Advertisement

பா.ஜ., புதிய தலைமையகம் 18ல் பிரதமர் மோடி திறக்கிறார்

பா.ஜ., புதிய தலைமையகத்தை, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், 18ல் திறந்து வைக்கிறார்.

மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையகம், டில்லியின், அசோகா சாலையில் அமைந்துள்ளது. கடந்த, காங்., ஆட்சியின் போது, அனைத்து கட்சி களுக்கும் தலைமையகம் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டது.


அதன்படி, தற்போதைய தலைமையகத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, தீனதயாள் உபாத்யாய் மார்க் சாலையில், பா.ஜ., புதிய தலைமையகம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த, 2016 ஆகஸ்டில், புதிய தலைமையகத்துக்கான அடிக்கல்லை, பிரதமர் மோடி நாட்டினார்.


பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த கட்டடத்தை, 18ல் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர், இதில் பங்கேற்க உள்ளனர்.மூன்று தளங்கள் மற்றும் ஏழு தளங்கள் என, இரு கட்டடங்கள் உடையதாக, புதிய தலைமையகம் அமைகிறது. இந்த கட்டங்களுக்கு நடுவில் ஒரு பூங்காவும், கட்சியின் தேர்தல் சின்னமான, தாமரையின் வடிவில் சிறிய குளமும் அமைக்கப்பட்டு உள்ளது.


மூன்று தளங்கள் உடைய, முக்கிய அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில், கட்சி தலைவருக்கும், பார்லிமென்டின், இரு சபைகளின் கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலர்களுக்கும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள, தன் அறையில் இருந்து, வளாகத்தில் உள்ள அனைத்து பகுதி களையும், அமித் ஷா பார்க்க முடியும். கட்சியின், எம்.பி.,க்கள் கூட்டம் நடத்துவதற்கான வசதியும், புதிய வளாகத்தில் உள்ளது. இங்கு, 450 பேர் மற்றும், 150 பேர் அமரக் கூடிய வசதியுடன் கூடிய, இரு கருத்தரங்க கூடங்கள் உள்ளன.கார்கள் நிறுத்துவதற்காக, தரைக்கு அடியில் இரண்டடுக்கு, 'பார்க்கிங்' வசதியும் செய்யப்பட்டு உள்ளது. பசுமை கட்டடமாக அமையும் வகையில், அதிக வெளிச்சம் கிடைக்கும் வகையில், அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சூரிய சக்தியை பயன்படுத்துவதற்கான வசதி, மேல்தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.


மழைநீர் சேகரிப்பு வசதியும் செய்யப்பட்டு உள்ளது.அனைத்து மாநில தலைமை அலுவலகங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வசதியுடன், இந்த புதிய தலைமையகம் முழுவதும், 'வை - பை' வசதி செய்யப்பட்டுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  ஏழை மக்கள் நிறைந்த நாட்டில் இப்படி வசதியாக கட்சி அலுவலகம் .. நாட்டின் கஜானா காலியானதின் ஒருபகுதிதான் இது . ரயில்வே பிளாட்பார டீக்கடை புகழை இப்படி ஆக்கியதின் விளைவு .. இது மட்டுமல்ல 2019.க்கு பிறகு எல்லாம் வெளிவரும் மோடிக்கு திகார் அறைக்கு சென்று வெளிவந்து கொண்டிருப்பார் நீதிமன்ற கட்டளைகளுக்கேற்ப .. ஆக கொள்ளைக்கார்கள் நாட்டை கொள்ளை அடித்ததை வெளிக்காண்பிப்பபதும் இயற்கையின் நியதியே ///

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  "ஜீ, இது மக்களின் வரிப் பணம்தானே?" (இதை கேட்டால் ஆன்டி இன்டியன் என்று சொல்வீர்கள்).

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அநாகரிக கெட்ட வார்த்தைகள், அவமரியாதையான சொற்கள், கலாச்சாரமில்லாத பிரிவினைவாத பேச்சுக்கள், தலய வெட்டினா 2 கோடிபோன்ற கசாப்பு கடை கூவல்கள், வன்முறை மதவாத ஆசாமிகளுக்கு இவ்வளவு பெரிய கட்டிடம் லாம் ரெம்ப அதிகம். நாலு வருஷமா அடித்த பணத்தை இதில் போட்டுவிட்டார்கள் போல.

 • EJAMAN - doha,கத்தார்

  கேவலம் நம்ம பவர் தெரியாம அலாரர்ரன்னுக தேச துரோகிகள்.

 • EJAMAN - doha,கத்தார்

  மல்லையா/மல்லய்யா டூ........ரிலீஸ்

 • EJAMAN - doha,கத்தார்

  அவன் திருடன். நான் மட்டும் நல்லவன்.

 • Ram - Panavai,இந்தியா

  கக்கூஸ் போறவனுக்கு tax ..கார்பொரேட் கம்பெனிகளுக்கு சலுகை

 • Power Punch - nagarkoil,இந்தியா

  எல்லாம் செல்லாத நோட்டு செய்த மாயம்......" Demonitisation "... வாழ்க....

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  ஒரு நாட்டை ஆளும் மிகப்பெரிய பார்ட்டி நிர்வாக வசதிக்கு கட்டிட வசதி தேவைதான். சந்தர்ப்ப சூழ்நிலைகாரணமாக சில முறை ஆட்சிக்கு வந்த தி மு க விற்கே அண்ணா சாலையில் அவளோ பெரிய கட்சி கட்டிடம் அண்ணா அறிவாலயம் திருச்சில் ஒன்று மதுரையில் ஒன்று என இருக்கும்போது ஒட்டுமொத்த இந்தியாவை ஆளும் கட்சிக்கு நிலையான அலுவலகம் தேவைதான். டொனேஷன் நிதியில் தான் கட்டப்பட்டது இதன் உண்மை. அதுக்குள்ள ஏழை மக்கள் அது இதுனு பிணாத்த ஆர்பித்துவிட்டனர் அரபி அடிமைகளும் பாவாடை கமிஷன் அடிமைகளும்.

 • Tamilan - Doha,கத்தார்

  இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது. 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கே இவ்வளவு பெரிய கட்சி அலுவலகம் இல்லை. இவர்கள் தான் ஊழலை ஒழிக்க வந்த அவதாரம். இதை இந்த நாட்டு மக்கள் நம்பனும்.

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  வலது சாரிகள் இனத்தின் பெயரால் தங்களை வளப்படுத்திக் கொள்பவர்கள் தான்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  பத்து கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட சீனா கம்யூனிஸ்டு கட்சியை தாண்டி உலகின் மிக பெரிய ஜனநாயக கட்சியாக வளர்ந்திருக்கும் பாஜகவிற்கு தேவையான தலைமை அலுவலகம் வாழ்த்துக்கள் அதேசமயம் பாராளுமன்ற வளாகத்திலேயே நுழைந்த தீவிரவாதிகள் போல யாரும் ஊடுறுவாமல் இருக்க இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமானதாய் இருக்க வேண்டும்

 • krishnan - Chennai,இந்தியா

  200 300 கோடி செலவாகி இருக்கும் போல. இவ்வளவு நிதி யாரு அள்ளி கொடுக்கறாங்களோ.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  முழு இந்தியாவையையும் ஆளும் ஒரு ஆளும் கட்சிக்கு இது போதாது என்று தான் சொல்வேன். உலகத்திலேயே பெரிய கட்சி என்று பெருமைகொண்டு உள்ள பிஜேபி கட்சியின் தலைமையகம் தற்போது செயல்பட போகும் கட்சி தலைமையகத்தை விட ஐந்து மடங்காக இருக்கவேண்டும் என்று தான் நான் சொல்வேன். சுமார் 1 .20 கோடி தீவிர உறுப்பினர்களை கொண்டு திகழும் உலகின் மாபெரும் கட்சியின் தலைமை இந்த சிறிய கட்டிடத்தில் எவ்வாறு சிறந்த முறையில் இயங்கமுடியும்? ஆள் அட்ரஸ் இல்லாத கம்யூனிஸ்ட் கட்சிக்கே சென்னையில் மிக பெரும் கட்சி தமைமையகம் இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் அதற்கு மிகப்பெரும் அலுவலகங்கள் இருக்கிறது. காரணம் ஒவ்வொரு மாதமும் கட்சி ஊழியர்களும், தொழில் சங்கங்களும் சேர்ந்து சுமார் 60 கோடி ரூபாய்களை அவரின் கஜானாவிற்குள் கொட்டி குவிக்கிறார்கள்..போதாக்குறைக்கு இந்தியாவிற்கு எதிராக, மோடிக்கு எதிராக , ஹிந்துக்களுக்கு எதிராக கூவ, சீனி, பக்கி மற்றும் வட கொரியாவின் பண கரிசனங்கள் வேறு.

 • Joseph Chandran - Atyrau,கஜகஸ்தான்

  கடசித்தலைவர் அல்லது கட்சியின் வேறு முத்த முன்னோடி அல்லவா கட்சி கட்டிடத்தை திரண்டக்க வேண்டும்?? பிரதமர் என்பவர் எல்லா கட்சிகளுக்கும் பொதுவானவர் அல்லவா??? தெரியவில்லை

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நீங்களும் உங்களையும் கட்சியையும் வளப்படுத்தி கொண்டீர்கள்..

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஆட்சியில இருந்துகொண்டு இது கூட செய்யாட்டி, அவங்க கட்சிக்காரங்களே நாளைக்கு இவரை மதிக்கமாட்டாங்க, இடமும், பணமும் எதுவும் இவர்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை, இன்றைய தேதிக்கு வசதியான ஒரே இயக்கம் இவங்க தான்,

 • Visu Iyer - chennai,இந்தியா

  கொள்ளை அடித்த பணத்தை சிலர் கட்டிடத்தில் போடுகிறார்கள்.. நல்ல முதலீடுகள் பல உள்ளன என்பதை அறியாமல் வெளி நாட்டில் தேடுகிறார்கள்.. குருடர்களை பின் தொடர நாமும் கண்களை மூடிக் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி இருக்கு.. பதில் எங்கே இருக்கு.

 • raja - chennai,இந்தியா

  மக்களுக்கு நல்லது செய்வாங்கனு பார்த்த ... மக்கள் இவங்கல்லு காசு பணம் கொடுத்து நீங்க நல்ல இருங்கனு சொல்ல வைக்குறாங்கோ ... கோவணம் தவிர எல்லாத்தையும் கழட்டி விட்டு ஏழை எளிய மக்களை சாப்பிடுறாங்க இந்த அரசியல் வாதிங்கோ .. அதுக்கு பல தரகர்கள் உண்டு ... சில மக்கள் வேறு வழி இன்றி இதற்க்கு துணை போகும் அவல நிலைதான் .... இந்த கட்டடம் ஒரு பிஜேபி காலத்து அவமான சின்னம் தான் இது...

 • JShanmugaSundaram -

  அருமை எல்லாமாநிலங்களிலும் கக்ஷிக்கு தலமைசெயலகம் வேண்டும் தமிழகத்தில் எல்லாமாவட்டத்திலும் பஜக கட்டம்வேண்டும் இதுபோல் இனி நாட்டில் யாரும் எந்ததனிமனிதரும் வீடுகட்டிவாடகைக்குவிடக்கூடாது எல்லோரும் இரண்டுமாடிவரைகட்டலாம் என்றும் ஒருவருக்கு 2400சதுர அடிமட்டுமே மனைவைத்துக்கொள்ள அனுமதி என்றும் ஒரேமாதிரியாக வீடு இருக்கவேண்டும் என்றும் வீடுகள் வரிசையாகதான் இருக்கவேண்டும் நெருக்கடியில் மக்கள்வாழக்கூடாது என்றும் பலதிட்டங்களை நான் எதிர்பார்க்கிறேன் யார் செய்வாரோ

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  இதையெல்லாம் ஆட்சேபிப்பவர்கள் தன்னை ஏழைகளின் கட்சி எனக்கூறிக் கொள்ளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை தமிழ்மாநில அலுவலகத்தைப் போய் பாருங்க இருபதாயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலத்தில் பல லட்சம் சதுர அடியில் 7மாடி மாளிகையை கட்டியுள்ளார்கள் (டெண்டர் விவரமே நன்கொடை கொடுத்தவர்களுக்கு கொடுக்கவில்லையாம் ). கட்டுமான செலவு மட்டுமே பதிமூன்று கோடிக்கு மேலிருக்கும். இதில் நடந்ததாகக்கூறப்படும் முறைகேடுகளுக்காக ஒரு வங்கி வழக்குப் போட்டுள்ளதாகத் தெரிகிறது இதனைத் தவிர திருச்சி நகரத்தில் சுமார் 5000 சதுர அடி தொழிற்சங்க நிலத்தை ஆட்டயப்போட்ட புகார் வேறு உண்டு .ஆனால் எதற்கெடுத்தாலும் மற்ற கட்சிகளின்மீது ஊழல் புகார் சொல்வதில் மட்டும் குறைச்சலில்லை

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  கட்சிக்காக நாட்டு பணம். காங்கிரஸ் எதற்காக seithathu ? எல்லா கட்சிக்கும் உண்டா ? என்ன condition ? எப்போ அரசு நிலத்தை எடுத்து கொள்ளலாம் ? மினிமம் MP கணக்கு எவ்வளவு ?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  காற்றுள்ள போதே தூற்றிக்கொள். ஆட்சியில் இருக்கும் போதே அள்ளிக்கொள்.. கமிஷன் அள்ளிக்கொள்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவர்களாவாது காங்கிரஸ் கட்சி போல வாடகைக்கு விட்டு சம்பாதிக்காமல் இருக்கவேண்டும்..

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  நாட்டின் கஜானாவே உங்களிடம்... இதென்ன பிரமாதம்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement