Advertisement

அக். 13-ல் படேல் சிலை திறப்பு

வதோதரா : நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக, நர்மதை நதியோரத்தில் உயரமான சிலை அமைக்க, குஜராத் அரசு திட்டமிட்டது.
கடந்த, 2013ல், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அதற்கான அடிக்கல்லை நாட்டினார்.குஜராத்தின் கேவாடியா பகுதியில், சர்தார் சரோவர் அணைக்கு அருகே, 182 மீீட்டர் உயரமுள்ள இந்த சிலை, 3,000 கோடி ரூபாய் செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது இறுதிக் கட்டப் பணி நடந்து வருகிறது.''படேலின் பிறந்தநாளான, அக்., 31ல், இந்த சிலை திறந்து வைக்கப்படும்,'' என, குஜராத் தலைமைச் செயலர் ஜே.என்.சிங் தெரிவித்து உள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த தொகையில் ஏழைகளுக்கு பலவகைகளில் வரி சுமையை குறைத்து இருக்கலாம்...

  • Shekar - Mumbai,இந்தியா

   நாம் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை வைக்கலாம், அவர்கள் படேலுக்கு வைக்கக்கூடாதா

 • Jayaraman Gopalakrishnan - Singapore City,சிங்கப்பூர்

  இது ஒன்றும் அண்ணா MGR சிலை போன்று இல்லை. இதன் பலன் அறியாதவர்கள் பொறுத்திருந்து பார்க்கவும். முதலில் திரு படேல் அவர்களுக்கு செய்யும் மரியாதையை. அதையும் தாண்டி இதற்காக செலவிடப்பட்ட தொகை சுற்றுலா மூலம் மீட்கப்படும். இந்தியாவை ஒருங்கிணைத்ததில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பங்கு மிகவும் உன்னதமானது என்பதாலேயே இந்த சிலை. இங்கு அமையவிருக்கும் ஆராய்ச்சிக்கூடம் உட்பட பல வசதிகள் மக்களுக்கு பயன்படும் விதத்திலேயே இருக்கும்.

 • Udman -

  Useless government

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  கீழடியில் ஆய்வு செய்ய ஒதுக்கிய பணம் ஐந்தாண்டுகளுக்கு 30 லட்சம். அதாவது ஒரு வருடத்துக்கு 6 லட்சம். ஒரு சின்ன ஆய்வாளர், ரெண்டு வாட்ச்மேன் கூட வைக்கமுடியாது, ஆனா அங்கே சிலைக்கு 3,000 கோடி.. ஏன், இதை தனியாரிடம் கொடுத்து கொண்டாடலாம்? டோல் கேட்டில் ஆரம்பித்து, விமானம் வரை தனியாருக்கு விற்க தெரியுது. ராணுவ தளவாடம் முதல், விமான உதிரிபாகம் வாங்குவது தனியாருக்கு தாரை வார்க்க முடியுது. இதை சுற்றுலா துறைன்னு அம்பானி, அதானி கிட்டே கொடேன்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  படேல் இன்னிக்கி உசிரோடு இருந்திருந்தால் படால்ன்னு அடிச்சிருப்பாரு. எதுக்குடா 3000 கோடியை வீணாக்குறீங்கன்னு..

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   இந்தியாவின் இரும்பு மனிதருக்கு நாம் செய்யும் பெருமை, படேல் புகழ் ஓங்குக,

  • Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

   படேல் இல்லை எனில் இந்தியாவை கூறு போட்டிருப்பார்கள், நமக்கு கிடைத்த பொக்கிஷம் படேல், இன்றைய மாணவர்களுக்கு படேல் உறுதியை கற்பிக்க வேண்டும், வாழ்த்துக்கள்,

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   இந்தியாவின் இரும்பு மனிதருக்கு நாம் செய்யும் பெருமை, படேல் இல்லை எனில் இந்தியாவை கூறு போட்டிருப்பார்கள். - இன்று அவரது பெயரை சொல்லிக்கொண்டு இந்தியர்களை கூறு போடுகிறார்கள். இரும்பு மனிதருக்கு தங்கத்திலேயே சிலை செஞ்சாலும் 3,000 கோடி தேவைப்படாது.

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

   ஹைதராபாத் நிஜாம் கிட்டேயிருந்து மாநிலத்தை பலவந்தமாக பிடுங்குனாருல்ல, நமக்கு கொஞ்சம் எரியத்தானே செய்யும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement