Advertisement

நெப்போலியனுக்கும் வலிப்பு நோய் இருந்தது; ஸ்டான்லியில் விழிப்புணர்வு பேரணி

ராயபுரம் : உலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு, செவிலியர், மருத்துவர்களின் விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும், உலக வலிப்பு நோய் தினம், பிப்., 12ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில், விழிப்புணர்வு பேரணி, நேற்று நடந்தது. ஸ்டான்லி மருத்துவமனையில் துவங்கி, மின்ட் பேருந்து நிலையம் வரை நடந்த பேரணியில், செவிலியர், மருத்துவர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாதந்தோறும்
பேரணியை துவங்கி வைத்து, ஸ்டான்லி மருத்துவ முதல்வர், பொன்னம்பல நமச்சிவாயம் பேசியதாவது:


சென்னையை சேர்ந்த, 9 வயது சிறுவன், நரேந்திரகுமார் மற்றும், 35 வயது பெண், காவேரி ஆகியோர், மாதந்தோறும், ஐந்து முறை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டனர். அறுவை சிகிச்சை மூலம், ஸ்டான்லி மருத்துவர்கள் குணப்படுத்தினர். இப்பேரணியில் அவர்களும் பங்கேற்றனர்.வலிப்பு நோய், யாருக்கும் வரலாம்; எந்த வயதிலும் வரலாம். பயப்பட வேண்டாம்; பதற்றப்பட வேண்டாம். ஜூலியஸ் சீசர், நெப்போலியன், சாக்ரடீஸ் என, பல பிரபலங்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


அறுவை சிகிச்சை

இந்நோயால் பாதிக்கப்பட்டோர், சரியான நேரத்தில் பரிசோதனை மூலம் கண்டறிந்து, முறையான சிகிச்சை எடுத்து கொண்டால், இயல்பு வாழ்க்கை வாழ முடியும்.சில வலிப்பு நோய்களுக்கு, ஓரிரு ஆண்டுகளும்; சிலவற்றிற்கு, வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ள வேண்டியிருக்கும். சில வலிப்பு நோய்களை, அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement