Advertisement

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்

கோவை : ''மகா சிவராத்திரி என்பது, வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல; விழிப்புணர்வு கொடுக்கும் இரவு,'' என, ஈஷா யோகா மையத்தில் நேற்றிரவு நடந்த, மகாசிவராத்திரி விழாவில், சத்குரு பேசினார்.

மகாசிவராத்திரி விழா, 112 அடி ஆதியோகி சிலை முன் நேற்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், சத்குரு பேசியதாவது:ஒவ்வொரு மாதத்தின் 14-ம் நாளும், மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாத சிவராத்திரியின் நாட்கள் அனைத்தும், இருண்ட இரவுகள். மாசி மாதத்தின்போது வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி. இது, மிகவும் இருண்ட இரவு. உத்ராயண காலத்தின் துவக்கம். பூமியின் நிலையில் மாற்றம் ஏற்படும் காலம்.

அப்போது, ஆதியோகி சிலை அமைந்திருக்கும் இந்த இடத்தில் விழித்திருப்பது சிறப்பு. யோக பாதையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு இது முக்கியமான இடம்; 365 நாட்களும் யோக பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சமமான பலன், இன்றைய ஒரு நாளில் கிடைக்கும். 11 டிகிரி அட்ச ரேகையில், பூமியின் வடக்கு நோக்கி இருக்கும் இடங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

கவனித்துப் பார்த்தால், முக்கியமான கோயில்கள் அந்த இடத்தில்தான் அமைந்திருக்கும். ஆதி யோகி சிலை அமைந்திருக்கும் இடமும், 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் இடம்தான். இந்த நாளை சிவன் - பார்வதியின் திருமண நாள் என்று சிலர் சொல்வார்கள். சிவன், எதிரிகளை ஜெயித்த நாள் என்று சொல்வோரும் உண்டு. மகா சிவராத்திரியைக் கொண்டாட இயற்கை, ஆதியோகியின் கருணை இரண்டும் துணை இருக்கிறது.

மனித குலம் பெறக் கூடிய அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு தரக் கூடியவர் ஆதியோகி. தங்களைப் பற்றிய சிந்தனை இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் பார்வை, மதத்தில் இருந்து பொறுப்புணர்வு நோக்கி திரும்புகிறது. மனிதர்களுக்கான எல்லா தீர்வுகளும் உள்ளேதான் இருக்கிறது. ஏனென்றால், அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் உள்ளுக்குள் இருந்துதானே ஏற்படுகிறது. இது வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல. விழிப்புணர்வு கொடுக்கும் இரவு.

வெறுமனே இருக்கக் கூடிய மனம், பேயின் விளையாட்டுக் கூடம் என்று மேல்நாட்டு பழமொழி ஒன்று இருக்கிறது. ஆனால், மனித மனம் எப்போதும் வெறுமனே இருப்பதில்லை. அது எதையேனும் சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இங்கு, உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, சத்குரு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லுார் ராஜு, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் வாழ்த்துரை ஒளிபரப்பப்பட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (50)

 • Arivu - Salem,இந்தியா

  என்னமா ரீல் உட்றாங்க

 • Marshal Thampi - Nagercoil,இந்தியா

  கணபதி கொலுவும் ஊர்வலமும் போல இந்தியா புரா சிவாலய ஓட்டமும் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமா ? கணபதி ஊர்வலத்துக்கு முன்னாலே உள்ள சிவாலய ஓட்டம்

 • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

  எண்ணமாச்சுமா சொலீவச்சிருக்காங்கலமா. பெப்ரவரி 14 அநீக்கி வாலெண்டின்ஸ் டே வச்சிபோட்டங்க. சினிமாக்காரவுங்கல்லம் வந்துவச்சிப்போனங்களமா. நாங்கல்லம் இங்க ஒரு பெரிய்ய்ய ஹோட்டல் இற்குதில்லா அது பக்கதுல சின்ன பெரியா ஹோட்டல் இருகூ அங்கதா போனோம்.

 • Rangaraj - Coimbatore,இந்தியா

  பலகோடி மக்கள் தொகையில் இது மாதிரி சிலர் இருக்கத்தான் செய்வார்கள் முதலில் யானைக்கு ரூட் விடுங்க அப்பறம் சிவனை பாக்கலாம் சிவராத்திரியில் தமிழ்நாடே இருண்டு கிடக்குது இதைவிட பெரிய இருட்டு சிவராத்திரி இல்லே

 • Snake Babu - Salem,இந்தியா

  /////உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்/// இதற்கு என்ன அர்த்தம். // அய்யா அவர் கூறுவதை முழுமையாக பாருங்கள் //உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்// உங்களுடைய மனம் ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்லும் போது அது மனமற்ற நிலை, எண்ணங்களற்ற நிலை, நான் என்ற எண்ணம் இருக்கும் வரை மனம் அற்ற நிலை வரவே வராது, அதனால் நான் என்ற ஒன்று அழியவேண்டும், பெரும்பாலும் இந்த நான் என்று ஒன்று இந்த உடலை கொண்டே உருவெடுக்கும். ஆகையால் இந்த உடலை பற்றிய உணர்வை தொலைக்கவேண்டும். அதற்கான உணர்வை அனுமதிக்கவேண்டும். உடலை தொலைத்து விட்டோம் என்ற நிலை வரும் போது நான் என்ற உணர்வு மறைந்து தான் என்று உணர்வு நிற்கும். இதை உணர்த்துவதற்கு உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்கவேண்டும். ஆங்கிலத்தில் டைஜஸ்ட் என்று கூறியதை அல்லது வேறு ஏதேனும் கூறியதையே அல்லது இப்படியே கூறி இருந்தாலோ இது குறிக்கும் அர்த்தம் இது தான். எனக்கு தெரிந்த வரை. இந்த உடல் மனம் எண்ணம் கோசம் இவை எல்லாம் தொலைத்த நிலையிலே தான் என்ற உணர்வு வரும். அது ஆழ்நிலை தியானத்தில் வருவது, அதற்கு இந்த உடலை தொலைப்பது என்பது இன்றி அமையாத ஒன்று. நான் மறைத்து தான் என்ற உணர்வு பெற்றவர்கள் நிலை அமைதி நிலை, ஆனந்த நிலை, அதில் கோவம் சோகம் வெறுப்பு என்று எதுவுமே இருக்காது நன்றி வாழ்க வளமுடன்.

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  சில ஊர்களில் சிவராத்தரி அன்று சினிமா தெயட்டர்களில் ஷகீலா படம் போடுவார்கள் .... காலம் செய்த கோலம் ....

 • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

  மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் வரலாற்று பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளில் குமரியில் பக்தர்கள் பன்னிரண்டு சிவ ஆலயங்களுக்கு நடந்து சென்று வருவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரளா பகுதியை ஒட்டியிருக்கும் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது திருமலை அருள்மிகு மகாதேவர் கோவில். சிவராத்திரி நாளில் பக்தர்கள் தங்கள் ஓட்டத்தை இந்த ஆலயத்தில் இருந்துதான் தொடங்குவார்கள். திருமலையில் ஆரம்பித்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிபாகம், கல்குளம், மேலான்கோடு, திருவிடைகோடு, திருவிதாங்கோடு, திருபன்னிகோடு, திரு நட்டாலம் என பன்னிரண்டு ஆலயங்களிக்கு பக்தர்கள் நடந்து செல்வார்கள். இது சுமார் 90 கிலோமீட்டர் தூரம் கொண்ட பக்தி பயணம் ஆகும். இதில் பங்குகொள்ளும் பக்தர்கள் மூன்று நாள் கடுமையான விரதங்கள் மேற்கொண்டு சிவராத்திரி அன்று ஓட்டத்தை ஆரம்பிப்பார்கள். காலில் செருப்பு அணிய மாட்டார்கள். ஒவ்வொரு கோவில் குளத்திலும் குளித்து ஈர துணியுடன் ஆலயம் சென்று தரிசனம் செய்து பின் அடுத்த ஆலயம் நோக்கி பயணம் செய்வார்கள். சிவாலய ஓட்டத்தின் வரலாறு இந்த சிவாலய ஓட்டத்திற்கு பல கதைகள் சொல்லப்பட்டாலும் அதிகமாக நம்பப்படுவது சுண்டோதரன் எனும் அரக்கனின் கதை தான். முன்பு ஒரு காலத்தில் சுண்டோதரன் என்னும் அரக்கன் ஒருவன் இருந்தான். அவன் மிக சிறந்த சிவ பக்தன். சிவலிங்கத்தை எங்கு பார்த்தாலும் குளித்து அந்த லிங்கத்தை மூன்று முறை சுற்றி விட்டுதான் மறுவேலை பார்ப்பான். அவன் ஒரு முறை சிவ பெருமானை நினைத்து கடுமையாக தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவ பெருமான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும்” என்று கேட்க, அரக்கன் “தான் யாரை நோக்கி தனது சுண்டு விரலை காட்டுகிறேனோ அவன் சாம்பல் ஆகிட வேண்டும் ” என்று வரம் கேட்க, சிவபெருமானும் கொடுத்து விட்டார். வரத்தை பெற்றதும் அரக்கனுக்கு தனக்கு உண்மையிலே வரம் கிடைத்து விட்டதா என்று சந்தேகம் எழுந்தது. உடனே சிவபெருமானிடம், “நான் இதனை சோத்தித்து பார்க்க தேவலோகம் வரை போகவேண்டும். இப்போது அதற்கு நேரமில்லை. அதனால் தங்களிடமே இதனை சோதித்து பார்க்க போகிறேன்” என அரக்கன் சொல்ல சிவபெருமான் அதிர்ந்து அங்கிருந்து தப்பித்து ஓடுகிறார். ஓடும்போதுதான் சிவபெருமானுக்கு அரக்கனின் சிவபக்தி குறித்து நினைவு வர தன் கழுத்தில் இருந்து ஒரு ருத்ராட்சையை எடுத்து கீழே போட்டார். அதில் ஒரு லிங்கம் உருவானது. லிங்கத்தை கண்டதும் மூடனான அரக்கன் அருகில் உள்ள குளத்தில் குளித்து லிங்கத்தை வழிபாடு செய்து பின் துரத்தினான். சிவபெருமானும் அரக்கன் தன்னை நெருங்கும் போதெல்லாம் ஒரு ருத்திராட்சையை போட்டு வந்தார். ஓடும் போது சிவபெருமான் காக்கும் கடவுளான விஷ்ணுவை உதவிக்கு கோவிந்தா.... கோபாலா.... என அழைத்தபடி ஓடினாராம். அதன் அடையாளமாகாத்தான் தற்போதும் பக்தர்கள் ஓடும் பொது கோவிந்தா... கோபாலா என்று கூவிய படி செல்வார்கள். சிவராத்திரி அன்று சிவ ஆலயத்தில் நட்டகும் விசேஷத்தில் கோவிந்த கோபாலா என பக்தர்கள் முழங்குவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கும். பன்னிரெண்டாவது ஆலயமான நாட்டலாம் வரும்போது விஷ்ணு பெண் அவதாரமான மோகினியாக தோன்றி அரக்கனை மயக்கி அவனுடன் ஆடுகிறார். விஷ்ணு ஆடுவதை போன்றே அரக்கனும் ஆட, விஷ்ணு தனது சுண்டு விரலை தன்னை நோக்கி காட்ட, அரக்கனும் அவ்வாறே செய்ய அரக்கன் சாம்பல் ஆகி விடுகிறான். அதனால் தான் பன்னிரெண்டாவது ஆலயத்தில் மட்டும் விஷ்ணு சன்னதியும் இருக்கும். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் தங்கள் கையில் விசிறி வைத்திருப்பார்கள். எல்லா ஆலயம் செல்லும்போது லிங்கத்திற்கும் விசிறி விடுவார்கள். அதாவது தங்களுடன் சிவபெருமானும் ஆடுவதாக ஐதீகம். அவ்வாறு ஓடும் சிவபெருமானுக்கு இளைப்பாற விசிறி விடுவது வழக்கம். பக்தர்கள், நடையாக நடப்பது மட்டுமல்லாது வாகனங்களிலும் இந்த பன்னிரண்டு கோவில்களுக்கு இந்த சிவராத்திரி நாளில் சென்று வருவார்கள். குமரி மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்திற்காக சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

  • SRH - Mumbai ,இந்தியா

   அருமை ப்ரதீஷ் அவர்களே

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  மிஸ்டர் தமிலன், வல்லளார் பெருமகனார், ஜோதியாக மாறி, இறைவனுடன் கலந்தார் என்று கூறுவதில் கூட, ஓர் விஷேச சிறப்பும் செய்தியும் இருக்கு எனலாம். வல்லளார் ஓர் துறவி எனலாம். சாமானிய மனிதர்கள் ஒவ்வொருவரும், இந்த உலக மனித சமுதாயத்திற்கு, ஆற்ற வேண்டிய கடமைகள் அதிகம், அதற்கான துறைகளும் அதிகம். அதைத்தான், சாமானிய மனிதர்களிடம், இறைவனும் எதிர்பார்ப்பார் எனலாம். ஒரு முழுமையான துறவியை விட, ஒரு குடும்பஸ்த்தன், தன் தினசரி கடமைகளை, செவ்வனே செய்து முடித்துவிட்டு, சில நிமிடங்களேனும், தன்னை(இறைவனை) நினைத்து தொழுபவரை, அந்த இறைவன், முன்னுரிமை கொடுத்து வாழ்த்துவான் எனலாம். தான் படைத்த உலக மனித சமுதாயம், கலகலப்பாக சந்தோசமாக ஆனந்தமாக நிம்மதியாக வாழ்வதையே, அந்த இறைவனும் விரும்புவான் எனலாம். ஆக, துறவிகள் கடைபிடிக்க வேண்டிய, அத்தியாவசிய உடல் பராமரிப்பு கட்டுப்பாடுகளை, ஒரு குடும்பஸ்தன் ஏன் கடைபிடிக்கனும்?. ஒரு துறவி, ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டால் போதும் எனலாம். ஆனால், ஒரு குடும்பஸ்தனுக்கு, குறைந்தபட்சம், இரு வேளை உணவு என்பது மிகவும் அவசியம்தானே?. புரிகிறதா?.

 • Tamilan - Doha,கத்தார்

  இங்கு, உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, சத்குரு பேசினார். Can someone explain

  • Gopi - Chennai,இந்தியா

   ஊன் உடலை சுருக்கி (ஆசையும் சேர்த்து ) உள்ள ஒளியை ஏற்றுதல். இதை உடனே செய்ய முடியாது. இல்லறத்தில் இருப்போரும் இதை பின்பற்றலாம்.

 • Vasu - Coimbatore,இந்தியா

  பாபா ராம்தேவ் கஷ்டப்பட்டு உடம்பை வளைத்து யோகா கற்றுத்தருகிறார், அவரை பின்பற்றினால் நன்மை உண்டு

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

   உடம்பு மட்டும் நன்றாக இருந்தால் போதாது மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

 • Kailash - Chennai,இந்தியா

  இந்த கால கார்பொரேட் சாமியார்களை நான் நம்புவதில்லை. மறைந்த siradi சாய்பாபா, சங்கராசாரியர். அரவிந்தர், ரமணர், சத்யசாய்பாபா போன்றோர் மட்டுமே ஆன்மிக குரு, சத்குரு என்று கூறலாம் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் விளம்பரம் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்து மறைந்தவர்கள் இதே மகா சிவராத்திரி அன்று எளிமையாக ஆனால் பல ஆயிரம் பேர் வருவார்கள்... சத்யசாய் டிரஸ்ட் மூலம் அன்றும் இன்றும் என்றும் முழுமையாக இலவச இருதய அறுவை சிகிச்சை பன்னாட்டு தரத்தில், மருத்துவர்களால் முழுமையாக சேவை மனப்பான்மையோடு நடக்கிறது...

  • kandhan. - chennai,இந்தியா

   ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அனுபவிக்கவேண்டும் என்று எந்த கடவுளும் மதமும் சொல்லவில்லை மேலும் அவரவர் மனதில் கடவுள் இருக்கிறார் அவரவர் மனதில் ஞான ஒளியை ஏற்றி அகங்காரம் ,ஆணவம் ,பேராசையை ,பொறாமை,களவு ,சூது ,காமம் ,துரோகம் போன்ற கொடிய எண்ணங்களை நீக்கினால்தான் மனிதன் மனிதனாக இருக்கமுடியும் ஒருவன் அடுத்தவனுக்கு துன்பம் தராமல் இருந்தாலே அவன் மிக ஒழுக்கமானவனாக போற்றப்படுவான் இதுதான் உண்மை இதை புரிந்தால் இந்த நாள் இனிய நாள் சிந்திக்கவும் மக்களே ஆடம்பரம் செய்து கடவுளை காண வேண்டிய அவசியம் இல்லை ஒரு சிறு தீபத்தில் இறைவனை காணலாம் அதைதான் வள்ளலார் பெருமான் வழிகாட்டியும் ,எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார்

  • Ray - Chennai,இந்தியா

   ஈரேழு வள்ளல்கள் என்று தான் வள்ளல்களை அழைத்தார்கள் ஆனால் வள்ளலாரைத்தான் வள்ளலார் எனும் ஆர் விகுதியோடு குறிப்பிடுகிறார்கள் கைலாஷ் அவரை விடுத்தது ஏனோ தெரிய வில்லை அவரைப் பற்றியும் அவரது நூலையும் தெரிந்து கொள்வார் என நம்புகிறேன்

  • Kailash - Chennai,இந்தியா

   //Ray - chennai,இந்தியா// மன்னிக்கவும்.... குறிப்பிட மறந்துவிட்டேன்...

 • Snake Babu - Salem,இந்தியா

  சிவம் என்பது ஒரு ஆற்றல் நிலை. வெளியில் வெவ்வேறு இடங்களில் கண்டதால் வெவ்வேறு பேர்கள். இது நமக்கு உள்ளில் இருக்கிறது. அந்த இடத்தில் சென்றால் நம்மில் இருப்பதை உணர்வது சுலபமாகும். மனம் எளிதாகும், பழகியவர்களுக்கு எந்த இடத்திலும் எளிதாகும். மனதை உள்முகமாக திருப்புவதே யோகம் தியானம். ஏனென்றால் அது வெளியிலேயே இருப்பதால் சக்தி வீணாகி இறக்க நேருகிறது. வெளியில் இருந்த மனம் உள்முகமாக திருப்புவதே ஆன்மாவில் ஐக்கிய மாவதே திருக்கல்யாணம். நித்யகல்யான பெருமாள் என்பது இந்த கல்யாணத்தை எந்நேரமும் செய்பவரே. மனம் ஆன்மா ஜீவாத்மா பரமாத்மா ஒன்று சேராத வரை அது இரவே. சிவராத்திரி. ஒன்று சேர்ந்து விடுவதற்கு விழிப்பு தேவை. இதையே சில ராத்திரியில் விழித்திருக்க வேண்டும் என்பது. அதாவது தூங்காமல் இருப்பது அல்ல. மனம் வெளியே செல்லாமல் கவனிக்கும் விழிப்புணர்வு. அனைவருக்கும் விழிப்புணர்வுடன் இருந்து திருக்கல்யாணம் நடக்க வேண்டும் என சிவராத்திரி நல்வாழ்த்துக்கள். நன்றி வாழ்க வளமுடன்

 • Saravana kumar - Coimbatore,இந்தியா

  ஆண்டிகளுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இது தானே உனக்கு தெரிஞ்ச மகா சிவராத்திரி ஜாக்கி.. :(

  • Ramana Ramana - kumbakonam,இந்தியா

   சூப்பர்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்றாங்க, நீண்ட இரவு, நீண்ட பகல், எல்லாமே பூமியின் நீள்வட்ட சுழற்சி தான் அடிப்படை, யோகா போன்றவை எல்லாம் நீண்ட நாட்களாக தொடர்ந்து செய்து வரவேண்டிய ஒரு பயிற்சி, ஓரிரு நாள் செய்துவிட்டு பயனை எதிர்பார்க்க கூடாது, பல சக்தி வாய்ந்த கோயில்கள் தமிழகத்தில் இருக்கவே செய்கின்றன எல்லாமே ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை தான், எதுவுமே உணரமுடிவதில்லை, நமக்கு அப்பாற்பட்ட சக்தி இயங்குகிறது, அது மறுப்பதிற்கில்லை, அதைவைத்து நிறைய கதைகள் புழக்கத்தில் இருக்கின்றன, எல்லாமே எல்லோருடைய நம்பிக்கை அவ்வளவே

  • Siva - Chennai,இந்தியா

   பாலா பாய் //எதுவுமே உணரமுடிவதில்லை//, நீ அதுக்கு சரிப்பட மாட்டே

 • Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா

  பெண்களே இல்லாத ஒரு ஆசிரமம் உண்டா ? (சந்நியாசி, கன்னியாஸ்திரி, காவி உடை) இதற்க்கு அர்த்தமும் , பதிலும் யார் தருவார்? மீண்டும் ஒரு அரிச்சந்திரன், மீண்டும் ஒரு ராமன், மீண்டும் இந்த மண்ணில் காண முடியுமா?

  • Gopi - Chennai,இந்தியா

   ரிஷிகள் முனிவர்கள் காட்டில் பரணசாலை அமைத்து தங்களின் இல்லத்தரசிகளோடு வேடபரிபாலனம் செய்து எல்லா உயிரும் நன்மை பெற யாகம் வளர்த்துவர். அதற்கு பணிவிடை செய்ய அங்கு பெண்கள் இருப்பர். சில அரசர்கள் தங்கள் வழி பெண்டீரை (மகளை) முனிவர்களுக்கு பணிவிடை செய்ய அனுப்புவார்கள் (மஹாபாரதத்தில் துர்வாசருக்கு குந்தி பணிவிடை செய்தது ). அதுவே ஒரு சந்நியாசி (துறவி ) அல்லது சித்தர்கள் நாட்டில் நடக்கும் எந்த விஷயத்திலும் நாட்டம் கொள்ளாமல் மலைகளிலும் காடுகளிலும் கடுந்தவம் புரிந்து, எப்பொழுதாவது நாட்டின் எல்லை பிரதேசங்களில் வந்து உபதேசம் செய்வர், பிச்சை எடுத்து ஒரு வேளை உணவு கொள்வர் , அதுவும் மண்டை ஓட்டில் தான் அவர்கள் எல்லாம் செய்து கொள்ளவேண்டும். இது அவர்களுக்கு தினமும் உணர்த்துவது, என்னவெனில் மனிதன் உருத்தெரியாமல் மாண்டு விடுவான் என்பது.

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அதாவதுங்க, தவசிகள் கடைபிடிக்கும் தியானம் என்பது முழு சாப்பாடு சாப்பிடுவது போன்றது, அது அவர்களுக்கு எளிதாக ஜீரணமாகும். குடும்பஸ்தர்கள் கடைப்பிடிக்கும் தியானம் என்பது காலை சிற்றுண்டி உணவு சாப்பிடுவது போன்றது, இப்படி இருந்தால் தான் இவர்களுக்கு ஜீரணம் ஆகும். இதை மாற்றி அமைத்து, அந்த தியானங்கள் தவங்களை செய்தால், அப்படி செய்பவர்களுக்கு உடல் மன கோளாறுகள் கட்டாயம் வரும். இதை நினைவில் வைத்து, குடும்பஸ்த்தர்கள் தியான நேர அளவை கடைபிடிங்க.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வரலாறு அறிந்தவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பதே சாலச் சிறந்தது.. ருத்ரன் பார்த்துக்கொள்வார்..

  • balakrishnan - coimbatore,இந்தியா

   வரலாற்றை அறிந்தவர்களுக்கு எல்லாமே தெரியும், அதனால் அவர்கள் வாய் திறப்பதில்லை,

 • JShanmugaSundaram -

  இந்த மாதிரி பேசிபேசி ஆன்மீகத்தை இழிவுபடுத்துவதே சிலர்நோக்கமாக செய்கிறார்கள் இகழ்பவர்கள் நாத்திக்கள் போன் இருந்தால் பிஸ்தாபோல் பதிவிடுவது உன்மை உணர இப்பிறவி பத்தாது பலஜன்மா எடுத்தாலும் ஞானம் வராது சாபம் தான் உங்க குடும்பத்தை பாருங்கள் நல்லவற்றை வரவேற்க்காவிட்டாலும் இதுபோல் சிவன்ராத்ரி கொண்டாடுபவர்களை கொச்சைபடுத்தாதீர்கள்

  • balakrishnan - coimbatore

   சிவன் ராத்திரி, இன்று புதிதாக கொண்டாடப்படுவதில்லை, அது பல ஆண்டுகாலமாக கொண்டாடப்படுகிறது, கதைகள் வேறுபடலாம், இன்று புதிது புதிதாக பல ஆன்மீக செம்மல்கள் புறப்பட்டு புது புது கதைகள் சொல்கிறார்கள், புது புது அர்த்தங்கள் கூறப்படுகின்றன, பக்தி என்பது ஒரு இறைநம்பிக்கை, அது நம்மோடு தொடர்கிறது, மனிதன் அறிவு பெற்றதில் இருந்து இறை நம்பிக்கை ஏதோ ஒரு வகையில் தொடர்கிறது, உண்மையுடன், நேர்மையுடன் வாழ்க்கையில் நடந்து ஆண்டவனை தொழுது வர யாருடைய உபதேசமும் தேவையில்லை, இன்றைய நவீன காலத்தில் பக்தியை பயன்படுத்தி பணம் பண்ணுவதில் ஏராளமானவர்கள் ஈடுபடுவதும் அதை மக்கள் நம்புவதும் தான் வேதனை,

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  எது எப்படி இருந்தாலும், நேர்மையும் வாய்மையும் தூய்மையும் ஒழுக்கமும் நிறைந்த, ஓர் இறைவனின் பக்தர், அந்த இறைவனை நினைத்து செய்யும், பூஜை பிரார்த்தனைகளுக்கு, மிக அதிக சக்தி கிடைக்கும் எனலாம். அதற்கு, இப்படிப்பட்ட பண்டிகை திருவிழாக்கள், துணை புரிகின்றன எனலாம்.

 • Veeraiyah[Modi Piriyan] - KUALA LUMPUR,மலேஷியா

  ///உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள அனுமதிக்க வேண்டும்/// இதற்கு என்ன அர்த்தம்.

  • prabhu - trivandrum,இந்தியா

   when you feel light...........the earth will also feel light.Human weight should be 65Kg

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

   நீங்கள் இருபத்தைந்தாயிரம் பணம் கட்டி ஸ்பெஷல் கிளாஸ் அட்டெண்ட் செய்யும்போது விளக்கம் அளிக்கப்படும்.

 • Sithu Muruganandam - chennai,இந்தியா

  இந்த இரவைப்பற்றி விண்வெளி இயற்பியலாளரிடம் (astrophysicist) கேளுங்கள். இந்த இரவில் ஏதாவது மாறுபாடு ஏற்பட்டிருக்கிறதா? என்று. "இல்லை, எல்லா இரவுகளை போலத்தான் இந்த இரவும்" என்றுதான் அவர் சொல்லுவார். நூற்றிப் பன்னிரண்டு அடி பெரிய பொம்மையைக் காசு கொடுத்து செய்து வைத்துக்கொண்டு ஒன்றுமில்லாத ஆர்ப்பாட்டம் செய்வது மக்களை ஏமாற்றுவதே ஆகும்.

  • முத்துசாமி.வெ - ,

   மீமீஸ் பார்த்து அரசியல் படித்தால் இப்படித்தான் எழுதத் தோணும்.

  • balakrishnan - coimbatore,இந்தியா

   இப்படித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி வாட்ஸாப்பில் நிறைய செய்திகள் வலம் வந்தது, டிவி.நிகழ்ச்சியின் போது திரு மயில்சாமி அண்ணாதுரை எல்லாமே பொய் என்று ஒரேவரியில் சொல்லிவிட்டார், தற்போதைய விஞ்ஞான உலகத்தில் பூமியின் சுழற்சி, சூரிய உதயம், மறைவு, இரவின் காலம், பகலின் காலம், பூமியின் பாதை, அதனால் ஏற்படும் மாற்றம் அனைத்தையும் விஞ்ஞான ரீதியில் கண்டுபுடித்துவிட்டார்கள், ஆன்மிகம் என்பது நம்பிக்கை, விஞ்ஞானம் என்பது உண்மை,

  • nandaindia - Vadodara,இந்தியா

   ஐயா சித்து. நீங்கள் சித்து விளையாட்டுகளில் சிறந்தவர் போல தெரிகிறது. உங்கள் கண்களுக்கு வெறும் பொம்மையாக தெரிவது எங்கள் கண்களுக்கு கடவுளாக தெரிகிறது. இங்கு, உள்ளே ஒன்றுமே இல்லாத கட்டிடத்திற்குள் சென்று இறைவனை தொழுவோர்களும் உண்டு, சிலுவையில் உள்ள பொம்மையை தொழுவோர்களும் உண்டு உங்கள் பாஷயில் சொல்வதென்றால். கல்லாக பார்பவனுக்கு கடவுளும் கல்தான். கடவுளாக பார்பவனுக்கு கல்லும் கடவுள் தான்.

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   balakrishnan - coimbatore,இந்தியா அவர்களே, உங்களை பொருத்துவருக்கும் வெண்பாவாடை சாமியார்கள் சொல்வதுதான் உண்மை.. அதுவரைக்கும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்... கலீலியோ கலிலி அவர்கள் பூமி உருண்டை என்று சொன்னது வெறும் நானூறு ஆண்டுகளுக்கு முன்புதான்... ஆனால் இந்துக்கள் சூரிய குடும்பம் என்று ஒன்று இருக்கிறது.. அதில் சூரியனை சுற்றி கோள்கள் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே... இந்து மதத்தில் மட்டும்தான் அறிவியலும் ஆன்மிகமும் ஒன்று.... மற்ற மதத்திற்கு இல்லை... ஆம், உங்கள் NGO மதத்தில் ஆன்மிகம் என்பது நம்பிக்கை, விஞ்ஞானம் என்பது உண்மை,

  • nandaindia - Vadodara,இந்தியா

   விஞ்ஞானம் என்பது மட்டுமே மெய் என்றால் மூன்று மணி நேரத்திற்கு முன், இந்தோனேசியாவை தாக்கிய சுனாமியை பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போனது ஏன்? 2015 ல் பெய்த அடை மழையை அறிவியலால் ஏன் இரண்டு மாதங்களுக்கு முன்னரே கணிக்க முடியாமல் போனது? இன்ன தேதியில் மழை வரும், புயல் வரும் என்று ஏன் சொல்ல முடிவதில்லை? ஆனால் மெய்ஞானத்தை அடிப்படையாக கொண்ட பஞ்சாகத்தில் அடை மழையும், புயலும், வெள்ளமும் முன் கூட்டியே சொல்லப்படுகிறது. விஞ்ஞானத்தின் அடிப்படை மெய்ஞ்ஞானமே, நீங்கள் ஒத்து கொள்ளாவிடிலும். ஜெய் ஹிந்த்

  • Kumara Vel - Bristol,யுனைடெட் கிங்டம்

   எங்கு சொல்ல பட்டு உள்ளது? "இந்துக்கள் சூரிய குடும்பம் என்று ஒன்று இருக்கிறது.. அதில் சூரியனை சுற்றி கோள்கள் சுற்றி வருகிறது என்று"??? எதில் உள்ளது.. ஆதாரம் தரவும்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இதனால் நதிகள் இணைந்து விடுமா?

  • yila - Nellai,இந்தியா

   மலைகளில், இன்னும் கொஞ்சம் ஆக்கிரமிப்பு கூடும்....

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இப்படி வீணா ஆட்டம் போடுறதுக்கு பதிலா, ஆயிரம் மரத்தை அழிச்சி போட்ட இந்த பொட்டல்காட்டில் ஒரு பத்து மரத்தை நட்டு வைத்திருக்கலாம். ஒரு வெயில்நாளில் இங்கே மதியவேளையில் சென்று பார்த்தால் தெரியும். என்ன அழித்திருக்கிறார்கள் என்ன அளித்திருக்கிறார்கள் என்று.

 • Ray - Chennai,இந்தியா

  திருவண்ணாமலை 12.2253° அட்ச ரேகை N, 79.0747° E தீர்க்க ரேகை கேதார்நாத் 79.0669° E ராமேஸ்வரம் 79.3174° E மூன்று தலங்களும் ஒரே தீர்க்க ரேகையில் உள்ளது முக்கியமான தகவல்

  • Tamil Selvan - Chennai,இந்தியா

   பூகோளம் ரொம்ப முக்கியம் அமைச்சரே.... தகவலுக்கு நன்றி...

  • Kumara Vel - Bristol,யுனைடெட் கிங்டம்

   கூகுளை மேப் அப்படி ஒன்றும் தெரிய வில்லை.. எங்கு அப்படி உள்ளது?

  • Ray - Chennai,இந்தியா

   google search இல் தேவையான ஊர் பெயரை டைப் செய்து உதாரணத்துக்கு Tiruvannamalai coordinates என்று தேடவும் 30.7352° N, 79.0669° E ketharnath 12.2316° N, 79.0677° E Tiruvannamalai 0.0008° E than Ketharnath 09.2881° N, 79.3174° E Rameshwaram 0.2497° E than Tiruvannamalai 30.6615° N, 81.4718° E Manasarovar Lake 31.0675° N, 81.3119° E Mount Kailash 25.3109° N, 83.0107° E Kasi Viswanath

 • Marudha Ravi - Madurai,இந்தியா

  மரங்கள் வெட்டப்பட்டு மலை வாழ் மக்களின் இடங்களை பிடுங்கி கொண்டு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஈஷா யோகா மையமும், காருண்ய நிர்வாகமும் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளிங்கிரி காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததிற்கு இதுவும் முக்கிய காரணம். அதிக சப்தத்தால் அங்கு வசிக்கும் விலங்குகள் இடம் மாறி சென்று விட்டன. பல விலங்குகள் வேட்டையாடப்பட்டு விட்டன. நான் சொல்வதை நம்ப வில்லை என்றால் தாராளமாக அங்கு சென்று பாருங்கள். இந்த அதிகார வர்க்கத்தினால் மலை வாழ் மக்கள் ஏழைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். காடுகளை அழிப்பதை விட்டுவிட்டு ஊருக்குள் தாராளமாக கோயில் அமைத்திருக்கலாமே. இதற்க்கு ஆரம்பமே காருண்யாதான்.

  • Sathya - Coimbatore,இந்தியா

   சூப்பர் ஆனா ஒருத்தனும் இதை பத்தி சிந்திக்க மாட்டான்.

  • முத்துசாமி.வெ - ,

   சத்குரு ஒரு பேட்டியில் நான் ஒரு இன்ச் நிலம் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறுபவர்கள் அதை நிரூபித்தால் அந்த இடைத்தை விட்டு வெளியேறிவிடுவதாகவும் கூறி இருக்கிறார்.

  • முத்துசாமி.வெ - ,

   சத்குரு ஒரு பட்டியில் நான் ஒரு இன்ச் நிலம் கூட ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறுபவர்கள் அதை நிரூபித்தால் அந்த இடைத்தை விட்டு வெளியேறிவிடுவதாகவும் கூறி இருக்கிறார்.

 • Prasad - London,யுனைடெட் கிங்டம்

  அற்புதம் , Sadhguru always கிரேட். . நமஸ்காரம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement