Advertisement

ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய முடிவு

புதுடில்லி: ராணுவத்திற்கு தேவையான ரூ. 15ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் , துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு தேவையான நவீன ஆயுதங்கள் வாங்குவது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பாதுகாப்பு மற்றும் கையகப்படுத்துதல் கவுன்சில் கூட்டம் நடந்தது.

இதில், ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பில் 7.40 லட்சம் தாக்குதல் ரைபில் துப்பாக்கிகள் ரூ. 1,819 கோடி மதிப்பில் இலகு ரக துப்பாக்கிகள்,, ராணுவத்திற்கு ரூ.982 கோடி மதிப்பில் 5,719 ஸ்னைப்பர் ரைபில்கள் என 15 ஆயிரம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து (20)

 • Marshal Thampi - Nagercoil,இந்தியா

  ஏன் RSS உம் 21 அந்தணர்களும் மந்திரங்களும் இருக்கும்போது இந்த செலவு எதற்கு, எல்லையை பாதுகாக்க.?

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இதெல்லாம் ஒரு எச்சரிக்கை தான், தளவாடங்கள் வந்து இறங்கியவுடன், அடுத்த இலக்கு பாகிஸ்தான் தான்,

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  முதலில் எதிரிகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் நம் வீரர்களுக்கு புல்லட் புரூப் உடையை தாருங்கள்.

 • Divahar - tirunelveli,இந்தியா

  என்ன பிரயோஜனம் . பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கூட சமாளிக்க முடியவில்லை

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தேர்தல் வரும் நேரத்தில் கட்சிக்கும் தலைவர்களுக்கும் பணம் வேண்டாமா ?

 • Rockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா

  இதை reliance defence மூலியமாக வாங்கினால் மத்திய அரசுக்கு மிக எளிதாக இருக்கும். கொள்முதல் செய்வதற்கு என்று தான் நினைச்சிக்கணும்.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  எந்த நாட்டிலிருந்து வாங்கப்போறீங்களா .... இதுக்கு பெயர் தான் மேக் இன் இந்தியாவா ..?

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  சமார் 130-கோடி மக்களை பாதுகாக்க, இந்த செலவு கூட செய்யாட்டா எப்படி?. ஆனால் அப்படி வாங்கும் துப்பாக்கிகள், தரமாகவும் நவீனமாகவும் நீண்ட நாள் உழைப்பதாக இருக்கனும். மேலும் ஊழல் என்ற விசயமே நடைபெறாம இருக்கனும், இதுதானே, ஒவ்வொரு இந்தியனின் எண்ணமாக இருக்கும்?.

 • TechT - Bangalore,இந்தியா

  மேல் சொன்ன கணக்கு படி பார்த்த ஒரு தாக்குதல் ரைபில் 1.6 லட்சம் ஒரு ஸ்னைப்பர் ரைபில் 17 லட்சம், அடேங்கப்பா, இதனால் தான் மேற்கத்திய நாடுகள் வெறும் ஆயுதம் உற்பத்தி செய்து பணக்காரர்களாக உள்ளது.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  கடைசி நிமிசமும் முடிஞ்ச அளவு ஆட்டயப்போடு நைனா

 • ELAVARASI.R - George town,மலேஷியா

  வெறுமே வாங்கி வைத்து என்ன பயன்? உபயோகப்படுத்தாமல் வெட்டியா பிலிம் காட்டவா? பிடிக்கும் தீவீரவாதிகளையும் பிரியாணி கொடுத்து,மருத்துவம் பார்த்து தப்பிக்கவும் விடுகிறீர்கள்...

 • vasumathi - Sydney,ஆஸ்திரேலியா

  பழைய துப்பாக்கிகளை போலீசாருக்கு தரலாம், இல்லாவிட்டால் முறையாக அழித்து விடுங்கள். கடந்த சில நாட்களாக நம்ம ராணுவ வீரர்கள் இறப்பு அதிகமாகி இருக்கிறது. இது இன்டெலிஜென்ஸ் துறையின் காரணமா என்று ஆராய்ந்து நம் மக்களை காக்க கவச உடைக்கு அதிகம் செலவு செய்யவும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  நமது அரசியல்வாதிகள் எது செய்தாலும் அது அவர்களின் சுய நலத்திற்காக என்றுதான் கொள்ளவேண்டும்... அதில் மக்களின் நலன் பூஜ்யம்தான்...

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இதை வாங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கோ ஒரு மூலையில் நிலம் நீச்சு வாங்க ஏற்பாடு செயது இருப்பார்கள்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எதற்கு இவ்வளவு ஆயுதங்கள்.. நீங்கள்தான் எதையும் உபயோகப்படுத்தாமல் துரு பிடிக்கவைத்துள்ளீர்களே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement