Advertisement

பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு; தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு

பொதுத் தேர்வுகளில், மாணவர்களின் அச்சம் தீரும் வகையில், பிரதமர் மோடி, நாளை,
தேர்வு உரை நிகழ்த்துகிறார். இதை, இணையதளத்தில் பார்க்கவும், கேட்கவும், அரசு, தனியார் பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தீவிர பயிற்சி
நாடு முழுவதும், 10 - பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, மார்ச் முதல், பொதுத் தேர்வுகள் துவங்குகின்றன.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, பல்வேறு வகை நுழைவுத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதற்காக, மாணவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், பொதுத் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி எழுத, 'தேர்வு வீரர்கள்' என்ற பொருள்படும் வகையில், 'எக்சாம் வாரியர்ஸ்' என்ற பெயரில், புத்தகம் எழுதி உள்ளார்.


இந்த புத்தகத்தை வாங்கி, மாணவர்களுக்கு வழங்க, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.


இதை தொடர்ந்து, பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அச்சம் தீரவும், தன்னம்பிக்கை ஏற்படுத்தவும், பிரதமர் மோடி, நாளை, டில்லியில், மாணவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.


சிறப்பு வசதி

இந்த உரையை நேரடியாக, மத்திய மனிதவள அமைச்சக இணையதளம் மற்றும் பல்வேறு மாநில இணையதளங்களிலும், 'யூ டியூப்,
வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, மாணவர்களுக்கு ஒளிபரப்ப, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மோடியின் தேர்வு உரை நிகழ்வை பார்க்க, சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வை, அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பார்க்க வேண்டும் என, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (51)

 • SINDHANAI SEI - ANAIMALAI,இந்தியா

  ஏல, மோடிஜி பேசறது, முதல்ல வாத்தியாருக்கு புரியால, அவர் ஹிந்தியில்லா பேசுவாக, எந்த வாத்தியாரு ஹிந்தி படிச்சிருக்காரு, யாரு அவரை படிக்க விட்டல, சொல்லுல, உனக்கு ஹிந்தி தெரியுமா?/ அட தமில்லா ஒழுங்கா மொழிபெயர்த்து சொல்லவங்களால? சீரியல் தமிழ் போல இல்லாம இருந்த சரித்தனல, என்ன நான் சொல்லறது. சிந்தனை செய் மனமே, தினமே நீ சிந்தனை செய் மனமே.

 • Arasu - Madurai,இந்தியா

  அதிமுக காரனுக்கு நல்ல வாய்ப்பு , இத சொல்லி கொஞ்ச காச ஆட்டைய போட்டுருவானுங்க வேற ஒரு பயனும் உண்டாக்கப் போறதில்ல

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  பாராளுமன்றத்துக்கு செல்லவே பயப்படும், நிருபர்களை சந்திக்கவே பயப்படும் ஒருவரின் உரையா மாணவர்களின் பயத்தை போக்கப் போகிறது? (மறைமுக இந்தி திணிப்பா?).

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  நல்ல முயற்ச்சி அடிமைகளின் விமர்சனம் பற்றி கவலை இல்லை. கிறிஸ்து மிஷினரி ஸ்கூல் ஒளிபரப்பியது என பார்ப்பது அவசியம். பிரதமர்,,,,,,,,, முதல்வர், போன்றோரின் உரைகள் நிராகரித்தால் தேச துரோகம் அதற்கு ஒரே தண்டனை பள்ளியின் அனுமதி ரத்து செய்து வேறு நிறுவனத்திடம் மாணவர்களை ஒப்படைப்பது.

 • Murali - chennai,இந்தியா

  மோடியை வசை பாடுவதாகவே இருக்கட்டும். அதில் என்ன குற்றம் கண்டீர் பக்தால்ஸ். நீங்கள் மற்றவர்களை எப்படி தர குறைவாக எழுதுகிறீர்கள் என்பதை எண்ணி பாருங்கள். இதிலுள்ள நியாயம் தெரியும் . பிறர்க்கு இன்ன முற்பகல் .................

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அராஜகம் ஆணவம் சர்வாதிகாரம். .இளம் மனங்களை, காரேபுரே ன்னு ஏதோ மொழியில் ஒலிபரப்புவதை கேட்டே ஆக வேண்டும் என நிர்ப்பந்தப்படுத்துவதை வேறென்ன சொல்ல? அநியாயம்.

 • V.Thiyagarajan - chennai,இந்தியா

  தேநிர் விற்றவர் நாட்டின் பிரதமரான அனுபவம் இருக்கு அது போதும் மாணவர்களுக்கு உரையாற்ற

 • அப்பாவி - coimbatore,இந்தியா

  அப்துல் காதிருக்கும் அம்மாவைசைக்கும் என்ன சம்பந்தம்? பாவம் மாணவர்கள்

 • yila - Nellai,இந்தியா

  இப்போதைய தேவை.... ஒரு வழி அறுப்பு அல்ல.... இருவழி பத்திரிக்கையாளர் சந்திப்பு...அது எப்போது என்று கேட்டு சொல்ல முடியுமா?

 • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

  மிக நல்ல ஏற்பாடு அரசு பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் தத்தம் மக்களை அரசு பள்ளிகளிலேயே சேர்க்கவேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். அரசு பள்ளிகள் தானாகவே தரம் உயரும்.

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  @ ரகுராமன்... your response was amusing, and the way you compared some companies with Government activities. First understand one thing.... a head of the Government is not a Boss. Government is not a private entity. Private firms work for the profit of the company, it is there only sole intention, because the only object is profit, if you compare the same with activities of the government, then it is foolish. Government is for the people, the companies you mentioned work for profit alone. You may be in US, understand the tem and then comment.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  அடேங்கப்பா சிரிப்பு தாங்க முடியல .. பரீட்சை எழுதுவது பற்றி இவர் பாடம் எடுக்க போகிறாரா ?? கால கொடுமை ..

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  அடிமை அமாவாசைகளின் மோடி விசுவாசத்துக்கு அளவில்லாமல் போய் விட்டது.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ஏற்கனவே குஜராத் முதல்வராக இருந்த பொது மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க கல்வியே கற்பக தரு என்ற புத்தகம் எழுதியுள்ளார் மோடி . இந்த புத்தகமும் மாணவர்களுக்கு தேர்வு பயங்களை நீக்கி உற்சாகம் பயப்பதாக அமையும். ஒரு முறை ஆசிரிய தினத்தில் மோடி பேசுவதை அணைத்து பள்ளிகளிலும் கேட்க ஏற்பாடு செய்தார்கள் அதை மாணவர்களோடு பேசுவது ஒரு புறம் மறு புறம் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் கன்னெக்ட் செய்யும் தொழில் நுட்பம் உள்ளது என அறியும் ஒரு பரிசோதனை முயற்சி என பிரதமர் கூறினார் . இப்போது தொழில் நுட்பம் வானளாவ வளர்ந்துள்ள நிலையில் அதற்கான செலவும் குறைந்துள்ள நிலையில்இன்னமும் எத்தனை பள்ளிகளில் அரசு ஒதுக்கீடு செய்த நிதியை கொண்டு டிஜிட்டல் இணைப்பை தானாக முயன்று பெற்றுள்ளனர் என அறிந்து அவ்வாறு செய்யாத மாநிலங்களின் கல்வி அமைச்சர்களை விரைவில் இதை உருவாக்க சொல்ல வேண்டும் . பல்வேறு நாட்டிலிருந்தே மாநிலத்திலிருந்து நாம் வல்லுனர்களின் அறிவியல் விஷயங்களை டிஜிட்டல் முறையில் நமது பள்ளி மாணவர்களுக்கு இருந்த இடத்திலிருந்தே மாதம் இரு முறை கற்பித்து காண செய்யலாம்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஏழைகளை மதிக்கவேண்டும் என்ற ஒரு பெரும் பாடத்திற்கு இன்றைய பிரதமரே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. தனது குடும்பத்தை காப்பாற்ற ரயில்வே பிளாட்பாரத்தில் டீ விற்றவர். இது தன்னலம் கருதாது, வீண் ஜம்பம் இல்லாது, தனது குடும்பத்தை காப்பாற்ற ஒரு சிறுவன் அந்த சிறு வயதிலேயே எடுத்து கொண்ட முயற்சியை எடுத்து காட்டுகிறது. அதே அர்ப்பணிப்பு மனப்பான்மையோடு இருந்த சிறுவன், வயது வந்தவுடன் நாட்டிற்காக குடும்பத்தை விட்டு விலகி, நாட்டிற்காக்க சேவை செய்ய புறப்பட்டார். தான் ஒரு காலத்தில் இந்த நாட்டின் மிகப்பெரிய பொறுப்பிற்கு வருவோம் என்ற உணர்வு கொஞ்சமும் இன்றி ஆன்மீக வாழ்க்கைக்கு புறப்பட்டார். ஆனால் பாரத அன்னை, இந்த தவப்புதல்வனை தனக்குள் இழுத்து கொண்டாள். அந்த அர்ப்பணிப்பு மனப்பான்மையும், சேவை செய்யும் நல்லுள்ளமும் தான் வேறு எந்த அரசியல் அடித்தளமும், பெரிய குடும்பங்களின் ஆதரவும் இல்லாத அவரை இப்போது இந்த நாட்டின் மக்கள் மனம் கவர்ந்த பிரதமராக ஆகி இருக்கிறது உலக தலைவனாக ஆக்கி இருக்கிறது . இதுவே போதும் அவர் இந்தியாவின் மட்டுமின்றி உலகின் அனைத்து மாணவ செல்வங்களுக்கும் அறிவுரை சொல்லும் தகுதி படைத்தவர் என்று . ஏழைக்குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால், தன்னலமற்ற சேவையால், உண்மையால் உயர்த்த உத்தமர் என்று சொல்வதற்கு மோடியை விட உலகில் யாருமே இப்போது இல்லை. தற்போதைய மாணவ செல்வங்கள் இந்த தவப்புதல்வனிடமிருந்து அறிவுரை கேட்பது அவர்கள் செய்த ஒரு பாக்கியம் என்று தான் சொல்லவேண்டும். இந்த பாக்கியம் மாணவப்பருவத்தில் எங்களுக்கு இல்லாமல் போனது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மோடி தனியார் பள்ளிகளை மூட சொன்னால் அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்கும்... நிறைய ஆசிரியர் பணிக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்... பெற்றோர்களுக்கு நெறைய மனமும் மிச்சமாகவும்... எங்கும் ஒரே பாட திட்டமும் இருக்கும்...

 • balakrishnan - coimbatore,இந்தியா

  தேவையற்ற வேலை, இவரோட உரையை கேட்பதற்கு பதில் ஏதாவது ரெண்டு பாடத்தை படிக்கலாம், இவர் பேச்சை கேட்பதே குழந்தைகளுக்கு ஏதாவது அச்சத்தை ஏற்படுத்திவிடும், மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் ஏதாவது ஒரு சிறந்த கல்வியாளரை கொண்டு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யலாம், அதுவும் தேர்வு சமயத்தில் கூடாது, ரெகுலராக அப்படி ஒரு வகுப்பு நடக்கவேண்டும், அரசியல்வாதிகளுக்கு இவர் போதனை செய்யட்டும், அது அவர்களுக்கு தேர்தலில் எப்படி ஜெயிப்பது என்பது தெரிந்துகொள்ளமுடியும், மாணவர்களை விட்டுவிடுங்கள்

 • suresh - chennai,இந்தியா

  மோடியின் உரை ஹிந்தியில் இருந்தால், ஒட்டு மொத்த இந்திய மாணவர்களை போய் சேராது, அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பள்ளிகளில் ஒளிபரப்பப்பட்டால், ஒட்டு மொத்த இந்திய மாணவ மாணவிகளை போய் சேரும்.

 • ஆப்பு -

  மைக் கிடைச்சா போறும்...அறிவுரை யாருக்கு வேணா ரெடி....

 • JShanmugaSundaram -

  நல்லவிஷயம் திரு மோடிஜி அவர்களின் இச்செயல்பாராட்டத்தக்கது

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  நேருவின் ரேடியோ பேச்சுக்களை பள்ளிகளில் ஒலிபரப்பி அதனைக் கட்டாயமாகக் கேட்கவைத்தது மறக்குமா? என்னவோ நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அவர்தான் மாமா என பிரச்சாரம்செய்து சென்டிமெண்டாக வாக்குகேட்டதும் மறக்காது

 • செந்தமிழ்அரசு -

  முதலில் மக்களின் மனதில் உள்ள எதிர்கால பயத்தைப் போக்கட்டும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  டிகிரி சர்டிபிகேட்டை ஒளித்து வைப்பது எப்படின்னு புத்தகம் எழுத வேண்டிய ஆசாமி.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  மாணவர்கள் சிறப்பாக தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்...

 • vidhuran - chennai,இந்தியா

  எதற்கெல்லாம் பிரதமர் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லையா?

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  மோடி என்ற பெயரில் பஞ்சாப் நேஷனல் பாங்கில் ஆயிரம் கோடிகளுக்கு மேல் ஊழல் பண்ணி விட்டார்களாமே, உண்மையா?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஹ்ஹாஹ்ஹா எனக்கு செய்திய விட இந்த மோடி எதிர்ப்பாளர்கள் வந்து பொறண்டு பொறண்டு பொலம்புவானுக பாரு அத பார்க்கிறதுக்குதான் ரொம்ப ஆவலா இருக்கு டெய்லியும். மொதல்ல எல்லாம் செம கடியா இருக்கும், என்னடா இது சுத்த லுச்சா பசங்க மாறி சொன்னதை புரிஞ்சுக்காம, எத சொன்னாலும் திசை திருப்பி விட்டு சண்டை மூட்டி விடுறானுக, இப்புடியே போனா நாடு என்ன ஆகுறதுன்னு. ஆனா இப்போவெல்லாம் இதுவே ஒரு ஊட்டசத்து டாணிக் மாறி ஆகி போச்சு எனக்கு. இது வந்து, இது வந்து, ஒரு போதை மாறி ஆகி போச்சு. இப்போ எல்லாம் இது இல்லாம இருக்க முடியறதில்லை எனக்கு. இவங்க எல்லாம் எதுக்க எதுக்க, இவங்கெல்லாம் வயித்தெரிச்சலில் தூற்ற தூற்ற அதெல்லாம் அப்புடியே உள்வாங்கிட்டு மோடி இன்னும் இன்னும் பெருசு பெருசா வளரனும், இவனுகள கண்ணுகள்ல வெரல விட்டு ஆட்டனும், இவனுக எல்லாம் எரிச்சல் தாங்க முடியாம பைத்தியம் புடிச்சு பாய பிராண்டிட்டு அலையணும். டெய்லியும் புலம்பி புலம்பி வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கணும். ஏண்டா நம்ம பொழப்ப பாக்காம மோடியை எதிர்த்துக்கிட்டு, இன்னிக்கு நம்ம வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கிறோமேன்னு நெனச்சு நெனச்சு அலுவனும். அந்த ஒரு ஆசை அப்புடியே என் கண்ணுல தீ மாறி எரியுது. நாம நல்ல விதமா சொல்லி பார்த்த்தோம், பொறுமையா சொல்லி பார்த்த்தோம், கிளி புள்ளைக்கு சொல்லுற மாறி சொல்லி பார்த்த்தோம். இவனுக திருந்துற மாறி தெரியல. திருந்தவும் மாட்டானுக. இனி அமைதியா இருந்திட வேண்டியதுதான். அப்படி இவனுக வயிறு ஏறியிற மாறி மோடி மோசம்னா,கண்டிப்பா மோடி தோத்து போயி, அடுத்த தேர்தல்ல முக்காடு போட்டுட்டு போகட்டும். அப்படி இல்லேனா மக்கள் என்ன சொல்றாங்கன்னு பாத்திடலாம் இப்போ வர தேர்தல்ல. ஆனா அது வரைக்கும் நான் இந்த சத்து டானிக்கை டெய்லியும் குடிச்சிட்டே இருப்பேன்...., குடிச்சிட்டே இருப்பேன்...., குடிச்சிட்டே இருப்பேன்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement