Advertisement

பிரியா வாரியர் நடித்த படத்துக்கு எதிராக புகார்

திருவனந்தபுரம் : சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும், ஒரு அடார் லவ் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள், முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி, தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியானது. அதில், அறிமுக நடிகை பிரியா வாரியர், கண் அசைவு மூலம், ஹீரோவிடம் காதலை வெளிப்படுத்துவது போன்ற பாடல் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
பிரியா வாரியரின் வித்தியாசமான முக பாவங்கள், சமூக ஊடகங்களில், பரவலாக ரசிக்கப்பட்டு, பகிர்ந்து கொள்ளப்பட்டது.


இதனால், ஒரே பாடலில், நாடு முழுவதும் பெரிதும் பேசப்படும் நடிகையாக, பிரியா வாரியர் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள காதல் பாடல், முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றஞ்சாட்டி, ஐதராபாதில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில், முகீத் கான் என்பவர் புகார் அளித்துள்ளார்.


இதுபற்றி, அந்த படத்தின் இயக்குனர், ஓமர் லுலு கூறுகையில், ''திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், யாரையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவில்லை. அதில், முஸ்லிம்களுக்கு எதிரான வரிகள் எதுவும் கிடையாது.


''எல்லா சமூகத்தவராலும் பாடப்படும், பழமையான பாடலையே, அந்த படத்தில் சேர்த்துள்ளோம்,'' என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

  சுபெர்ப், இந்த பொண்ணு ஒரு ரவுண்ட் வருவா ???? காதலை ரசிங்கப்பா ................

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைப்பதற்கு அதில் நடித்த ஒரே ஹிந்து பெண்ணிற்கு எதிராக ஒரு சிறு புகாரை கிளப்பி விட்டு அகில இந்திய இலவச விளம்பரத்திற்கு ஏற்பாடு செய்தாகி விட்டது. இந்த மாதிரி நரித்தந்திர வேலைகளை செய்து தான் தான் அரசியலில் அப்பாவி ஹிந்துக்களை ஏமாற்றுகிறார்கள்.

 • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

  சுதந்திரத்திற்கு வித்திட்டது என்று மார் தட்டிய இந்த சினிமா துறை மக்களை கேவலத்தின் உச்சிக்கு இட்டு செல்கிறது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  ஐதராபாத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில், முகீத் கான் என்பவர் புகார் அளித்துள்ளார். - என்னன்னு? "எங்கம்மே ஜிமிக்கி கம்மல், எங்கப்பன் கட்டண்டு போயே, எங்கப்பன் பிராந்தி குப்பி, எங்கம்மா குடிச்சி தீர்த்தே" ..ன்னு புகார் கொடுத்தானா?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  லவ் திஸ் கிட்.. மகிழ்ச்சிகரமான, குறும்புத்தனமான, விஷமம் நிறைந்த சுட்டி. பட்டாங்குக்காரி. இந்த கொழந்தையை பிடிக்கலைன்னா கண்ணை, காதை பொத்திக்கிட்டு இருட்டறையில் கிடங்கடா..

 • thonipuramVijay - Chennai,இந்தியா

  அவ்வளவு நல்ல பாடலா?

 • yaaro - chennai,இந்தியா

  இது ஒரு fake நியூஸ் .

 • Radhakrishnan -

  இவனுங்களுக்கு வேறு வேலையே கிடையாது.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  பத்மாவதி படம் வரலாற்றை திரித்து கூறியது என்று போராட்டம் நடந்தது . அதை கண்டித்த மத சார்பின்மை சிகாமணிகளே இப்போ உங்க கருத்து எல்லாம் எங்க போச்சு ? களி திங்க போச்சா ? கக்கா போக போச்சா ?

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  அடார் லவ் வுமில்லை..ஆதார் லவ் வுமில்லை.. மலயாளத்தில் "ஒரு ஓமர் லவ்" என்று தான் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  பிரியா வாரியரை ரசிச்சுட்டுப் போவானுகளா ... அத விட்டுப் போட்டு ....

 • பொலம்பஸ் - CHENNAI,இந்தியா

  வகுப்பறையில் எவ்வளவு கூர்மையாக பாடங்களை கவனிக்க வேண்டும் என்பதை இந்த பெண் சொல்லிக் கொடுக்கிறாள்..

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  எந்த டைரக்டரையாவது கிழித்து தொங்கப்போட்டு காய வைக்கணும் -ன்னு நெனச்சீங்கன்னா, ஒண்ணு செய்யுங்க .... அவன் எடுத்த லேட்டஸ்ட் படம் முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்துது -ன்னு கோர்ட்டுல முறையிடுங்க .... மத்ததை ஓரிறைவன், சாரி .... "நிதிபதி" பார்த்துக்குவாரு .... ஹிந்து மத உணர்வைப் புண்படுத்துது -ன்னு நீங்க கோர்ட்டுக்குப் போனா நீங்க டுபாக்கூர் வக்கீல் -ன்னு அர்த்தம் ....

 • K.Sugavanam - Salem,இந்தியா

  அடப்போங்கப்பா...

 • SunMohan -

  How did you say? please tell to every one. other vaice dont talk any how?

 • raj -

  marketing trajitaty

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement