Advertisement

இயற்கை பேரிடர்களை தவிர்க்க அனுமன் ஸ்தோத்திரம் : மாஜி எம்.பி., அறிவுரை

புதுடில்லி : விவசாயிகள், அனுமன் ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லிவந்தால் இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம் என்ற மத்திய பிரதேச மாநில பா.ஜ. தலைவரின் கருத்து சமூகவலைதளங்களில் பெரும்விவாதப்பொருளாக மாறியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் செேஹார் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர் ரமேஷ் சக்சேனா. தற்போது அவர் மாநில பா.ஜ.வில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி, மேற்குவங்கம்ல சி்க்கிம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தர்காண்ட், ஹரியானா வடக்கு, பஞ்சாப் , ஹிமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், விதர்பா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில நாட்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, தங்கள் மாநில விவசாயிகளை காக்கும் மற்றும் எச்சரிக்கும் பொருட்டு மாஜி எம்.பி., ரமேஷ் சக்சேனா கூறியுள்ள கருத்து பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

பத்திரிகையாளர்களை சந்தித்த ரமேஷ் சக்சேனா கூறியதாவது,விவசாயிகள், தினமும் 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் சொல்லிவந்தால், இயற்கை பேரிடர்களிலிருந்து தங்களை மற்றும் தங்கள் விவசாய சொத்துக்களை காத்துக்கொள்ளலாம் என்பதை உறுதியளிக்கிறேன். இளைஞர்கள், அடுத்த 5 நாட்களுக்கு தினசரி 1 மணிநேரம் அனுமன் ஸ்தோத்திரம் கூறுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் ஆதரவு :ரமேஷ் சக்சேனாவின் இந்த கருத்திற்கு மாநில வேளாண்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா பட்டிதார் ஆதரவு தெரிவித்துள்ளார்.அனுமன் ஸ்தோத்திரத்தை சொல்வதால் எவ்வித தவறும் இல்லை. எல்லாம் நம்பிக்கை சார்ந்த ஒன்றே என்று அமைச்சர் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து (66)

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  டிசம்பர் 3, 1984 ல் இந்தியாவில் உள்ள போபாலில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு விஷவாயு வெளியேறி 3000 பேர் இறந்தபோது அக்னிஹோத்ரம் யாகம் செய்த இரண்டு குடும்பத்தினர் மட்டும் விஷவாயு பாதிக்காமல் தப்பிய செய்தி பத்திரிகைகளில் வெளியானது.ஆனால் ஹிந்து நம்பிக்கைகளை குறை கூறி மதமாற்றம் செய்பவர்கள் கூட்டம் மற்றும் அந்நிய மதத்தினர் கூட்டம் இதில் கருத்துக்கள் சொல்ல தேவையில்லை .உண்மையிலே பழமை வாத கோட்பாடுகளில் மூழ்கி திளைப்பது ஹிந்து மதம் அல்ல .பெண்கள் கார் ஓட்ட கூடாது மதவிரோதம் என ஹிந்து மதம் சொன்னது இல்லை .முகநூலில் பெண்கள் படம் போடுவது மதநிந்தனை என ஹிந்து மதம் சொன்னது இல்லை .செஸ் ஆம் சதுரங்கம் விளையாடுவது பாவம் ,பெண்கள் கல்லூரி மேடைகளில் பாடுவது மற்றும் ஆடுவது மதவிரோதம் என ஹிந்து மதம் சொன்னது இல்லை .மேலே சொன்ன செயல்களுக்கு பத்வா என்ற மார்க்க தீர்ப்புகள் ஹிந்து மதத்தில் இல்லவே இல்லை .இதெற்க்கெல்லாம் ஹிந்துக்கள் அந்த மதத்தை குறை கூறியது இல்லை .ஆனால் ஹிந்து மத கடவுளர் துதி பற்றி ஒரு ஹிந்து அமைச்சர் சொன்னதுக்கு இவ்வளவு கீழ்த்தரமான விமர்சனங்கள் தேவையில்லை .மலேயாவில் பாடப்புத்தகங்களில் பன்றி பற்றிய குறிப்புகள் மற்றும் அதன் படங்களும் முற்றிலும் நீக்கப்பட்டன .காரணம் இருபது ஆண்டுகளுக்கு முன்பே அது மதவிரோதம் மத நிந்தனை என்பதால் முஸ்லிம்களின் கோரிக்கையை மலேசிய அரசாங்கம் ஏற்றது .அப்போதும் சரி இப்போதும் சரி ஹிந்து மதத்தினர் இத்தகைய விஷயங்களில் தலையிட்டதில்லை .ஆனால் ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ ராமரும் கற்பனை பாத்திரங்கள் ஏசுவும் அல்லாஹ்வும் உண்மை பாத்திரங்கள் என்று சொல்லும் சிவப்பு ப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கூட்டங்களும் ,மதம் மாறிய ஹிந்துக்களும் ஆண்டாள் விஷயத்திலும் ,மீனாட்சி அம்மன் கோவில் விஷயங்களிலும் மதவிரோத கருத்துக்களை பதிவிட்டு ஹிந்து மதத்தை ஏளனம் செய்கின்றனர் .போன வருடம் ரம்ஜான் நோன்பின் போது தண்ணீர் அருந்திய குற்றத்திற்காக பத்து வயது நிரம்பாத இருபது சிறுவர்கள் நடுத்தெருவில் தூக்கிலிடப்பட்டனர் இராக்கில் .அது மட்டும் அல்ல பெண் வேடம் போட்டு ஹிந்தி பாட்டுக்கு ஆடிய ஐந்து சிறுவர்கள் கல்லால் அடித்து கொல்லப்பட்டனர் சிரியாவில் (அதுவும் ரம்ஜான் மாதத்தில் ) அதுமட்டும் அல்ல கம்யூனிசம் பேசினாலே மரண தண்டனை -அதனால் தான் முஸ்லீம் நாடுகளில் கம்யூனிஸ்ட்கள் உயிர் வாழ முடியாது .அத்தகைய பழமை வாத கோட்பாடுகளை உயர் மார்க்கமென பின்பற்றும் மனித திரள் கூட்டம் ஹிந்து மத கடவுளர் துதிக்கு சக்தி உள்ளது என்று ஒருவர் சொன்னதை எள்ளி நகையாடுவது பிறழ் முரண் .நகை முரண் .

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  we have to close all hospitals and medical college and all offices .. sthotthiram is enough .. why M.P wearing Dress ..? crazys are disappeared from Mental hospital resulted such as out come

 • Mohamed Ibrahim - Chennai ,இந்தியா

  பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா 13-பிப்-2018 10:58 அதை மூடர்களே அதிகம் நிறைந்த ஒரு பாலைவன கூட்டம் சொல்ல கூடாது...... சலீம் பாஷா அவர்களிடம் கற்று கொள்ளுங்கள் உனக்கு சாதகமாக சொன்னால் நல்லவன்... எதிராக சொன்னால் கெட்டவன்..... சலீம் பாஷா என்ன சொன்னாலும் கேட்பீர்களா? படைத்த இறைவன் ஒருவனே இதுவும் சலீமின் நம்பிக்கை... ஏற்றுகொள்ளுங்கள்....

 • அசோக் வளன் - Chuan Chou,சீனா

  திரை அரங்குகளில் அனுமன் ஸ்தோத்திரம் போட்டு எழுந்து நிற்க சொல்லலாம் ......

 • Divahar - tirunelveli,இந்தியா

  மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என சொன்னால் என் இவர்கள் நம்பவில்லை

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மீனாக்ஷி அம்மன் கோவிலில இவரை கொண்டு மந்திரம் சோலா சொல்லி பல வருடம் தீ பிடிக்காத நிமிர்ந்து நின்ற கோவிலை தீ விபத்திலிருந்து காப்பாத்தி இருக்கலாம் . சாமிகளே தீ விபத்தில் தத்தளிக்குது தீ குளிக்குது விவசாயிகள், அனுமன் ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லிவந்தால் இயற்கை பேரிடர்களை தவிர்க்கலாம் என்றால் என்னங்க MP .

 • Raj Pu - mumbai,இந்தியா

  பேரிடர் மேலாண்மை வாரியம் உருப்படியாக எதுவும் செய்வதில்லை, சம்பளம் வீண், அதையேல்லாம் நீக்கிவிட்டு, இவர் கூறுவது போல செய்யலாம், பலன் இல்லையென்றால் இவர்களை வீட்டுக்காவலில் வைத்து பட்டினி போடலாம்

 • Power Punch - nagarkoil,இந்தியா

  இயற்கை பேரிடர் என்று இவர் பிஜேபி ஆட்சியை சேர்த்து தான் சொல்கிறாரோ ???

 • karthik - Chennai,இந்தியா

  இந்த செய்தியில் என் நீங்கள் தேவையில்லாமல் மொக்கை நுழைக்கிறீர்கள்.

 • Prabhakaran - Delhi,இந்தியா

  பகுத்தறிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஜென்மங்கள். நம்ம ராஜுவெல்லம் இவர் முன் ஜுஜுபி போலயே.

 • bhaski karan - tirupur,இந்தியா

  இதுதான் ஆன்மீக அரசியல், வோட்டுக்கு கோவில்ல போயி கும்பிட்டு அப்படியே வீட்டுக்கு போனால் போதும் நீங்கள் தான் அமெரிக்காவுக்கும் தலைவர் ..... பழையபடி மக்கள் ஆடு வெட்டி சாமிகிட்ட வரம் வாங்கி பிழைத்து போறோம்....

 • S Ramkumar - Tiruvarur,இந்தியா

  இயற்க்கை பேரிடர் காலத்தில் கடவுளை நம்புங்கள் துதியுங்கள் என்று சொல்லுகிறார். இதில் தவறென்ன. நம்ப முடிந்தால் நம்புங்கள். முடியாவிட்டால் உங்கள் வேலையை பார்க்க வேண்டியதுதானே. இதில் என்ன இந்த கயவர்களின் கருத்து வேண்டி இருக்கிறது. இவர்கள் பிராமண எதிர்ப்பு என்று இந்துக்களை மொத்தமாக கேவலப்படுத்துகிறார்கள்.

 • vns - Delhi,இந்தியா

  அனுமன் சாலிசா தினமும் படிப்பதில் தவறென்ன ?

 • Ambujam -

  good

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///இயற்கை பேரிடர்களை தவிர்க்க அனுமன் ஸ்தோத்திரம் : மாஜி எம்.பி., அறிவுரை ///அரசியல்வாதியே இப்படி பேசினால், ஒரு ஆன்மீக அரசியல்வாதி, அரசியலில் ஆட்சிக்கு வந்து, ஆட்சி கட்டிலில் ஏறி அமர்ந்த பிறகு ஒரு பிரச்சினை பேராபத்து என்றால் என்ன சொல்வார் யோசித்து பாருங்கள், தன் கடமையை செய்யாமல், இப்படி உபதேசிக்கவே செய்யார்கள், பாவம் மக்கள். உஷாராக இல்லை என்றால் இருக்கும் நிஜாரும் காலிதான், உஷாரய்யா உஷாரு.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///இயற்கை பேரிடர்களை தவிர்க்க அனுமன் ஸ்தோத்திரம் : மாஜி எம்.பி., அறிவுரை ///இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் நீங்கள், அப்போ இவ்வளவு பேரிடர் நடக்கும் போது ஏன் அதை சொல்லு மக்களை காக்கவில்லை, அப்போ மக்கள் மீது உங்களுக்கு கோபம் என்றுதானே பொருள்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  வானிலை மையத்தை ரத்து செய்துவிடலாம், புவியியல் துறையை நீக்கி விடலாம், எல்லா பக்கங்களிலும் அனுமன் ஸ்தோத்திரங்களை மட்டுமே சொல்லவேண்டும் என்று உத்தரவு போடலாம், அதை மீறி சுனாமி வந்தாலோ, மலை, புயல் வெள்ளம் என்றும் வந்தால் யாரும் எதுவும் செய்யக்கூடாது அனுமன் தான் துணை, அதை முதலில் சொல்பவரும், சொல்லும் கூட்டத்தினரும் செய்து காண்பிக்கவேண்டும்,

 • Divahar - tirunelveli,இந்தியா

  தினமலர் வாசகர்களுக்கு சிரிப்பு துணுக்குகளை அனுப்பி சந்தோஷப்படுத்துகிறது

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  .... அதிகமாக இருக்கும் ஒரே கட்சி பா ஜ க வா தானிருக்கும்.

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்ய தவகிம் வத, ராமதூத க்ருபா ஸிந்தோ மத்கார்யம் சாதயம் ப்ரபோ :

 • திரு. சுந்தரம் - Kuwait,குவைத்

  ஏனுங்க எந்த ஸ்தோத்திரம் சொன்னா இந்த பெட்ரோல் கொள்ளையர்கள் திருந்தி பெட்ரோல் கொள்ளையை நிறுத்துவாங்க?

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  பகோடா சாப்பிட்டியா?

 • venkatan - Puducherry,இந்தியா

  இதுதான் ஆன்மிக அரசியல். யதார்த்தவாதி-அவர் சொன்னதில் தவறெதுமில்லை. ஏன் அரசியல்வாதி கடவுளரது மேன்மை பேசக்கூடாது என்று எதாவது தடை உள்ளதா என்ன?

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  கூமுட்டை 23m புலிகேசி மாதிரி இருக்கான்....

 • Thanigai Arasu - Trichy ,இந்தியா

  If all the problems can be solved by one or the other sthothram, then what for govt is there?

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  இன்னுமா நைனா ஊரும் ஒழகும் இப்டி குருட்டுத்தனமான கதைகளை எல்லாம் கேட்டு அத்த நம்மினு ஈக்கு?

 • கைப்புள்ள - nj,இந்தியா

  மீடியாக்கள் தங்கள் பொழப்பு ஓட வேண்டும் என்பதற்காக பி.ஜே,பி காரர்களின் ஒவ்வொரு வார்த்தயும், ஒவ்வொரு செயலையும் திசை திருப்பி ஊதும் பொழப்பை கை விட வேண்டும். இது போல ஒவ்வொரு செயலையும் சென்சேஷனல் நியூஸ் ஆக்க முயற்சிப்பது கடைசியில் நாட்டுக்கே கேட விளைவிக்கும். தர்மத்தின்படி நடங்கள் .

 • K.Sugavanam - Salem,இந்தியா

  வர்ண ஜெபம் செய்யும்போது ஆஞ்சநேய ஸ்துதி சொல்வதில் என்ன தவறோ?

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  எங்கிருந்து வந்தானுங்க.. இந்த மென்டல் பசங்க எல்லாம் ??

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இது நிச்சயம் உண்மை. மக்களை இனிமேல் தெய்வங்கள் தான் காப்பாத்தணும். கையாலாகாத அரசுகள் என்று இவர் சரியாகத்தான் சொல்கிறார்.

 • அப்பு -

  இந்த தீவிரவாதிகளுக்கு எதிரா அனுமான் ஸ்தோத்திரம் பண்ணச் சொல்லலாமே...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement