Advertisement

மாமல்லபுரத்தில் அமெரிக்க தூதர்

மாமல்லபுரம்: இந்தியாவிற்கான அமெரிக்க துாதர், மாமல்லபுரம் சிற்பங்களை கண்டுகளித்தார்.மாமல்லபுரம், பல்லவர் கால சிற்ப கலைகள் புகழ் பெற்று விளங்குகின்றன. இந்தியாவிற்கான அமெரிக்க துாதர், கென்னத் ஐ ஜெஸ்டர், நேற்று மாமல்லபுரம் வந்து, கடற்கரை கோவில், அர்ச்சுனன்தபசு சிற்பங்களை கண்டுகளித்தார். தொல்லியல் துறை பொறியாளர் காயத்ரி, சிற்பங்களின் சரித்திர பின்னணி, உருவான விதம் குறித்து விளக்கியதை கேட்டு, அவர் வியந்தார்.பயண அனுபவம் குறித்து, பிரத்யேக ஒளிப்பதிவு பேட்டி அளித்தார். கடற்கரை கோவிலில், கட்டுமான பாறை சிதைவு காரணமாக, ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுஇருந்த, கருவறை சன்னதி பகுதிகள், நேற்று அவருக்காக திறக்கப்பட்டன. மாமல்லபுரம் சுற்றுலாவை தொடர்ந்து, புதுச்சேரி புறப்பட்டார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement