Advertisement

புதுச்சேரி டீக்கடையில் அமெரிக்க தூதர்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வந்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரோட்டோர டீ கடையில் டீ அருந்தி, டீ ஆற்றி பார்த்தார்.


இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் புதுச்சேரி வருகை தந்துள்ளார். புதுச்சேரியின் பாரம்பரிய கட்டடங்களை இன்று காலை பார்வையிட்டார். சாலை அமைப்பினை ஆய்வு செய்த அவர் துப்புரவு தொழிலாளர்கள்,பூ விற்கும் பெண்கள் ஆகியோரிடம் புகைப்படம் எடுத்து கொண்டார்.

தொடர்ந்து பாய்லர் டீ குறித்து கேள்வி பட்ட அவர் ரயில் நிலையம் எதிரில் உள்ள டீ கடைகாரரிடம் அது குறித்து கேட்டறிந்தார். அங்கு தனது அதிகாரிகளுடன் டீ குடித்தார். தொடர்ந்து டீ ஆற்றுவதை பார்த்து தானும் டீ ஆற்றினார். தொடர்ந்து அவர் கூறும் போது பாய்லர் டீ சுவையாக இருக்கும் என்பதால் அறிந்தினேன் என்றும்,டீயும் புதுச்சேரி சுவையாகவும் அழகாகவும்இருப்பதாக தெரிவித்தார்.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    நமது அமைச்சர்கள் என்றால் டீ காரர் கல்லாப்பெட்டியில் எவ்வ்வளவு இருக்கிறது என்று நோட்டம் விட்டு இருப்பார்...

  • TamilReader - Dindigul,இந்தியா

    வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டானய்யா

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    அமெரிக்க ஜனாதிபதி ஆக ஆசையோ என்னவோ

  • Sathish - Coimbatore ,இந்தியா

    பார்க்க படிக்க ரசிக்க மட்டும். இதை வைத்து கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுத வேண்டாம் வாசகர்களே. அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள். செய்திகள் படிக்க நிறைய இருக்கிறது தினமலரில்.

  • ganesha - tamilnadu,இந்தியா

    பிஜேபி மோடியை பாண்டிச்சேரியில் வளர்பதற்க்காக மோடி சொல்லி தான் இவர் டி அத்துறார் என்று நம்ம ஊரு கூவத்து கூமுட்டைகள் கூவ ஆரம்பிக்கும்

  • வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா

    நம்மவர்களுக்கு வெள்ளையா இருக்கிறவன் சொன்னா, எதை சொன்னாலும் ஏற்று கொள்வார்கள். அவ்வளவு தெளிவு.

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    இதுலேந்து என்ன தெரியுதுன்னு சொன்னா, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவுல தயாராகிற அத்தனை பொருட்களைவிட நம்ம லோக்கல் டீக்கடை டீக்கு மவுசு ஜாஸ்தியாயிடுச்சு. ( இப்படியும் சொல்லலாமோ? இந்த அமெரிக்காக்காரரு நம்ம தளபதி சாலையோர டீக்கடையில் டீ குடிச்சதை பார்த்துட்டு அவரும் நமக்கு நாமே நடத்தறாரு? )

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement