Advertisement

பச்சோரி மீதான பாலியல் புகார் செய்தி வெளியிட தடையில்லை

புதுடில்லி: பிரபல சுற்றுச்சூழல் விஞ்ஞானியும், 'டெரி' அமைப்பின் முன்னாள் தலைவருமான, ஆர்.கே. பச்சோரி மீதான பாலியல் புகார்கள் தொடர்பான செய்திகளை வெளியிட, ஊடகங்களுக்கு தடை விதிக்க, டில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.'டெரி' எனப்படும், சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரும், பிரபல சுற்றுச்சூழல் விஞ்ஞானியுமான, ஆர்.கே.பச்சோரி மீது, பல்வேறு பாலியல் புகார் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள், டில்லி நீதிமன்றத்தில் நடக்கின்றன. பச்சோரி குறித்த செய்தி களை வெளியிடுவதற்கு, ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை, நீதிமன்றம் விதித்திருந்தது. இதை எதிர்க்கும் வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கூறியதாவது:பச்சோரி குறித்த செய்தி களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடு விதிப்பதில் எந்த நியாயமும் இல்லை; அது பத்திரிகை சுதந்திரத்தை பறிப்பதுடன், செய்திகளை அறிந்து கொள்ளும் மக்களின் உரிமையையும் தடுப்பதாக அமைந்து விடுகிறது.அதனால், செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது. அதே நேரத்தில், தனிப்பட்ட நபர் மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்கள், அமைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், செய்திகளை வெளியிட வேண்டும். பச்சோரி குறித்த செய்தி களை வெளியிடுவதற்கு முன், அவர் தரப்பு கருத்தையும் கேட்டு வெளியிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement