Advertisement

தென் ஆப்ரிக்கா அதிபரின் இந்திய நண்பர் வீட்டில், 'ரெய்டு'

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்கா அதிபர், ஜேகப் ஜுமாவின், இந்திய வம்சாவளி நண்பர், அதுல் குப்தாவின் வீட்டில், சிறப்பு போலீசார், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, தென் ஆப்ரிக்காவின் அதிபராக, ஜேகப் ஜுமா உள்ளார். இந்திய வம்சாவளி தொழிலதிபரான, அதுல் குப்தா, அதிபர் ஜேகப் ஜுமாவுக்கு நெருங்கிய நண்பர். அதிபருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, அரசு ஒப்பந்தங்களை, அதுல் குப்தா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அரசு உயர் பதவிகளுக்கான நியமனங்களிலும், அதுல் குப்தா தலையிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜோகன்னஸ்பர்கில் உள்ள, அதுல் குப்தாவின் வீட்டில், நேற்று, சிறப்பு அதிரடி படை போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியை சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டன. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அதுல் குப்தா மறுத்துள்ளார்.
அதிபர் ஜேகப் ஜுமாவுக்கு எதிராக, பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்து உள்ளதால், அவரை ராஜினாமா செய்யும்படி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஜேகப்பை, அதிபர் பதவியில் இருந்து விலகும்படி, ஆளும், ஆப்ரிக்க தேசிய காங்., கட்சி வலியுறுத்தி உள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement