Advertisement

சட்டசபையில் ஜெ., உருவப்படம் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

சென்னை : முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் உருவப்படம், தமிழக சட்டசபையில், நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, தி.மு.க., - காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
ஜெ., மறைவுக்கு பின், முதல்வராக பொறுப்பேற்ற பழனிசாமி,பிரதமர் மோடியைசந்திக்க டில்லி சென்ற போது, சட்டசபையில், ஜெ., உருவப்படத்தை திறந்து வைக்க கோரிக்கை விடுத்தார்.

பச்சை நிற உடைஆனால், அரசியல் சூழல் காரணமாக, இந்த கோரிக்கையை, மோடி ஏற்கவில்லை. இந்நிலையில், ஜெ., உருவப்படத்தை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள, சட்டசபையில் திறந்து வைக்க, தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது.

அதன்படி, சட்டசபையில் நேற்று காலை, 9:30 மணிக்கு விழா துவங்கியது. இதற்காக, சபாநாயகர் இருக்கை அகற்றப்பட்டு, அங்கு, நிகழ்ச்சி மேடை அமைக்கப்பட்டிருந்தது.தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்,பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர், ஜெயராமன் ஆகியோர் பேசினர்.

பின், ஜெ., உருவப்படத்தை, சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். சட்டசபையில், சபாநாயகர் இருக்கைக்கு வலது புறத்தில், உருவப்படம் மாட்டப்பட்டு உள்ளது. பச்சை நிற உடையில் காணப்படும், ஜெ., உருவப்படத்தின் கீழ், 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

ஜெ., உருவப்படத்தை வரைந்து தந்த, ஓவியக் கல்லுாரி பேராசிரியர், மதியழகனுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன்,நிதித் துறை செயலர், சண்முகம் உள்ளிட்ட மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; தமிழக, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மலர் அலங்காரம்மேலும், அ.தி.மு.க., அவைத் தலைவர், மதுசூதனன், முன்னாள் சபாநாயகர், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட ஆளுங்கட்சி பிரமுகர்கள், ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள்; முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் வாரிய தலைவர்களும் பங்கேற்றனர்.

ஜெ., உருவப்படம் திறக்க, எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, அரசு செவி சாய்க்காததால், படத்திறப்பு விழாவை, தி.மு.க., - காங்., புறக்கணித்தன.

சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்கள், தினகரன், தமிமுன் அன்சாரி ஆகியோர் பங்கேற்கவில்லை; கருணாஸ் பங்கேற்றார். ஜெ., உருவப்பட திறப்பையொட்டி, சட்டசபையில், கண்ணை பறிக்கும் விதத்தில், பல்வேறு வண்ணங்களில், மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தலைமை செயலகம் மற்றும் கடற்கரை சாலையில், ஏராளமான தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

'பிரதமர் ஏன் வரவில்லை'தமிழக சட்டசபையில், ஜெ., உருவப்படம் நேற்று திறக்கப்பட்டட நிலையில், அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர், உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.

குட்காவை சபையில் காண்பிக்கும் போது, சபை மீறல் எனக் கூறி, எங்கள் மீது, சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார். தற்போது அவரே, ஜெ., உருவப்படத்தை திறந்து, சபையின் மரபை மீறியுள்ளார். இது தொடர்பாக, சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில், ஜெ., படம் வைப்பது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அவசர அவசரமாக, சட்டசபையில், ஜெ., உருவப்படம் திறக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.ஜெ., உருவப்படத் திறப்பு விவகாரத்தில், நாங்கள் அரசியல் செய்யவில்லை; அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விழாவிற்கு, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வராதது ஏன் என்பதற்கு, அமைச்சர் ஜெயகுமார் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (41)

 • Manian - Chennai,இந்தியா

  ஒரு கோடி அயோக்கியர்கள் இருந்தால்தான் ஒரு நல்ல மனிதனைப் பற்றி பேச முடியும்.

 • Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா

  அக்கிரமக்காரர்கள் கடைசி புகலிடம் அரசியல் ' என்றார் பெர்னார்ட் ஷா தமிழகத்தில் காமராசருக்குப்பின் வந்த தலைவர்களில் அண்ணாவை விட்டு எல்லா திராவிட அரசியல் வாதிகள் ' ஊழல் பேர்வழிகள் ' கருணாநிதி 'இந்திராவிடம் சரண் அடைந்திராவிட்டால் இன்று வரை அவர் 'புகழிலோ அல்லது வேறு சிறையிலோ ' விஞ்ஞான முறை திருட்டை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தி ' அதில் முனைவர் பட்டம் பெற்றவர் சுடாலின் தந்தை வம்சத்தினர் .ஜெயா -வும் அதில் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல. 'ஊழல் என்பது வெள்ளை சட்டை போட்டிருக்கும் அரசியல் வாதிகளின் அடையாளம் ' திராவிட அரசியல் வாதிகள் அனைவரது ஆஸ்தி ,அசையும் அசையாத சொத்துக்கள் ஊழலால் வந்ததே ' இதில் ஜெயாவை நாம் பாராட்டுவது 'மோதியா அல்லது இந்த லேடியா என்று தேர்தல் சமயத்தில் அதுவும் மோதியின் பலமான அலையை கேர் பண்ணாமல் பேசியதுமட்டும் அல்ல '37 சீட்டுகள் வென்றும் காட்டினார் . அது மட்டும் அல்ல ' சாதாரண கிராமப்புற பிள்ளைகள் எத்தனை பேர் அவரால் மருத்துவ எஞ்சினீரிங் மற்றும் பட்டதாரியாகி இருக்கின்றனர் . இலவச சைக்கிள் , லாப் டாப் இலவச பஸ் போன்றவை அதில் அடங்கும் . அவர் மட்டும் இருந்திருந்தால் போன இந்த ' நீட் தேர்வை கட்டாயம் தமிழக குழந்தைகளுக்கு விலக்கு வாங்கி இருப்பார் .இன்றைய தமிழக அரசியல் ஒரு கேலிக்குறியாக்கி ,கண்டவர்கள் கண்டபடி பேசும் தைர்யம் அவர் இல்லாததால் ,இந்த கமல் விஜய் , ரஜனி போன்றவர்கள் இருக்கும் இடம் தேடி கண்டு பிடிக்க வேண்டும் [ முக்கியமாக அரசியலில் ] புரோஹித் கவர்னர் இப்படி துள்ளுவாரா ஜெயா இருந்து இருந்தால் ,மோடிதான் தமிழகத்தை கேவலப்படுத்த முடியுமா / சித்த ராமையா தமிழகத்தை பற்றி பேச விட்டிருப்பாரா ? சுடாலின் 'எண்ணையில் போட்ட கடுகு போல் துள்ளுவாரா ' இந்த ஆளுமை திறமை பேச்சுத்திறமை [ தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மற்றும் ஆங்கிலம் ] , கணீர் குரல் எல்லாவற்றிக்கும் அவ்ருக்கு போட்டோ வைப்பது தவறு இல்லை . அவர் செய்த நற்பணிகள் ' அவரது ஊழலை சிறு கோடு ஆக்கிவிட்டது ' அவர் ஒரு சிறந்த தலைவர் ,சுடாலின் அவர்களே கூறியதுபோல் ' அவரை எதிர்ப்பவர்கள் ஒரு சிங்கத்தை எதிர்ப்பதுபோல் எண்ணுவர் ' [அவரது ஊழல் ஒரு குறையே ,தப்பு செய்யாத மனிதர் யார் ]

 • kandhan. - chennai,இந்தியா

  தமிழகத்தில் பகுத்தறிவாதிகளின் எண்ணிக்கையை பார்த்தால் குறைந்து கொண்டே வருகிறது காரணம் என்ன என்றால் மக்களின் மூடநம்பிக்கையை வைத்து இந்த ஆட்சி நடக்கிறது அதிலும் பி ஜே பி யின் துணையோடுதான் நடக்கிறது என்பதை சிறு குழந்தைக்கு கூட தெரியும் உண்மை புரியும் காரணம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திடம் ஆட்சி சிக்கியுள்ளதால் இந்த நிலை ,ஜெயா அம்மையாரின் பட திறப்பை வைத்தே சின்ன அம்மாவை தியாகி போல மாற்றி வரும் தேர்தலில் பணத்தோடு வோட்டு கேட்க வருவார்கள் அப்போதும் இந்த மானம் கெட்ட மக்கள் இவர்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு வோட்டு போடுவார்கள் இதுதான் அம்மாவின் சாதனை மக்களே சிந்தித்து இந்த கயவர்களை துரத்துங்கள் இல்லையேல் நம் நாடு ???????சிந்தித்தால் உண்மை புரியும் கந்தன் சென்னை

 • Urimai Kural - CHENNAI,இந்தியா

  உழல்வாதிகளுக்கு ஊக்கம் அளிப்பது போன்று உள்ளது

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஓம் டாஸ்மாக் நாடு நாசனமாய நமஹ என்று ஓங்காரம் கேட்கின்றது அது தான் இந்த படத்திற்கு பூஜை செய்யும் மந்திரம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  ஜெயா படத்தைப் பார்ப்பதே தண்டனையா? இது என்ன புதுசா இருக்கு? ஊழலுக்கு எதிரான பிஜேபி இந்த நிரூபிக்கப்பட்ட ஊழல் பேர்வழியின் படத்தை வைப்பதில் தஹபிபே இல்லை என்று எல்லா டி வி யிலும் நேற்று வாழ வாழ கொழ கொழா என்று சல்லியடித்தார்கள் பார்க்க படா ஜோராக இருந்தது. ஒரு டி வி யில் நிருபர் கேட்டார் : ஜெயா குற்றவாளியா இல்லையா? அதற்க்கு பிஜேபி ஆசாமி சொல்கிறார் : அதல்ல பிரச்னை, ஜெயா இறந்துவிட்டார் , அவர் ஊழல் செய்திருக்கலாம், அது வேறு படம் வைப்பது வேறு"..அப்படியே புல்லரித்துவிட்டது. பங்கு கண்டெயினர்ல வந்துடுச்சில்லா அப்புறம் எப்படி எதிர்க்கறது?

 • Karun Muruga - banglore,இந்தியா

  சட்ட சபைக்குள் கரை படியாத கை லஞ்சம் வாங்காத கை குடும்ப அரசியல் இல்லாத.. பொதுநலம் மட்டுமே உள்ளவர் யார் அவர் ஜெயா போட்டோவை கழட்டட்டும் .. சவாலுக்கு யார் தயார்

 • Divahar - tirunelveli,இந்தியா

  குமாரசாமி படத்தையும் எங்காவது வைக்க வேண்டும்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஜெயில்ல ?

 • Muthu Ramalingam - THOOTHUKKUDI ,இந்தியா

  உயிருடன் இருந்தால் பரப்பன அக்ரஹார சிறையில்?? இறந்தால் தமிழக சட்டமன்ற அவையில் ஆள் உயர படம் டேய் என்னங்டா உங்கள் அரசியல்

 • A.Gomathinayagam - chennai,இந்தியா

  ஊழல் வாதிகள் அவர்கள் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்

 • கைப்புள்ள - nj,இந்தியா

  மம்மிஜி இருந்தால் சோறு திங்க கூட பயப்படும் ஜந்துக்கள் எல்லாம் இன்றைக்கு தலை எடுத்து ஆடுவதையும் பல்லு போட்டு பேசுவதையும் பார்க்கும் போது, பேசாமல் மம்மிஜி மறக்கடிக்கப்படுவதே சிறந்தது என்பது எனது கருத்து. ஆனால் கண்டிப்பாக மஞ்சளை ஒரு டயனோசர் காலம் ஆனாலும் மக்கள் மறக்கவே கூடாது. எப்படி இன்றும் கூட டயனோசரை பற்றி பேசுகிறோமோ அதே போல மஞ்சளை பற்றியும் பல ஆயிரம் வருடங்கள் மண்டைக்குள் ஓடி கொண்டே இருக்க வேண்டும்.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  என்னை பொறுத்தவரை மம்மிஜியை இத்தோடு விட்டு விட வேண்டுமென்றே விரும்புகிறேன். மம்மிஜி தனது வாழ்க்கை முழுதும் நயவஞ்சக நரிகள் சூழ்ந்த காலத்திலேயே சிங்கம் போல வாழ்ந்து சிங்கமாகவே மறைந்து விட்டார். ஒரு ஆம்பளையால் கூட பல நூறு சகுனிகள் சூழ்ந்து நிக்க அனைத்தையும் சமாளித்து வெற்றிகரமாக வாழ்வது முடியாது. அப்படிப்பட்ட மம்மிஜியை மறைந்த பின் விட்டுவிட்டு மறந்து விட வேண்டும் என்றே நான் ஆசை படுகிறேன்.

  • R Sanjay - Chennai,இந்தியா

   எதுக்குங்க கைப்புள்ள மறக்கணும். ஆட்சியாளர்கள் நாட்டை ஆண்டவர்கள் வரிசையில் எப்போதும் ஜெ., விற்கு ஒரு இடம் இருக்கும். அவ்வளவே காலம் செல்ல செல்ல ஆண்டவர்களை பற்றி பேசுவது கூட குறைந்துவிடும். எல்லாவற்றையும் மாற்றும் சக்தி காலத்திற்கு இருக்கிறது.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போல ..கோயிலை பிடிப்பவன் வள்ளலை போல வாழ்கிறான்,.,,பலநாள் திருடன் ஒரு நாள் சிறையில் ...பாவம் செய்தவன் பரம்பரை வழியில் பார்க்கின்றேன்... சதிகார கூட்டம் ஒன்று சபை எற கண்டேன்...

 • BJRaman - Chennai,இந்தியா

  எது எப்படியோ, அ.தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியின் படம் நீக்கப்பட்டது போல, ஒருசமயம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் படமும் நீக்கப்படலாம் நிரந்தரமாக , அ.தி.மு.க. ஆட்சி வர வாய்ப்பு இல்லை.அதனால் படமும் வர வாய்ப்பு இல்லை

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  மக்களுக்கு புத்தி பேதலித்து விட்டது...இப்படித்தான் காங்கிரஸ் , கிரிக்கட் வீரர் சச்சினுக்கு பரத் ரத்னா விருது கொடுத்து கவுரவித்தது...அது போல் தமிழர்கள் ஒரு குற்றவாளியின் படத்தை சட்டசபையில் திறந்து , கொள்ளை அடிப்பத்தை அதாவது ஒழுக்கம் இல்லாமல் இருப்பதை போற்றும் சமூகம் ஆகிவிட்டது.. அதிமுக கட்சியே அரசு பணத்தை கொள்ளை அடித்து கட்சி காரர்களுக்கு கொடுக்கும் கட்சி ஆகிவிட்டது... இல்லை என்றால் இப்போ இருக்கிற நிதி நெருக்கடியில் 200 கோடியில் இருசக்கர வண்டி கொடுப்பார்களா..?. நாட்டிற்கு எது முக்கியம் இன்றி இல்லாமல் எதில் அதிகம் பணம் பண்ணலாம் என்று அதிமுக செயல் படுகிறது..இவர்கள் இப்படித்தான் நடப்பார்கள்..

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஜெயிலுக்குப் போன குற்றவாளிக்கு நன்னடத்தை சர்டிபிகேட் கொடுத்தாச்சு அடுத்து சசி தலைமையை ஏற்கலாமே..

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  சட்டசபையில் உறுப்பினராகவே இருந்திராதவர்களின் படங்கள் இருக்கும்போது ஆறுமுறை உறுப்பினராக இருந்தவரின் படமும் இருப்பது ஒன்றும் மோசமில்லை. முக்கியமாக சுதந்திரத்தை கருப்பு நாளாகக் கொண்டாடியவர் தமிழை காட்டுமிராண்டி பாஷை என சொன்னவர் பாவாடை நாடா அசிங்கத்துக்கு விளக்கவுரை சப்பைக்கட்டு கட்டியவர் ஆகியோர் 1100 %சுத்த சுயம்பிரகாச கிரிமினல்களை வெளியேற்றிவிட்டால் சட்டசபையே காற்றாடலாம்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   கோர்டுகளுக்கும் பூட்டு போட்டுடலாம்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  உத்தமர்கள் உத்தமர்களுக்கே வாக்களித்திருப்பார்கள். வழக்குக்கள் இருந்தபோதும் ஐந்துமுறை உத்தமர் என நினைத்தே தானே தேர்ந்தெடுத்தார்கள்? இது நாம் விருப்பி ஏற்ற தண்டனையை அனுபவிப்போம். ( ஒரே மகிழ்ச்சி .இனி சட்டசபையில் சுடாலின் ஜெயா படத்தைப் பார்த்தவாறே தான் உட்காரமுடியும். பேசவும் முடியும் .நல்ல தண்டனை)

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   அல்பை.... அல்பை ......

  • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

   ஒரே மகிழ்ச்சி .இனி சட்டசபையில் சுடாலின் ஜெயா படத்தைப் பார்த்தவாறே தான் உட்காரமுடியும். பேசவும் முடியும் .நல்ல தண்டனை

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  Ops,EPs சிறைசாலையில் இரு ப் பவர் களையும் கௌரவிப்பார்கள் போலும்.

 • kailawsh - Pollachi,இந்தியா

  " எனது படத்தைத் திறக்க இதோ இந்த கொதிக்கும் எண்ணையில் முக்கி எடுத்த முகம்தான் கிடைத்ததா வெட்கம் வேதனை. வேதனை மேல் வேதனை "

 • Karunan - udumalpet,இந்தியா

  நீதிமன்றம் நீதிமன்றம் என்று பிடித்து தொங்கி கொண்டிருக்கிறீர்களே எந்த நீதிமன்றம் காசு வருகின்ற கேசுகளா பாத்து கேசுகளை கேட்கின்ற நீதிபதிகள் ...ஊழலின் உறைவிடமாக போய்விட்ட நீதிபதிகள் ...கசாப்புக்கடைகளாய்ப் போய்விட்ட நீதிமன்றங்கள் ..காசு வாங்கி தீர்ப்புத்தருகின்ற தீர்ப்பு ..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திராவிடம் என்று வந்தபின் யோக்கியமாக இருப்பது அபூர்வம்... ஜெ மட்டும் அதற்க்கு விதி விலக்கு அல்ல. நீதிக்கட்சியில் ஆரம்பித்த பிறழ்... கேவலமாக தொடருகிறது... தனி மனித ஒழுக்கம், நேர்மை, ஜனநாயக சிந்தனை போன்றவை திராவிடத்தில் இடம் பெறுவது கிடையாது... உணர்வுகளை தூண்டியே காசடித்து காலத்தை ஓட்டும் இவர்கள் என்று திருந்துவார்களோ அன்றுதான் தமிழனுக்கு விடிவு காலம்...

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

   காசு... தமிழகம் ஒன்னியும் இருண்டு கிடைக்கல... பாஜக ஆளும் மாநிலங்கள் எல்லாத்தையும் விட நல்லாத்தான் இருக்கு ...உம்மை போன்றோரின் இந்த கேவலமான டிராமாக்களை நாங்க சாம்பார் காலத்திலேயே நிறைய பார்த்தாச்சு..

  • sankar - trichy,இந்தியா

   தமிழகம் Nalla இருக்குன்னு நீ சொல்லற .

  • sankar - trichy,இந்தியா

   நீ சாம்பாரை பார்த்தாயா சட்னியை பார்த்தாயா என்பது எனக்கு தெரியாது . தமிழ் நாடு நல்ல இருக்குன்னா பழனி பொன்னேர் ஓகே தானே ஏன் ஆட்சி கலைக்கும் சொல்லு

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "டிராமாக்களை நாங்க சாம்பார் காலத்திலேயே நிறைய பார்த்தாச்சு" - தெரிந்ததுதானே... டிராமா, சினிமாதானே உலகம்... வெளங்குமா?

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   "பழனி பொன்னேர் ஓகே தானே ஏன் ஆட்சி கலைக்கும் சொல்லு" - ஒங்க தொளபதியை கவிழ்க்கச் சொல்லேன்? அவரை டெப்பாசிட் வாங்க முடியாமல் கவிழ்ந்துவிட்டார்... இருந்தாலும் தெனாவெட்டு மட்டும் போகவில்லை...

 • கைப்புள்ள - nj,இந்தியா

  அட என்னப்பா அதையும் கொண்டு போயி நேரா சுடலையின் இருக்கைக்கு நேரா வெச்சு இருக்கீங்க. இனி சுடலை கண்ண மூடியே ஒக்காந்து இருப்பாரு.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  ஜெயா ஒரு குற்றவாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரை தான் முதல்வராக நெடுங்காலம் வைத்திருந்தோம். அவர் பல திட்டங்களை தமிழகத்திற்காக இயற்றினார் என்பதில் சந்தேகம் இல்லை. நாளை திமுக ஆட்சி வரும்போது, கலைஞர் படத்தை நிச்சயம் திமுகவினர் சட்டசபையில் வைப்பார்கள். அப்படி இருக்கும்போது ஜெயாவின் படத்தை வைப்பதில் தவறு என்ன? ஒருத்தர் தமிழகத்தில் ஊழலை தோற்றுவித்தவர். இன்னொருத்தர் ஊழலை பெருக்கியவர். இருவரையும் தலையில் தூக்கி கொண்டு ஆடினோம். அப்படி இருக்கும்பட்சத்தில் ஒருத்தருக்கு சுண்ணாம்பு இன்னொருத்தருக்கு வெண்ணையா?

  • sankar - trichy,இந்தியா

   நேர்மையானந்தவன் படத்தை சட்ட சபையில் வைக்கணும்னா எழுபதுக்கு முன்னாடி தான் பொய் தேடணும் . ஒரு படம் கூட வைக்க முடியாது .

  • sankar - trichy,இந்தியா

   சட்ட சபையும் போலீஸ் ஸ்டேசனும் ஒன்னு ரெண்டிலும் திருடர்கள் படம் மட்டுமே இருக்கும்

  • sankar - trichy,இந்தியா

   ஜெயா இருந்திருந்தால் இந்த தீர்ப்பு வந்திருக்காது . ஜெய ஒரு இரும்பு பெண்மணி அது துரு பிடித்தது கரையான் சசிகலா குடும்பத்தால்

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ஜெயாவிற்காகா தீர்ப்பை ஒத்தி வைக்க வில்லை.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  தமிழகத்தை பிடித்த பீடைகள் விரைவில் வெளியேற ஆண்டவனை வேண்டுவோம்.

 • ஆப்பு -

  ம்ஸ்தான் வரலே..சரி...புரோஹிதர் கூட வரலியே? அடுத்த ஆப்புக்கு ...மன்னிக்கவும்... ஆய்வுக்குப் போய்ட்டாரா?

 • ஆப்ஸ் -

  தொண்டர்களுக்கு நல்லபடியா ஓசி பிரியாணி போட்டாங்களா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement