Advertisement

நைஜீரியா பஸ் விபத்து : 22 மாணவர்கள் பலி

கானோ: நைஜீரியாவில், பள்ளிக்கூட பஸ் விபத்துக்கு உள்ளானதில், 22 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.ஆப்ரிக்க நாடான, நைஜீரியாவின், வடக்கு பகுதியில் உள்ள, பாவுச்சி என்ற இடத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட பஸ், கானோ என்ற இடத்தை நோக்கி, நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அங்கிருக்கும் வானொலி நிலையத்தை சுற்றிப் பார்க்க, மாணவர்கள் சுற்றுலா சென்னர்.காயா என்ற நகரத்திற்கு அருகே பஸ் வந்த போது, எதிரே, தக்காளி ஏற்றிய லாரி அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. பள்ளி பேருந்தும் வேகமாக வந்து கொண்டிருந்தது. அங்கு, சாலை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருந்ததால், சாலையில், ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் இருந்தன.திடீரென சாலையில் இருந்த பள்ளத்தை பார்த்த டிரைவர், அதை தவிர்ப்பதற்காக, பஸ்சை திருப்பி உள்ளார். இதையடுத்து, எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது, பஸ் மோதியது. இந்த பயங்கர விபத்தில், 22 மாணவர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்; மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ந்தனர். நைஜீரியாவில், மோசமான சாலைகளாலும், அதிவேகமாக வாகனங்களை இயக்கும் டிரைவர்களின் அலட்சியத்தாலும், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement