Advertisement

பெரியார் பல்கலையிலும்... பத்திக்கிச்சு! லஞ்சத்தில் திளைப்பது அம்பலம்

கோவை, பாரதியார் பல்கலையை தொடர்ந்து, சேலம், பெரியார் பல்கலையையும், லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்களின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். விரைவில், பலர் மீது நடவடிக்கை பாயும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் மீதும் புகார் எழுந்துள்ளதால், இப்பல்கலையிலும் விசாரணை துவங்கலாம் என, தெரிகிறது.

சேலம் பெரியார் பல்கலை, துவங்கப்பட்ட, 2000ல் இருந்தே, சர்ச்சைகளில் சிக்குகிறது. லஞ்ச ஒழிப்பு துறையினரின் வழக்குகள், போலி சான்றிதழ், ஊழல் என, சர்ச்சை பல்கலையாக உருவெடுத்துள்ளது.


இப்பல்கலை மீது நடவடிக்கை எடுக்க, உயர் கல்வித் துறையும், கவர்னர் அலுவலகமும், அனுமதி வழங்குவதில் இழுத்தடித்து வந்ததால், உறுதியான விசாரணை எதுவும் நடக்கவில்லை.தற்போது, கவர்னரின் வெளிப்படையான நடவடிக்கைகளும், முதல்வரின் மாவட்டத்தில் உள்ள பல்கலை என்பதாலும், லஞ்ச ஒழிப்பு போலீசாரை தீவிர நடவடிக்கை எடுக்க துாண்டி உள்ளது. இதையடுத்து, பழைய புகார்கள் முதற்கொண்டு, அனைத்தையும் துாசி தட்டி, விசாரணையை துவக்கி உள்ளனர்.


பெரியார் பல்கலையில், 37 ஆசிரியரல்லாத பணியாளர்கள் முதல், பல ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நியமனம், முறைகேடாக நடந்துள்ளதாக, தணிக்கையில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதில், பலரும் போலி சான்றிதழ்கள் கொடுத்தும், உரிய அடிப்படை கல்வித் தகுதி இல்லாமலும், பணியில் சேர்ந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.


இந்த பிரச்னையால் தான், இரு மாதங்களுக்கு முன், பல்கலை ஆசிரியர்களுக்கு வழங்க இருந்த பதவி உயர்வை நிறுத்தி வைக்க, உயர் கல்வித் துறை செயலர் உத்தரவிட்டார். இதை அடிப்படையாக வைத்து, போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்தவர்களின் விபரங்களை சேகரிப்பதோடு, அது குறித்த விசாரணையிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் களமிறங்கி உள்ளனர்.


பல்கலையில், பல ஆண்டுகளுக்கு முன் வரை, மரப்பொருட்கள், தமிழக அரசின், 'டான்சி' நிறுவனத்திலும், கணினி உள்ளிட்ட பொருட்கள், 'எல்காட்'டிலும் கொள்முதல் செய்யப்பட்டன.
இந்த நடைமுறை கைவிடப்பட்டு, சில ஆண்டுகளாக, அதிக விலை கொடுத்து, குறிப்பிட்ட தனியாரிடம், பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இதனால், பல்கலை நிதி, பல கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டு உள்ளது.



அதேபோல, பெரியார் பல்கலை வளாகத்தில் நடந்த, அனைத்து கட்டுமான பணிகளையும், ஒரு தனியார் கல்லுாரி நிர்வாகமே, அதிக மதிப்பீட்டில் செய்து வந்துள்ளது. இந்த விவகாரமும், தற்போது சூடு பிடித்துள்ளது.

போலி, 'பில்' கொடுத்து, பல லட்சம் ரூபாய் வரை, பல்கலை பணத்தை மோசடி செய்த, இயற்பியல் துறை பேராசிரியர், கிருஷ்ணகுமார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார், பல ஆண்டுகளுக்கு முன், பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

முன்ஜாமின் பெற்றுள்ள இவர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, உயர் கல்வித் துறைக்கு, போலீஸ் சிபாரிசு செய்தது. ஆனால், நடவடிக்கைக்கு பதில், உயரிய பதவியான, 'டீன்' பொறுப்பு, அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.


லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கிய, பெரியார் பல்கலை பேராசிரியர், ஜெயகுமார், பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிலையில், கிருஷ்ணகுமார் மீது மட்டும் நடவடிக்கை எடுக்காமல்,கரிசனம் காட்டுவது குறித்தும், விசாரணை நடக்கிறது.

விரயம்




பெரியார் பல்கலையில்,ஒவ்வொரு பருவத் தேர்வுக்கும், 10 லட்சம் விடைத்தாள் கொத்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மொத்தம், 40 தாள்கள் அடங்கிய ஒரு கொத்து, 10 ரூபாய் விலை பெறாத நிலையில், சில ஆண்டுகளாக, 21க்கு ரூபாய் என, கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனமே இதைத் தொடர்ந்து, 'சப்ளை' செய்கிறது. பல்கலையில், புத்தகங்கள் அச்சிடுவது; படிப்பு மையங்களுக்கு அனுமதி வழங்கியது; விதிமுறையை மீறி ஏஜன்ஸி வழங்கியது என, தொலைநிலை கல்வி குறித்தும், ஏராளமான புகார்கள் பெறப்பட்டு உள்ளன.
இத்தகைய முறைகேடுகளை விசாரிக்க, கவர்னர் மற்றும் முதல்வர் தரப்பில், 'கிரீன் சிக்னல்' தரப்பட்டு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளதால், விதிகளை மீறி செயல்பட்ட பல பேராசிரியர்களும், உயர் பொறுப்பில் இருந்தவரும் கலக்கத்தில் உள்ளனர்.


தஞ்சை பல்கலையில்




பாரதியார், பெரியார் பல்கலைகளை தொடர்ந்து, 'தஞ்சை தமிழ் பல்கலையில், கடைநிலை ஊழியர் முதல், பேராசிரியர் பதவி வரை, துணைவேந்தர், ஐந்து லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை பெற்று, பணி நியமனம் செய்துள்ளார்' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை, துணைவேந்தர் பாஸ்கரன் மறுத்துள்ளார்.


தஞ்சை தமிழ் பல்கலையில், 2015 முதல், துணைவேந்தராக பணியாற்றி வருபவர் பாஸ்கரன்; இதற்கு முன், இதே பல்கலையில் பேராசிரியராகவும், பதிவாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெரும் தொகை செலவழித்து, முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலம், துணைவேந்தர் பதவியை பிடித்ததாக, அப்போதே புகார்கள் எழுந்தன.

இவர், துணைவேந்தராக வந்ததும், காலியாக உள்ள பேராசிரியர், இணை, உதவி பேராசிரியர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதற்காக, ஐந்து லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளதாக, இதே பல்கலையில் ஆய்வு உதவியாளராக இருந்த தேவகுமார், குற்றம் சாட்டியுள்ளார்.


அவர் கூறியதாவது: பணி நியமனங்களில் பணி மூப்பு, இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. பணத்திற்காக பல பதவிகளை உருவாக்கி, துணைவேந்தர் நியமனம் செய்துள்ளார். எழுத்தர் உள்ளிட்ட, 25 பதவிகளுக்கு, 10 லட்சம் முதல், 20 லட்சம் ரூபாய் வரை பெற்று, பணி நியமனம் செய்துள்ளார்.


பேராசிரியர் பணிக்கு அதிகபட்சமாக, 50 லட்சம் வாங்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக பணியாற்றி வரும் என்னை நிரந்தரம் செய்ய, 15 லட்சம் ரூபாய் கேட்டார். இது குறித்து, கவர்னிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. 'துணைவேந்தர் பதவிக்கு, மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து தான் வந்துள்ளேன். யார் பணம் கொடுக்கின்றனரோ, அவர்களுக்கு மட்டும் தான் பணி வழங்குவேன்' என, என்னிடம் நேரடியாக கூறினார்.


திருவாரூர் மத்திய பல்கலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஒருவருக்கு, பணம் பெற்று, பணி வழங்கி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, துணைவேந்தர் பாஸ்கரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: பணி நியமனங்களில், எள் அளவும் விதிமீறல் இல்லை. வல்லுனர் குழுக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கே, பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. என் மீது குற்றம் சாட்டும் தேவகுமார், இன்று வரை முனைவர் பட்டமே பெறாதவர்.


உயர் நீதிமன்றமே, 'உதவி பேராசிரியர் பணியிடத்தில் நியமிக்க, இவர் தகுதியற்றவர்' என, கூறியுள்ளது. நாகை அரசு மருத்துவமனை மூலம், கண் பார்வை குறைபாடு, 40 சதவீதம் என்பதை, 60 சதவீதமாக திருத்திக் கொடுத்தவர் தான் தேவகுமார்.மேலும் அவர், மிரட்டி பதவி பெற வேண்டும் என, பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார். பணம் கொடுத்து துணைவேந்தர் பதவிக்கு வந்தேன் என நிரூபித்தால், இந்த பதவியில் இருந்து செல்ல தயாராக இருக்கிறேன்.


பணி நியமன நேர்காணல்கள், எந்த பல்கலையிலும் இல்லாத நடைமுறையாக, 'வீடியோ'வில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. என் மீதான குற்றச்சாட்டில், 100 சதவீதம் உண்மை இல்லை. சத்தியமாக, உறுதியாகச் சொல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரிடம் மனு




இதற்கிடையில், தஞ்சை தமிழ் பல்கலை ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என, 100க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு அளித்தனர். அதில், 'சில நாட்களாக, பல்கலையின் நல்ல பெயரை சிதைக்கும் நோக்கோடு, பல்கலை பணியாளர்கள் சிலர், வெளி நபருடன் இணைந்து, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். பல்கலை துணைவேந்தர் பாஸ்கரனை கீழ்த்தரமாக விமர்சனம் செய்கின்றனர். துணைவேந்தர் மீது அவதுாறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.


இந்த இரு பல்கலை விவகாரங்களையும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார். ஏற்கனவே, பெரியார் பல்கலை தொடர்பான விசாரணைக்கு ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் தஞ்சை பல்கலையும் விசாரணை வளையத்துக்கு உட்படுத்தப்படும் என, தெரிகிறது.


- நமது சிறப்பு நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (122)

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    ஊழல் முகாந்திரம் உள்ள அனைத்து துணை வேந்தர்களையும் வேந்தர் அறவே நீக்கி விட்டு ஒரு சிறந்த கல்வியாளனை எந்த வித பண பயன் இல்லாமல் முதன்மை துணை வேந்தராக ஒருவரை நியமனம் செய்து அனைத்து பல்கலை கழகத்தின் நடவடிக்கையை கவனிக்க வைக்கலாம்

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    நல்ல பல்கலை கழகம் ஒரு குடும்பம் அப்படி என்றால் என்ன குடும்ப தலைவர் கண்ணியம் கட்டுப்பாடு கடமை ஒழுக்கம் நேர்மை வாய்மை ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு குடும்பம் நல்ல முறையில் நடை பெற வழி வகை செய்யும் தற்போழோடு பல பல்கலை கழக துணை வேந்தர்கள் ஒழுக்க குறைவான தகாத செயல்களில் ஈடுபட்டு உள்ளதால் இவர்களால் எப்படி பல்கலை கழகத்தை வழி நடத்தி செல்ல முடியும் மாணவர்களின் எதிர்காலம் என்னாவது தான்தோன்றி தனமான பணி நியமனம் ஊழல் சம்மந்த படாத என்கெய் மிகவும் வருத்தமாகவும் வேதனையாகவும் தர்ம சங்கடமாகவும் உள்ளது என்றால் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர் கண்டும் காணாமல் ஒதுங்கி போக முடியாதே

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்.. போதக்கண்ணாடி வேண்டுமானால் அனுப்பட்டுங்களா? விரைவில் தஞ்சை பல்கலையும் விசாரணை வளையத்துக்கு உட்படுத்தப்படும் என, தெரிகிறது. - அதாவது இன்னமும் ஒண்ணும் ...ல்லைங்க.. இந்த விஷயம் வெளியே கசிந்து, இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்தும், இன்னமும் ..டும் தான்..

  • Palani - Srivi,இந்தியா

    Please do the same ride in Madurai Kamaraj University VC/Registrar etc.

  • Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ

    "வந்த வேலையை விட்டுவிட்டு பந்த காலை பிடித்த கதையாய்" கருத்து எழுத வந்து விட்டு ஒரு பக்கம் பெரியாரை பழிப்பதும் மறு பக்கம் இந்து கடவுள்களை பழிப்பதும் ஏனோ. உயர்கல்வி உருப்பட வழி சொல்லலாமே

  • மூக்குநோண்டி -

    பெரியார் என்கிற பெயரை கேட்டாலே எரிச்சலா வருது.

  • jagan - Chennai,இந்தியா

    திருமா =குருமா, கனிமொழி =சனிமொழி, சுடாலின் =சுடலை, மார்க்கம்= மூர்க்கம் மாதிரி இனி ஈ வே நாயக்கரை நாம் இனிமேல் சிறியோர் /சிறியார் என்றே அழைப்போம் ..

  • karupanasamy - chennai,இந்தியா

    திமுக ஆட்சிக்கு வந்தால் அபூபக்கர் அல் பாக்தாதி பெயரில் கூட பல்கலைக்கழகம் ஆரம்பித்து தலை துண்டிப்பை தமிழர் கலாச்சாரம் என்று சொல்லுவார்கள்.

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    ஸில பெரிய வாத்தியாருங்கல்லாம் பெரிய திருடங்களா இர்ந்தாங்கலாமா. மாட்டிக்கில்லியமா. பெரியார் கம்பு குச்சி வச்சி அடிக்கோணும். பிசிக்ஸ் வாத்தியரா ரொம்பவே அடிக்கோணும். திருடாதே அப்டீ சொலீ சொலீ அடிக்கோணும்.

  • MentalTamilan - London,யுனைடெட் கிங்டம்

    லஞ்சமே 50 லட்சம் என்றால் வேளைக்கு வந்த பிறகு எவ்ளோ கொள்ளை அடிப்பானுக ? தமிழ்நாடு லஞ்ச ஊழல் ல உலகத்துல நம்பர் ஒன்னு ... நாசமா போய்டுச்சு

  • Sethu - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    "பத்திக்கிச்சு" - வாழ்க

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    @ajeyaraman : 1 . //கொட்டாய் சர்ச்சுகளில் ..- இப்படியெல்லாம் ஒரு மதத்தினரின் வழிபாட்டு இடங்களை விமர்சிக்கலாமா? நீங்க படித்தவர் தானா? கனியிருப்பாக காய் கவர்ந்தற்று. நன்றி. .// 2 . //Pugazh , பெரியார் என்பது பெயரல்ல , நீங்களே கொடுத்துக்கொண்ட பட்டம். அதைவைத்துதான் அனைத்து சீர்கேடுகளும் செய்கிறீர்கள்// நானாகவே எடுத்துக்கொண்ட பட்டமா? சீர்கேடுகள் செய்கிறேனா? பாரதி பல்கலை. க்கு நான் போனது கூட கிடையாதே சார். வெளியிலிருந்து பாத்திருக்கேன் அவ்வளவே. பல்கலை பேருக்கும் அங்கிருக்கும் இண்டிவிஜூவல்சுக்கும் ஒரு கனக்ஷனும் கிடையாது. இதை எங்கிருந்து சர்ச் வருகிறது என்றே தெரியவில்லை. ஊழல் பண்ணினவரும் ஹிந்து அதை போட்டு கொடுத்தவரும் ஹிந்து கைது செய்தவரும் ஹிந்து. வீணாக சர்ச் மசூதி எல்லாம் இங்கே இழக்காதீர்கள். மிக்க நன்றி.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    1967 ல் ஆரம்பித்த ஊழல், லஞ்ச லாவண்யா அரங்கேற்றம் கடந்த 15 வருடங்களாக வானத்தை தொட்டு விட்டது. கடமை கண்ணியம் கட்டுப்பாடு, "மடமை மண்ணியம் காசு" என்று பொருள் படுகின்றது

  • Suresh - Narita,ஜப்பான்

    இந்த பெயர் வைத்துவிட்டு அயோக்கியத்தனம் நடக்கவில்லைனா தான் ஆச்சரியம்

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    தமிழ்நாட்டில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களிலும், ஊழல் செய்வது எப்படி, பணம் எப்படி கைமாற்றம் செய்வது, எப்படி அம்புடாமல் இருப்பது, அம்புட்டால் தப்பிப்பது எப்படி, உயர் அதிகாரிகளை வளைப்பது எப்படி, அரசியல்வாதிகளை பிடிப்பது எப்படி என்று முனைவர் பட்டத்துக்கு பாடம் கொடுக்கலாம். பல்கலைக்கழகம் என்று பெயர் வைத்ததாலோ என்னவோ, கழகங்களைப் போலவே பல்கலைக்கழகங்களும் ஆகிவிட்டன.

  • SUNA PAANA - Chennai,இந்தியா

    பெரியார் ஒரு பக்க பிராட் அவர் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகமும் அப்படிதான் இருக்கும் இதில் என்ன அதிசயம் இருக்கப்போகிறது. தமிழ்நாட்டை கெடுப்பதுற்கு என்றே பிறப்பு எடுத்தவர் தான் பெரியார் அதோட அவர் பெயரை வைத்து அரசியல் இயக்கங்களும் தமிழ்நாட்டை சின்னாபின்னமாக ஆகி தமிழன் தலை எடுக்கமுடியாமல் ஆகிவிட்டது. தமிழக மக்களே இனியாவது திராவிட இயக்க அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

    கவுனரு ஆச்சியை கொண்டு வாங்க நைனாக்களா...

  • Bagyanathan - Dar Es Salaam,தான்சானியா

    இப்போது இது ஒரு சீசன். அவ்வளவே. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பல்கலை பற்றிய செய்திகள் நாளேடுகளில் வரும். பின்னர் வேறு ஒரு செய்தி தொற்றி கொண்ட பின் இது மறந்து போகும். அதை விட இப்படி ஒரு லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிக்க தொடங்கி விட்டார்கள் என்று தலைப்பு செய்தியே போட்டவுடன் அணைத்து சம்பந்த பட்டவர்களும் உஷார் ஆகி விடுவார்கள். எதாவது ஒரு செயலை முறையாக மற்றும் நேர்மையாக செய்ய வேண்டும் என்றால் அதை வெட்ட வெளிச்சமாக செய்தியாக வெளியிட கூடாது. மாறாக அதை செய்து விட்டு ஊழல்களை வெளிக்கொணர வேண்டும். சிந்திப்பார்களா ஆட்சியாளர்கள்.?

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    யாரும் எப்போதும் திருந்துவதாக இல்லை, யாரும் எதற்கும் பயப்படுவதாகவும் இல்லை, குறுக்கு வழியில் செல்பவர்கள் மட்டுமே சீரும் சிறப்புமாக வாழ வகித்த பின்பு, நேர்மையானவர்கள் மடிவதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது, வந்தே மாதரம்

  • sachin - madurai,இந்தியா

    உயிரை குடிக்கும் மரண ஆலை தூத்துக்குடிக்கு வேண்டாம் ...பல தோல் நோய்களாலும், பல கருச்சிதைவுக்கு காரணமாக இருக்கும் , புற்று நோய்க்கு காரணமாக இருக்கும் இந்த ஆலை வேண்டவே வேண்டாம் என்று பல முறை கூக்குரலிட்டு கண்டும் காணாதது போல இருக்கும் தமிழக அரசே ....ஒரு போபால் விஷவாயு போன்ற சம்பவம் தூத்துகுடிலயும் நடந்தால் தான் தூக்கத்தில் இருந்து எழுவாயா ........ அனல் மின் நிலையம் - 3 , தற்போது 4 வதாக ஒன்று கட்டப்பட்டு கொண்டு இருக்கிறது , உடன்குடி அனல் மின் நிலையம் , கோஸ்டல் எனர்ஜி , ஸ்பீக் ஆலை - அம்மோனியா , டாக் ஆலை - அம்மோனியா , ஸ்டெர் லைட் தாமிர உருக்கு ஆலை , தற்போது இரண்டாவது ஆலை அமைக்கும் பணிகள் , கில்பர்ன் கெமிக்கல்ஸ் ..இது எல்லாம் ஊருக்குள்ளேயே இருக்கிறது மக்கள் வாழும் இடங்களில் பக்கத்தில் இருக்கிறது ....சொல்லுங்க மக்களே சாவது யார் ????? ...இதனால் காசு பார்ப்பது யார் ??....குழந்தைகள் ஊனமாக தான் பிறக்க வேண்டுமா ...புற்று நோயால் தூத்துக்குடி மக்கள் சாக தான் வேண்டுமா .....யாரும் சிந்திக்க வில்லை என்றால் மரணம் அதிவிரைவில் உங்கள் தூத்துக்குடி சகோதர சகோதரிகளுக்கு ......அத்திப்பட்டி போல தென்னகமே அழிந்து விடும் அபாயம் ....

  • Madhav - Chennai,இந்தியா

    அனைத்து பல்கலை கழகங்களிலும் ஊழல் என்பது விரல் சூப்பும் குழந்தைக்கு கூட தெரியும் நிலையில், ஒரேயொரு துணை வேந்தர் மீது மட்டும் நடவடிக்கை என்பது, கணபதி வேலுமணி லடாய் என்பதன் விளைவு மட்டுமே. ஒரு பதிவாளர் தற்கொலை செய்து கொண்ட பல்கலை கழகத்தில் ஒருவர் கூட கைது இல்லை என்பதே ஊழலை மூடி மறைக்கும் வேலை தானே.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    பல் கலை நல்ல பேருக்கு ஏற்றாற்போல் பல கலையும் கலந்து வியாபித்து உள்ளது அப்படீயே ஆராய்ச்சி மாணவிகளின் கற்பு காணாமல் போய் கொண்டு இருப்பதாக தகவல் இதையும் விசாரிங்க கர்மம்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    பெரியார் பல்கலை கழகத்தில் மட்டுமல்ல பெரியார் trustlum ஊழல் நடந்துள்ளது விசாரணை கமிஸ்ஸின் வைத்து தனி நீதிபதி மூலம் விசாரித்தால் பலகோடிகளை ஆட்டைப்போட்டது வெளிவரலாம்

  • rajan. - kerala,இந்தியா

    பல்கலைகழகம் முதல் பாடசாலை வரை லஞ்ச ஊழல் தான் இங்கு. இத்தனை லஞ்சம் கொடுத்து பணிக்கு வரும் ஆசிரியர்கள் அந்த பணத்தை எடுக்க இன்னும் எத்தனை ஊழல் பங்களிப்போ. கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதை தான் கவர்னர் சாமி. பழைய ரோசையா எத்தனை கோடிகளுக்கு சாமரம் வீசினாரோ மைலார்ட்

  • christ - chennai,இந்தியா

    அரசு அலுவகங்கள் அனைத்திலுமே லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது .அங்கு லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பது இல்லை.லஞ்சம் வாங்குபவர்களுக்கு மரண தண்டனை போன்று கொடிய தண்டனை கொடுத்தால் ஒழிய லஞ்சம் வாங்குவது குறையாது

  • balakrishnan - coimbatore,இந்தியா

    எல்லா அரசு பதவிகளிலும் , பதவி உயர்வு, இடமாற்றம், பதவி நியமனம், காவலர் தேர்வு, பதவி உயர்வு, இடமாற்றம், ஸ்டேஷன் தேர்வு மற்றும் மாற்றம் அனைத்திலும் லஞ்சம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடக்காது ஆனால் என்னமோ தமிழகத்தில் மட்டும் தான் இப்படி என்று இங்கே சில தேசிய நாத்தங்கள் செய்திகளை பரப்புகின்றன, இந்தியா முழுவதும் இதே லட்சணம் தான், வடஇந்திய மாநிலங்களில் இதைவிட படு படு மோசம், சமூக அக்கறை இருக்குமானால் எந்த ஒரு பதவிக்கும் நியமனம் கூடாது, இல்லாத பதவி இடங்கள், இடமாற்றங்கள், பதவி உயர்வு அனைத்துமே ஒரு தனி குழு மூலம் முறையாக எழுத்து தீர்வு, திறன் தீர்வு அனைத்தும் நடந்து செயல்படவேண்டும் எந்த ஒரு இடத்திலும் யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    இந்நேரத்துக்கு ஆதாரங்களை எல்லாம் அழித்துவிட்டு..... சொத்துக்களையும் திறமையாக மறைத்திருப்பார்களே.... லஞ்ச ஒழிப்புப் போலீசார் “வெறும் கையுடன்” திரும்ப வேண்டியதுதான்.....

  • venkatan - Puducherry,இந்தியா

    ஏங்க இந்த காலேஜ் ப்ரொபசர்களுக்கு சீனியரிட்டி மற்றும் சி.ஆர் மற்றும் பிரத்தியேக தகுதிகளின் அடிப்படையில் தேசிய அளவில் சிவில் சர்வீஸ் ரெக்ருட்மெண்ட் போல சர்விஸ் கமிஷன் வைத்து வி.சி க்களை நியமிதால் என்ன?யூ ஜி சி கவனிக்க வேண்டும்.

  • Krishnamurthy - PERTH,ஆஸ்திரேலியா

    நாயுடு பெரியார் மீது எனக்கு அவ்வளவு மரியாதை கிடையாது. அவர் பெயர் கொண்ட பல்கலை கழகம் ஊழல் செய்ததில் எனக்கு பெரிய ஆச்சிர்யமும் கிடையாது .

  • mindum vasantham - madurai,இந்தியா

    Periyar cant be a leader for tamil ,how can be he called " thanthai " etc

  • P S Balaji - Mumbai,இந்தியா

    பெரியார் இந்து துவேசம் மட்டும் சொல்லி தந்து உள்ளார். ஒழுக்கம் பற்றி எதுவும் சொல்லவில்லை.

  • Arivu - Salem,இந்தியா

    பெரியார் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை முதல் கோணல் முற்றும் கோணல் என்பதுதான் உண்மை.ஆரம்பகாலம் முதல் விசாரிக்கப்படவேண்டும்.

  • Enrum anbudan - dammam,சவுதி அரேபியா

    திராவிடம் சமூகநீதி என்று கூறிக்கொண்டு பொறுக்கிகளுக்கும், அரைகுறை படிப்பு படைத்தவனுக்கு எல்லாம் துணைவேந்தர் பதவி கொடுத்தால் இப்படித்தான்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    திராவிடர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச லாவண்யததை தமிழகம் முச்சூடுக்கும் தேசிய தொழிலாக மாற்றிவிட்டார்கள். லஞ்சம் இல்லாது ஒரு துறையை சொல்லுங்களேன்.,,,,?

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    கட்டிங் கொடுக்காதவங்க பாடெல்லாம் அதோ கதி தான். விளம்பரப் படுத்துவதற்காக மீடியாக்காரங்களுக்கு எத்தனை பெர்சண்டுன்னு தெரியல. அனைத்துமே சுயநலம்.

  • Siva - Aruvankadu,இந்தியா

    ராமசாமி நாயக்கர் சிரியார் என்பதை இந்த தலைமுறை உணரும் நாள் தொலைவில் இல்லை....

  • mindum vasantham - madurai,இந்தியா

    Periyar is anti tamil

  • mindum vasantham - madurai,இந்தியா

    Periyar supported hindi imposition

  • jagan - Chennai,இந்தியா

    தமிழ் கலாச்சாரம் என்று ஸீன் போடும் கூட்டமே ரொம்ப பொய் சொல்லும் கூட்டம். 1 . நல்லா படிச்சு சிலர் முன்னுக்கு வந்த ஏழை சமூகத்தை பார்த்து வயிறு எரிந்து "அவர்கள்" என்னை படிக்கவிடவில்லை (விட்டா மட்டும் ஏதோ கிழிச்சுடுறமாதிரி) என்று சொல்லி சமூகநீதி என்று வாய்ப்பை திருடுவது. 2 .மற்ற மாநிலத்து காரனை திட்டுவது ஹிந்திக்காரன், கோல்டி,மலையாளத்தான் என்று (ஏதோ இவர்கள் சொர்க பூமியில் இருப்பதாய் நினைப்பு) ...பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்று சொல்வார்கள் ...இவர்கள் சொன்ன பொய்க்கு தான், காவிரியில் தண்ணி இல்ல, மழை குறைவு, இவர்கள் பிள்ளைப்பூச்சி சமூகத்திற்கு செய்த அநீதிக்கு, அடிச்சு கழுவக்கூட தண்ணி இல்லாமல் போகும் காலம் விரைவில் வரும்....

  • Raman - Chennai,இந்தியா

    ராமசாமி பெர்முடா...your comments reflect your mindset. Remove your black shirt and things will be alright, your mind, heart etc are poisoned with evil stuff. At least try to change.

  • Arun Manoharan - Vellore,இந்தியா

    Oru nallavisayam ... Idhuvaraikum karuthu sonna yaarum DMK or ADMK mattumedhan idhukku kaaranamnu pirichu vakkalathu vaangama ... Ru perayum serthu dhravida katchigalin soorayadalaagave paarkranga... Makkal puridhalil munnetram theriyudhu.... Kalvi sugadharam unavu ... Indha moonu visayathula ulalnu pugar vandhave thookula potranum. BE ME MSc mudicha ovvorutganukkum theriyum university velaiku latchangalla lanjam kodukanumnu... therinjum 60 varusama mathi mathi ottupodrom...evanum nalladhu seyyala.... Arasiyal vadhigalta kenja kudadhunu veedhilayum kaatukullayum ilaingan poyttanna naattai kaapatha mudiyadhu

  • srideesha - Atlanta,யூ.எஸ்.ஏ

    திருட்டு திராவிடத்தின் மற்றுமொரு பரிமாணம் தான் இந்த (பல்கலை) கழக ஊழல்கள். இதில் முத்தாய்ப்பே ஊழலுக்கு வித்திட்ட திருடர்கள் அங்கே கைவெச்சு இங்க கைவெச்சு கடைசியில ராமசாமி நாயக்கர் (பல்கலை) தலையில கைவைத்ததுதான். திருடர்களின் கையரிப்பு இத்துடன் நிற்காது. நாம் முழித்துக்கொண்டிருக்கும் போதே நமது கோவணத்தையும் கழட்டி நம்மை அம்மணமாக ஓடவிடும் வரை நமக்கு புத்தி வராது.

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    பெரியார் நடத்திய போராட்டங்களையும் அறிவுப்புகளையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். . 1. சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தார். 2. குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார். 3. 53ல் பிள்ளையார் சிலையை உடைத்தார். 4. 55ல் தேசியக் கொடியை எரிப்பது என்ற முடிவை எடுத்து பின்னால் மாற்றிக் கொண்டார். 5. 56ல் ராமன் உருவப்படத்தை எரித்தார். 6. 57 அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியை எரித்தார். 7. 60ல் தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப்படத்தை எரித்தார். 8.65ல் கண்ணீர் துளிகள் என்று அவரால் அன்போடு அழைக்கப்பட்ட திமுகவினர் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மீது வசை மாரி பொழிந்தார். 9. 66ல் இராமாயணத்தை எரித்தார். 10.69ல் பிராமணாள் என்ற பெயர் கொண்ட உணவு விடுதிகளில் பெயர் அழிப்புப் போராட்டம் நடத்தினார். 11. 71 இராமன் படத்தை செருப்பாலும் விளக்குமாறாலும் அடித்துத் தீயிடச் செய்தார். இவைதான் அவர் நடத்திய போராட்டங்கள். சாதியை எதிர்த்து அவர் ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அழிப்பது, அடிப்பது, எரிப்பது போன்றவை தான் அவர் கல்வி குறித்தோ, மக்களை வளமுறச் செய்வது குறித்தோ அவர் எந்தப் போராட்டமும் நடத்தவில்லை

  • Veeran Velu - Madurai,இந்தியா

    Even in University of Madras these kind of things are happening. Duplicate experience certificates and work experience in other fields (as research and teaching) were taken into account. Please look into this university too

  • Manian - Chennai,இந்தியா

    70 -80 % தமிழர்கள்(திராவிடர்கள்) லஞ்சம் கொடுப்பது-வாங்குவது சரி என்கிறார்கள். அவர்களுக்கு லஞ்சவாதிகள் தானே தலைவராக முடியும். இங்கே "அடி-பிடி" என்று கத்துபவர்கள் யாராவது, தனக்கு தெரிந்த ஒரே ஒரு லஞ்ச வியாதியையு பற்றியாவது உரத்த குரலில் பேசியுள்ளீர்களா? உங்கள் குழந்தைகள் அவர்கள் குழந்தைகளுடன் விளையாடக்கூடாது என்று பகிரங்கமாக சொன்ன துண்டா? கடவுள் சாட்சியாக, உள்ளத்தில் கை வைத்து, நீங்கள் நல்லவர் என்று சத்தியம் செய்யமுடியுமா? சும்மா இங்கே கூவுவதாலே இதுவரை எந்த லஞ்சமும் குறைந்ததில்லை. உலகில் 90 % நாடுகளில் லஞ்சம் ஒரு நாகரிகம். எனவே, முடிந்தால் உருப்படியாக யாரேனும் அனாதைக்கு உதவி செய்யுங்கள். பாவிகளை கர்த்தர் மன்னிப்பாரக - இனி அவர் பொறக்கவே மாட்டார் என்று பேராயர் சொரிமுத்து சொல்லிவிட்டார். ஓவாசி முல்லாவும் அதையே சொல்கிறார்.

  • jagan - Chennai,இந்தியா

    ராமசாமி நாயக்கர் அப்பிடி என்ன படிச்சு கிழிச்சுட்டார் அவர் பெயரில் பல்கலை வைக்க... ஒரு தெருவோர எலிமெண்டரி பள்ளிக்கு கூட பெயர் வைக்க தகுதி இல்லாதவர்...

  • jagan - Chennai,இந்தியா

    இட ஒதுக்கீடு கல்விக்கு இவ்ளோ தான் வரும்... .திறமையை மதிக்காதவரை பூட்டகேஸ் தான் ....இந்தியாவில் IIT மும்பை தவிர ஒரு கல்லூரி/பல்கலை கூட உலக அளவில் முதல் 500 இல் இல்லை...IIT மும்பை 272 வது ரேங்க்

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஆரம்ப நிலையிலேயே விசாரணையை எதிர்த்து ஒரு 'லாபி 'வேலை செய்கிறது என்றால் ஊழலின் ஆழம் நன்கு புரிகிறது.ஆமாம் அந்த நூறு பெரும் எந்த வகையில் வேலை கிடைக்கப்பெற்றார்கள் என்று ஆராய்ந்தால் உண்மை வெளிப்படுமோ?

  • aanthai - Toronto,கனடா

    ஆக இதற்க்கு முன்பு இருந்த ரோஸ் , ரொட்டி க்ரீன் சிக்னல் கொடுக்காமல் ரெட் சிக்னல் போட்டு தடுத்திருக்கிறார்கள்

  • vasu - chennai,இந்தியா

    அப்படியே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தையும் கொஞ்சம் கவனியுங்க.....

  • Viswanathan - karaikudi,இந்தியா

    நல்ல வேளை , திருப்பதி தமிழகத்தில் இல்லை இருந்திருந்தால் , நகைகள் திராவிட கட்சிகளால் சுரண்ட பட்டிருக்கும் . அறங்காவலர் குழுவில் கண்ட கடவுள் நம்பிக்கையற்ற நாயெல்லாம் இருந்து கொண்டு ஒவ்வொரு லட்டு விற்பனையிலும் இவ்வளவு கமிஷன் என்று fix செய்து மிக பெரிய மெகா ஊழல் சாதனை படைத்திருப்பர் . வாகனங்கள் பார்க்கிங் இடத்தில குத்தகைக்கு எடுத்ததாக கூறி கொள்ளைதான் நடந்திருக்கும்

  • Viswanathan - karaikudi,இந்தியா

    இட ஒதுக்கீடு வேண்டும் , நீட் தேர்வு வேண்டாம் என திராவிட , முக்கியமாக திமுக அரசியல் செய்வது ( போராடுவது அல்ல ) ஊழல் செய்ய தோதாக இருக்கும் என்ற எண்ணத்தினால் தான் . ஊறுகாய் போல் தொட்டு கொள்ள பார்ப்பனிய சாதி உள்ளது . முன்னேறிட்டான் முன்னேறிட்டான் என்று புலம்பி கொண்டே அனைத்து துறைகளிலும் , ஊழலை வளர்த்து விட்டது தான் சாதனை . ஏழைகளுக்கு இலவசம் என்ற பம்மாத்து பேச்சு , ஏழைகளை இவர்கள் செய்யும் ஊழலை அறிந்து கொள்ளாமல் இருக்க வசதியாக சாராய கடை . நல்ல formula . இவர்களை அடியொற்றி அதிமுக அரசு . சிஸ்டெம் சரியில்லையென்றால் , நாங்களே ஆட்சியில் இருந்து கொண்டே இருக்கிறோம் , தவறுகளை சுட்டி காண்பியுங்கள் , திருத்தி கொள்கிறோம் என ஒரு விவரம் கேட்ட ஆள் வேறு பேசுவார் . யாரேனும் வந்து இவனுக்களை ஓயுங்கள்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திராவிடர்கள் கை வைத்து கல்வி வெளங்கியதாக சரித்திரத்தில் இல்லை...

  • jagan - Chennai,இந்தியா

    ராமசாமி நாயக்கரும் லஞ்ச ஊழலில் திளைத்தவர்தான் ...

  • ramasamy naicken - Hamilton,பெர்முடா

    எல்லா பல்கலைகழகங்களுக்கும் ஊழலில் தாயாக இருப்பது தமிழ்நாடு மருத்துவ பல்கலைகழகம். அந்த தாய் பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பது ஒரு ஊழல் பேய். அடுத்தது அமைச்சர் வேலு "மணிக்கும்" கணபதிக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தில்தான் கணபதி மாட்டிக்கொண்டார். ஆனால் அதனை பெருமைகளும் போய் சேருகின்றது கவர்னருக்கு. உண்மையிலே அவர் தான் காரணம் என்றால், அவர் கீதா லட்சுமி மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கட்டும், பிறகு கவர்னர் உண்மையிலேயே ஊழலுக்காக போராடுகிறார் என்பதை ஒத்துக்கொள்ளுகின்றேன்.

  • கைப்புள்ள - nj,இந்தியா

    சரி அரபு நாடுகள் மாறி நாடு ரோட்டில் வைத்து கடுமையான தண்டனைகள் தான் தர மாட்டீர்கள், அட்லீஸ்ட் குறைந்தது நடு ரோட்டில் வைத்து இவர்களை அவமான படுத்தும் தண்டனையாவது தரக்கூடாதா? இதுவும் ஒரு வகையான தண்டனை முறைதான். ஒரு குற்றவாளியை முகத்தையும் மூடி ரொம்ப சவுரியமாக பாதுகாப்பாக கொண்டு போயி வைத்து நல்லா சிக்கன், மட்டன், பிரியாணி என்று போட்டு வளக்கிறீர்கள். அப்புறம் தையல் மிசின் கொடுத்து பத்திரமா அனுப்பி வைக்கிறீர்கள். அதிலும் நிறைய சலுகைகள். என்ன முறையான நியாயம் இது? அதுவும் இப்பொழுதெல்லாம் யாரும் குற்றம் செய்வதற்கும், அதற்க்கு துணை போவதற்கும், அதை மறைப்பதற்கு கொஞ்சம் கூட பயப்படுவதோ, கூசுவதோ இல்லை. பயமும் இல்லை, தண்டனையும் இல்லை எனும் போது ஒரு சமூகம் எப்படி சரியாக இருக்கும்? இப்படியே போய் கொண்டு இருந்தால் இதற்க்கு என்னதான் தீர்வு? அதனால் தயவு செய்து நான் சொன்ன தண்டனை முறையை அறிமுக படுத்துங்கள்.

  • Indhiyan - Chennai,இந்தியா

    எல்லோருக்கும் ஒரு செய்தி. வள்ளுவர் காலத்தில் 'கழகம்' என்றால் சூதாடுபவர்கள் கூடும் என்று பொருள். எனவே இன்றைய அரசியல் கழகங்களுக்கும் , இந்த பல்கலை கழகங்களுக்கு என்ன பொருள் என்று வள்ளுவன் பார்வையில் பாருங்கள், ரொம்ப சரியாக இருக்கும். "கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்." - அதிகாரம்/: சூது. [தேவதாசிக்கு அன்றைக்கு இருந்த பொருளில் இன்றைக்கு கூறினேன் என்பவர்கள், கழகத்துக்கு அன்றைக்கு இருந்த பொருளில் இன்றைக்கு கூறினால், என்னவாகும், 'கழக' கண்மணிகளுக்கு? ]

  • கைப்புள்ள - nj,இந்தியா

    இது போன்ற குற்றவாளிகளுக்கு தண்டனையாக நிறைய அரசாங்க சேவைகளும், அரசாங்க வேலைகளும் செய்வதற்கு உபயோகபடுத்துகிறார்கள் வெளிநாடுகளில். உதாரணத்துக்கு அமெரிக்காவில் குற்றவாளிகள் நெடுஞ்சாலைகளில் குப்பை கூளங்களை எடுத்து க்ளீன் செய்வார்கள். முதியோர் இல்லங்களில் போய் அவர்களுக்கு சேவை செய்தல். பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே நிலையங்களில் சுத்தப்படுத்தும் வேலை, என்று நிறைய வேலைகளுக்கு உபயோகம் செய்வார்கள். இதற்க்கு பெயர் கம்யூனிட்டி சர்வீஸ். இது UK விழும் இருக்கிறது. நமது நாட்டிலும் அது போன்று ஒரு முறையை கொண்டு வாருங்கள். சும்மா இவர்களை அடைத்து வைத்து சிக்கன் போட்டு வளர்ப்பதை தடுத்து நிறுத்துங்கள். அதற்கு பதிலாக இவர்களையும் கம்யூனிட்டி சர்வீஸ் செய்ய வையுங்கள். இது போன்ற குற்றவாளிகளை திருத்த ஒரு வாய்ப்பு, நமக்கும் சம்பளம் இல்லாமல் வேலைக்கு ஆள் கிடைத்த மாறி ஆச்சு.

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    கணபதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக துணைவேந்தர்களை நீக்கிவிட்டு, புதிய திறமையானவர்களை நியாயமான முறையில் நியமிக்க வேண்டும். இல்லையென்றால், இந்த செய்தி மோகன் ராவ், விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி போன்று எல்லாம் கடந்து போகும் செய்தியாகிவிடும். தமிழகத்தில் ஊடுருவி உள்ள ஊழலை கத்தி கொண்டு ஒழிக்க முடியாது. இதற்கு கடப்பாரை வேண்டும்.

  • Nalanvirumbi - New York,யூ.எஸ்.ஏ

    தமிழகத்தின் உயர்கல்வியில் அக்கறை கொண்டு தொடர்ந்து கட்டுரைகளை வெளியிடும் தினமலருக்கு மிக்க நன்றி...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement