Advertisement

கடற்கரை - திருமால்பூர் இடையே மும்முனை மின்சார ரயில் பெட்டி

சென்னை: பல நவீன வசதிகள் கொண்ட, மும்முனை மின்சார ரயில் பெட்டிகள், தாம்பரம், ரயில்வே யார்டில், தயார் நிலையில் உள்ளன. இந்த ரயில், கடற்கரை - திருமால்பூர் இடையே, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.சென்னையில், புறநகர் மின்சார ரயில்கள், இருமுனை மின்சாரத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களை விட, கூடுதல் வசதிகளுடன், கடற்கரை - திருமால்பூர் இடையே, மும்முனை மின்சார ரயில் இயக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டு, இதற்கான பெட்டிகள், ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்பட்டு வந்தன.பெட்டிகள் தயாரிப்பு பணி முடிந்து, தாம்பரம் ரயில்வே யார்டில், மும்முனை மின்சார ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டிகளை, தெற்கு ரயில்வே பொது மேலாளர், குல்ஷ்ரேஸ்தா, நேற்று பார்வையிட்டார்.
மொத்தம், 12 பெட்டி களை கொண்ட இந்த ரயில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, விரைவில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே, பயணியர் போக்குவரத்திற்கு, அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கண்காணிப்பு கேமரா : பெண்கள் பெட்டியில், பாதுகாப்பை பலப்படுத்த, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்டிகளின் கூரையில், காற்றோற்றத்திற்காக, ஜன்னல் வசதியும்
செய்யப்பட்டுள்ளது. ஜி.பி.எஸ்., வசதியில், ஒவ்வொரு பெட்டியிலும், டிஜிட்டல் அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி வசதியும் உள்ளது. பெட்டிகள் முழுவதும், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுஉள்ளன.

வசதிகள் : ரயில் பெட்டிகள், துரு பிடிக்காத, 'ஸ்டெயின்லஸ் ஸ்டீல்' கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. ரயில் இயக்கம் மற்றும் பிரேக் அமைப்புகள், கம்ப்யூட்டர் வசதியில் செயல்
படுத்தப்படுகின்றன. மற்ற ரயில்களில் ஆகும் மின்சார செலவை விட, இந்த ரயில் இயக்கத்தில், 30 சதவீதம், மின் சிக்கனம் ஏற்படும். வேகத்திலும், அதிராமலும், சத்தமின்றியும் இயங்கும் வகையில், பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருக்கைகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிக பயணியரை இழுத்துச் செல்லும் திறன் உள்ளது.

ஓட்டுனருக்கு, 'ஏசி' வசதி : ரயில், 12 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதில், 1,168 பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். ரயில் ஓட்டுனர் கேபின், 'ஏசி' வசதி செய்யப்பட்டுள்ளது.
அவசர காலத்தில், ரயிலை நிறுத்த, ஓட்டுனர் பெட்டியில், பட்டன் வசதியும் உள்ளது. இந்த பட்டனை அழுத்தினால், உடனடியாக ரயில் நின்று விடும்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    ICF க்கு ஒரு பாராட்டு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement