Advertisement

சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்

சபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர்.

கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. நேற்று காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் பகல் 12.00 மணி வரை நடைபெற்றது. பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செசய்யப்பட்டு உச்சபூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்றது.1.47-க்கு திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செசய்த தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மகரசங்கரம பூஜையை நடத்தினார். பகல் 2.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செசல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி மாலை 5.40 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் செசன்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.25 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஒளிவிட்டு பிரகாசிக்க
ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து 6. -35-க்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர்.

புல்மேடு சம்பவத்துக்கு பின்னர் இநத ஆண்டு சபரிமலையில் மகரவிளக்குக்கு கட்டுக்கடங்கா பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா சிறு விமானங்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற்றது. விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் 1200 பஸ்களை தயார் நிலையில் நிறுத்தியிருந்தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (22)

 • dharma - nagpur,இந்தியா

  காந்தமலை வாசனே சரணம் ஐயப்பா

 • ManiS -

  Thamizhanai Vida madayanai indha ulagaththil paarka mudiyaadhu

 • ManiS -

  They too agreed that it was show by them. Then why this much of crowd? Fools.

 • Arasu - Madurai,இந்தியா

  பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது, அட பாவிகளா , இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த சமூகத்தை ஏமாத்துவீங்க , இதை சொன்னா தேச துரோகின்னு டேஷ் பக்தாள்ஸ் குமுரும் . முட்டாள்தனத்துக்கு ஒரு அளவில்லையா

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  @venkat, man himself is God made.

 • bal - chennai,இந்தியா

  இது ஒன்றும் இயற்கை ஜோதி அல்ல...கேரளா மக்களால் ஏற்படுத்தியது.

 • Senthilsigamani.T - Srivilliputtur,இந்தியா

  சபரிமலையில் மகரஜோதி பக்தர்கள் பரவசம்.இதுவும் மத நம்பிக்கையின் ஒரு அம்சமாகும் இதனையும் - மகரஜோதி தரிசனத்தையும் அமெரிக்கன் யூனிவர்சிட்டியில் - California Institute of Technology/Stanford University/Massachusetts Institute of Technology/Harvard University/Princeton University/Yale University - என ஏதாவது ஒரு யூனிவெர்சிடியில் இந்து மதத்தை வெறுக்கும் இந்திய இடது சாரிகளின் வெற்று வெறுப்புவாதங்களை கொண்ட ஆராய்ச்சி குப்பைகளை மேற்கொள்காட்டி அதனை தயவு செய்து விமரிசிக்க வேண்டாம். மத நம்பிக்கை வேறு அறிவியல் வேறு .புரிந்துகொள்ளுங்கள் போலி பகுத்தறிவு /சுயமரியாதை மார்க்கத்தினரே .

 • K.Sugavanam - Salem,இந்தியா

  ஸ்வாமியே சரணமய்யப்பா..

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  அதாவதுங்க, எங்கும் எதிலும் எந்த காலத்திலும், நித்திய சிரஞ்சீவியாக விளங்கி வருபவனே, இறைவன் ஆவான். அப்படிப்பட்ட இறைவனை, எல்லோராலும், காட்டில், பசியோடு, கடும் தவம் இருந்து, அந்த இறைவனை காண முடியுமா?. ஆக, இறைவனின் தன்மைகளை நன்கு உணர, இறைவனின் ஆசிர்வாதங்களை, எளிதாக பெற்றுவிட, இப்படிப்பட்ட திருவிழாக்கள், பல கோயில்களில், பல விதமான முறைகளில், இறைவனை ஆராதித்து போற்றி, புகழ்ந்து பாடி, உபவாசம் கூட இருந்து, அந்த இறைவனின் அருள் வேண்டும் எனும், ஆன்மீக அன்பர்கள், கோடிக்கணக்கில் உள்ளார்கள், நம் இந்தியாவில். பொதுவாக, இறை பக்திக்கு, அர்ப்பணமாக(சர்வ சுயநலன்களை தியாகம் செய்தல்) உள்ள, ஓர் மனமே போதுமானதாகும். அப்படி, அந்த பக்தியில் ஈடுபடுபவர்களை, தனிப்பட்ட கேரக்டரை விமர்சிப்பது என்பது, பாபமோ பாபமாகும் எனலாம். சில நாட்களுக்கு முன்பு கூட, செய்திகளில், அப்படியோர் விசயம், பெரும்பாலான மக்களால் பேசப்பட்டது எனலாம்.

 • sm-qatar - doha,கத்தார்

  ஸ்வாமியே சரணம் அய்யப்பா

 • sm-qatar - doha,கத்தார்

  ஸ்வாமியே சரணம் ஐயப்பா

 • venkat -

  its magara vilaku and not magara Jothi...it is man made... so please dont misguide...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement