Advertisement

ஆக்கிரமிப்பு அகற்றம் : மாநகராட்சி அதிரடி

சென்னை: சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள், போக்கு வரத்து போலீசாருடன் இணைந்து, நேற்று அகற்றினர்.திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சந்தையின் முன்பகுதி, கோவிலின் கிழக்கு மாடவீதி, வடக்கு மாடவீதி, திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில், சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து, சிலர் கடைகள் அமைத்திருந்தனர்.இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதையை, பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.இதுகுறித்து, வந்த புகாரையடுத்து, போக்குவரத்து துணை கமிஷனர் சுவாமிநாதன், உதவி கமிஷனர் சந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், இரண்டு மாட வீதிகள் மற்றும் சந்தையின் முன் பகுதியில், ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த, 20க்கும் மேற்பட்ட கடைகளை நேற்று அகற்றினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement