Advertisement

சாலை விபத்துகளில் 8 பேர் பலி

ஒசூர்: தமிழகத்தில் நடந்த பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கி 8 பேர் பலியாயினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அதேநேரத்தில். ஓசூரிலிருந்து வந்த கார், சூளகிரி அருகே பவர்கிரேடு என்ற இடத்தில் எதிர்திசையில் சென்று, அரசு பஸ் மீது மோதியது. இதில் அரசு பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது.
சம்பவத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கோவில்பட்டி அருகே
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை என்ற இடத்தில் கார் மீது டூவிலர் மோதியது. இதில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (12)

 • k annapoorani - hosur,இந்தியா

  Anyone not driving properly it affects others very severely.driving rules should be made as strict

 • Venkat - Chennai,இந்தியா

  கொஞ்சம் பேர் ரோடு மோசம் அது இது என்று திட்டுகிறார்கள். ரோடு எவ்வளவு மோசமாக இருந்தாலும், ரோடு கண்டிஷனுக்கு தகுந்த வேகத்தில் தான் போக வேண்டும். இல்லை என்றால் விபத்து தான். ரோட்டை மட்டும் குறை சொல்லி எந்த பயனும் இல்லை.

 • Aravindh Raman - Auckland,நியூ சிலாந்து

  95 % சாரதிகளுக்கு சாலை விதிகள் தெரிவதில்லை அல்லது தெரிந்தும் கடைப்பிடிப்பதில்லை என்பதே உண்மை. வளைவில் முந்துதல் என்பது எவ்வளவு முட்டாள் தனம் என்பது பலருக்கு தெரியாத விடயம் என்பது வேதனைக்குரியது.

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  பஸ்ஸு இன்னா நைனா கரப்பா பூச்சிக்கண்டி கொப்புற கெடக்கு??

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  கண்ணு தெரியாம ஓட்றானுவ.. நேத்து நைட்டு அசோக்பில்லரண்ட சைக்கிள ஓரமா வந்தினுகிறேன்.. டோமரு ஓரசாத கொறையா அவ்ளோ டிராபிக்ல ரொம்ப வேகமா பைக்கை ஒட்டி போறான்..நல்ல வேல சைடுல நித்ருந்த பெரியவர் என்ன சைக்கிளோட பிடிச்சி காப்பாத்துனாரு...ஏண்டா சைக்கிள ஓரமா ஓட்டிட்டு போனாலும் சனியே மாதிரி வாறீங்களே வூட்ல இன்னாடா துண்ணுறீங்க? பைக் காரனுவ ராவடி பேஜார்நைனா...அடுத்தவாட்டி கண்டி மவனே எவனாவது ராவடி பண்ண வந்தா சைக்கிள குப்பற போட்டு பைக்காரண ஒரே எத்து பில்லர் தாண்டி உழுவனும்..

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   காலங்காத்தால இது நடந்திருக்க வாய்ப்பில்லை கைப்புள்ள. டாஸ்மாக் திறந்தபின்தானே நடந்தது ?

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  பரிதாபம் வண்டி ஒட்டியவர்கள் பயிற்சி உள்ள ஓட்டுனர்கள் தானா

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   சென்றவருடம் நடந்து போகும்போது மோசமான ராமாபுரம் ரோட்டில் ஒரு கால்டாக்சி ஆக்சிடண்டில் மாட்டினேன். டிரைவரிடம் லைசென்ஸ் கிடையாது. இன்னொருவருக்கு பதில் இவன் கால் டாக்சி ஒட்டியுள்ளான்.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கோரக்காட்சிகள்... வேகம் ஆபத்து... அதுவும் தரக்குறைவான சாலை...

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  மோசமான ரோடுகள் இருக்கும் நிலையில், பலருக்கு சாலை விதிகள் தெரிவதில்லை. தெரிந்தவர்களும் சரியாக கடைபிடிப்பதில்லை. 5 வருடங்களுக்கொரு முறை சாலைவிதிகளை கற்றுக்கொண்டு தேர்வு எழுத செய்ய வேண்டும்.

  • Kanna - ,

   ஊரே சிரிக்கும் உங்கள பாத்து. ஓசூர் - கிருஷ்ணகிரி ரோடு எப்படி இருக்குதுன்னு தெரியாம சும்மா வாயில வர்றதெல்லாம் வாந்தி எடுக்க வேண்டாமே.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

   ரோடுகள் என்றால் என்ன என்று வளர்ந்த வெளிநாடுகள் சென்று பார்க்காதவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. எப்படி எது இருந்தாலும் நமது உயிர், ரோடு, ஓட்டுனர், கார் கண்டிஷன் அனைத்தையும் பொருத்தத்தில்லாது நமக்கு எதிரிலும் பின்னாலும் வருபர்களையும் பொறுத்தது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement