Advertisement

கட்சிக்கு குற்றவாளி தலைமை தாங்கலாமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

புதுடில்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பின், கட்சிக்கு தலைமை தாங்கலாமா; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா என, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட அரசியல்வாதிகள், கட்சிக்கு தலைமை தாங்குவதை தடுக்கக் கோரி, பா.ஜ., வழக்கறிஞர், அஷ்வினி குமார் உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர், லாலு பிரசாத் யாதவ், சசிகலா உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக, ஊழல் புகார், நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட போதும், அவர்கள், கட்சிகளில் தலைமை பொறுப்பு வகிப்பதை, தன் மனுவில், அஷ்வினி குமார் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சிக்கு, அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அத்தகைய கட்சிக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் கருத்து தெரிவித்துள்ளது. இத்தகைய அதிகாரம் தனக்கு இருந்தால், அரசியலில் குற்றவாளிகள் நுழைய முடியாது என்றும், தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தலைமை தாங்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை, தேர்தல் கமிஷனுக்கு, நீதிமன்றம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட பின், கட்சிக்கு தலைமை தாங்கலாமா; தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாமா என்பது குறித்து, மத்திய அரசு, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (86)

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இதுக்கு ஏகபட்ட முன் உதாரணம் இருக்கே ?

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  காசு குடுத்து ஜெயிக்கிறவனுவோலையே நீங்க வெளியே அனுப்ப முடியல... இதுல கூட அதிகாரம் கேட்குதா ?

 • Ramamoorthy P - Chennai,இந்தியா

  பிகார் தமிழ்நாட்டில் என்ன நடந்தது? கொள்ளையடித்தவர்கள் தான் ஆட்சிக்கட்டில் ஏறினார்கள். மக்கள் மண்ணாந்தைகளாக இருக்கும் வரை இது நடக்கும்.

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  அரசியல் சட்டப்படி உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை. சட்டம் இயற்ற பாராளு மன்றத்திற்கு தான் உரிமை உண்டு. உச்ச நீதி மன்றத்தால் கேள்வி தான் கேட்க முடியும், இதுதான் ஜனநாயகம்.

 • prabhu - trivandrum,இந்தியா

  மக்களாட்சி இனியும் கைபுள்ளையாக இருப்பது அவமானம் .நம் நாடு மிகப்பெரிய நல்ல மக்களாட்சி கொண்ட நாடு என்று எப்போது பெயர் எடுப்போம்?அனுதினமும் நாம் அனைவரும் பாடம் படிக்க வேண்டும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  //partha - chennai,இந்தியா 13-பிப்-2018 13:37 ஒரு மனைவி இரண்டு மூன்று துணைவியுடன் இருப்பவரெல்லாம் தலைவனாக இருக்கலாமா என்ற கேள்வியையும் சேர்த்து நீதிபதிகள் கேட்டிருக்கலாம்// அதிகார பூர்வமாக நாலு மனைவிகள் + 60,000 பிற மனைவிகளுடன் தசரதன் ராஜாவாகவே இருந்தார். பாமா, ருக்மணி என்று மனைவிகள், ராதா என்று girl fri உடன் மதுராவை ஶ்ரீகிருஷ்ணன் ஆண்டார்..போகிற இடத்தில் எல்லாம் அர்ச்சுனன், பீமன் கல்யாணம் பண்ணினார்கள்..எனவே நீங்கள் கேட்டதை நீதிபதிகள் கேட்க மாட்டார்கள், தெய்வ குற்றம் ஆகிவிடும்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  நீயெல்லாம் அடிமைகள் பற்றி பேசுகிறாய், கொத்தடிமை கூட்டத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதி நீ... அது பத்தாது என்று அங்கே சிங்கை யில்... கையேந்தி பிழைப்பு நடத்தும் நீ.. நான் சொல்லாததை சொல்லி மகிழ்ந்து கொள்வது உனக்கு மகிழ்ச்சி எ‌ன்றா‌ல் நான் என்ன செய்வது. உன் பிழைப்பு உன்னோடு.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ஏண்டா காசு மணி துட்டு.. ஒனக்கு மூளைக்கு பதில் களி மண்ணை வ ச்சி.. படைத்து விட்டான்.. என்ன செய்ய. நான் எங்கேடா கருணா வை ஆதரித்து சொன்னேன்... வெளியே இருப்பவ ன்... எல்லாம் நிரபராதி இல்லை என்றேன்... ஒடனே உனக்கு வே ர்க்கு து. ஒன் கருத்தும் ஒன்னைய போலவே பொறம்போக்கு தனமா தான் இருக்கு...

 • unmaiyai solren - chennai,இந்தியா

  நம் நாட்டில் ஒரு சாதாரண பொறுப்பில் இருப்பவர்கள் முதல் பிரதமர் பொறுப்பில் இருக்கின்றவர்கள் வரை அனைவருமே குற்றவாளிகள் தான் காவல் மற்றும் நீதி துறை வரை. இதில் யாரை தண்டிப்பது???

 • Abu Faheem - Riyadh,சவுதி அரேபியா

  அப்டினா பா ஜ க தேசியத்தலைவர் அமீத்ஷா பதவிக்கு ஆப்பு, இதுக்கு பேருதான் சொந்தக்காசுல சூனியம் வைக்கிறதோ????

 • Indhuindian - Chennai,இந்தியா

  அப்படின்னா எந்த கட்சிக்கும் தலைவரே கிடையாதா? அப்படின்னா தலை திருகப்பட்ட கோஷியைபோலதானா?

 • Roopa Malikasd - Trichy,இந்தியா

  நல்ல கேள்வி...இந்த மாதிரி நாடு நிலை வாதிகளால்தான் ஜனநாயகம் தழைக்கிறது...கூடவே இன்னுமொரு முக்கியமான கேள்வியை மாண்புமிகு நீதிபதி அவர்கள் கேட்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ...அது என்ன வென்றால் ... தனி வாழ்வில் ஒழுக்கத்தை பின்பற்றாதவர்கள் எப்படி ஒரு ஒட்டு மொத சமுதாயத்துக்கும் தலைவராக இருக்க முடியும் (அதாவது ஒரு நாட்டின் பிரதம மந்திரியாகவோ அல்லது முதல் அமைச்சராகவோ அல்லது அமைச்சராகவோ இருக்க முடியும்) ..உதாரணமாக 1 . ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற கொள்கையில் இருந்து வேறுபாடுபவர்களாலோ அல்லது நேர்மை தவறி பொருள் ஈடுபவர்களாலோ அல்லது கொலை கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களாலோ எப்படி ஒரு தூய்மையான சமுதாயத்தை உருவாக்க முடியும் ... 2...நம் இந்திய வரலாற்றில் சுதந்திரம் பெற்றபின்பு மிக சொற்பமானவர்களே நல்ல தகுதியுடையவர்களாக இருந்து ஆட்சி செய்திருக்கிறார்கள் ...VP SINGH ..KAMARAJ etc .. ஆகவே தனிவாழ்வில் ஒழுங்கு இல்லாதவர் அனைவரையும் தடை செய்யவேண்டும் ..

 • narayanan iyer - chennai,இந்தியா

  What to do? The advocates are says lies for their client's cases . They are becoming Judges. Human nature became as corruptions. Not able to find a single man with service minded. The world is running. Supreme court Judge only given the order Karnataka to release water to Tamil Nadu. But no one bind their order. What the court took action?

 • Urimai Kural - CHENNAI,இந்தியா

  குற்றவாளி புகைப்படம் சட்டசபையில் இருக்கும் போது கட்சிக்கு குற்றவாளி தலைமை தாங்கலாம்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  பினாமி, பொண்டாட்டி, புள்ள களைவச்சி கட்சியை நடத்துவானுவோ...

 • rajan - kerala,இந்தியா

  நம்ம ஜனநாயகம் சார்ந்த உரிமைகள் அது வழி உள்ள அரசியலமைப்பு நிரபராதிகள் தண்டிக்க பட கூடாது என்பது. இத்தனை காலம கட்டிகாத்த இந்த மரபில், மைலார்ட் நாம் இன்று காண்பது என்ன? நூதன திருட்டு கொள்ளை கொலை பண்ணி தடயம் அழிப்பு வரை போய் வலுவான ஆதாரம் இல்லை என்று குற்றவாளி விடுதலை. ஆக பாதிக்கபட்ட நிரபராதி குற்றவாளியால தண்டிக்க படுகிறான் மைலார்ட். இதற்கு கோர்ட் நடவடிக்கை என்ன? இங்கு சட்டம் எப்படி இயங்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துங்கள்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  அப்போ அமித் ஷா பதவி அம்போவா ???

  • partha - chennai,இந்தியா

   ஒரு மனைவி இரண்டு மூன்று துணைவியுடன் இருப்பவரெல்லாம் தலைவனாக இருக்கலாமா என்ற கேள்வியையும் சேர்த்து நீதிபதிகள் கேட்டிருக்கலாம் அமெரிக்கா போன்ற SOCIAL SEXUAL BEHAVIOR உள்ள நாட்டிலேயே தனிமனித ஒழுக்கம் தலைமைக்கு நிச்சயம் தேவையென்று கிளிண்டனை பதவி இறக்கினார்கள் இந்தியாவில் particularly தமிழ்நாட்டில் இதெல்லாம் சாத்தியமா?? காசுக்கும் போதைக்கும் இலவசத்துக்கும் ஓட்டுப்போடும் மாக்கள் உள்ளவரை தமிழ்நாட்டு கழகங்களுக்கு கொண்டாட்டம்தான்

  • Amrut - Mumbai,இந்தியா

   அமித் ஷா எந்த உயர்/உச்ச நீதி மன்றத்தாலும் இதுவரை தண்டிக்கப் படவில்லை. லாலுவும் சின்னாயீயும் தண்டிக்கப்பட்டவர்கள்.

  • suresh sampath - chennai,இந்தியா

   நிரூபிக்கப்பட்டால், தண்டனை பெற்றால் பதவி போகும் .முதல்ல நல்லா படிங்க

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// partha - chennai,இந்தியா - அமெரிக்கா போன்ற SOCIAL SEXUAL BEHAVIOR உள்ள நாட்டிலேயே தனிமனித ஒழுக்கம் தலைமைக்கு நிச்சயம் தேவையென்று கிளிண்டனை பதவி இறக்கினார்கள்///ஆகா இங்க பாருடா, திருவல்லிக்கேணி, கையேந்தி பிழைக்கும் சங்க தல, ஒழுக்கம் பற்றி பேசுது, ஆண் பல பெண்ணை திருமணம் செய்து வாழ்வது தவறு என்று சொல்லும், இவர்தான் ஒரு பெண் அதுவும் ஒரு அரசியல்வாதி, பல ஆண்களுடன் கோயிங் ஸ்டெடி என்று வாழ்ந்தவர் பற்றி சிலாகித்து கூறுவார், ஏனென்றால் அது அவர்கள் கூட்டம்.. என்னே ஒரு அறிவு ஜீவி, இது..... கையேந்தி பிழைக்கும் நேரம் போக, பொது அறிவை வளர்த்துக்கொண்டால் நல்லது.

 • ஆரூர்ரங் -

  தவறு அரசியல் சட்டமியற்றியவர்களுடையதே . அவர்கள் வெள்ளந்தியாக காந்தீயவாதிகள் மட்டுமே ஆட்சிக்குவருவார்கள் .காங்கிரசுக்கு எதிர்ப்பேயின்றி ஆயிரமாண்டு ஆளும். இந்திய நாட்டில் நேர்மையும் நாணயமும் தழைத்தோங்கும். மக்களுக்காக தியாகம் செய்வோரைமட்டுமே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என எண்ணி விவரமாக அரசியல்சட்டத்தை இயற்றினார்கள். யாருக்காக சுதந்திரம் வாங்கினாரோ அம்மக்களே ஜனநாயகத்துக்கு எதிரியாக இருக்கிறார்களே. . ? 

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை

   ///ஆரூர்ரங் - தவறு அரசியல் சட்டமியற்றியவர்களுடையதே ///உண்மைதான், அப்போது இதை போல கிரிமினல்கள் அரசியலில் கோலச்சுவார்கள் என்பதை அறிந்திராத காலகட்டத்தில் அவர்கள் என்ன செய்வார்கள், ஆனால் இந்த நிலையிலும், எவ்வளவோ சட்டதிருத்தங்களை மேற்கொள்ளும் நாம், இதை நிறுத்தாமல் வைத்திருக்கும் ,கேவலமான ஆளும்கட்சியினரை என்ன செய்யலாம், அவர்களும் மாதிரியான ஆட்கள், அல்லது அதே மாதிரியான ஆட்களை கைத்தடியாக வைத்திருப்பவர்கள், நீதிமானையே விலை பேசி, தீர்ப்பை வாங்கும் மானுடர்கள், அப்புறம் குளுகுளு பிரதேசத்திற்கு பார்சல் பண்ணும் தியாகிகள், என்ன சரிதானே?

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  யாருக்காக சுதந்திரம் வாங்கினரோ அம்மக்களே ஜனநாயகத்துக்கு எதிரியாக இருக்கிறார்களே.  வெறும் இருபது ரூபாய்க்காக தண்டிக்கப்பட்டு சிறையிலிருப்பவரை ஆதரிப்பர் எனும் எண்ணம் பாவம் அம்பேத்காரின் கனவில் கூட தோன்றியிருக்காது. இதுபோன்று எதிர்காலத்தில் நடக்குமெனத் தோன்றியிருந்தால் விட்டால்போதுமென அரசியல் நிர்ணய சபையிலிருந்தே ஓடியிருப்பார். .  

 • Kumar -

  முதல்ல ஊழல்களை ஒழிக்க ஏற்பாடு செய்யுங்க

 • G.Krishnan - chennai,இந்தியா

  ஒரு சில கடுமையான குற்றங்களுக்காக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவுடன் . . . . . .அவருக்கு சாதாரண குடிமகன் என்ற அந்தஸ்து கூட இருக்கக்கூடாது . . . .மூன்றாம் தர குடிமக்களை போல நடத்தப்படவேண்டும் . . . . .ஓட்டுஉரிமை பறிக்கப்படவேண்டும், உண்ணும் உணவின் விலையும் மூன்று மடங்காக்க உயர்த்தவேண்டும் . . . . .தவறுகள் செய்பவர்கள் இந்த தண்டனையை பார்த்து இனிமேல் கனவிலும் செய்யக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு . . .சட்டங்கள் இயற்றவேண்டும் . . . .வருங்கால சந்ததியர்களாவது ஒழுங்காக வருவார்கள்.

  • Divahar - tirunelveli,இந்தியா

   கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால் நம் அரசியல்வியாதிகள் செய்ய விடமாட்டார்கள்

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  லோக் அயுக்தாவை நிறைவேற்றினாலே பல தவறுகள் கட்டுக்குள் வரும்.

 • பாரதி நேசன் - chennai,இந்தியா

  குற்றவாளிகள் எல்லா துறையிலும் இருக்கிறார்கள்...நீதி துறை உட்பட...

 • பாரதி நேசன் - chennai,இந்தியா

  அப்போ நீதி மன்றத்தில் ????

 • VOICE - CHENNAI,இந்தியா

  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குற்றவாளி அரசியல்வாதிகளுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் நீதித்துறை மதிப்பு இழந்து போகும். மத்தியில் ஆளும்கட்சி இருப்போர் தலையாட்டி பொம்மையாக நீதிமன்றத்தை பார்க்கின்றனர் மக்கள். நீதிபதி நேர்மையாக இருக்கும் வரையில் யவரை பார்த்தும் அஞ்சவேண்டாம், தலைமை பதவியில் இருப்பவர் மீதே ஊழல் குற்றசாட்டு வருவது நாட்டின் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. .

 • venkatesh - coimbatore,இந்தியா

  ஊழல்வாதி கட்சிக்கு தலைமை தாங்க கூடாது ஆனால் ஒரு ஊழல்வாதிக்கு மக்களின் வரி பணத்தில் மணி மண்டபம் கட்டலாம்,,சமாதி கட்டலாம் பாரம்பரியம் மிக்க சட்டசபையில் பெரிய படம் வைக்கலாம் புகழாரம் செலுத்தலாம் அதை நீதிபதிகளும் கை தட்டி ரசிக்கலாம் .நீங்க பேசுறதுக்கு செய்யுறதுக்கும் சம்பந்தமே இல்லையே.

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  நமது அரசியல் சாசன சட்டத்தில் உள்ள ஒரு இமாலய தவறுதான் இப்பொது சுப்ரீம் கோர்ட் எழுப்பிய கேள்வி இந்த தவறுதான் அணைத்து முறைகேடுகளுக்கு ஆதார விழுது. ஒரு யோக்யம் இல்லாத தலைவனால் நடத்தப்படும் ஜனநாயக அமைப்பு ஆட்சிக்குவந்தால் அந்த தலைவன் அல்லது தலைவி அரசு அமைத்து மக்களுக்கு சேவை செய்வதை விட தனக்கு என்ன கிடைக்கும் என பார்ப்பது நிச்சயம் நடக்கும் நாம் தமிழகத்தில் இப்பொது உதாரணம் காட்ட நிறைய தலைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது நமக்கு தெரிந்ததுதான் குற்ற பின்னணி கொண்ட தலைவர்களால் உருவான தொண்டர்கள் தொண்டர்களால் கெடுக்கப்பட்ட பொது மக்கள் என்பதுதான் நமது நிலை. ஒரு தொகுதியில் ஒருலட்சம் பேர் ஒட்டு போடுவோர்க்கு தொண்ணூறு சதவீதம் தெரியும் ஜனாய கடமையாற்ற பணம் கொடுக்கும் விஷயம் இருந்தும் மக்களும் அதை ஏற்று தேர்ந்தேடுக்கிறோம் அதனாலதான் கல்வியில் இருந்து மருத்துவம் வரை அனைத்திலும் முறைகேடு ஒழுக்கக்கேடு அரைகுறை சாலை மாயாஜால பேச்சுக்கள் ரவூடிகள் அராஜகம் போலீஸ் அத்துமீறல் யார்வேண்டுமானாலும் எந்தத்தலைவனையும் தரக்குறைவாக பேசலாம் மணல் கொள்ளை இயற்கை அழித்தால் இப்படி. தலைவன் ஒழுக்கமாக இருந்து விட்டால் முழு நிர்வாகமும் ஒழுக்கத்திற்கு வந்துவிடும் குற்ற பின்னணி கொண்டவர்கள் குற்றம் புரிந்து நிரூபிக்கப்பட்டவர்கள் மக்கள் நிராகரிப்பதை விட அரசியல் சட்டம் நிராகரித்தால் தான் நாடு பேராபத்தியிருந்து விடுபடமுடியும். கண்டதுக்கும் விமர்சனம் எழுப்புவோர் தேச நலன் கருதி இதற்கு எழுதுங்கள் நீதி மன்றம் வெறும் கேள்வியோடு நிற்காமல் மத்திய அரசை சட்டம் கொண்டுவர உதரவூபோடட்டும். அரசியல் நடத்த தலைமை தாங்க சுயஒழுக்கம் நிறைய வேண்டும் அதற்கு குற்ற புத்தி உள்ளவர்கள் நாடாளாமல் பார்ப்பது நமது கடமை.

 • makkal neethi - TVL,இந்தியா

  குற்றவாளியா நிரபராதியா என்பதை மக்கள் தீர்மானிக்கணுமா இல்லை கோர்ட் தீர்மானிக்குமா... இப்பொழுது பார்லிமென்டில் சட்டசபையிலும் எத்தனை குற்றவாளிகள் உள்ளனர்

  • yila - Nellai,இந்தியா

   கோர்ட்ட்டால் தீர்மானிக்க முடியாததால், அல்லது நேரம் இல்லாததால், அல்லது வாய்தாக்களால் சாகும் வரைகூட இழுத்தடிப்பதால்.... மக்கள் தீர்மானிக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஆனால், மக்களுக்கோ.....? அதை சரியாக தீர்மானிக்கும் சக்தியில்லை என்பதே உண்மை...

  • K.Sugavanam - Salem,இந்தியா

   குற்றவாளியென மக்களுக்கு தெரியும்..ஆனால் சந்தர்ப்ப சாட்சியங்கள் இல்லை என சொல்லி கோர்ட்டு அந்த நபரை விடுவித்துவிடுகிறது..மக்கள் கண்டிப்பாக அவருக்கு எதிராக தங்கள் வாக்கு உரிமையை பயன்படுத்தி அந்த நபரை அரசியலிலிருந்து விரட்டி அடிப்பார்கள்.கோர்ட்டு செய்ய முடியாததை கண்டிப்பாக மக்களால் செய்ய முடியும்.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  சபாஷ் சரியான கேள்வி அப்படினா இந்தியாவில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கேப்மாரிகள், களவாணிகள், தானே? எங்கே போய் தேடுவது காமராஜரையும்,அப்துல்கலாமையும் போல? கட்சிகளே இல்லாமல் மக்களில் ஒருவர் நாடாள முடியுமா?

  • yila - Nellai,இந்தியா

   முடியும்.... ஆளும் குற்றவாளிகளை காடாள அனுப்பினால்....

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இந்தியாவில் எந்த கட்சில யோக்கியன் இருக்கான் ??? பூராமே அய்யோக்கிய பயலுக கட்சியே கூடாது என்று ஒரு சட்டம் போடுங்க

 • hasan - Chennai,இந்தியா

  இந்தியாவில இப்படி ஒரு சட்டம் வந்தால் மிகவும் நல்லது எல்லா அரசியல் கட்சிகளும் பயப்படும் அதுமல்லாது இந்தியாவில் இரண்டு கட்சிகளே இருக்க வேண்டும் இங்கு அவனவன் கட்சியை ஆரம்பித்து அவனவன் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்கிறார்கள் மேலும் சொத்துக்களை குவிக்கிறார்கள் .

  • K.Sugavanam - Salem,இந்தியா

   இரண்டு கட்சிக்கு மட்டும் எந்த அளவுகோலின் படி அனுமதி அளிப்பீர்கள்? இதெல்லாம் சரிப்பட்டுவராது..பல கட்சிகள் இருப்பதே நல்லது..

 • அப்பு -

  நீதிமன்றங்களின் கையாலாகாத்தனம் நன்றாகத் தெரிகிறது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சட்டம் மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் மதிக்கப் படுகிறது. நமது சட்ட மேதைகள் அவர்களைப் பார்த்து சூடுதான் வைத்துக்கொண்டார்கள்.

 • JeevaKiran - COONOOR,இந்தியா

  இப்போதுள்ள மோடி அரசு உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைத்தால், இதை சட்டமாக்கி மக்களை ஊழல் வியாதிகளிடமிருந்து காப்பாற்றலாமே?

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// JeevaKiran - COONOOR,இந்தியா - இப்போதுள்ள மோடி அரசு உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்யணும் என்று நினைத்தால், இதை சட்டமாக்கி மக்களை ஊழல் வியாதிகளிடமிருந்து காப்பாற்றலாமே?///அக்கறை அதுவும் பிஜேபி க்கு, மோடிக்கு நீங்க வேற, இந்த அரசு எதிலுமே வெளிப்படை தன்மையே கிடையாது. தகவல் பெரும் சட்டமாகட்டும், லோகாயுதா வாகட்டும், ஏன் அரசியல் கட்சிகள் பெரும் நிதிபற்றிய விவரங்களை வெளியிடவோ எதிலுமே அக்கறை காட்டவில்லை, இதில் சுவாரசியம் என்னவென்றால் அரசியல் கட்சிகள் பெரும் நிதியில் 90% பிஜேபி தான் பெறுகிறது, அதுவும் பெரும் நிறுவனங்களில் இருந்து, அதுவும் ஒரு லாபி வைத்து, கார்பொரேட் நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து நிதி மொத்தமாக இவர்களுக்கு அளிக்கிறார்கள், இவர்களிடம் நல்லதை எதிர்பார்க்கவா முடியும்.

  • yila - Nellai,இந்தியா

   அவர்களின் தலையில், அவர்களையே மண் அள்ளிப்போடச் சொல்லுகிறீர்களா?

  • partha - chennai,இந்தியா

   காசுவாங்கி ஓட்டுப்போடும் தமிழ் மக்களாகிய உம்மை போன்றோருக்கு அதை கேட்க தார்மிக உரிமை இருக்கிறதா??

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// parthaகாசுவாங்கி ஓட்டுப்போடும் தமிழ் மக்களாகிய உம்மை போன்றோருக்கு அதை கேட்க தார்மிக உரிமை இருக்கிறதா??... ///பிச்சைக்காரனுக்கு, யாரை பார்த்தாலும் தனது இனமாக தான் தெரியும், எங்கே தனக்கு போட்டியாக வந்திடுவானோ என்று, உங்களுக்கும் அதே பீலிங் தான் என்ன செய்ய. வாங்கி வாங்கிய பழகிவிட்ட உங்களுக்கு, அடுத்தவருக்கு பங்கு போயிடுமோ என்ற எண்ணம், கவலை படாதீர்கள், எனக்கு எனது சம்பாத்தியம், எனது குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு உள்ளது, நீங்களே மொத்தத்தையும் வாங்கி கொள்ளுங்கள்.

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   உழைத்து சாப்பிட வக்கில்லை, ஆனால அடுத்தவனை சொல்ல வந்திட்ட

 • Selvakumar - Trichy,இந்தியா

  முதலில் ஒருமுறை குற்றம் நிருபிக்க பட்டால் அதை உறுதி செய்து மேல்முறையீடு செய்யாமல் தண்டனை வழங்க வக்கில்லாத சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த கேள்வியை கேட்க தகுதியில்லை. எப்போது ஒரு சாதாரண நீதிமன்றம் குற்றம் நிரூபிக்க பட்டவுடன் தண்டனை வழங்குகிறதோ அப்போது சுப்ரீம் கோர்ட் இந்த கேள்வியை கேட்கவே வாய்ப்பிருக்காது.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  ஹா, ஹா, சுப்ரீம் கோர்ட்டால் குற்றவாளியென்று தீர்ப்பளிக்கப்பட்டவர் சட்டமன்றத்திலேயே படமாகத் தொங்குகிறார். குன்ஹா தீர்ப்பில் சிறையில் இருந்தே கட்சியை 'நடத்தியவர்' அவர். இப்போதுதான் நீதித்துறையின் தூக்கம் கலைந்தது போலும்

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

   ஒரு நீதிபதி 12 வருஷம் விசாரிச்சு குற்றவாளின்னு சொன்னார் அதெ கேச ஒரு நீதிபதி 2 மாசம் விசாரிச்சு நிரபராதி னு சொல்றார் அத 3 நீதிபதி சேர்ந்து விசாரிச்சு 3 வருஷம் தீர்ப்பை தள்ளிப்போட்டார் அப்புறம் மொதல்ல சொன்னதே கரெக்ட்னு சொல்றார் . தப்பா தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கு என்ன தண்டனை இப்படி எத்தனை தீர்ப்பு தப்பா சொன்னார் ????? அஞ்சி வருசத்துக்கு முன்னாடி 10000 ரூபாய் லஞ்சம் வாங்கிட்டு ஒரு நீதிபதி ஜனாதிபதிக்கே கைது வாரண்டு கொடுத்தார் ....??? என்னடா நம்ம சட்டம் இது சாமானியனுக்கு மட்டும்தாம்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   அங்கே ஜட்ஜுகளும் வந்து திறந்து வச்சாங்களாமே...

  • Karthick - kumbakonam,இந்தியா

   அரசு துறைகள் அனைத்தையும் , நீதித்துறையையும் சேர்த்து கட்டுப்பாட்டில் (மறைமுகமாக) வைக்கக்கூடிய அளவிற்கு இங்கே சட்ட திருத்த மசோதாக்கள் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் சிறிது சிறிதாக நமது சட்டங்களை உருமாற்றிக் கொண்டிருக்கின்றது. இதில் எவர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் பின்னாளில் நமக்கு உதவக்கூடும் என்றெண்ணி ஒரு சில விஷயங்களில் தலையிடுவதில்லை. நமது நாட்டை பொறுத்தவரை எந்த கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை என்ற ஒன்றை வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். . ஒரு வழக்கின் தீவிரத்தை தீர்மானிப்பதே அரசியல சக்திகள்தான்..

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  சட்டத்தின் ஓட்டை இடுக்குகளுக்குள் புகுந்து தான் இன்றைய அரசியல் வாதிகள் தங்கள் கட்சிக்கு தலைமை தாக்குகிறார்கள். ஓட்டை அடைபட்டால் அனைவரும் சிறையில் தான் இருப்பார்கள்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  சின்னம்மாவை போய் இப்பிடி சொல்லிட்டீங்களேம்மா?

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   ///Cheran Perumal சின்னம்மாவை போய் இப்பிடி சொல்லிட்டீங்களேம்மா? ///அமித் சாவுக்கு கூட அது பொருந்தும் சேரன் பெருமாள்.

  • SRH - Delhi,இந்தியா

   SANMUGAM STOP YOUR RUBBISH..HE IS NOT A CULPRIT.. WHICH COURT ANNOUNCED .. ?

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// SRHSANMUGAM STOP YOUR RUBBISH..HE IS NOT A CULPRIT.. WHICH COURT ANNOUNCED .. ?... ///ஐயா ஸ்ரீராம் நீங்கள் உங்களுக்கு எந்தவித விசய ஞானமும் தெரியாது என்பதற்கு இதுதான் உதாரணம். போய் வரலாறை பாருங்கள், எவ்வளவு நாள் ஜெயிலில் இருந்தால் எவ்வளவு நாள் இருந்தார், எதற்க்காக இருந்தார், ஏன் குஜராத்தை விட்டு வெளியேற்றப்பட்டு UP ல் தங்கினார், அங்கே எவ்வளவு கலவரத்திற்கு காரணமாக இருந்தார், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை எப்படி வாங்கி சமாளித்தார் என்று தெரிந்து கொள்ளுங்கள், பிஜேபி க்கு சோம்பு தூக்கும் முன், தெரிந்து கொண்டால், நீங்களே உங்களின் வார்த்தையை திரும்ப எடுத்து வாயில் போட்டுக் கொள்வீர்கள்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   முருகவேள் , சமாளிப்பு வேண்டாம். குற்றவாளி என்று எந்த வழக்கிலும் தீர்ப்பு சொல்லப்படவில்லை. இங்கே விவாதிக்கும் விஷயம் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லப்பட்டவர்களுக்கு

  • yila - Nellai,இந்தியா

   When the court was getting ready to announce.....(No, the case in the supreme court now, so can't comment.)

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா - குற்றவாளி என்று எந்த வழக்கிலும் தீர்ப்பு சொல்லப்படவில்லை///நீதிபதியை வாங்கி தீர்ப்பாய் வாங்கி வெளியே வந்தவர்களை, அந்த நீதிமானுக்கே ஆளுநர் பதவியை கொடுத்து அழகுபார்க்கும் நீங்கள் ,2 G ஊழல் என்று சொன்னீர்களே அந்த வழக்கிலிருந்து வெளியே வந்துவிட்டார்கள் ராஜாவும் கனிமொழியும் அப்புறம் எந்த அடிப்படையில் அவர்களை ஊழல்வாதிகள் என்று சொல்கிறீர்கள். அதைவிட மேலாக தீர்ப்பை விடுங்கள், அதை எவர் வேண்டுமானாலும் வாங்கலாம் இங்கே நம் நாட்டில் அது உங்களுக்கு தெரியாததல்ல, அமித்ஸாவின் வழிகாட்டுதலில் இயங்குபவர், ஆனால் எந்த வகையில் ஒரு வழக்கு கூட பதியாத பதிய முடியாத கருணாவை, ஊழல்வாதி என்று முத்திரை குத்துகிறீர்கள், அப்போ அவர், அவரே சொன்னதுபோல, ஊழல் என்றால் நெருப்பு என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? நம் நாட்டின் சட்டதிட்டங்கள் அடிப்படையே தவறு அதில் உள்ள ஓட்டைகள்தான் இன்றைக்கு நம் அரசியல்வாதிகளுக்கு வசதி, அதிலிருக்கும் ஓட்டைகள் வழியே(ஓட்டையை அடைக்காமல் வைத்திருப்பதே இவர்கள்தான்) தான் இவர்கள் தப்பிக்கிறார்கள் என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அது இங்கே வாசகர் அனைவருக்கு தெரியும், ஆனால் நீங்கள் , உங்கள் கும்பல் ஒப்புக்கொள்வதில்லை அவ்வளவுதான்.

  • SRH - Delhi,இந்தியா

   Leave him JEYARAMAN..he always polambals number 1...

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

   நைனாக்களா பிசெபிக்கு எதிரா கருத்து சொல்லுறவன ரவுண்டு கட்டுறதுலயே ஈக்கீங்களே ஒங்களுக்கு சொய மரியாத உண்மைக்கு சரியா பதில் சொல்லுற ஞானம் கெடையாதா? ஒங்கள எல்லா.....

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

   முருகவேல், திருட்டு ரயிலேறி வந்த ஒருவரின் குடும்ப சொத்து இன்று தமிழகத்தில் பாதி என்கிறபோது அவர் ஊழல்வாதி இல்லை என்று நம்ப மக்கள் என்ன முட்டாள்களா ? சிபிஐ இயக்குனரின் வீட்டுக்கு சென்று 2G வழக்கில் வலுவான ஆவணங்கள் சேர்க்காமல் பார்த்துக்கொண்டது மக்களுக்கு தெரியாதா ?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "நீதிபதியை வாங்கி தீர்ப்பை வாங்கி வெளியே வந்தவர்களை" - சர்க்காரியா கமிஷனின் அறிக்கைப்படி கட்டுமரம் பொது வாழ்வில் ஈடுபட தகுதியே இல்லாதது... ஆனாலும் இன்று அதற்கும் உம்மைப்போன்ற அடிமைகள் ஜால்றா அடிப்பீர்கள் ஆனால் பேசுவது மட்டும் ஏதோ அரிச்சந்திரன் தோற்றுப்போய் விடுவான்... திருந்துங்கடா...

 • christ - chennai,இந்தியா

  அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் செய்தது நிரூபித்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரசியலில் நுழைவதற்கு தடை செய்ய வேண்டும் .அந்த கட்சியும் தடை செய்ய வேண்டும் .

 • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

  அப்படி பாத்தா இந்தியாவுல இருக்கற கட்சி பூரா இழுத்து மூட வேண்டியது தான் ஆட்சி கலைக்க ஏற்பாடு எத்துணை இருக்க கடவுளே

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  "கோர்ட்டுக்கு குற்றவாளிகள் தலைமை தாங்கலாமான்னு ?" பொதுஜனம் கேக்குறாங்க மை லார்டு. பிடிபடுற வரைக்கும் எல்லாரும் நல்லவன் தான்னு முந்தி இருந்தது. இப்போ எல்லாம் பிடிபட்டாலும் ஒண்ணும் அசர மாட்டேன் என்கிறார்களே? நீங்களும் போன வாரம் உ.பி உயர்நீதிமன்ற நீதிபதியை (மருத்துவக்கல்லூரி அமைப்பதில் ஊழல் செய்ததாக) நீங்க சொல்லியும் விலகாததால், வேலையை விட்டு தூக்கணும்னு ஜனாதிபதி, பிரதமர் எல்லாருக்கும் மனு கொடுத்தீங்க. அது எந்த .... தெரியுமா மை லார்டு?

  • Nancy - London,யுனைடெட் கிங்டம்

   ஒரு நீதிபதி 12 வருஷம் விசாரிச்சு குற்றவாளின்னு சொன்னார் அதெ கேச ஒரு நீதிபதி 2 மாசம் விசரிசு நிரபராதி னு சொல்றன் அத 3 நீதிபதி சேர்ந்து விசாரிச்சு 3 வருஷம் தீர்ப்பை தள்ளிப்போட்டார் அப்புறம் மொதல்ல சொன்னதே கரெக்ட்னு சொல்றாங்க .

 • mscdocument - chennai ,இந்தியா

  குற்றவாளிகள் நாடாளும் போது கட்சிக்குத் தலைமை தாங்குவது பெரிய விசயமா?

  • SRH - Delhi,இந்தியா

   YES MS DOCUMENT.. IN SOME STATES CONGRESS STILL RULING..WE WILL REMOVE IT டுகெதர் .

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   /// SRH - Mumbai ,இந்தியா உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது 4 வழக்குகள் உள்ளன, ஆனால் இவை அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவை. வழிபாட்டுத் தலங்களில் உள்நுழைதல், கலவரத்தை ஏற்படுத்துதல், கல்லறைகளுக்குள் அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளன""" ///மஹாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திரஃபட்நாவிஸ் மீது 3 தீவிர கிரிமினல் வழக்குகள் உள்பட 22 வழக்குகள் உள்ளன''/// ஸ்ரீராம் ஐயா, இதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

  • yila - Nellai,இந்தியா

   In our own ruling states, we will enact our own laws and release our own leaders from criminal cases against them My Lord....?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  குற்றவாளிகள் மட்டுமே தலைமை தாங்கலாம்னு வேண்டுமானால் ஒரு புது சட்டம் போட சொல்லுங்கள். இந்திய அரசியல்வியாதிகளால் அந்த ஒரு சட்டமாவது 100% பின்பற்றப்படுகிறதுன்னு பெருமைப்பட்டுக்கலாம்.

 • Thirumal Kumaresan - singapore,இந்தியா

  உடனடியாக தலைவர் பதவியை விட்டு விலகவில்லை எனில் கட்சியை தேர்தல் கமிஷன் கலைத்து விட வேண்டும்

  • yila - Nellai,இந்தியா

   தேர்தல் கமிஷனா? அதற்குத்தான் .......?

 • rajan - kerala,இந்தியா

  இங்கே தான் நீங்க குற்றவாளி என ஸ்டம்ப் அடிச்சவ படத்தை சட்டசபைல திறந்து வச்சு படம காட்டி கூத்தடிக்கிறதை நிறுத்த உத்தரவு போடுங்க முதலில் மைலார்ட்.

 • venkatan - Puducherry,இந்தியா

  நீதிமன்றத்தின் சரியான அநல்லிசிஸ் ன் படி நியாயமான கேள்வி

 • prabhu - trivandrum,இந்தியா

  மக்களாட்சி இன்னும் சில நூற்றாண்டுகள் பயணிக்க வேண்டும்.

 • Malimar Nagore - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ஏன் என்ற கேள்வியை கேட்டுக் கொண்டு இருந்தால் என்ன பயன்.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இவனுவ போடுற தெறமறைவு திட்டமு நாடவமு கடைசில இந்தியாவ சோமாலியா ஆகிவிடாம ஈக்கனுண்டா ஆண்டவா.... இவனுவலா தவித்து நாட்டுல ஒரு பயல உட்டு வைக்காம ஏக்க என்ன என்ன பண்ணனுமோ அத்தனையு பனிட்டருக்கானுவ.. இவனுவ யோக்கிய சிவாமணிங்க இவனுவளுக்கு சாலரா அடிக்காத மத்த கச்சிக்காரன் எல்லா அயோக்கியனுவ சர்தான் நைனா இவனுவ நாயம்...

 • raja - chennai,இந்தியா

  அப்படினா பி ஜே பி தலைமை என்ன ஆகும் ???

  • yila - Nellai,இந்தியா

   அதை எந்த "நீதிபதி" சொல்லமுடியும்?

  • K.Sugavanam - Salem,இந்தியா

   கவர்னர் பதவி நல்ல பதவி..

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   கூட்டத் தெரியனுமே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement