Advertisement

ஓராண்டு நிறைவடைந்தது சசியின் சிறை வாழ்க்கை

சென்னை : சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இன்னும், 1,095 நாட்கள், சசிகலா சிறையில் இருக்க வேண்டும்.ஜெயலலிதா, 1991 முதல், 1996 வரை, முதல்வராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, வழக்கு
தொடரப்பட்டது. இவ்வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.


வழக்கை விசாரித்த, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்., 27ல், நான்கு பேருக்கும், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த, தனி நீதிபதி, குமாரசாமி, அனைவரையும் விடுதலை செய்தார்.


இதைஎதிர்த்து, கர்நாடக அரசும், தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், 2016 டிச., 5ல், ஜெ., மறைந்தார். அவர் மறைவுக்கு பின், முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, முதல்வர் ஆக, சசிகலா முயற்சித்தார். இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது.


அதில், 'நான்கு பேரும், கூட்டு சதி செய்து, ஜெ., பொது ஊழியராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை குவித்துள்ளனர்.ஜெ., குற்றம் புரிவதற்கு, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் துாண்டுதலாக இருந்தனர்' என, கூறப்பட்டது.

எனவே, பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம், 2017 பிப்., 14ல் உறுதி செய்தது.இந்த தீர்ப்பு வெளியான மறுநாள், பிப்., 15ம் தேதி, பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில், சசிகலா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டனர்.


அவர்களின் சிறை வாசம், இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. மூன்று பேரும், இன்னும் மூன்று ஆண்டுகள், அதாவது, 1,095 நாட்கள், சிறையில் இருக்க வேண்டி உள்ளது.சசிகலா சிறைக்கு சென்றபோது, 'இன்னும் சில தினங்களில், அவரை வெளியில் கொண்டு வந்து விடுவோம்' என, கூறிய உறவுகள், இப்போது, 'கப்சிப்'பாக உள்ளன.
Advertisement
 

வாசகர் கருத்து (37)

 • bal - chennai,இந்தியா

  என்னவோ காந்தி தண்டி யாத்திரையில் சிறை சென்று ஒரு வருடம் ஆவது போலும். எப்போ வெளியில் வருவார் என்று காத்துக்கொண்டிருப்பது போல் ஏன் செய்தி தருகிறீர்கள். இவர்கள் என்ன தியாகியா. தயவு செய்து நல்ல செய்தி மட்டும் போடுங்கள்.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  இந்த செய்தியை பார்த்து விட்டு இந்த "மங்குணிகள்" எம்ஜியார் நூற்றாண்டு விழா கொண்டாடியது மாதிரி "சசிகலா சிறை சென்ற ஓராண்டு நிறைவு விழா" என்று மக்களின் வரிப் பணத்தில் பகட்டு விழா கொண்டாடி தொலைத்து விடப்போகிறார்கள்.

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  கொண்டாடுங்கள் வெடி வெடித்து.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஓராண்டு சிறை கண்ட செம்மல் என்று போட்டு இவர் படத்தை சட்ட மன்றம் பள்ளிக்கூடங்களில் திறக்கவும். பிஜேபி தலைவர்கள் பாராட்டுவார்கள். மோ__ யால், தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கப்பட்ட தலைவியாச்சே

 • Tamilnesan - Muscat,ஓமன்

  பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்........இந்தியாவில் உச்ச நீதிமன்றம் என்கிற அமைப்பு உள்ளதா.......அதையும் சசி கும்பல் பெனிக்ஸ் மால் போல விலைக்கு வாங்கி விட்டதா..........

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  நீ அங்கயே இரு....தமிழகத்துக்கு வராத காவேரியை போல... மோடிஜி தேர்தல் பிரச்சாரத்துக்கு அங்கே வருவார் மீண்டும் ஒருமுறை உன் தலையில் கை வைத்து ஆசிர்வாதிக்கட்டும் இன்னும் உன் ஆயுட்காலம் முடிய அங்கே இரு வேற வேற வழக்கில் சிக்கி அவசத்தை படு, . யாருக்காக இதெல்லாம்... உன்னால் வரவழைக்கப்பட்டவர்கள் எல்லாம் கோடிஸ்வரர்கள் இங்கே, ஆனால் நீ சிறையில் எதற்கு இந்த பணம்.. என்ன சாதித்தாய் ?

 • ram - chennai,இந்தியா

  சசிகலாவின் சிறை வாழ்க்கை இப்டியே தொடர்ந்தால் தமிழக மக்களுக்கு நல்லது

 • anne - chennai,இந்தியா

  athukkulaam aayul thandanai kodukkanum...

 • Kurshiyagandhi - Arimalam,இந்தியா

  வெளில மட்டும் விட்டுடாதீங்க..............தமிழகம் ஏற்கனவே தத்தளிக்கிறது..இது வந்தா அவ்வளவு தான்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  டாஸ்மாக் நாட்டுக்கு அருள் செய்த, தியாகம் செய்த தியாகத்தலைவி சின்னாபின்னமான சதிகாரி வாழ்க வாழ்க வாழ்க இதைப்போல பல சின்னாபின்னமான அம்மாக்கள் உருவாக டாஸ்மாக் நாtடு மக்கள் தினமும் டாஸ்மாக் கடை வாசலில் தவம் இருக்கவேண்டும்.

 • தாமரை - பழநி,இந்தியா

  சின்னம்மாவின் ஓராண்டு சிறை வாழ்க்கைச் சாதனைக்கு ஒரு விழா எடுக்கலாமே....அதையும் நமது கழகத் தொண்டர்கள் கொண்டாடினாலும் ஆச்சரியமில்லை. திகாரிலிருந்து கனியும் ராஜாவும் ஜாமீனில் வந்தபோது கழகத் தோழர்கள் போட்ட ஆட்டம் இன்னும் நமது கண்முன் நின்று பயமுறுத்துகிறது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே.

 • Baskar - Paris,பிரான்ஸ்

  கொள்ளை அடித்தவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியல்ல.

 • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

  இதை எப்படி வாழ்த்துவது வாழ்க சிறையிலேயே பல்லாண்டுணுங்களா

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  தியாக தலைவி சின்னம்மா வாழ்க

 • mindum vasantham - madurai,இந்தியா

  Jayavukku imsai kodutha karunanithi kumbal thinakaranukkaka rk nagaril paadupattathu en,they dislike jaya but like sasi clan

 • murugan - chennai,இந்தியா

  அவர் ஒரு பெண். அவருக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கணவர் இருந்தும் இல்லை. குழந்தைகள் இல்லை. அவருக்கு எல்லா இடமும் ஒன்றுதான். தோழியாக ஜெயலலிதாவிடம் இருந்ததே சாதனைதான். ஜெயலலிதாவை பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும். ஜெயலலிதா தான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்கவேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர். ஜெயலலிதா சொல்லி இவர்கள் செய்தார்களா, இவர்கள் சொல்லி ஜெயலலிதா செய்தார்களா என்பது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இந்த அம்மா என்ன நாட்டுக்கு உழைத்த தியாக செம்மலா????

 • C.Elumalai - Chennai,இந்தியா

  சித்தராமையா முதல்வராக,இருக்கும் வரை கவலையில்லை. சிறைசாலை என்ன செய்யும், சதிகலாவிடம் கோடிகணக்கில், எலும்பு துண்டுகள் உள்ளது. அதில் சில எலும்புகளை வீசினால், எடுத்து கொண்டு சேவகம் செய்ய, முதல்வரும், காங்கிரசு இருக்கும்வரை, சிறைசாலை சதிக்கு குயில்கள்கூவும் பூஞ்சோலைதான்.

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  கணக்கு தவறு. ஏற்கனவே அம்மாவுடன் சிறையில் இருந்த நாட்களும் தண்டனை காலத்தில் கழிக்கப்படும். வேறு ஏதாவது வழக்கையும் போட்டு பரப்பன அக்ராஹாரம் 2.0 தொடரவேண்டும்.

 • Karun Muruga - banglore,இந்தியா

  செய்த பாவம் சும்மா விடாது

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இந்த அம்மா சிறையில் உள்ளார் என்று சொல்லாதீர்கள்... கர்நாடக அசோகவனத்தில் சகல வசதிகளுடனும் உள்ளது... அது இருக்கும் வசதியில் ஒரு யுகம் கூட இருக்கலாம்...

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  அரசியல் புதுகூட்டாளி காங் முதல்வர் சித்தராமையா ஏற்கனவே 5 ஸ்டார் வசதி செய்துள்ளார். இப்போது சின்னம்மாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விரைவில் விடுதலை செய்யப்போறாராம். கர்நாடக ட்வென்டி ரூபீஸ் தம்ப்ளர் வாக்குவங்கிதான் குறியாம்.

 • karthi - chennai,இந்தியா

  It's very frightening to note that she will be released in another three years. Each and every citizen or majority of the citizens feels that she should not be released at any cost at any time. Such a negative image she has d for herself in the minds of public by her own behavior.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  ஷாப்பிங் போன நாள் எந்த கணக்கில் வரும்

 • ushadevan -

  இந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் வெளியே செல்ல ஏற்பாடு செய்து விட்டீர்களா? All the best.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  பாதி நாள் ஷாப்பிங், மீதி நாள் விசிட்டர்களுடன் அரட்டை என்று ஜாலியான வாழ்க்கை வாழ்கிறார். தண்டனை என்ற பெயரில் ராஜ் வாழ்க்கை..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  1,095 நாட்கள் என்பது தவறான கணக்கு. முதன்முதலில் வழக்குப் பதிந்தபோது ஜாமீன் பெறும்வரை சென்னையில் சிறையிலிருந்த நாட்கள் மற்றும் குன்ஹா தீர்ப்புமுதல் ஜாமீன் கிடைத்தவரை பரப்பன அக்ராஹாரா சிறையிலிருந்த நாட்களும் தண்டனைக் காலமாகக் கருதி அதுபோக மீதிதான் சிறையிலிருக்க வேண்டியிருக்கும்

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  அதெல்லாம் சரி.... இந்த ஒரு வருடத்தில் எத்தனை மெழுகு வர்த்தி அல்லது அகர் பத்தி உருட்டி இருக்காங்கோ?.... அவாளுக்கு என்ன வேலை ஒதுக்கப்பட்டிருக்கு?.... ஜெயிலில் மௌன விரதம் எல்லாம் இருக்காங்களாம்.... ஜெய்லா இல்லை மடமா?

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி கொள்வது என்பது ஏது .....................ஷாந்தா அல்லி அல்லி கொடுத்தனடி ஷாந்தா ,பாடு ஷாந்தா பாடு...............

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  கம்பிகூட்டுக்குள் இருக்க வாழ்த்துக்கள்.

 • Jeya Baskar - Johor Bahru,மலேஷியா

  I do not agree that Jayalalitha was misled by Sasikala. It is totally a dishonest statement.Moreover, pinning only on Sasikala is also totally wrong. Jayalalitha is not such a stupid and naive baby. If I am asked, Jayalalitha is No.1 criminal who developed Sasikala and her group. How can you people,media and all are calling Jayalalitha as " Amma" which is such a holy word in the world.Since Jayalalitha is not alive, Sasikala and her gang should be shot dead immediately.

 • தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா

  சிறையில் இருக்கும் சின்னம்மாவை வாழ்த்த வயதில்லை ஆகவே தள்ளி நின்று கொள்கிறோம்

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  ஸ்டாக் ஹோம் சிண்ட்ரம் என்று வியாதி இருக்கு ...ஒருத்தர் மூணு மாசத்துக்கு மேல ஒரு இடத்துல இருந்தா அந்த இடமே ரொம்ப புடிச்சு போயிடும்னு சொல்ல்லுவாங்க ...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  சிறையில் இருப்பது சந்தேகமே... உல்லாசமாக ஏதாவது விடுதியில் காலம் தள்ளிக்கொண்டு இருப்பார்... எதற்கும் ஆதார் எண்ணை வைத்து தகவல்களை சரி பார்ப்பது நல்லது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement