Advertisement

மீண்டும் உயிர் பெறுகிறது சி.யு.எம்.டி.ஏ., : ஆறு ஆண்டுகளுக்கு பின் அரசு விறுவிறு

சென்னையில், போக்குவரத்து திட்டங்கள் ஒருங்கிணைப்புக்காக உருவாக்கப்பட்ட, பெருநகர போக்குவரத்து குழுமமான, சி.யு.எம்.டி.ஏ.,வுக்கு, ஆறு ஆண்டுகளுக்கு பின், வரைவு நிர்வாக நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னையில், போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்கள் தயாரிப்பில், அரசு துறைகளுக்குள், ஒருங்கிணைப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பேருந்து, ரயில், மெட்ரோ, தனியார் வாகனங்கள், ஆகிய போக்குவரத்து சார்ந்த திட்டங்களை, ஒருங்கிணைந்து செயல்படுத்த, 2010ல், சென்னை பெருநகர போக்குவரத்து குழுமமான, சி.யு.எம்.டி.ஏ., துவக்கப்பட்டது. இதன் முதல் கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில், 2012ல் நடந்தது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்த, அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், சி.யு.எம்.டி.ஏ., அமைப்பு, துவக்க நிலையிலேயே முடங்கியது. இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டங்களில், நிதி பெறுவதில், சி.யு.எம்.டி.ஏ., செயல்பாட்டில் இல்லாதது, சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து, சி.யு.எம்.டி.ஏ.,வை நடை முறைப்படுத்துவதற்கான பணிகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்கான, நிர்வாக நடைமுறை விதிகள் தயாரிக்கும் பணிகள், விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒருங்கிணைந்த, சென்னை பெருநகர போக்குவரத்து குழும சட்ட விதிகளுக்கு உட்பட்டு, இதற்கான நிர்வாக நடைமுறை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தலைவர், துணை தலைவர் பதவியிடங்கள் இருந்தாலும், நிர்வாக அதிகாரத்தை, உறுப்பினர் செயலருக்கு அளிக்க, இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.குழுமத்தில், உறுப்பினர்கள் சேர்க்கை, நீக்கம், அலுவலக பணியிடங்கள் உருவாக்கம், நிதி ஆதாரம் திரட்டுதல், தணிக்கை, அலுவலக பணி விதிகள் ஆகியவற்றுக்கான, அடிப்படை நடைமுறைகள், இந்த வரைவு விதிகளில் இடம் பெற்றுள்ளன.இந்த வரைவு ஆவணத்தை, அரசுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement