.
நடை
மேடையை ஒட்டி மையம் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரகேடும் ஏற்பட்டுள்ளது.
'வாக்கிங்' செல்வோர் மூக்கை மூடிச் செல்லும் நிலை உள்ளது. பூங்காவிற்குள் சிறுவர்கள் விளையாட்டு சாதனங்களில் ஏராளமான சிறுவர்கள் விளையாடுகின்றனர். விளையாட்டு வீரர்களும் பயிற்சி எடுக்கின்றனர். உரம் தயாரிக்கும் தொட்டியால் அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அங்கு இலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அல்லது இந்த மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement