Advertisement

இந்திய அணி வரலாற்று வெற்றி; தொடரை வென்று சாதனை

போர்ட் எலிசபெத்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று வரலாறு படைத்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் 'பவுலிங்' தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரி நீக்கப்பட்டு ஷாம்சி இடம்பிடித்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

ரோகித் சதம்:இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி 'சூப்பர்' துவக்கம் தந்தது. ரபாடா பந்துவீச்சில் தவான் இரண்டு பவுண்டரி விளாசினார். மார்கல் பந்தை ரோகித் பவுண்டரிக்கு விரட்டினார். தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோஹ்லி (36) ரன்-அவுட்டானார். ரகானே 8 ரன்களில் திரும்பினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த ரோகித், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார். இவர் 115 ரன்களில் அவுட்டானார்.

நிகிடி 'வேகத்தில்' பாண்ட்யா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (30) சிக்கினர். தோனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் (19), குல்தீப் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக நிகிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

குல்தீப் கலக்கல்:பின், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், ஆம்லா ஜோடி சிறப்பாக விளையாடினார். மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். டுமினி (1), டிவிலியர்ஸ் (6) ஏமாற்றினர். ஆம்லா (71) அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். மில்லர் 36, கிளாசன் 39 போராடியபோதும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முடிவில், தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை சதம் விளாசிய ரோஹித் சர்மா தட்டி சென்றார்.

முதல் முறை:தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன், 4 முறை (1992-93ல் 2-5, 2006-07 ல் 0-4, 2010-11ல் 2-3, 2013-14ல் 0-2) இங்கு ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி, ஒருமுறை கூட தொடரை வென்றதில்லை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (20)

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இந்த வேகத்தில் போனால் அடுத்த உலகக்கோப்பை நமக்குத்தான்,

 • இந்தியன் kumar - chennai,இந்தியா

  இது போல் ஆஸ்திரேலியாவையும் அவர்கள் மண்ணில் வெல்ல வேண்டும்,

 • ravichandran - Hosur,இந்தியா

  everyone failed to notice batting performance of BHUVI

 • tamilan -

  dhoni dhoni thala dhoni

  • sankar - trichy

   டோனி வாஸ்து ஒன்னும் ஸ்கோர் பண்ணல தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் .தோனிக்கு தினேஷ் கார்த்திக் ஆகாது .கோலியும் அவரை கண்டு கொள்ள வில்லை

 • Ram - Chennai,இந்தியா

  ஒயிட் வாஷ் செய்ய முடியவில்லையே ... சரி .. அடுத்தமுறை .....

 • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

  இந்தியா ஒரு நல்ல ஸ்பிரிடோடு விளையாடியது கேப்டனின் வெற்றி பசியை அத்துணை வீரர்களின் மீதும் பரவ செய்கிறார் அதனால் தான் இந்தியாவால் தொடர் வெற்றி பெற முடிகிறது

 • yuvaraj - Chennai,இந்தியா

  இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

 • Rajavillupuram -

  Congratulations to Men and women cricket team for their win against SA

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வா............................ழ்த்துக்கள்....

 • பரணி -

  இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்

 • S.Pandiarajan - tirupur,இந்தியா

  ஹர்திக் பாண்டிய சூப்பர் கேட்ச் , சூப்பர் ரன் அவுட் , சூப்பர் விக்கெட்

 • singarapandi madurai - madurai,இந்தியா

  சிறந்த விளையாட்டு குல்தீப் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. பாண்டயாவின் அம்லா ரன் அவுட் ஆட்டத்தின் திருப்புமுனை. இந்திய வீரர்களுக்கு எனது மனமார்ந்த பாரட்டுக்கள். ஜெய்ஹிந்த் கமான் இந்தியா.

 • vellaichamy -

  சபாஷ் இந்தியா

 • SasiKumar -

  ரோகித் சிறப்பான ஆட்டம். இந்த முறை அவர் விளாசிய சிக்சர் சூப்பர்.

  • Pannadai Pandian - wuxi

   ரோஹித் சாதம் விளாசினார் ஆனால் ரெண்டு பேரு ஆட்டத்தை கெடுத்தார்.... 325 ரன்னை தொட்டிருக்க வேண்டும் இந்திய அணி......

 • ushadevan -

  இன்று நான் அடைந்த படித்த முதல் மகிழ்ச்சியான செய்தி. வாழ்த்துக்கள் , வீரர்களே.

 • BaskarSankarapuram -

  இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.."!

 • RavishankerHarikrishnan -

  congratulations Indian cricket team

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  அருமையான ஆட்டம். ஆம்லாவின் ரன் அவுட் பெரிய திருப்புமுனை. அங்கே முதல் முறையாக தொடரை வென்றதற்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement