Advertisement

ஜெ., மர்ம மரணம்: அரசு டாக்டர் கூறியது என்ன?

சென்னை : ஜெ., மரண விசாரணை கமிஷனில், மூன்றாவது முறையாக ஆஜரான, அரசு மருத்துவர், பாலாஜியிடம், நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது. 'சுகாதாரத் துறை செயலர் வாய்மொழியாகக் கூறியதன் அடிப்படையில், ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' என, அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை கமிஷன்
ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அரசு மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ., உறவினர்கள், சசிகலா உறவினர்கள் என, பல தரப்பினரிடம், விசாரணை நடத்தி வருகிறது.


ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்தது.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, அங்கீகாரப் படிவத்தில், ஜெ., கையெழுத்திற்கு பதிலாக, அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்த கைரேகை, அரசு மருத்துவர் பாலாஜி முன்னிலையில் பெறப்பட்டது. ஜெ., மருத்துவ
மனையில் இருந்த போது, அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் யாரும், ஜெ.,வை சந்திக்கவில்லை.


சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த, மருத்துவக் குழுவில் இருந்த, அரசு மருத்துவர்களும், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் கூறியுள்ளனர்.இந்த சூழ்நிலையில், ஜெ.,வை சந்தித்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி மட்டும் கூறினார்.


ஆனால்,'வேட்பாளர் அங்கீகாரக் கடிதத்தில் உள்ள ரேகை பதிவு, ஜெ., உயிரோடு இருந்த போது பெறப்பட்டதல்ல' என, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, டாக்டர் சரவணன் குற்றம் சாட்டி உள்ளார்.


எனவே, ஜெ., மரணம் தொடர்பான விசாரணைக்கு, டாக்டர் பாலாஜி வரவழைக்கப்பட்டார். அவரிடம் ஏற்கனவே, இரண்டு நாட்கள் விசாரணை நடந்த நிலையில், நேற்று, மூன்றாவது நாளாக, விசாரணைக்கு ஆஜரானார்.


காலை, 10:30 மணிக்கு விசாரணை துவங்கி, பகல், 1:30 மணிக்கு நிறைவு பெற்றது. 'யார் கூறியபடி, ஜெ.,வின் கைரேகையை பதிவு செய்தீர்கள்' என்பது உட்பட, பல கேள்விகளை, அவரிடம் நீதிபதி கேட்டுள்ளார்.முரண்பாடு இல்லை
இதற்கு பதில் அளித்த பாலாஜி, 'யாரிடம் இருந்தும், கைரேகையை பதிவு செய்யும்படி, கடிதம் வரவில்லை. சுகாதாரத் துறை செயலர் வாய்மொழி உத்தரவின்படி, நான் நேரடியாகச் சென்று, ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' எனக் கூறியதாக தெரிகிறது.


'ஒரு முதல்வரின் கைரேகையை பதிவு செய்ய, எழுத்துப்பூர்வமாக ஏன் கடிதம் பெறவில்லை' என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.விசாரணை குறித்து, டாக்டர் பாலாஜி கூறுகையில், ''ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, நீதிபதி சில கேள்விகள் கேட்டார்; அதற்கு பதில் அளித்தேன். கைரேகை தொடர்பாக, எதுவும் கேட்கவில்லை. ஜெ., இறப்பில், எந்த முரண்பாடும் இல்லை,'' என்றார்.

மின் தடையால் விசாரணை பாதிப்பு சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் அமைந்துள்ள, கலச மஹால் முதல் தளத்தில் உள்ள, விசாரணை கமிஷன் அலுவலகத்திற்கு, 'ஜெனரேட்டர்' வசதி இல்லை. நேற்று பகல், 12:30 மணி அளவில், மின் தடை ஏற்பட்டது. இதனால், டாக்டர் பாலாஜியிடம் நடந்த விசாரணை, அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சமையல் பணியாளருக்கு, 'சம்மன்' ஜெ., வீட்டில் சமையல் பணி செய்த, ராஜம்மாள், 20ம் தேதி; முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன், 21; ஜெ., கார் டிரைவர், அய்யப்பன், 22ம் தேதியும் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.


Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Kurshiyagandhi - Arimalam,இந்தியா

  இவை அனைத்தும் வீணே......... யாரும் உண்மையை சொல்ல போவது கிடையாது.. இவனுங்களுக்காக நேரத்தை வீணடிக்காமல் இருக்கலாமே...

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  செத்த பிணத்தின் கைரேகையை தான் பதிவு செய்தேன் என்று திருப்பதி??? பாலாஜியால் சொல்லமுடியவில்லை, அவ்வளவு தான்.

 • Madhav - Chennai,இந்தியா

  வாய் மொழி உத்தரவின் பேரில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இவரால் முன்னாள் முதல்வரிடம் இருந்து விரல் ரேகை பெற்று யார் பெயரிலோ மாற்றப்பட்டு இருக்கலாம்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஏன் தலைமை செயலருக்கு இதெல்லாம் தெரியாதா... ?

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  எல்லாம் வேஸ்ட் தான் .ஒரு உண்மையும் வர போவது இல்லை

 • ஆப்பு -

  எழுத்து பூர்வமா இல்லாத ஒண்ண செஞ்ச குத்தத்துக்கே இவருக்கு 2 வருஷம் கடுங்காவல் தண்டனை குடுக்கணும்... நம்ம விளக்கெண்ணெய் சட்டங்கள் இதெல்லாம் செய்தாது...

 • Arivu - Salem,இந்தியா

  சாட்சி கையெழுத்து போட்டவர் விசாரிக்கப்பட்டாரா?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சுயநினைவில்லாத முதல்வரின் கைரேகையை அதிகார துஷ்பிரயோகம் மூலம் பெறுவது இவங்களுக்கு புதியதல்ல. முன்பு அமெரிக்க ப்ரூக்லின் மருத்துவமனையில் கோமாவிலிருந்த எம்ஜியாரின் கைரேகையை இந்திய தூதுவரே நேரே போய் பெற்று வேட்புமனுவுக்கு அனுப்பியதும் அதனை எதிர்த்து வழக்குப்போட்ட மாற்றுக்கட்சி வேட்பாளரை மிரட்டி வாபஸ் வாங்கவைத்ததும் மறக்குமா?

 • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

  இனி என்ன செய்ய போரீர் .முடிந்து போன கதை....பணம் பாதாளம் மட்டும் பாயும்ன்னு சும்மாவா சொன்னாங்க>>>>

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  ஒரு மாநிலத்தின் தேர்தலுக்கு முதல்வரின் ஒப்புதல் பெறும் தீர்மானத்தை 'வாயமொழியாக' பெற்று கை ரேகை பதிந்தேன் என்கிற பொறுப்பற்ற பதில் விளங்கிடும்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  SINனம்மா கூட்டம் புடை சூழ அம்மாஜி தமிழகத்தை ஆண்டார்... முறையற்ற தலையீடு இருந்தும் அதை பல அரசு அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்... அது போல பார்த்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததில் 'இதுவும்' ஒன்று... அந்த லட்சணத்தில் அரசாங்க 'வேலை' பார்த்து இருக்கிறார்கள்...

 • TamilReader - Dindigul,இந்தியா

  I still don't understand, why this so called commission didn't call OPS, EPS, Gutkha (Health) Minister, Former Acting Governor, Former Union Minister(Current VP), and other important personalities yet? Looks like this commission goes in one direction and make Sasikala and Gang are responsible... If that is the case, then this commission is not at all required and with the Police force, OPS/EPS can easily file a case against Sasikala and Gang and close the file... Looks like waste of money (TN People) and time...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  அப்போ இவரு தான் விரலை உருட்டுனதா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement