Advertisement

நாளை முதல் மின் ஊழியர் வேலைநிறுத்தம்; தமிழகத்தில் மின்சார வினியோகம் பாதிக்கும்

இரு ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்காததால், கடும் கோபம் அடைந்துள்ள, மின் வாரிய ஊழியர்கள், நாளை முதல், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும், மின் வினியோக பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறுதி முயற்சியாக, இன்று நடக்கவிருந்த பேச்சு ரத்தானதால், ஆத்திரமடைந்துள்ள ஊழியர்கள், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும் என, அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், பொறியாளர் உட்பட, 86 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு, 2015 டிச., மாதம் முதல், புதிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; இதுவரை வழங்கவில்லை.இதற்காக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், வாரிய அதிகாரிகள், பல முறை பேச்சு நடத்தினர். அதில், நிலுவை தொகையுடன், ஊதிய உயர்வு வழங்குமாறு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தீர்வு இல்லை



நிலுவை தொகை இல்லாமல், 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க, மின் வாரியம் முடிவு செய்தது. ஆனால், தமிழக அரசின், நிதித் துறை, 2.40 மடங்கு உயர்வு போதும் என, மின் வாரியத்திடம் தெரிவித்தது.

அதை, ஊழியர்கள் ஏற்காததால், பேச்சில் தீர்வு ஏற்படவில்லை. சென்னை, தலைமைச் செயலகத்தில், மின் துறை அமைச்சர், தங்கமணி, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட, சில தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து, ஜன., மாதம் பேசினார்.


அதில், ஊதிய உயர்வு முடிவு செய்யும் வரை, மாதத்திற்கு, 2,500 ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக, அமைச்சர் தெரிவித்தார். அதற்கு, அந்த சங்கங்களும் ஒப்புதல் தெரிவித்தன.
இரு ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்காத நிலையில், இடைக்கால நிவாரணம் அறிவித்தது, ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால், மின் ஊழியர் மத்திய அமைப்பு உள்ளிட்ட சில சங்கங்கள், 16 முதல், வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன.இதையடுத்து, 'ஊழியர்கள், ஒரு நாள் பணிக்கு வராவிட்டாலும், எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என்று, மின் வாரியம்எச்சரித்தது.

வேலைநிறுத்தம் அறிவித்துள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் மின் வாரிய அதிகாரிகளுடன், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், 12ம் தேதி பேச்சு நடத்தினர். அதில், எந்த முடிவும் ஏற்படாத நிலையில், 15ல், மீண்டும் பேச்சு நடத்த இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒத்திவைப்பு



இந்நிலையில், இன்று நடக்கவிருந்த பேச்சு, நிர்வாக காரணங்களுக்காக, ஒத்தி வைக்கப்படுவதாகவும், பொது நலன் கருதி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்றும், தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனால், ஆத்திரம் அடைந்த ஊழியர்கள், நாளை, திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.இதற்காக, சென்னை, தலைமை அலுவலகம் உள்ளிட்ட, பல அலுவலகங்களுக்கு சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சென்று, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதனால், மின் வினியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வேலைநிறுத்த போராட்டம் நடத்தினாலும்,மின் உற்பத்தி, மின் வினியோகம், மின் கட்டணம் வசூல் என, எந்த பணிகளும் பாதிக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.இது குறித்து, மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச்செயலர், எஸ்.எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது:பெருவெள்ளம், 'வர்தா, ஒக்கி' புயலின் போது, மின் வினியோகம் முடங்கியது.

அப்போது, ஊழியர்கள், போர்க்கால அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்க, அரசு இழுத்தடிகிறது.போராடினால் தான் தீர்வு கிடைக்கும் என, வேலைநிறுத்த போராட்டத்திற்கு, ஊழியர்களை துாண்டியது, அரசு தான். எனவே, திட்டமிட்டபடி, நாளை போராட்டம் நடக்கும். கட்சி பேதம் இல்லாமல், அனைத்து ஊழியர்களும் பங்கேற்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

பொறியாளர்களும் பங்கேற்பு? 'வேலைநிறுத்த போராட்டத்தை, சில சங்கங்கள் மட்டுமே அறிவித்துள்ளதால், எந்த பாதிப்பும் இல்லை' என்று, மின் வாரிய அதிகாரிகள், அரசிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், போராட்டத்திற்கு, அனைத்து ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'பொறியாளர்கள், அதிகாரிகளுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு பதில், 10 ஆண்டுகளுக்கு, ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கலாம்' என்று, நிதித் துறை, மின் வாரியத்திற்கு பரிந்துரைத்து உள்ளது. இது, இரு தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதால், அவர்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அறிவிப்பு? வேலைநிறுத்த போராட்டத்தை எதிர்கொள்வது தொடர்பாக, மின் வாரிய இயக்குனர்கள், செயலர் ஆகிய உயரதிகாரிகள், நேற்று மாலை, முக்கிய ஆலோசனை நடத்தினர். அதில், ஊழியர்களுக்கு, 2.57 மடங்கும், பொறியாளர்களுக்கு, 2.40 மடங்கும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பேசப்பட்டுள்ளது. எனவே, இன்று ஊதிய உயர்வை அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (44)

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    இரணுவ ஆட்சி நடந்தால் எந்த போராட்டமும் இருக்காது.. அவன்அவன் அவன்வேலையை பார்ப்பான் .கோஷம் கொடி கொண்டாட்டம் எல்லாம் இராது. சட்டத்தை மதிப்பார்கள் .மதிக்க வைப்பார்கள் .

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    ஜாதியை வைத்து மதிப்பிடுவது. அரசு வேலை வழங்குவது.. கோட்டா வழங்குவது எல்லாம் ஒழிக்கனும். .உழைக்க கூடியவனுக்கு வேலை வழங்கனும்.. முடியாதவனுக்கு உட்காரவைத்து சாப்பாடு போட்டு காக்கனும். .இறைவன் படைப்பை சோதிக்க எண்ணுவதும் சலுகை என காப்பதும் கூடாதுங்க.. போன ஜென்மாவில் அவன் செய்த பாவ புன்னியங்களுக்கு ஏற்ப கடவுள் இப்பிறவியை அளிக்கிறார் எனவே அவர்களையும் போராட வைக்க கூடாதுங்க..தன் சுய தோழில் புரிய ஊக்கம் தரனும்ங்க அப்போதான் .நாடு முன்னேறும் ....ஜாதிக்கு சலுகை கொடுத்து குறைந்த மதிப்பெண்ணுக்கு வேலை கொடுத்தாலும் ஊதியம் குறையக்கூடாதுங்க குறைந்தா போராட்டம் உண்ணாவிரதம்.ஆனால் வேலைக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்எகனும் என்னங்க இது>>>>>>

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    நாட்ல போராட்டம் என்று உண்டானதோ அன்றே சோம்பேரிகள் உண்டானர். ஊழல் உண்டானது. இருப்பதை வைத்து திருப்த்தி அடைவது நல்லதுங்க. ஏன் எம்எல்ஏவுக்கு லட்சம் சம்பளம் என்று போராடலாம். சேவை மனம் படைத்தவர்கள் அரசியலுக்கு வரலாம் கர்ம வீர்ரர் காமராஜ்போல் கனம் அப்துல் கலாமைபோல் உழைப்பவர்களே அரசியலுக்கு வரனுங்க அப்போதான் கடன்கார நாடு என்றபெயர் மறையும்.அப்படி பட்ட அன்பர்களை தேர்வு செய்வதே நம் கடமை .போராட்டம் வேலை நிறுத்தம் உண்ணாவிரதம் எல்லாம் நம் கடமையல்லங்க>>>>>

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    ஊதிய உயர்வு என்பது மழை வெய்யில் பாராமல் இராணுவ வீரர்களைப்போல் உழைக்கும் உழைப்பாளிகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். வந்தே மாதரம்

  • Kumar - Chennai,இந்தியா

    பஸ் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றியதுபோல கரண்ட் கட்டணத்தையும் தாறுமாறாக ஏற்ற அரசும் அரசின் அதிகாரிகளும் ஏற்பாடு செய்துள்ள வேலை நிறுத்தமாக இருக்கலாமோ ஆட்சி முடியுமுன் அல்லது கலையுமுன் சுருட்ட வேண்டியதை சுருட்ட திட்டமோ எந்த வழிகளில் பணம் வெளியே போகிறது என்பதை கண்டுபிடித்தாலே ஒழுங்கான முறையில் சம்பளம் கொடுக்க முடியும். இது பஸ்ஸுக்கும் கரண்டுக்கும் பொருந்தும்.

  • TamilReader - Dindigul,இந்தியா

    கொள்ளை அடிக்கிற MLA மற்றும் மந்திரிகளுக்கு இரண்டு மடங்கு சம்பள உயர்வு கொடுக்க உடனே அரசாணை இட்டது இந்த கொள்ளைய அடிக்கிற அரசு... ஆனால் இரவு பகலாய் உழைக்கும் தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வு கேட்டா... உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டுகிறது இது என்ன ஞாயம் என்று தெரியவில்லை

  • Hari - Chennai,இந்தியா

    சம்பளம் உயர்வு எவ்வளு கேட்கிறார்கள் மற்றும் எவ்வளவு கொடுக்க நினைக்கிறார்கள் என்று தெரியாமலே 2+ மடங்கு என்று கூறுகிறீர்கள்.அது கேட்காமலே மற்றவளுற்கு கொடுக்கும் சம்பளம் .எங்களுக்கு தற்போதைய சம்பளத்தில் 20 சதவிகிதம் அதிகம் .கொடுத்தாலே போதுமானது

  • Ramesh - chennai,இந்தியா

    பாரத நாட்டைப் பற்றி இத்தருணத்தில் பாரதி இல்லை

  • Soma Sundaram - Philadelphia,யூ.எஸ்.ஏ

    அடேய் உங்க பொண்டாட்டி புள்ளைங்க தலையல கை வச்சி சொல்லுங்கடா நீங்க சம்பளத்துக்கா வேலை பாக்கிறிங்க...எதுகெடுத்தாலும் லஞ்சம் ...

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    @மனோ :: மிகவும் சரி. நானும் இன்று வரை மின் இணைப்பு, கதவு எண், குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், எதுக்குமே காலணா கூட லஞ்சமாக கொடுக்கவில்லை. வீட்டில் விசேஷத்துக்கு போஸ்ட் லருந்து , சட்ட விரோதமாக, கரண்ட் இழுக்க சொல்வது, சிங்கிள் பேஸில் ஏசி, மோட்டார் சட்ட விரோதமாக போடறது., கிரமப்படி இல்லாமல் ஊடால பூந்து மின் இணைப்பு வாங்குவது எல்லாம் பொதுமக்கள் தான். சட்ட விரோதம் என்பதால் மக்கள். தாங்களாகவே லஞ்சம் கொடுக்கிறார்கள். அப்புறம் காந்தி மாதிரி பேசலாமா?

  • rajan - kerala,இந்தியா

    தமிழகம் இந்த ஊழல் ஆட்சியாளர்களால் நிம்மதி இல்லா வாழ்க்கை முறை மக்களின் மேல் திணிக்க பட்டுள்ளது. இந்த துறை போராட்டம் பேருந்து கட்டண உயர்வு போல மின்சார கட்டண உயர்வால் மக்கள் வாழ்க்கை போராட்டமாக போகிறது. ஆனாலும் இந்த துறையில் பெரும்பானமை பணிகள் லஞ்சம் வாங்கியே தலைக்கு சுமார் 5 லட்ச்சம் வரை விலை போகியுள்ளது, போதாக்குறைக்கு மின்சார கொள்முதல் ஊழல் கோடிக்கணக்கில் கார்டன் காசு பார்த்த துறை. இப்படி ஒரு துறை விடாமல் லஞ்சம் விளையாடும் போது இறுதியில் அத்தனை நஷ்டத்தையும் உருவாக்கியவர்கள் பஸ் கட்டணத்தை ஏற்றி கூத்தடிச்ச மாதிரி மறுபடியும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களின் அடிவயிற்றில் கைவைக்க தயாராகி விட்டார்கள். இலவசங்களை சுவைத்த மக்கள் அது மறைமுகமாக கொடுக்கும் பாலிடால் குடித்தும் மடியதானே வேண்டும். இதுதான் கட்டுமரம் ஆயாம்மா கொடுத்த ஆட்சி முறை அகால விஷம். காசு வாங்கி Zட்டு போட்டவர்கள் சாக தானே வேண்டும். எதனை அத்தியாவசிய விலை உயர்வும் இந்த அரசியல்வாதிகளை பாதிக்காது அவர்களுக்கு எல்லாமே பிரீ தானே மக்கள் பணத்தில் இருமடங்கு சம்பளம் இருமடங்கு ஊழல் போனஸ். நாடும் மக்களும் உருப்பட்ட மாதிரி தானே. வாழ்க வளமுடன்.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    இரண்டாண்டு ஊதியம் உயராது அனால் எம்.எல்.ஏ க்களுக்கு 2 மடங்கு ஊதியம் உயரும்??? கடமை இது கடமை. புத்தன் ஏசு காந்தி பிறந்தது எதற்காக தோழா உனக்காக (உன்னை கூமுட்டை செய்வதற்காக) சொன்னது யார் நிச்சயமாக எம்.ஜி.ஆர் இல்லை, அவருக்கு கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் எழுதிக்கொடுக்க அதை அவர் உளற அப்போ நிர்வாகம் கூட அப்படித்தானிருக்கும். அதன் டாஸ்மாக் நாட்டு மின்துறை லாபம் இந்த அளவுக்கு கீழ் இறங்கிப்போனது.

  • மனோ - pudhucherry,இந்தியா

    இன்றைய இளைஞர்கள் ஒரு சின்ன துரும்பைகூட கிள்ளி போடமாட்டான். புதுசா ஜாய்ன் பன்ற அதிகாரியாகட்டும் நேத்து முதல்வர் கையால வேல வாங்கின எல்பர் (சார் அவுங்க எல்பர் இல்லையாம் கள உதவியாளராம்) வரை எந்த லெவல்ல வேல செய்யுதுன்னு ஈபி ஆபீஸ்ல போய் விசாரியுங்க. பழைய ஆட்கள்தான் இன் னும் ஒழுங்கா வேலை செய்யராங்க. புதுசா வர்றவன் நாளைக்கு எவ்ளோ சம்பாதிக் களாம்னு பார்க்கிறான்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    இங்கே பெரும்பான்மை வாசகர்களுக்கு மின் வாரிய ஊழியர்களின் கஷ்டங்கள், ஊதிய உயர்வு இன்மை பற்றியெல்லாம் தெரியவும் டெஹ்ரின்யாது தெரிந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள். சும்மா சும்மா தனியாரிடம் குடு தனியாரிடம் குடு இதை மட்டுமே எழுத அவரு கும்பல். அவங்கள்லாம், அரசுத் துறையில் வேலை கிடைக்காத கோபத்தில் எழுதுகிறார்கள் என்றே நினைக்கிறேன். ஊதிய உயர்வுக்கான அவரு சட்டம் வரையறை வகுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அதை அரசு கடைப்பிடிக்கவில்லை. அதைக் கண்டிக்க யாருக்கும் அறிவும் இல்லை, திறனையும் இல்லை விருப்பமும் இல்லை. மின் துறை ஊழியர்கள் லஞ்சம் வாங்கறான், ஆபீசில் தூங்கறான் என்று எழுதிக் கொண்டிருப்பார்கள். ஒரே ஒரு மணிநேரம் எலெக்ட்ரிக் டிரெயினுக்கு கரண்ட் வரலைன்னா யோசிச்சு பாருங்க..மின் துறை ஊழியர்கள் வேலை செய்யாமலா மின்சாரம் இருக்கிற போது சீராக வந்துகொண்டிருக்கிறது? எத்தனை மருத்துவமனைகள், நோயாளிகள், எல்லாரும் இதே மின்வாரிய ஊழியர்களின் வேலைகளால் மட்டுமே மின்சாரம், சிகிச்சை பெறுகிறார்கள். சும்மா சும்மா அரசு துறைகளை தீட்டுவதில் என்ன புண்ணாக்கு சந்தோஷம் உங்களுக்கு? அரசு வேலை கிடைக்காதவர்கள் தனியார் மயமாக்கு தனியார் மயமாக்கு என்று எழுதுகிறார்கள். இது மிகத் தவறு. ஒரு அடிமை சமுதாயத்தை உருவாக்காதீர்கள். நன்றி.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    மூத்த குடிமகனாக இருப்பதால் வார்த்தைகளை நாகரீகமாக எழுதவேண்டிய ஒரு நிலை, இவைகளை ஒட்டு மொத்தமாக வேளையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு இளைஞர்களை வைத்து இந்த துறையை நிர்வகிக்கவேண்டும், இல்லையென்றால் அனைத்து வீடுகளுக்கும் வட்டி இல்லாத கடன் கொடுத்து சூரிய ஒளி மின்சாரம் கொடுத்து விட்டு இந்த துறையையே இழுத்து மூடிவிடலாம், வேறு வழி இல்லை, இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வது நல்லதல்ல, வந்தே மாதரம்

  • மனோ - pudhucherry,இந்தியா

    மிஸ்டர் பழனிவேல் உங்கள் கோபத்தில் எந்த நியாயமும் இல்லை. நான் ஈபி சர் வீஸ் வாங்க டிரைவிங் லைசன்ஸ் பெற ரேஷன் கார்டு வாங்க இன்னும் அனைத் து அரசு துறை சார்ந்த பணிகளுக்கு லஞ் சம் ஏதும் அளிக்கவில்லை. அலைக் கழிக் கப் பட் டேன. ஆனால் என்னுடைய டைட் வேலைக்கு இடையில் போராடி வென்றிருக்கிரேன். அது ஏன் உங் களால் முடியவில்லை? லஞ்சம் கேட் டால் விஜிலன்சில் பிடித்து கொடுங்கள். லஞ் சம் கொடுத் து காரியத் தை சாதித்துக்கொண்டபின் புலம்பக் கூடாது. புதியதாய் பணி நியமனம் செய்யப்பட லஞ் சம் விளையாடுவது தங்களுக்கு தெரியாதா? புதியதாய் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் அதிகப்படியாய் லஞ் சம் வாங் குவது தங்களுக்கு தெரியாதா?

  • Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா

    நாடு யாருக்கு தேவை அதை ஆள்வதற்கு ஓட்டு தான் முக்கியம் என்று ஆகிவிட்டது, மின் வாரிய ஊழியர்களின் வாக்குகளை பெற வேண்டும் அதற்காக வழக்கம் போல மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரிய ஊழியர்களின் சம்பளத்தை 2 .57 மடங்காக உயர்த்துங்கள்...............

  • ganapati sb - coimbatore,இந்தியா

    மத்திய அரசு மானிய விலையில் தரும் LED பல்புகளை வீட்டிற்கு வீடு கொண்டு சென்று விற்றால் மின்சாரம் சேமிக்க படும் . அரசும் தேவையில்லாமல் தரும் நுகர்வோருக்கான மானியத்தை நீக்கிவிடலாம். அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து அதிகப்படியான சம்பளம் பெற்றனர் பின்னர் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் செய்து பஸ் கட்டணத்தை உயர்த்தினார் இப்போது மின்சார ஊழியர் வேலை நிறுத்தம் செய்தால் மின் கட்டணம் உயரும் வாய்புள்ளது கட்டணம் சம்பளம்காலத்திற்கேற்ப உயர்த்துவது தவறில்லை அனால் ஊழல் நிர்வாகமும் ஒழுங்கற்ற சேவையும் மாற்றப்பட வேண்டும் . அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்போடு நேர்மையாக உழைக்க வேண்டும் . மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நேரத்தில் வேலை நிறுத்தம் செய்தால் இவர்களுக்கு சம்பள பிடித்தம் மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்க வேண்டும்.

  • பொள்ளாச்சி சுரேஷ் - பொள்ளாச்சி,இந்தியா

    அரசு ஒரு யூனிட் 7.01 ரூபாய்க்கு அடானியிடம் மின்சாரம் வாங்குகிறார்கள். ஆனால் மக்களிடம் சோலார் மின்சாரம் குறைந்த விலையில் வாங்க ரெடி இல்லை. கேட்டால் நெட் மீட்டர் இல்லை என்று சாக்கு. எல்லாம் கேடுகெட்ட அரசு, நிர்வாகம், லஞ்சம், ஊழல் ...

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    மின் வாரியத்தை படிப்படியாக தனியார் மயமாக்கினால் பிரார்ச்சனைகள் தீரும். மும்பை நகரில் மின் உற்பத்தியும் விநியோகமும் தனியார் வசம் உள்ளது.

  • Dinesh Pandian - Hyderabad,இந்தியா

    தெலுங்கானா வுக்கு சமமாக கட்டண உயர்வு உண்டு

  • Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா

    அடுத்து என்ன சம்பளத்தினை ஏற்றிவிட்டு மின்கட்டணத்தினை ஏற்றிடவேண்டியதுதானே வேறு என்னதான் வழி இந்த அரசாங்கத்திற்கு?

  • சிவ.இளங்கோவன் . - Kuwait ,குவைத்

    இதுபோன்ற போராட்டங்களை அரசாங்கமே ஏற்பாடு செய்து பின்னர் மின் கட்டணத்தையும் உயர்த்துகின்றன ...பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ..இந்த அடிமை மங்குணிகளின் ஆட்சியில் மக்கள் எண்ணற்ற துயரங்களை அனுபவித்து வருகின்றனர் ...தளபதி வருகைக்காக தமிழகம் காத்துக்கிடக்கிறது ..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    அரசியல் வாதிகள் கடந்த அறுபது ஆண்டுகளாக தம்மை வளப்படுத்தி கொண்டார்கள்... பொதுத்துறை நிறுவனங்களில் சுய லாபத்திற்க்காக இலவசங்களை கொண்டுவந்து தொழிலாளர்களை பிச்சை எடுக்கவைத்து விட்டார்கள்... தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்களுக்கு நான்கு ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்க படுவதால் மத்திய அரசின் ஏழாவது ஊதிய பரிந்துரையை கேட்பது முற்றிலும் தவறாகும்...

  • S.Palanivelu - Chennai,இந்தியா

    தமிழ்நாட்டில் லஞ்சம் கொழிக்கும் துறையில் இதுவும் ஒன்று .அங்கு வேலை செய்யும் யாராவது ஒருவர் நான் லஞ்சம் வாங்கவில்லை என்று சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம் .மின்சார வாரியத்தின் வாசல் மிதித்தல் இருக்கும் மரம் ,செடி ,கதவு, தூண் , ஜன்னல் ....இத்தியாதி லஞ்சம்... லஞ்சம்....இதில் சம்பள உயர்வு ஒரு கேடு .இந்நேரம் ஜெயா இருந்திருந்தால் இவர்கள் கதையே வேறு ..இப்போ இருக்கும் அரசு ஒரு சாபக்கேடு .அத்தனை பேரையும் டிஸ்மிஸ் செய்துவிட்டு லட்ச கணக்கில் வேலையில்லாமல் இருக்கும் பொறியாளர்களுக்கு பணியில் அமர்த்துங்கள் .

  • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

    வங்கிகள் மற்றும் இது போன்ற சேவை நிறுவனங்களை தேசிய மயமாக்கியதே ஊழலுக்கு வழி வகுக்கத்தான். Today we come to know about a huge banking fraud, but in late 80's Minister of Finance for State (Janardhan Poojari) conducted day light bank frauds in the name of 'loan melas' and looted public money. Rajiv Gandhi who started on a very positive intent and sincerity to computerize banks, railways to eradicate corruption had to listen to these jokers as he was not sure of his victory in 1989. நல்லது செய்யணும்னு நினைச்சு வரவங்களையும் தோற்கடிக்கறதுனால எல்லாரும் சுலபமான வழியையே பின்பற்றுகிறார்கள். I am certain that Modi will privatize most of these institutions in his second term.

  • balakrishnan - coimbatore,இந்தியா

    இவங்க மட்டும் யாரையும் கேட்காமல், யாரும் கேட்காமல் இவங்களோட சம்பளத்தை இருமடங்கு உயர்திக்கொண்டார்கள், தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டால் மட்டும், அரசு ஆக்ரோஷத்துடன் அடக்க நினைக்கிறது, இதே மந்திரி பலமுறை சொல்லிவிட்டார் , ஆனால் எதுவும் நின்ற இடத்திலேயே நிக்குது, நகரப்பகுதிகளை விட புறநகரில், கிராமப்பகுதிகளில் வேலை பார்க்கும் லைன் மென் வேலைப்பளு மிகவும் கஷ்டம் ஒரு ஆள் பத்து கிராமத்துக்கு மேல் கண்காணிக்க வேண்டும், திடீரென்று ஹெச்.டி லைனில் ட்ரிப் ஆகிவிட்டால் இரவு பகல் பாராமல் கண்விழித்து மின் சப்பளை சரி செய்த பிறகு வீடு திரும்பவேண்டும், சில தவறுகள் நடக்கலாம், அதற்காக அவர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிட கூடாது, அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும்

  • Chennaiite - Chennai,இந்தியா

    சுமார் நான்கு வருடங்களாகவே இந்தியாவில் நிம்மதி இல்லை. எல்லா இடத்திலும், எல்லா துறையிலும் பிரச்சனை, போராட்டம். பொது மக்கள் சிரமத்துக்குளாக்கப்படுகின்றனர். இந்தியா கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி போகிறதுபோல் உணருகிறேன்.

  • ஆப்பு -

    மொதல்ல கெவுனர், முதல்வர் ஏரியால கரண்ட்ட கட் பண்ணுங்க...

  • JShanmugaSundaram -

    இட ஒதுகீட்டை ஒழித்தால் தான் சரியாகவரும் மக்களை தான் சொல்லனும் போராட தூண்டுவது பிறகு விலையை ஏற்றுவது பிறகு அரசாங்கத்திற்க்கு எதிராக போராடுவது இவன்க வேலை இதுதான் இனி திமுக கூட்டணியில் உள்ளவர்கள் எவரும் தமிழகத்தில் ஆட்சியை புடிக்கமுடியாது

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    மின்விநியோகத்தை அரசே செய்வது திமுக அதிமுக தொழிற்சங்கங்கள் ஊழலில் ஈடுபடவசதியாகத்தான் . விரைவில் தனியார் மயமாக்குவதே நமக்கு நல்லது ..அரசு வணிகம் செய்தால் மக்கள் பிச்சையெடுப்பர்

  • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

    ஆரம்பிச்சுட்டானுங்கயா அடுத்த பிரச்சினையை........நாட்டுல நூறு சங்கம்.. ஒவ்வொருத்தனும் ஒரு நாலு போராட்டம் நடத்தினா தினம் போராட்டம் நடந்துக்கிட்டே இருக்கும்...........அரசாங்கத்தின் கையாலாகாத தனமே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம்........அனைத்து பொது துறை நிறுவனங்களிலும் நடக்கும் ஊழல் மிக பெரிய காரணம்.............. தமிழகத்தின் மொத்த கடன் தொகையில் அம்பது சதவீத கடன் தொகை மின்வாரிய துரையின் நஷ்டம் ஆகும்.......தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மின் பகிர்மான மற்றும் உற்பத்தி துறையின் கடன் தொகை மட்டும் ரெண்டு லட்சம் கோடிக்கும் மேல்........இந்த நஷடம் வர காரணம் என்ன? கண்டிப்பாக நுகர்வோரிடம் இருந்து பணம் வசூலித்து விட படுகிறது......... அது போக மின் மீட்டருக்கும் வாய்ப்பு தொகை என்ற பெயரில் ஒரு தொகையை கறந்து விடுகின்றனர்.......இது திரும்ப பெற பட்டதாக எனக்கு இதுவரை தகவல் இல்லை..விவசாயத்திற்கு தரப்படும் இலவச மின்சாரத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது.........எனவே மின்வாரியம் இலவசமாக மக்களுக்கு எதுவும் தரவில்லை......பின்பு நட்டம் எங்கு இருந்து வருகிறது? நூறு சதவீதம் ஊழல்.......இந்த மின்வாரிய ஊழியர்கள் தங்கள் துறையில் நடக்கும் ஊழலை எதிர்த்து போராடி இருந்தால் பாராட்டி இருக்கலாம்..... இவர்களே ஊழலும் செய்துவிட்டு இவர்களே ஊதிய உயர்வும் கேட்டு போராடுகின்றனர்..........சாதாரண ஒரு ஜே.ஈ மட்டுமே மின்வாரியத்தில் லட்ச கணக்கில் கல்லா கட்டுகிறார்.........அதே ஆள் ஊதிய உயர்வு போராட்டத்திலும் கலந்து கொள்கிறார்.......மின் இணைப்பை கொடுக்கும் ஊழியர் ஐநூறு ரூபாய் குறைந்த பட்சம் லஞ்சம் கேட்கிறார்......அதே ஆள் ஊதிய உயர்வு போராட்டத்திலும் கலந்து கொள்கிறார்........இவர்களின் போராட்டத்தை பொது மக்கள் ஆதரிப்பார்களா?

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    படித்து பட்டம் பெற்றுவிட்டு பட்டினியில் வாடும் இளைஞர்களுக்கு வேலை கொடுத்து>>> இவர்களை கொஞ்சகாலம் ஓய்வில் இருக்க சொன்னால் வேலையற்றுள்ள இளைஞர்கள் மனமாற பாராட்டுவார்கள் .

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    ஒவ்வொரு அரசு ஊழியரும் நான் என்னுடைய பணியை செய்ய ஒர் பைசா கூட லஞ்சம் வாங்காமல் செய்வேன் செய்கிறேன் என்று மார்தட்டி சொல்ல துணிவு உண்டா? அப்படி துணிவு உள்ளவர்கள் போராட தகுதி உண்டுங்க >>>

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    எங்கும் போராட்டம் எதிலும் போராட்டம் ஏன்னா எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் ...எம் எல் ஏ வுக்கு மட்டும் ஊதியம் லட்சம்+ பின்ன எப்படி போராடாம>>>> இராணுவ ஆட்சி வரனுங்க இவங்களை எல்லாம் கட்டுப்படுத்த சட்டத்தை மதித்து நடக்கசெய்ய>>>>>சுயநல வாதிகள் பெருத்து விட்டாங்க நாட்ல>>>இனி ஒன்றிலும் நேர்மை பார்க்க முடியாதுங்க.....

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கடந்த ஆண்டை விட 2+ மடங்கு அதிகமாகவா வேலை செய்கிறார்கள் திடீர் என்று சம்பள உயர்வு கேட்க.... வெட்கம் கெட்டதுகள்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement