Advertisement

புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் வினியோகம்

சென்னை: புதிய குடிநீர் இணைப்பு பெற, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என, குடிநீர் வாரியம் தெரிவித்து உள்ளது.சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஈஞ்சம்பாக்கம், குடிநீர் திட்ட பணிகளை, முதல்வர், 2017, நவம்பரில் துவக்கி வைத்தார். இதில், 196, 193, 192, ஆகிய மூன்று வார்டுகளில், பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள், சென்னை குடிநீர் வாரிய, தலைமை அலுவலகத்தில் வினியோகிக்கப்படுகின்றன.ஏற்கனவே உள்ள குடிநீர் இணைப்புகளை, புதிய குடிநீர் குழாய்களில் மாற்றுவதற்கு, குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தி, இணைப்பு பெறலாம்.புதிய குடிநீர் இணைப்புக்கு, இடைத்தரகர்களை அணுகாமல், வாரிய ஊழியர்களை அணுக வேண்டும். குடிநீர் இணைப்பு விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு, துணை பகுதி பொறியாளரை, 8144930252 என்ற எண்ணிலும், உதவி பொறியாளரை 8144930192 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement