Load Image
Advertisement

பயங்கரவாதத்திற்கு எதிராக போர்: இந்தியா - இஸ்ரேல் உறுதி

 பயங்கரவாதத்திற்கு எதிராக போர்: இந்தியா - இஸ்ரேல் உறுதி
ADVERTISEMENT
புதுடில்லி : ஆறு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், பிரதமர் மோடியும் இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, ஹோமியோபதி மருந்து உற்பத்தி, விவசாயம், அறிவியல்-தொழில்நுட்பம் உள்ளிட்ட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


@பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்தியா வந்துள்ள எனது நல்ல நண்பரை வரவேற்கிறேன். அவரது வருகை புத்தாண்டு காலண்டரில் சிறப்பான தொடக்கமாக குறிக்கப்படும். இரு நாட்டு நட்டுப்புறவை மேம்படுத்துவதுடன், ஏற்கனவே பகிர்ந்து கொண்ட புரிந்துணர்வுகளை நடைமுறைப்படுவதற்கான வாய்ப்பாகவே நேற்றும், இன்றும் நடந்த எங்களின் சந்திப்பு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நான் இஸ்ரேல் சென்ற போது 1.25 பில்லியன் இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்புறவையும் எடுத்துச் சென்றேன். திரும்பி வந்த போது இஸ்ரேலிய மக்களின் அன்பு, மரியாதையை எனது நண்பர் பெஞ்சமின் நிதன்யாகு மூலம் எடுத்து வந்தேன்.



எங்கள் நாட்டு மக்களுடன் ஒன்றிணைந்து தூண்களை போன்று உறவை பலப்படுத்துவோம். விவசாயம், அறிவியல் - தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் விவசாயத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு கிடைக்கும். பாதுகாப்பு ஒப்பந்தம் மூலம், இஸ்ரேலிய கம்பெனிகளின் நேரடிய அந்நிய முதலீட்டை இந்திய கம்பெனிகள் பெற முடியும் என்றார்.

வாழும் யூதர்கள் நிம்மதி



தொடர்ந்து பேசிய நெதன்யாகு, மோடி புரட்சிகரமான தலைவர். உங்களால் வருங்காலத்தில் புரட்சிகரமான இந்தியா உருவாகும். முதல் இந்திய தலைவராக இஸ்ரேல் வந்த உங்களின் வருகையால் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய மக்கள் அதிக சுதந்திரத்துடன் உள்ளனர். மற்ற நாடுகளை போல் இல்லாமல் இந்தியாவில் வாழும் யூதர்கள் நிம்மதியாக உள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய நாகரிகம், சகிப்புதன்மை, ஜனநாயகம் ஆகியவற்றின் சிறப்பு இது. மும்பையில் நடந்த கொடூர தாக்குதல் எப்போதும் எங்கள் நினைவில் உள்ளதால், இந்தியாவுடன் இணைந்து பயங்கரவாதத்திற்கு எதிராக போராட தயாராக உள்ளோம் . இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து (25)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement