Advertisement

சித்த மருத்துவ மூலிகை கண்காட்சி நாளை துவக்கம்

சென்னை: சித்த மருத்துவ கல்லுாரி மாணவர்கள் நடத்தும், மூலிகை மருத்துவ கண்காட்சி, நாளை முதல், பிப்., 18 வரை நடைபெறுகிறது.தமிழர்களின் பாரம்பரியமான சித்த மருத்துவம், சித்தர்களின், அனுபவ அறிவால், மூலிகைகள், பால், தேன், தயிர் உள்ளிட்ட, இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் இருந்து, கண்டுப்பிடிக்கப்பட்ட மருத்துவ முறை. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தத்துவத்தை, உடலின் வகைகளை வைத்து, எளிய முறையில் மருத்துவம் செய்தனர்.அதில், மிகவும் பயனுள்ள, எளிதில் கிடைக்கக்கூடிய, மூலிகைகளில் உள்ள மருத்துவ குணங்களை, அனைவரும் அறியும் வகையில், சித்தா, யுனானி உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை படிக்கும் மாணவர்கள், சென்னை, அரும்பாக்கம், சித்தா மருத்துவமனையில், மூலிகை மருத்துவ கண்காட்சியை நடத்த உள்ளனர்.கண்காட்சி, பிப்., 15 முதல் 18 வரை, தினமும், காலை, 10:00 மணிமுதல், மாலை, 7:00 மணிவரை நடைபெறும். இதில், 600 வகையான மருத்துவ குணமுடைய மூலிகை செடிகள், 50க்கும் மேற்பட்ட பண்டைய கால நெல், சிறு தானியங்கள், இயற்கை உணவுகள், கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன.மூலிகை செடிகள், விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. மேலும், யோகா பயிற்சிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் நடத்தும், இலவச சித்த மருத்துவ முகாம் ஆகியவையும், நடைபெற உள்ளன. இதற்கான நுழைவு கட்டணம், ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படும்.சித்த மருத்துவ கல்லுாரி டீன், கனகவள்ளி கூறுகையில், 'தொற்றாநோய்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நோய்களுக்கு தீர்வு, சித்த மருத்துவத்தில் உண்டு. 'சித்த மருத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மூலிகை மருத்துவ கண்காட்சியை நடத்துகிறோம். கண்காட்சியை, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் துவக்கி வைக்கிறார்,' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement