Advertisement

'மாஜி' அமைச்சருக்கு குத்து : எம்.எல்.ஏ.,வுக்கு ஜெயில்

ஐதராபாத்: முன்னாள் அமைச்சரை தாக்கிய வழக்கில், தெலுங்கு தேசம், எம்.எல்.ஏ., பிரபாகருக்கு, ஆறு மாத சிறை தண்டனை வழங்கி, நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இந்த கட்சியைச் சேர்ந்த, சிந்தாமனேனி பிரபாகர் என்பவர், மேற்கு கோதாவரி மாவட்டம், டென்டு லுாரு தொகுதி, எம்.எல். ஏ.,வாக உள்ளார்.
கடந்த முறை, காங்., ஆட்சியின் போது, இதே தொகுதியில் இவர், எதிர்க்கட்சி, எம்.எல்.ஏ.,வாக இருந்தார்.
அப்போது, பிரபாகரின் தொகுதியான, டென்டுலுாரில், மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஆளுங்கட்சியாக இருந்த, காங்., சார்பில், அப்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர், வசந்த குமார், நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அந்நிகழ்ச்சியின் போது, வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு, வீட்டுமனை வழங்குவதில், எம்.எல்.ஏ., பிரபாகருக்கும், அமைச்சர் வசந்த குமாருக்கும், மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சு முற்றியதில், வசந்த குமாரை கீழே தள்ளிவிட்ட பிரபாகர், அவர் மீது பாய்ந்து, வயிற்றில் ஒரு குத்து விட்டார்.
வசந்த குமார் அளித்த புகாரை அடுத்து, பிரபாகர் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.
பீமதோல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர், வசந்த குமாரை தாக்கிய, தெலுங்கு தேசம், எம்.எல்.ஏ., பிரபாகருக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement