Advertisement

மியாட் மருத்துவமனை நிறுவனர் தினம்

சென்னை: சென்னை, மியாட் மருத்துவமனையின், 19வது நிறுவனர் தின விழா, மருத்துவமனை வளாக அரங்கில் நடைபெற்றது.கடந்த, 1999ல், 100 படுக்கையுடன் துவங்கிய மியாட் மருத்துவமனை, தற்போது, 1,000க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட, உலகத்தர, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையாக, செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவமனையின், 19வது ஆண்டு நிறுவனர் விழா, நேற்று முன்தினம் மாலை நடந்தது. மியாட் நிறுவனர், மோகன்தாஸ், விழாவை துவக்கி வைத்தார்.மருத்துவமனையின் வரலாறு மற்றும் சிகிச்சை, சேவைகள் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதயம், கல்லீரல், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் உடல் நலம் பேணுதல் குறித்து, மருத்துவர்கள் பேசினர்.விழாவில், மேற்கு வங்க, முன்னாள் கவர்னர் நாராயணன், பத்மினி நாராயணன், பி.எஸ்.பி., லைப் நிர்வாக இயக்குனர், மலாக்கி நயாகா, சிறப்பு மருத்துவர் பர்ரி ரோசாரியோ ஆகியோரை, மியாட் மருத்துவமனை தலைவர், மல்லிகா மோகன்தாஸ் கவுரவப்படுத்தினார்.மியாட் மருத்துவமனை, மருத்துவர், செவிலியர், நிர்வாகம், அலுவலக உதவியாளர், துப்புரவு ஊழியர் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளில், சிறப்பாக பணிபுரிந்தவர்களை தேர்வு செய்து, விருது வழங்கி கவுரவித்தனர்.விழாவில், மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர், பிரித்தீவ் மோகன்தாஸ், இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள், சிறப்பு மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement