Advertisement

'அனைவரின் பிரார்த்தனையும் வீண் போகவில்லை' - சிறுமி தன்யஸ்ரீ தந்தை உருக்கம்

சென்னை : ''அனைவரின் பிரார்த்தனையால், என் மகள் நலம் பெற்றாள்,'' என, சிறுமி தன்யஸ்ரீயின் தந்தை, ஸ்ரீதர் உருக்கமாக தெரிவித்தார்.

சென்னை, தண்டையார்பேட்டை, ஸ்ரீராமலு தெருவைச் சேர்ந்தவர், ஸ்ரீதர், 34; குடிநீர் கேன் விற்பனையாளர். இவரது மகள், தன்யஸ்ரீ, 4.ஜன., 27ல், தன்யஸ்ரீயுடன், அவரது தாத்தா, அருணகிரி, தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெரு வழியாக நடந்து சென்றார்.

அப்போது, அப்பகுதியின் உள்ள ஒரு வீட்டின், 4வது மாடியில் இருந்து, சிவா, 24, என்ற போதை வாலிபர், தடுமாறி, தன்யஸ்ரீ மீது விழுந்தார். இதில், சிறுமி படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்றார்.

அப்பல்லோ மருத்துவ மனையில், சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில், தன்யஸ்ரீயின் மூளை பகுதியில், பலத்த காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அப்பல்லோ மருத்துவக் குழுவினர், சிறப்பு அறுவை சிகிச்சை செய்து, சிறுமியை, அபாய கட்டத்தில் இருந்து மீட்டனர். சில தினங்களுக்கு முன், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு, தன்யஸ்ரீ மாற்றப்பட்டார்.தன்யஸ்ரீயின் உடல்நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில், 'மூளை அழுத்தத்தை கண்காணிக்கும் சிறப்பு கருவி வழியாக, பி.ஐ.சி.யு., நியூரோ சிறப்பு சிகிச்சை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. படிப்படியான சிகிச்சைகளின் வழியாக, குழந்தை நலம் பெற்றாள்' என்றனர்.

தன்யஸ்ரீயின் தந்தை, ஸ்ரீதர் கூறியதாவது: என் மகளின் நிலை குறித்து அறிந்த நண்பர்கள், சமூக வலைதளங்களின் வழியாக உதவி கோரினர். பலர், தேவையான பண உதவியை செய்தனர். தமிழக அரசும், சிகிச்சைக்கு பண உதவியை தருவதாக தெரிவித்தது.பலரின் பிரார்த்தனை களும், வீண் போகவில்லை. என் மகள், நலம் பெற்றாள். அவளுக்காக பிரார்த்தனை செய்தோருக்கும், பண உதவி அளித்தோருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (12)

 • Rajasekaran CJ - bangalore,இந்தியா

  டாக்டர்களுக்கு நன்றி .கடவுளுக்கும் நன்றி

 • Ramkumar Valmikanathan - Chandler,இந்தியா

  சகோ ஸ்ரீதரின் தொடர்பு எண்ணை பகிரலாமே ....

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  குழந்தைக்குத் தீவிரமாக சிறப்புச் சிகிச்சை அளித்து உயிரைக்காத்த டாக்டர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். முன்பு எப்படி அந்தக்குழந்தை ஓடியாடி விளையாடியதோ அதுபோன்று அந்தக்குழந்தையை மாற்றித்தரும்படி டாக்டர் பெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

 • rizwana -

  Live long baby

 • B.Vigneshkumar - Jeddah,சவுதி அரேபியா

  Innum niraya tasmac vum please minimum 200 per village

 • Sivakumar - TRICHY,இந்தியா

  இறைவனுக்கு மிக்க நன்றி அந்த சிறுமி நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடன் இந்த பாதிப்பில் இருந்து முழுவதுமாக மீண்டு வர எல்லாம் வல்ல கடவுள் ஷக்தி கொடுக்க வேண்டி கொள்வோம். சிவகுமார் திருச்சி

 • ushadevan -

  குழந்தை நலம் பெற வாழ்த்துக்கள். மதுபோதையால் வரும் விபத்துக்களை குடித்தவரோ குடிக்கவைத்தவரோ (அரசு ) செலவை ஏற்க வேண்டும்.

 • hasan - Chennai,இந்தியா

  அரசின் சாராயக்கடைகளை ஒழித்தால் இதுமாதிரி ந்டக்காது. இது நடப்பதற்கு அரசுதான் காரணம்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அந்த போதை .... என்னதான் செய்தார்கள் ஒருவேளை அரசு அவருக்கு விருது வழங்கினாலும் வழங்கும்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  டாஸ்மாக் துறையிலிருந்து சிகிச்சைக்கு ஆன முழுப்பணமும் கொடுக்கவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement