Advertisement

'டவுட்' தனபாலு

மகளிர் காங்., பொதுச் செயலர் நக்மா: ரஜினி, கமல், தங்கள் கட்சியின் கொள்கைகளை, மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.டவுட் தனபாலு: நுாற்றாண்டு கண்ட காங்கிரசின் கொள்கை என்னன்னே மக்களுக்குத் தெரியலை... நேரு குடும்பத்தினரை தலைவராக தேர்ந்தெடுப்பது தான் காங்கிரசின் கொள்கைன்னு நினைச்சுட்டு இருக்காங்க... இதுல, அடுத்தவர் கட்சிக் கொள்கையை தெரிந்து நீங்க என்ன பண்ணப் போறீங்க என்ற, 'டவுட்' வருதே...!


காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு: தமிழக மக்கள், பணம் வாங்காமல் ஓட்டு போட்டால் தான், நல்ல ஆட்சியை அமைக்க முடியும்.

டவுட் தனபாலு: பாடத்தெரியாத பாகவதர், 'பக்கத்து வீட்டு மின்விசிறி காத்து குளிரடிக்குது'ன்னு சொன்ன கதையா இருக்கு... அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம்னு, உங்க கூட்டணிக் கட்சியான, தி.மு.க., சொல்லி வருதே... அப்படீன்னா, அவர்கள் பட்டுவாடா செய்ய தயாராகிட்டாங்களா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!


ஆர்.கே.நகர், எம்.எல்.ஏ., தினகரன்: பல எம்.எல்.ஏ.,க்கள் எங்களை தொடர்பு கொண்டு, 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' எனக் கூறுகின்றனர்.

டவுட் தனபாலு: இதை இன்னுமா உலகம் நம்பும்னு நினைக்குறீங்க... பதவியை தக்க வைப்பதற்காக, உங்களை வெளிப்படையாக ஆதரிக்காத அந்த எம்.எல்.ஏ.,க்கள், மக்களிடம் எந்த அளவுக்கு உண்மையா இருப்பாங்க... காரியவாதிகளை அடையாளம் காட்டாத நீங்க, எதில் நியாயத்தை நிலைநிறுத்தப் போறீங்க என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement