Load Image
Advertisement

கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

 கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
ADVERTISEMENT
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி இடையேயான, இரண்டாவது ரயில் பாதையில், அதிவேக இன்ஜின் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
விழுப்புரம் - திண்டுக்கல் இடையே, 272 கி.மீ.,க்கு, இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி, 2011ல் துவங்கியது. ஏற்கனவே, சென்னை- - விழுப்புரம், திண்டுக்கல் - மதுரை இரட்டை பாதை பயன்பாட்டில் உள்ளது. கடந்தாண்டு ஜூன் முதல், விழுப்புரம் -- விருத்தாச்சலம் - திருச்சி - மணப்பாறை வழியே, கல்பட்டிசத்திரம் - 237 கி.மீ., வரையும், தாமரைப்பாடி - திண்டுக்கல் இடையேயும் இரட்டைப் பாதை பயன்பாட்டுக்கு வந்தது. சென்னை - மதுரை வழித்தடத்தில், கல்பட்டிசத்திரம் - தாமரைப்பாடி - 25 கி.மீ., மட்டும், ஒற்றை பாதை பயன்பாட்டில் உள்ளது.
தற்போது, இங்கும் இரண்டாவது பாதை முடியும் நிலையில் உள்ளது. இந்த வழித்தடத்தில் இருக்கும் வடமதுரை, அய்யலுார் நிலையங்களில் நடைமேடை, சிக்னல், நிழற்கூரை அமைப்புகள் என, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இந்த வழித்தடத்தில், நேற்று மின்சார ரயில் இன்ஜின் இயக்கி, அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. அதிகபட்சமாக, 145 கி.மீ., வேகம் வரை ரயிலை இயக்கினர். வரும், 20ம் தேதி, இந்தப் பாதையில், ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு நடத்தவுள்ளார். 'அவர் அனுமதி வழங்கிய பின், சென்னை - மதுரை இரட்டை ரயில் பாதை பயன்பாட்டுக்கு வரும். கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்பு ஏற்படும்' என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.


வாசகர் கருத்து (4)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement