Advertisement

இந்தியா - ஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

மஸ்கட் : ராணுவம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இந்தியா - ஓமன் இடையே, எட்டு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.
பிரதமர், நரேந்திர மோடி, வளைகுடா நாடுகளான, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு, அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பயணத்தின் கடைசி கட்டமாக, தற்போது, ஓமன் சென்றுள்ள மோடி, அந்நாட்டின் சுல்தான், கபூஸ் பின் சயத் அல் சயத்துடன், நேற்று பேச்சு நடத்தினார்.
இதன் பலனாக, ராணுவம், சுகாதாரம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில், எட்டு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின.இது குறித்து, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ரவீஸ் குமார், 'டுவிட்டரில்' கூறியதாவது:ஓமன் நாட்டுடனான நட்புறவை, மேலும் செம்மைப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான குழு நடத்திய பேச்சு, சுமுகமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது.

இரு தரப்பினரும், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, ராணுவம்,பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, பிராந்திய விவகாரங்கள் குறித்து, நீண்ட பேச்சு நடத்தினர். இதையடுத்து, எட்டு ஒப்பந்தங்கள்கையெழுத்தாகின. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

ஓமன் சுல்தான் கபூஸ், ''கடினமாகவும், நேர்மையாகவும் உழைக்கும் இந்திய தொழிலாளர்களால், ஓமன் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது,'' என்றார்.

ஓமனில், இரு நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ள, பிரதமர் மோடி, அந்நாட்டின் மூத்த அமைச்சர்களுடன் பேச்சு நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஓமன் தலைநகர், மஸ்கட்டில், சுல்தான் கபூஸ் விளையாட்டுஅரங்கில், இந்திய வம்சாவளியினர் மத்தியில், பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றினார். அப்போது, ''இந்தியா - ஓமன் இடையிலான உறவு, எப்போதும் வலுவானதாக உள்ளது. இந்த உறவை மேலும் வலுப்படுத்த, ஓமனில் உள்ள இந்திய வம்சாவளியினர் பெரிதும் உதவி வருகின்றனர்,'' என்றார்.

மஸ்கட்டில், 125 ஆண்டுகள் பழமையான, ஆதி மோதீஸ்வர் மஹாதேவ் சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

தொழில் துறையினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஓமனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, பிரதமர் மோடி, மஸ்கட்டில், நேற்று நடந்த, இந்தியா - ஓமன் தொழில் துறை மாநாட்டின் போது, வளைகுடா மற்றும் மேற்காசிய நாடுகளின் தொழில் துறையினரை சந்தித்து பேசினார். அப்போது, ''தொழில் துவங்க சரியான நாடு, இந்தியா,'' என்றார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  @கசிமாணி தாத்தா..ரிடயராயிட்டு சிங்கப்பூர் ல சும்மா இருக்கற நேரத்தில் கருத்து என்ற பேரில் என்னமோ போடறது ஓ கே. ஆனால் வயசுக்கேத்த மாதிரி மரியாதையுடன் எழுதினா என்ன? வாத்தி ன்னா என்ன எழவு அர்த்தம்? நேரில் பார்த்திராத ஒருவரை ஏக வசனததிலும் மூளே கிடையாது என்றும் எழுதும் நாகரிகம் எங்கே படித்தீர்கள்? வயசான காலத்தில் திருந்துவது கஷ்டம் தான் ஆனால் ட்ரை பண்ணுங்களேன். IIT, IIM வாசல்களாவது ரெண்டு நிமிஷம் நின்று பாருங்கள்.. படித்தவர்கள், நாகரிகமானவர்களை பார்க்கவாவது செய்யுங்கள்.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஒவாய்சி ஒண்ணுமே சொல்லலியே இதை பற்றி.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  மூர்க்கங்கள் நாட்டுடன் ஒப்பந்தம் போட்டுட்டாரே, ஐவரும் மூர்க்கனாக மாறிடுவாரா என்று அகழி சாவா, ஏறாது சாவா, காசிமானி எல்லாம் எழுதப் போகிறார்கள், பாவம். அதெல்லாம் வெறும் ஒப்பந்தம் செல்பிக்காக போஸ் குடுத்தது. இங்க இருக்கற இலங்கை கூட தமிழர்களுக்காக ஒரு ஒப்பந்தம் போடா முடியல, உள்நாட்டிலேயே ரெண்டு மாநிலமாக கர்நாடகாவுக்கு தமிழ்நாடும் ஒரு நதிக்காக அடிச்சுக்குது, அதுக்கு ஏதாவது ஒப்பந்தம் போட முடியல, ஓமான் ல போட்டுட்டாலும்.......

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   வாத்தி உனக்கு புத்தி மட்டும் இல்லை என்று நினைத்தேன்... ஆனால் மூளையே இல்லை என்று நிரூபிக்கிறாய்...

 • Mohammed Malik - Madurai,இந்தியா

  அப்படியே தொலைக்காட்சி பெட்டிக்கு உரிய வரியையும் ரத்து செய்ய முயற்சி செய்யலாமே. இதன் மூலம் இங்கு வாழும் இந்தியர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

  • pradeesh parthasarathy - Mylapore,இந்தியா

   வேண்டாமே ... உள்நாட்டில் உற்பத்தி பண்ணுகிற எந்த பொருளுக்கும் வரிவிலக்கு வேண்டாம் ....

 • Divahar - tirunelveli,இந்தியா

  அங்கே கோயில் கட்ட இடம் கொடுத்திருக்கிறார்கள்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  மீண்டும் தாமே பிரதமராக வேண்டும் என்று சிவனிடம் வேண்டி கொண்டு இருப்பார்

 • Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா

  எந்த ஒப்பந்தமும் தேவையில்லை தமிழக மக்கள் நினைப்பதை போல சுற்றுலா தலங்களை சுற்றி மட்டும் பார்க்கவும் அதைத்தான் சிலர் விரும்புகின்றனர்

 • Naina -

  all becoz of kimji Ramdas he is from Gujarat

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வர்த்தகத்தை ஊக்குவிக்கும் முயற்சி பாராட்டத் தகுந்தது...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement