Advertisement

'முன்னாள் துணைவேந்தர்கள் வழியை பின்பற்றினேன்' - லஞ்ச, 'செக்' வைத்த இடம் கணபதிக்கு ஞாபகம் இல்லையாம்!

கோவை : 'பல்கலையில், முன்னாள் துணைவேந்தர்களின் வழிமுறையை பின்பற்றினேன்; 'செக்' வைத்த இடம் ஞாபகம் இல்லை' என, 'சஸ்பெண்ட்' செய்யப் பட்ட, துணைவேந்தர்,
கணபதி, போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலையில், உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கி கைதான, துணைவேந்தர், கணபதி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐந்து நாட்கள், 'கஸ்டடி' எடுத்து விசாரித்து வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும், 29 லட்சம் ரூபாய்க்கான, 'செக்' குறித்து போலீசார் கேட்டனர்.


கிடுக்கிப்பிடி விசாரணை




முதலில், 'செக்' வாங்கவில்லை என்றவர், ஒரு கட்டத்தில், லஞ்ச பணத்தை, நான்கு, 'செக்'குகளாக வாங்கியதாகவும், அவற்றை வைத்த இடம் ஞாபகம் இல்லை எனவும், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.


பேராசிரியர் பணியிடங்களை நிரப்பியது தொடர்பாக, போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை காட்டி விசாரித்தனர். பெரும்பாலான கேள்விகளுக்கு, கணபதி மவுனமாகவே இருந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.


உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக, பதிவு செய்யப்பட்ட ஆடியோ குறித்த கேள்விக்கு, தான் திட்டமிட்டு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். தனக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலரது பெயர்களை மட்டும், கணபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. பல்கலையில் பல்வேறு துறை, அலுவலகங்களில் நடந்த ஊழல் குறித்தும், போலீசார் விசாரித்தனர்.


அப்போது, பல்கலையில் முன்னாள் துணைவேந்தர்கள் பின்பற்றிய விதிமுறைகளையே தானும் பின்பற்றியதாக, கணபதி தெரிவித்தார். இதன்பின், உயர்கல்வி துறையைச் சேர்ந்தவர்களின் ஊழல் தொடர்புகள் குறித்தும், சொத்து விபரங்கள் குறித்தும், போலீசார் விசாரித்தனர்.




லஞ்ச ஒழிப்பு




போலீசார் கூறுகையில், 'லஞ்சம் பெறப்பட்டது மற்றும் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், கணபதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.


'கஸ்டடி விசாரணை முடிந்த பின், இவருக்கு உடந்தையாக இருந்தவர்களை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்' என்றனர்.

கல்வியாளர்கள் வேதனை





பல்கலையில் நிரப்பப்பட்ட, 72 பணியிடங்களுக்கு, தலா, 30 - 40 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. பேராசிரியர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.


குறிப்பாக, தேர்வுக்குழுவில் இருந்த துணைவேந்தர் மற்றும் தர்மராஜ் அல்லாத, வேறு
ஒரு பேராசிரியருக்கும் பெரும் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.பல்கலையில், 39 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், பல்கலை மானியக்குழுவின் விதிகளையும் மீறி, 72 பேரை பணி நியமனம் செய்துள்ளதற்கு, லஞ்சமே முக்கியக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.


பெரும்பாலான பணியிடங்கள், தேவையற்றவை எனவும், பல்கலையின் நிதியைக் கரைப்பவை எனவும், பல்கலை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.உதாரணமாக, உறுப்புக் கல்லுாரிகளில், அதிக வருவாய் தரக்கூடிய வால்பாறை கல்லுாரிக்கே, தொகுப்பூதிய அடிப்படையில் தான், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், மிகவும் குறைவான மாணவர்களைக் கொண்ட மொடக்குறிச்சி கல்லுாரியில், நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தர், கண பதியை நிர்ப்பந்தித்தும், முழுக்க முழுக்க அரசியல் தலையீட்டிலும், இந்த நியமனங்கள் நடந்துள்ளதாக புகார் வாசிக்கப்படுகிறது.
மொடக்குறிச்சி கல்லுாரியில் இணைத்து நடத்தப்படும் முதுகலை கல்வி மையத்தில், 100க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர்.



ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் தரக்கூடிய இந்த மையத்துக்கு, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, ஆண்டிற்கு, 1.25 கோடி ரூபாய், பல்கலை நிதியிலிருந்து செலவிடப்படுகிறது.ஆளுங்கட்சியினரால் பரிந்துரைக்கப்பட்ட, 28 பேரில், ஆறேழு பேரை மட்டுமே, துணைவேந்தராக இருந்த கணபதி, பணி நியமனம் செய்துள்ளார்.


இதன் காரணமாக, உறுப்புக் கல்லுாரிகளில் தங்களுக்கு வேண்டியவர்களை, ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகர்கள் நியமித்துக் கொண்டு, ஒப்புதல் பெற்று விட்டனர் எனவும் கூறப்படுகிறது.


எதிர்பார்ப்பு




லஞ்ச துணைவேந்தரை கைது செய்திருப்பது, பாராட்டுக்குரிய விஷயம்; அதே நேரத்தில், அவருக்கு துணையாகவும், இணையாகவும் முறைகேடு செய்த மற்றவர்களும் தப்பி விடக்கூடாது என்பதே, கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு. இதற்கு, நியாயமான, நேர்மையான விசாரணை நடக்க வேண்டியது அவசியம்; அதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, கவர்னருக்கே உள்ளது.


கம்ப்யூட்டர் முறைகேடு பல்கலையில் நடந்த முறைகேடுகள் குறித்து, அடுக்கடுக்கான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது, கம்ப்யூட்டர் வாங்கியதில், 94 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்காக, கம்ப்யூட்டர் துறையில் ஒருவரை, கொள்முதல் அதிகாரியாக நியமித்து, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து பொருட்களை வாங்கியுள்ளனர். உதிரி பாகங்களும், ஒவ்வொரு விலையில் வாங்கப்பட்டுள்ளன. இது குறித்து, பல்கலை தணிக்கை துறையினர், விதிமுறைகளை பின்பற்றாமல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் அளித்தனர். இப்புகார் மீது, எந்த நடவடிக்கையும் இல்லாததால், விசாரணை நடத்த கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (46)

  • Manian - Chennai,இந்தியா

    இனியன்: நிகழ் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இந்த லஞ்ச வியாதி திடிரென்று வரவில்லை என்பதையும் சொல்லவில்லை. ராமசாமி-லட்சுமண சாமி முதலியார்கள் தான் பிராமண வெறுப்பை வளர்த்தார்கள். ஆனால், நீண்ட தூர பார்வை, புள்ளி விவரம் இல்லாததால் தங்கள் சியும் ஜாதி பிரச்சினை தமிழ் நாடடையே சீரழிக்கும் என்பதை புரிந்து கொள்ளவில்லை. பிறகு கருணாவின் வெளிப்படை பிராமண துவேஷம் (அது வெறும் வேஷம் தான்- அவரது வக்கீல்கள், கணக்கர், சார்ட்டர்டு அக்கவுண்டுகள் எல்லாமே பிராமணர்களே) ஜாதி-மதம்-இட ஒதுக்கீடாக ஓட்டுவங்கிகளாக பிரிக்கப்படடன. ஆகவே, தகுதியானவர்கள் யாருமே சுமார் 1960 முதல் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, இன்ஜினியர்களா ... வரவில்லை. ஏழை மலை ஜாதியினருக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய கல்வி, உதவி தொகை, வேலைகள் போன்றவை அவர்களில் கருணாவிற்கு துதி பாடிய தகுதி இவர்களுக்கே கிடைத்தது. அதன் தொடர்ச்சியே நீங்கள் சொல்லும் இன்றைய நிலை. கடந்த கால தவறுகளை முதலில் ஒப்புக் கொள்ளவேண்டும். அவற்றை முடிந்தவரை சீர் திருத்த வேண்டும். இதற்கு இன்னம் 50 -60 வருஷங்கள் ஆகும். அமெரிக்காவில் இன்னும் கறுப்பர்கள் வெள்ளையர்களை குறை கூறிக்கொண்டு , தங்கள் வாழவை முன்னேற்றகே கொள்ளாமல் கடை நிலையில் இருப்பது போலவே, பிராமணர்களை குறை கூறிக்கொண்டு இன்னும் தமிழ் நாடினால் முட்டாள்களாக இருப்பவர்கள், ஓட்டுக்கு காசு வாங்கி திருடர்களை தேர்ந்தெடுக்கும்போது, நல்லவர்களுக்கு வேலை ஏது. எந்த சமுதாயத்திலும் எல்லோருமே திருடர்களாக இருப்பதில்லை. ஐயர்கள் இன்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேல் நாடுகளில் வசதியாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தில் இன்றும் அவர்கள் பெற்றோர்கள் வசதியாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூறி திரியும் திருடர்கள் கழ தொண்டர்களும், அவர்கள் வாரிசுகளும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் இந்த உண்மைகளை ஒப்புக்கொள்ள சித்தனை தேவை. ஆங்கிலேயர்கள், முஸ்லீம் படையெடுப்பாளர்கள் செய்யாத அட்டுழியங்களை பிராமணர்கள் செய்யவில்லை. ஆனால், அவர்களோடு அவர்களின் திறமையும் சென்று விட்டது. இடி அமின் குஜராத்தி வியாபாரிகளை விரட்டினான். அவன் நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்தது. அதை இன்று உகண்டா உணர்ந்து கொண்டு திருந்தியது. வடக்கு ஸ்பெயின் யுத்தர்களை விரட்டியது. இன்றுவரை அது பொருளாதாரத்தில் பின் தங்கியே உள்ளது. 70 -80 % திறமை உள்ளவர்களாலேயேதான் நாடு முன்னேறும். ஆனால் பிறர் செய்த தவறுகளின் படிப்பினைகளை உணராத தமிழர் வாழ்வு அம்போதான். இதை ஒப்புக்கொள்ள உங்களுக்கு உண்மையான மனம் இருக்கிறதா? ஊழ்வினை உறுத்து வந்துடுதும் தும்.. - இளங்கோ அடிகளார் சொன்னதை ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள்.

  • INIYAN - Frankfurt,ஜெர்மனி

    ஐயா கடந்த 15 வருடங்களாக நான் உதவி பேராசிரியர் பதவிக்கு தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பல்கலைகழகங்களுக்கு முயற்சி செய்கிறேன் அனால் சென்ற இடங்களில் எல்லாம் என்னிடம் கேட்டது பணம் பணம் பணம் அல்லது துணை வேந்தருக்கு வேண்டிய ஜாதி இருந்தால் பதவி. கடந்த இருபது வருடங்களை எந்த பதவியும் தகுதி அடிப்படையில் நியமிக்கவில்லை. உதாரணமாக மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் உயிரியல் துறை. முன்பு இந்த துறை உலக அளவில் அதன் ஆராச்சியில் பணிகள் மற்றும் கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை. அனால் இன்று அங்கு ஒரு நல்ல தகுதியான ஆராச்சியாளர் matrum நல்ல கட்டுரைகள் வெளியிட யாரும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பிரசித்து பெற்றது அனால் கடந்த கால துணைவேந்தர்கள் எப்படி கல்வியை வியாபாரமாக்கினார்கள் என்பது எல்லோருக்கும் வெளிச்சம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியில் உள்ள உதவி பேராசிரியர்களின் பத்து வருட பணிநியமனைதை சோதித்தால் எல்லாம் வெளி வரும். நல்ல திறமை உள்ள ME PHD முடித்து ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் (அதிக H index மற்றும் Journal Impact factor ) எத்தனையோ தகுதியானவர்கள் இருக்க எப்படி துணை வேந்தர்கள் ME மட்டுமே உள்ளவர்களை நியமித்தார்கள்?. அடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2012 பணி நியமித்த யாரும் நல்ல தகுதியானவர்கள் இல்லை. எத்தனையோ தகுதியானவர்கள் நல்ல ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகளுடன் வந்தவர்களில் நியமிக்காமல், அவர்களுக்கு வேண்டியவர்களை பணி நியமித்தது பல்கலைக்கழக web site பார்த்தால் விளங்கும். அழகப்பா பல்கலைக்களம் - தற்போதுள்ள துணை வேந்தர் கணபதியின் நெருங்கிய நண்பர், அவர் வழிதான் தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடரப்படுகிறது. பாரதியார் பல்கலையின் பிரதான பிரச்சினை ஜாதி, இங்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அதிகமாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வேறு சமூகம் மற்றும் வேறு மாவட்ட மக்களுக்கு இங்கு பணி கிடைப்பது மிகவும் கடினம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கடந்த 2016 பணி நியமனம் தொடபாக பத்திரிக்கை பார்த்தால் புரியும்.

  • Ramamoorthy P - Chennai,இந்தியா

    முன்னாள் துணைவேந்தர்களிடம் கேட்டால் அவர்கள் அம்மா வழியை பின்பற்றினோம் என்பார்கள்.

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    முன்னாள் துணை வேந்தர்கள் பலர் கண்ணியத்துடன் நேர்மை வாய்மை ஒழுக்கம் இவைகளின் ஒட்டுமொத்த உருவமாக இருந்ததால் அவர்கள் மேல் எந்த கருப்பு புள்ளி இல்லை ஆனால் அவரை மாதிரியே நடந்த உன்னை ஏன் கருப்பு புள்ளி உன்மேல் ஏற்பட செய்தார்கள் எது ஆசிரியர்க்கு வழக்கை நாம் நமது பனிக்காலத்தில் பல பொறுப்புகளில் எவ்வாறு சிறப்பாக செய்தோமே அதை மற்றவர்கள் அந்த பணியை செய்கிறபோழொடு நம்மை நினைத்து சந்தோச படுவார்கள் நம்மை பெருமை படுத்துவார்கள் என்னை கோவை பேராசிரியர் டர் எ.ஸ் ர் டர் ஜே.ல் டர் டீ.கே இவர்கள் முதன்மை துணை வேந்தர் பதவிக்கு லாயக்கு ஆனவர்கள்

  • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

    அய்யா கணபதியாரே முன்னாள் துணை வேந்தர்களின் பெயர்களை ஆண்டு வாரியாக தெரிவித்தால் அந்த அப்பாவிகள் யார் என்று தெரிந்து கொள்வோம் . நிச்சயம் இந்த ஊழல்கள் ஐம்பது ஆண்டுகளாகவே திரு அண்ணாதுரை மறைந்தபின் வந்த ஆட்சியாளர்கள் காலத்தில் இருந்தே ஆரம்பித்து விட்டன . ஒரே சாக்கடை குட்டையில் ஊறின இரண்டு திராவிட கட்சிகளின் திருவிளையாடல் தான் இதற்கு காரணம்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    நாற்பதாயிரம் வோல்டை விட்டு விட்டு பாய்ச்சினால் ஞாபகம் வந்திரும்.

  • Rajarajan - Thanjavur,இந்தியா

    ஒவ்வொரு திராவிடனும் பெருமைப்பட வேண்டிய விஷயம் இது. வாழ்த்துக்கள்.

  • Viswanathan - karaikudi,இந்தியா

    இங்கே தான் எல்லா சிஸ்டம் சரியாக உள்ளதே , அப்புறம் எப்படி இவன் மாட்டினான் , சிஸ்டம் சரியில்லை என கூறியதற்கு ஒரு மானமில்லா மிகு ரொம்ப குதித்தாரே

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    'முன்னாள் துணைவேந்தர்கள் வழியை பின்பற்றினேன்' மிகச்சரியான வார்த்தை பதம். இது தான் இன்று நடக்கின்றது, கேட்டால் அவன் மட்டும் ஊழல் பண்ணவில்லையா என்று கேட்பது. அ.தி.மு.கவின் ஊழல்கள் என்றால் தி.மு.க கூட ஊழல் என்பது (Otherwise reverse).

  • P.Rengaraj - maduai,இந்தியா

    நல்ல ஆரம்பம் .... அனைத்து பல்கலைக்கழங்களிலும் இந்த முறைகேடு நிச்சயம் இருக்கும். அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இந்த பல்கலையில் ஊழல் என்பது இன்று நேற்றல்ல 80 களின் மத்தியில் ஆரம்பித்தது தான். மாணவர் சேர்க்கைக்கு அன்றே பணம் வாங்கியவர்கக்ள் என்று தாராளமாக பேசப்பட்டதாம். அடுத்து ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கம் அங்கே கொடி கட்டி பறந்தது இன்னமும் மாறவில்லை என்கிறார்கள். நல்ல பெயரை எடுத்து விட்டு அதை வைத்து நிறைய பணம் சுருட்டி விட்டார்கள். எல்லோரும் நுழைவு தேர்வின் அடிப்படையிலேயே மாணவர்களை அண்ணா பல்கலை போல பின்பற்றி சேர்க்கை நடத்த இவர்கள் மட்டும் நுழைவு தேர்வுதான் நேர்முகத்தேர்வையும் வைத்து தான் மாணவர் சேர்க்கையை நடத்தினார்கள்., குறிப்பாக அன்றைய கால கட்டத்தில் MCA படிப்பு பிரசித்தம். அதற்கு விண்ணப்பிக்க தகுதியாக அனைத்து இளநிலை மாணவர்களையும் இவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவித்தார்கள். மற்ற பல்கலையில் அப்படி இல்லை கணிதம், இயற்பியல் வணிகவியல் என்ற பாடத்தின் தான் தகுதி. பெப்ருவரியில் நுழைவு தேர்வை நடத்தி விட்டு அதற்கான முடிவையும் இன்டெர்வியூவையும் ஜூலை இறுதிக்கு பிறகு தான் நடத்தினார்கள். திரைமறைவு வேலைகள் செய்யப்பட்டதா? நேர்முகத்தேர்வில் அடிப்படையிலேயே மாணவர்கள் சேர்க்கை நடந்தது. நுழைவு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசையில் முதல்ப பத்து இடத்தில வந்தவர்களில் எத்துணை பேர் அட்மிஸ்ஸோன் பெற்றார்கள் என்று பாருங்கள். மிக மிக குறைவு. நேர்முகத்தேர்வில் இவர்கள் செய்த குளறுபடி அப்படியும். அதே நிலையை தான் இவர்கள் ஒவ்வொன்றிலும் பின்பற்றி வேண்டியவர்களுக்கு சகாயம் செய்தாரா. தென் மாவட்டங்களை சேர்ந்தோர்களால் ஏன் பாரதியார் பல்கலையில் சேர முடியவில்லை. அவர்கள் அனைவரும் சென்னைக்கு மட்டுமே படையெடுத்து அங்குதான் சிறப்பாக முன்னேறினார்கள். கோவையை சார்ந்த சுற்றுப்புற பகுதி மாணவர்கள் மற்றும் அங்குள்ளவர்கள் மட்டுமே அந்த பல்கலையில் படிப்பிலும் பணியில் சேரவும் நிலை இன்னும் தொடர்வது ஏன்? தென் மாவட்டத்தில் இருந்து வந்து ஐ ஐ டி, அண்ணா பல்கலை சென்னை பல்கலை, REC ஒன்றவற்றிலெல்லாம் சேர முடிகிறது அனால் பாரதியார் பல்கலையில் சேர முடிவதில்லை. ஏன்? அங்கு ஆராய்ச்சி பட்டம்அ பயில்வோர் யாரவது மேற்கு தமிழகத்தை தவிர்த்த மற்ற தென் வடகிழக்கு பிராந்திய தமிழ் நாட்டை சேர்ந்தஹவர்களாக இருக்கவில்லையே ஏன்? அட்மிஸ்ஸோன் தரமாட்டார்கள். சாதி பணம் என்று தீர்மானம் செய்த்தாஹ்வர்களாகத்தான் இருக்கிறார்கள். சிண்டிகேட் தான் பதில் சொல்லவேண்டும். நியாயமானவர்களாகன் இருந்தால். அது போகட்டும் இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் இவர்கள் அண்ணா பல்கலையை பின்பற்றி மருத்துவ இயற்பியல் என்ற படிப்பை முது நிலையில் உருவாக்கினார்கள். பல்கலை கழக நியதி படி PHD பட்டம் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும். இயற்பியல் துறையில் பலவருடங்களாக நிறைய பேராசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாருமே மருத்துவ இயற்பியல் படித்தவர்கள் இல்லை. அந்த படிப்பின் சிறப்பாக AERB அங்கீகாரம் தரும் BARC யின் ரேடியோலொஜிக்கல் சேப்டி ஆஃபீஸ்ர் (RSO) சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தான் நியமிக்க வேண்டும். மேலும் அந்த படிப்பில் PHD பெற்றவர்களே மிக மிக குறைவு. மேல் நிலை படித்து விட்டு வெளிநாடு உள்நாடு என்று வேலைக்கு சென்று விடுவார்கள். விறல் விட்டு என்னும் சிலர் மட்டுமே அன்றைய காலத்தில் முனிவர் பட்டம் பெற்றவர்கள் அத்துறையில். அதில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் வந்தால் உடனடியாக அவர்கள் பணியில் அமர்த்தி கொள்ளலாம். அபோது இவர்கள் முதலில் இரண்டு பனி இடங்களுக்கு அனுமதி பெற்று அதை நிரப்புவதற்காக இருந்தார்கள். ஒன்று மெடிக்கல் பிசிக்ஸ், மற்றொன்று ணுகிலீர் பிசிக்ஸ். மெடிக்கல் பிசிக்ஸ் பாடத்தை முதுநிலையில் அந்த வருடம் தான் இவர்கள் குப்புசாமி நினைவு மருத்துவமனையின் உதவியோடு ஆரம்பிக்கிறார்கள். அந்த மருத்துவமணியில் கூட அந்த பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றோர் கிடையவே கிடையாது. அப்படை இருக்க முனைவர் பட்டம் பெட்ராவரை தான் இவர்கள் நியமிக்க வேண்டும் மெடிக்கல் பிசிக்ஸ் இல். இவர்கள் என்ன செய்தார்கள். உள்ளேயே ஆராய்ச்சி பட்டம் பெட்ரா பொது இயற்பியல் ஆராய்ச்சியாளரை இயற்பியல் துறையில் ணுகிலீர் பாடத்திட்டத்திற்கு என்று நியமித்து விட்டு, மருத்துவ இயற்பியலுக்கான இடத்தை எஸ் சி கோடாவாக மாற்றி விட்டார்கள். அப்படை செய்திருக்கவே கூடாது. புதிதாக நியமிக்கப்படும் முதுநிலை பாடத்திற்கு எஸ் சி கலீல் யாருமே அன்றைய தினம் வரை இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இல்லவே இல்லை. அதற்காக அவர்களில் யாரும் பதிந்திருக்கக்கூட இல்லை. அப்படி இருந்தும் கூட அதை இவர்கள் கோட்டாவில் ரோஸ்டர் என்று சொல்லி மாட்டீர் விட்டு, மருத்துவ இயற்பியல் பாடத்திற்கு ஆசிரியரை நியமிக்காமல் விட்டு விட்டார்கள். ஒரே ஒரு வர மட்டும் அண்ணா பல்கலையில் மெடிக்கல் பிசிக்ஸ் பட்டம் பெற்று சேன்னையின் அரசு மருத்துவ பல்கலையில் முனைவர் பட்டம் பெற்று விண்ணப்பித்து நேர்முகத்தேர்வையும் செய்தார். இன்டே ர்வியூவிற்கு பிந்தைய தீர்மானமாக, அவரை ஜாதியா அடிப்படையில் காரம் காட்டி அவர் பணம் தர விருப்பமில்லாதவறானதால் அந்த இடத்தை ஸ்.சி கொடவாக ரோஸ்டரில் மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமித்தார்கள் ஜெனரல் பிசிக்ஸ் கேடெகோரியில். மெடிக்கல் பிசிக்ஸ் படித்தவர்கள் ஜெனரல் பிசிக்ஸ் கெட்டகாரியில் வரமாட்டார்கள். அந்த பல்கலையில் உள்ளோர் தங்கள் வசதிக்கேற்ப விதிகளை அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி செய்து கொள்கிறார்கள். இந்த பல்கலை யுஜிசி யாழ் முதல் தர பல்கலை என்ற நிலையில் இருந்ததால் இவர்கள் விருப்பத்திற்கு புதிய பாடமாக முதுநிலையில் MSC மெடிக்கல் பிசிக்ஸ் ஆரம்பிக்க முடிந்தது, யுஜிசி இடம் அனுமதி பெறாமலே தினமலரில் இன்று அழகப்பா பல்கலையை முதல் தர பல்கலையாக உயர் பெற்றதை பற்றி செய்தி வந்திருக்கிறது. அதில் அவர்களுக்கு என்ன என்ன சிறப்புகள் கிடைக்கும் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அது போன்ற சலுகைகள் பாரதியார் பல்கலைக்கு என்றும் உண்டு. அதை சீரும் சிறப்புமாக செய்யாமல் தரஇழைக்கிறார்கள். என்று தணியும் இந்த சுதத்ந்திர தாகம் அங்கே பாரதியார் பல்கலையில். பாரதியின் பெயரால் களங்கம் விளைவிக்கலாமா. இன்றும் அங்கு உள்ள மருத்துவ இயற்பியல் மோசமாகத்தான் இருக்கிறது. சரியான ஆசிரியர்களை நியமிக்காததால். அதே நேரத்தில் மும்பையின் BARC துணையோடு நடத்தப்படும் படிப்பும் அண்ணா பல்கலையின் CEG யில் அடையார் உற்று னாய் மருத்துவ மனை துணையோடு நடத்தப்படும் மருத்துவ இயற்பியல் படிப்பும் சிறப்பாக செயல்பட்டு அதில் படித்தவர்கள் அனைவருமே சிறப்பாக வெளிநாடுகளில் குறிப்பாக கனடா அமெரிக்காவிலும் இந்தியாவில் AIIMS , PGI யிலும் பெரிய பதவியில் இருக்கிறார்கள். பல்கலையை நடத்துபவர்கள் ஊழல் லஞ்சம் வேண்டவே வேண்டாம். இன்று அரசு மிக அதிக ஊத்தியம் தருகிறது உங்களுக்கு. ஆராய்ச்சி செய்வதில் நல்ல கூடுதல் ஊதியம் கிடைக்கிறது. சுலபமாக ஆராய்ச்சிக்கு பணஉதவி கிடைக்கிறது. சில வருடங்கள் நீங்க தாராளமாக வெளிநாடுகளில் வேலைக்கு சென்று சேர்ந்து விட்டு நல்ல பணம் சம்பாத்தியத்துடன் மீண்டும் திரும்பி உங்கள் வேலையை தொடரலாம். விடுமுறை காலங்களில் ஓரிரண்டு மாதங்கள் கூட வெளி நாடுகளில் குடும்பத்துடன் சென்று தங்கி வேலை செய்து விட்டு திரும்பி வரலாம். கொரியா உங்களை இரத்தின கம்பளம் விரிக்கிறது, அதே நிலை பல்வேறு நாடுகளில் உங்களுக்கு. நேர்மையாய் பணம் ஈட்ட நல்ல வழிமுறைகள் இருக்கிறது. உணருங்கள்.திறமை அற்றவர்கள் தான் புறவழியில் வந்து அரசியல் செய்து அவர்கள் துணையுடன் நாட்டை கெடுக்கிறார்கள். எனது இந்த கருத்தை யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம். பாரதியார் பல்கலை ஆசிரியர்கள் படிக்கட்டும். தாராளமாக. உங்கள் சகோதரி இன்னும் இருப்பது வருடங்கள் கழித்து தாயகத்தில் திரும்பி சேவை செய்ய வரும்போது பல்கலையின் துணை வேந்தராக அல்லது உயர்கல்வித்துறையின் உயர்ந்த பதவிக்கு நேர்மையாக வருவேன். தமிழக அரசின் உதவி பேராசிரியர் பதவிகள், லேடி ஹார்டிஞ் கலோரியில் உதவி பேராசிரியர் பதவி என்று பல்வேறு துறையில் நுழைவு தேர்வில் முதலாவதாக வந்தவள், பணியில் நியமிக்கப்படவே இல்லை. லன்ஜம் தரேல் என்றதால் வெளிநாடு தவிர வேறு இடம் இல்லை என்றாகிவிட்டது எனக்கு. தினமலர் தோழியின் அன்பு வாசகி. DR VIJAYALAKSHMI CHOUMIYAN.

  • Kaliyan Pillai - Chennai,இந்தியா

    இவனுக்கு எந்தெந்த அரசியல் புள்ளிகளுடன் தொடர்புள்ளது யார் இவனை ஆட்டிவைக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவர்களைப்பிடித்து சுழலுக்கெடுக்க வேண்டும். நீதியின் முன் நிறுத்தவேண்டும்.

  • venkatan - Puducherry,இந்தியா

    நம்ம அரசியல் வாதிகளும் முன்னவர் செய்வதை தான் செய்கிறார்கள். மாற்றம் வந்துகொண்டிருக்கிறது. அவ் வழியில் பணம் சேர்ப்பவர்களுக்கு கடும் தண்டனையை காத்திருக்கி றது. மாற்றம் வரும்.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இவன்களை எல்லாம் முட்டிக்கு முட்டி தட்டணும்.

  • ganapati sb - coimbatore,இந்தியா

    பல்கலை கழகங்களின் தலைவரான கவர்னர் புரோஹித் தனது தமிழக திட்டங்களின் செயல்பாட்டின் ஆய்வை இந்த பல்கலைக்கழகத்திலிருந்து துவக்கியதன் அர்த்தம் புரிகிறது தமிழக அரசின் அமைச்சர்களும் அதிகாரிகளும் திருந்தாவிட்டால் பின்னர் வருந்த வேண்டியிருக்கும்

  • Krishnakum - Chennai,இந்தியா

    பழைய முறை என்றால் லஞ்சம் வாங்குவதிலா...கணபதி...நீயெல்லாம் தமிழ் நாட்டின் சாபக்கேடு.....

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் கொள்ளை போவது தெரியாமல் கேளிக்கைகளில் மூழ்கி கிடைக்கும் இந்த மாக்களை என்னவென்று சொல்வது? இவனெல்லாம் இவ்வளவு வெளிப்படையாக தைரியமாக கொள்ளையடிக்கிறானென்றால் காரணம் யார்? மக்களாகிய நாம்தான்.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    செலெக்ட்டிவ் அமீனீசியவா??/ அது சரி பூவோட சேர்ந்த நாறும் அப்படி தானே இருக்கும்

  • Sha Shank Shankar - Chennai,இந்தியா

    இவருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை செக் ( CHECK ) வைத்ததால் இவர் லஞ்சமாக பெற்ற செக் ( CHEQUE ) வைத்த இடம் தெரியவில்லை.

  • Sha Shank Shankar - Chennai,இந்தியா

    முன்னோர் வழி என்று எதை கூறவருகிறார். பெறுவது, தனது பங்கை எடுத்துக்கொள்வது மீதியை மேலே உள்ளவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பிரித்துக்கொடுப்பது. இப்படி பணத்தைக்கொடுத்து பதவிக்கு வருபவர்களால் நல்ல மாணவசமுதாயத்தை உருவாக்க முடியுமா?

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    பல்கலையில் முன்னாள் துணைவேந்தர்கள் பின்பற்றிய விதிமுறைகளையே தானும் பின்பற்றியதாக, கணபதி தெரிவித்தார். அவர்கள் ........ தின்னச்சொன்னால் நீங்கள் திம்பீர்களா..?

  • rajan. - kerala,இந்தியா

    கட்டுமரம் வழி ஆட்சி, ஆயாம்மா வழி ஆட்சி, மன்னார்குடி தலிபான் வழி ஆட்சி என மொத்த வழிபறி கொள்ளை கூட்டம் அரசு மையங்களில் புகுந்து மக்கள் பணத்தை சூறையாடிட்டானுங்க இவனுங்க. இதுங்க தான் முதலில் போட்டு தள்ள வேண்டிய உள்ளுர் தீவிரவாதிகள்.

  • Venkatasubramanian - Trivandrum,இந்தியா

    Like wise all government universities to be verified and especially engineering university. Spoiling the society and they are called as criminals. Useless ministers and vice chancellors.

  • Venkatasubramanian - Trivandrum,இந்தியா

    Useless universities without any improvement to the society. Corrupted ministers and VCs to be hung

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

    பாவம் .எல்லாமே மறந்து விட்டது .

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    'முன்னாள் துணைவேந்தர்கள் வழியை பின்பற்றினேன்'...அப்போ அவர்கள் கொலை செய்து இருந்தால் இவரும் செய்வாரா..?.இவர் சந்ததிகளுக்கு இவர் விட்டு போவது ஏன்னா... ஊழல் பேர்வழி...பேர்...இப்போ தமிழகத்தில் கவரி மான் பற்றி யாரும் பேசுவது இல்லை...

  • S Hari Haran - CHENNAI,இந்தியா

    இத்தகைய ஆட்சி தந்த கூட்டாளிகள் (இருகாட்சியனரும் தான்) சட்ட சபையில் கறவைக்கப்படுகிறார்கள். தமிழ் என்று நாட்டை ஏமாற்றிய கும்பல் பின் சென்ற தமிழினம். இப்ப்போது வாக்குக்கு லஞ்சம் பெறுகிறது. பாரதி இவர்களை பார்த்த்துதான் நெஞ்சு பொறுக்குதில்லையே என்றாரோ என்னவோ

  • MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ

    இவர் என்ன தப்பு செய்து விட்டார்.? இவரின் ஆசானையே இன்னும் சட்டம் தண்டிக்க வில்லையே. ஊழலின் மொத்த உருவத்தை ஆட்சியில் அமர வைத்ததின் விளைவு, இந்த ஐம்பது வருடங்களில் தமிழகம் முழுதும் ஊழல் அதிகாரிகள்தான்.

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    இதென்ன ராஜாவோட ட்ரைனிங் மாதிரி இருக்கு? திமுக ஆட்சியில நியமனமோ?

  • ஆப்பு -

    இப்பிடியே மாத்தி மாத்தி பேசி எல்லாரையும் குழப்பி, நீதிபதியை மழுங்கடித்து, கடைசியில் விடுதலையும் ஆயிருவார்... நம்ம தொப்பை போலீசும் ஆதாரத்தைத் தேடாமல் இவரை கேள்விகேட்டு பொழுதைப் போக்கி கடைசியில் வாயில விரலை வெச்சிக்கிட்டு போவாங்க..

  • venkatesh - coimbatore,இந்தியா

    அத்தனை பேரையும் பிடிச்சு உள்ளே வெச்சு நாலு தட்டு தட்டினா மொத்த கதையும் வெளியே வரும் அனால் இவர்களுக்கு மேல் இடம் பாதுகாப்பு கொடுக்கும். கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி மந்திரி வீட்டில் விருந்து சாப்புடுவான் ஆனால் காவல் துறை கண்ணை மூடிக்கொள்ளும் அப்புறம் எங்கே திருடனையும் கொலை காரனையும் பிடிப்பது. தமிழ்நாடு ஊழல் சாக்கடையில் விழுந்து நாறுது.வெட்கக்கேடு.கொள்ளையர்களோ மக்கள் காரி காரி துப்பினாலும் வெட்கம் இல்லாமல் சிரித்து கொண்டே போஸ் குடுப்பானுங்க பத்திரிக்கைக்கு பேட்டி கொடுப்பார்கள்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கல்வித் 'தந்தைகள்' , வேஷத்திலிருக்கும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி 'பெருந்தலைகளை' மாட்டி விசாரணை வளையத்தில் கொண்டுவரத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு, போலீஸ் எதுவும் உதவாது. இவன் வாயை அசைக்க 'கஸ்டடியிலேயே' 'ஹார்ட் அட்டாக்' வரவைத்து கதையையும், கேஸையும் முடிக்க ஏற்பாடாகிவிட்டிருக்கும் இதற்குள்ளே இத்தனை கோடியையும் இவன் ஒருத்தனேயா வைத்திருப்பான் எல்லாம் 'போகுமிடங்களுக்கு' ஒழுங்காகப் போய் சேர்ந்திருக்கும்

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    விழுங்கியிருப்பாரோ?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    லஞ்சத்தை செக்காக வாங்கிய தெனாவெட்டு எவனுக்கு வரும்... முகவுக்கு கூட இந்த தெனாவெட்டு இருந்திருக்காது...

  • POORMAN - ERODE,இந்தியா

    இவனையெல்லாம் நொங்கேடுக்கனும்

  • Tamilan - COIMBATORE,இந்தியா

    இவரால் பாதிக்கப்பட்ட என்னை போன்ற அணைத்து தகுதி இருந்தும் வேலை கிடைக்காமல் இருக்கும் அனைவரின் சாபம் சும்மா விடாது

  • Tamilan - COIMBATORE,இந்தியா

    இவரால் பணியமர்த்தப்பட்ட அனைத்து போஸ்டிங்குகளும் உடனடியாக கேன்சல் செய்யப்பட வேண்டும். லஞ்சம் கொடுத்தவர்களையும் விசாரணை செய்து கைது செய்து கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    இப்போ ஆட்சியில் இருக்குறவனுங்க ஜெயலலிதா ஆட்சியை பின்பற்றுகிறோம்ன்னு வாய்க்கு வாய் சொல்றப்பவே தெரியும்.

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    அய்யையோ, ஜேம்ஸ் பிச்சையை கோர்த்து விட்டு விட்டானே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement