Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

மலர்கள் ஏற்படுத்தும் மாசுபாடு


இந்தியாவின் பெரிய பூ மார்க்கெட்கள் ஸ்ரீநகர், டில்லி, மும்பை, கோல்கட்டா, பெங்களூருவில் உள்ளன. காய்கறிகளை விட, மலர்களுக்கு அடிக்கடி தண்ணீரைத் தெளிப்பதால், பூ மார்க்கெட்டில் மாசுபாடு அதிகம். பூ மார்க்கெட்டில் அழுகிய மலர்க் குவியல்கள் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. பூக்களின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மலர்களை, உலர் பூக்களாக மாற்றி மருந்துப் பொருட்களாக, நறுமணப் பொருட்களாக மாற்றும் நிலை இந்தியாவில் உள்ளது. 'பயோ மாஸ் தெர்மல் பவர் பிளான்ட்' அமைத்தால், மலர் வணிக வளாகத்தின் மலை போன்ற கழிவுகளை மேலாண்மை செய்யலாம்.

தகவல் சுரங்கம்

தனிமாநில கோரிக்கை


மே.வங்கத்தில் கூர்காலாந்து, தனி மாநில பிரிவினை கோரிக்கை வலுப்பது போல, திரிபுராவில் மக்கள் தொகையில் கணிசமாக உள்ள பழங்குடி மக்கள் நீண்டகாலமாக திப்ரலாண்ட் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இதனால்தான் திரிபுரா பழங்குடி மக்கள், மாவட்ட தன்னாட்சி கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட்டது. 184 பழங்குடி அரசர்களால் ஆளப்பட்ட திரிபுராவில் இழந்த அடையாளத்தை பழங்குடியினர் மீட்டெடுக்க தனிமாநிலம் அவசியம் என்கின்றனர். பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டுள்ள சட்டசபை தேர்தலில் திப்ரலாண்ட் கோரிக்கை முக்கிய இடம்பெறும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement