Advertisement

ஜெ., கைரேகை பெற உத்தரவிடவில்லை: சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை: டாக்டர் பாலாஜியிடம் ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிடவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது, அப்போது நடந்த இடைத்தேர்தலுக்காக சின்னம் ஒதுக்கும் விண்ணப்பத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதியபட்டிருந்தது. இதற்கு டாக்டர் பாலாஜி ஒப்புதல் அளித்திருந்தார். இந்த கைரேகை பதிவு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது ஜெயலலிதாவிடம் கைரேகை பெற டாக்டர் பாலாஜிக்கு எந்த வித வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • ஆப்பு -

    மொதல்ல வாய்மொழி உத்தரவு ஏற்று செயல்பட்ட டாக்டர் பாலாஜியை கிரிமினல் கேசில் 10 வருஷமாச்சும் உள்ளே தள்ளணும். அப்பத்தான் வேறு ஒரு பய இப்பிடிச் செய்ய மாட்டான்.

  • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

    Sasikala family have put everyone in soup.

  • Joseph Chandran - Atyrau,கஜகஸ்தான்

    இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் டாக்டர் பாலாஜி பொய் சாட்சியம் சொன்னதற்காகவும், தவறாக செயல் பட்டதற்காகவும் சடடத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவாரா?

  • ஸாயிப்ரியா -

    யாரையும் அனுமதிக்காதவர் தந்த உத்தரவா? கனவு முதல்வர் தந்தாரா?அந்த ஆறுமுக தெய்வம் தான் சொல்ல வேண்டும்

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    இன்னும் கடுமையான தேர்ட் டிகிரி விஜரணையின் பொழுது தாங்கள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்..

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    கைரேகை பதிக்க சசிதான் உத்தரவிட்டிருப்பார் ஆனால் அரசு அதிகாரிக்கு உத்தரவிட்டதை அவர் எப்படி ஒப்புக்கொள்வார்? அப்படியே இருந்தாலும் அரசுக்கே சம்பந்தமில்லாத aசசியின் உத்தரவைத்தான் செயல்படுத்தினேன் என சொன்னாலும் அது சட்டப்படி தவறுதான் எனவே தேர்தல் கமிஷன் சி பி ஐயிடம் புகார் தெரிவித்தால்தான் நடவடிக்கையே சாத்தியம் அதற்குக்கூட மாநில அரசின் ஒப்புதல் வேண்டியிருக்கும் .இது அம்பேத்கர் உருவாக்கிய சட்டம்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒரு அதிகாரியும் உத்தரவிடவில்லையாம் இவ்வளவு முக்கியமான தீர்மானத்தை அரசின் ஆவண ஆதாரமின்றி ' வாய் மொழி' யின் அடிப்படையில் எடுத்தேன் என்று ஒரு பொறுப்பான டாக்டர் கூவுகிறார் அந்த தேர்தலையே முதலில் ரத்து செய்யவேண்டும்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    இப்போ அவனவன் போர்வையை இழுத்துப் போர்த்திக்குவான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement