Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்: இடைத்தேர்தல் களில், கருணாநிதி, கூட்டணி வைக்க மாட்டார். ஆனால் ஸ்டாலினோ, ஆர்.கே.நகரில், ஏழு கட்சி கூட்டணியுடன் போட்டியிட்டு, 'டிபாசிட்' இழந்த நிலை தான், உள்ளாட்சி, லோக்சபா தேர்தலிலும், தி.மு.க.,விற்கு ஏற்படும்.

டவுட் தனபாலு: கண்ணுக்கு எட்டிய துாரம் எதிரிகளே இல்லைன்னு சொல்லி, பொதுத்தேர்தல்களையே சந்தித்தவர், ஜெயலலிதா... ஆனா, இடைத்தேர்தலில், உங்க கட்சி நிர்வாகிகளே, உங்களுக்கு எதிராக செயல்பட்டு, அ.தி.மு.க.,வை வீழ்த்தினாங்களே... அதை எப்படிப் பார்க்குறீங்க என்ற, 'டவுட்'டையும் கொஞ்சம் விளக்குங்களேன்...!


ரிசர்வ் வங்கி: மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை எண்ணி, சரி பார்க்கும் பணி, இன்னும் முடிவடையவில்லை.

டவுட் தனபாலு: முழுசா ஒண்ணேகால் வருஷம் முடிஞ்சிருச்சு... இன்னும் எண்ணிக்கை முடியலைன்னு சொல்றதைப் பார்த்தால், புழக்கத்தில் இருந்த நோட்டுகளை விட, அதிக அளவிலான நோட்டுகள், ரிசர்வ் வங்கிக்கு திரும்பிடுச்சோ... அதைச் சொன்னால், நிறைய சிக்கல்கள் வரும்னு நினைக்குறாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது...!

ச.ம.க., தலைவர் சரத்குமார்: நடிகர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் முக்கியம்.

டவுட் தனபாலு: 'தி.மு.க.,வின் தயவில், 2000- - 06ம் ஆண்டு வரை, ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்தீங்க... அ.தி.மு.க.,வின் தயவில், 2011 - -16 வரை, எம்.எல்.ஏ.,வா இருந்தீங்க... இந்தக் காலகட்டத்தில், மக்கள் பிரச்னைகளில், எவற்றைத் தீர்த்தீங்க... அப்புறம் ஏன், உங்களால ஒரு தொகுதியிலும் வெற்றிபெற முடியலை'ன்னு, பதிலுக்கு அவர்கள், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement