Advertisement

விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை: ஜெட்லி

புதுடில்லி: விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும், இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நிதியமைச்சர் பேசியதாவது: உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வளர்ச்சியின் பலன்களை பல தரப்பட்ட மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால், பெரும்பாலான மக்கள் விவசாய துறையை சார்ந்து உள்ளனர். அத்துறையின் லாபம், வளர்ச்சியும் தெளிவாகவும் இல்லையென்றால், நாட்டின் வளர்ச்சியை நியாயபடுத்த முடியாது.வளர்ச்சியின் பலன்கள் விவசாய துறையை சென்றடைவதும், அத்துறையை உயர்த்துவதுமே அரசின் முக்கிய நோக்கமாக இருக்கும்.அதிக உற்பத்தி காரணமாக, பல இடங்களில் சில பொருட்களின் விலை வீழ்ச்சியடைகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை கிடைப்பதில்லை. இந்த சூழ்நிலையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பலன்கள் தெளிவாக தெரிய துவங்கியுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் விவசாயிகள் தவறவிடுவதில்லை. உணவுபற்றாக்குறை இருந்த நம் நாட்டில், தற்போது உணவு உற்பத்தி மிகுதியாக உள்ளது. இதனால், விலை குறைந்து வருகிறது. இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (23)

  • Thanigai Arasu - Trichy ,இந்தியா

    BJP promised to double the price of agricultural products before 2014 Lok Sabha elections. Atleast after about 4 years, Finance Minister told that they have initiated actions to increase the agricultural products. This has been done in anticipation of 2019 election.

  • Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா

    கடந்த ஆண்டுகளில் சேமித்த உணவு தானியங்கள் , கோதுமை , சோளம் போன்ற சில பூச்சிகளாலும் , முறையான பராமரிப்பில்லமல் மனிதன் உண்ண முடியாமல் போனது. அதற்கு பிறகு நமது விவசாயிகள் பட்ட கஷ்டம் தெரிந்ததே undefined அரசின் முதற்கடமை விவசாயத்திற்கும் அதன் ஆசானாகிய விவசாயிக்கும் தேவையான உதவிகளும் செய்வது. மஹாராஷ்டிராவில் கரும்புக்காகவே பல சொசைட்டி உண்டு அதுபோல ஊழலும் உண்டு காரணம் சொசைட்டி தலைகள் அரசியலோடு உள்ளதுதான். ஆக விளை பயிர்களுக்கு உரிய விலை கொடுத்தால் மட்டும் போதாது அதை வாங்கி அந்தந்த கிராமத்திலோ தாலூக்காவிலோ உள்ள படித்த குறிப்பாக அக்ரி படித்தவர்களிடம் பொறுப்பை கொடுங்கள் அது ஒரு குழுவானால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாவட்டத்திற்குள் மாற்றுங்கள் இதில் விவாசயிகளும் இடம்பெறட்டும்.

  • K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா

    உழவர் சந்தை மூலமா கலைஞர் என்ன கொண்டு வந்தார். அதன் முடிவு என்ன. இரண்டு கலகங்களும் உருப்படியா ஒன்றுமே செய்ய வில்லை. எதையுமே இவர்கள் உருப்படியா செய்ததா சரித்திரம் கிடையாது. அப்படி செய்திருந்தாலும் அது கட்டிங்குடன்தான் , டாஸ்மாக் போல. டாஸ்மாக் தான் இவர்கள் செய்த உருப்படியான காரியம். அதனால் இன்றைக்கு பிளம்பிங், எலக்ட்ரிகல்,ஹோட்டல்,கடை பையன் போன்ற எல்லா வேலைகளையும் வடக்கத்தியான் அழகாக செய்கிறான். இப்போது புரியும் தெற்கை தேய்த்தது இரு கழகங்கள் தான் என்பது.

  • Selvakumar - Trichy,இந்தியா

    டில்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது விவசாயிகளின் உயிருக்கு விலை மதிப்பு இல்லை.விவசாயிகளின் விவசாய பொருட்களுக்கு உரிய விலையா.நம்பும்படியாக இல்லை

  • Agrigators - Chennai,இந்தியா

    முறை படுத்துங்கள் அடுத்த தலைமுறை வரை உங்களை வாழ்த்துவார்கள் Agrigators India

  • m.ramalingam - puducherry,இந்தியா

    அருண் ஜெட்லி பூச்சி வாடையுடன் உள்ள ரேஷன் அரிசி சாப்பிட்டதுண்டா? நாங்கள் தினம் அதுதான். விவசாயம் பலனை, இதில் ஒருவர் சொல்லி யுள்ளது போல், ஒருசில வசதி யான நபர்கள் தான் அனுபவிக்கின்றனர்.

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    //விவசாய பொருட்களுக்கு சரியான விலை, இடைத்தரகர்கள் விலக்கல். இதைத் தானே ஸார் கலைஞர் உழவர் சந்தை திட்டம் மூலமாக அப்பவே கொண்டு வந்தார்.

  • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

    அப்போ அதுக்கும் ஒரு இருபத்து எட்டா ஜி ? கைகட்டி முண்டமாக நமது விவசாயிகள் டெல்லியில் அழுதபோது கண்ணில் படவில்லையே..

  • Rajkumar NS - Theni,இந்தியா

    பேசினால் மட்டும் போதாது ..........நடைமுறைக்கு கொண்டு வந்து அதை வழிநடத்தவும் செய்து விவசாயிகள் பெறுமாறு செய்ய வேண்டும் தவிர இடைத்தரகர்கள் அல்ல .

  • Nagai Nagarajan Swaminathan - Chennai,இந்தியா

    வளர்ச்சியின் பலன்களை பல தரப்பட்ட மக்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பதில் உண்மையில்லை. அதன் பயனை பெருமுதலாளிகளே அனுபவித்தது வருகிறார்கள். ஏழை மற்றும் நடுத்தர மக்கள், விவசாயிகள் சிறுவியாபாரிகள் இன்னமும் அதிக கஷ்டம் தான் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.மூத்தகுடிமக்கள் நிலைமையோ இன்னமும் மோசம்.

  • Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்

    "உணவுபற்றாக்குறை இருந்த நம் நாட்டில், தற்போது உணவு உற்பத்தி மிகுதியாக உள்ளது. இதனால், விலை குறைந்து வருகிறது. இவ்வாறு அருண் ஜெட்லி பேசினார்." அது இருக்கட்டும் உழவு கூலி ,நடு கூலி களையெடுக்கிற கூலி ,மருந்து ,உரம் எல்லாம் ஏறி போச்சே இது எல்லாம் விலை குறையவே மாட்டேங்குதே.

  • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

    நைனா ஒரு டவிட்...காங்கிரஸ் ஆச்சிபண்ணப்போ எது எத வேணான்னு அரசியல் பண்ணி கொடி புடிச்சீகிகளோ,,அத்த எல்லாம் இப்ப பாராளுமன்றத்துல நீங்க நிறைவேத்துறீங்களே,அது எதுக்கு நைனா?

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    ஓரிரு ஏக்கர் துண்டுநிலத்தை வைத்துக்கொண்டு போதுமான முதலீடின்றி  தொடர்ந்து  லாபகரமான வேளாண்மை சாத்தியமில்லை. பிற்பட்டோரும்  தாழ்த்தப்பட்டோருக்கு கலந்து வாழும் பகுதிகளில் கூட்டுப்பண்ணையும் கனவுதான்.(கூட்டுறவு இயக்கமே செத்துவிட்டது). நில உச்சவரம்போ வசதியான முனைவோரை தடுக்கிறது. எவ்வளவு விலைகொடுத்தாலும் கிடைக்கும்   லாபம் டாஸ்மாக்குக்கோ அக்கம்பக்கத்து வீடுகளின் விசேஷங்களுக்கான (போலி கவுரவ ) மொய்க்கோ வீணாக  செலவாகுமெனில் விவசாயிகள் வாழ்வை மேம்படுத்துவதெப்படி ? இவர்களைத் திருத்தவாவது    ஸீரோ பட்ஜெட் விவசாயத்தைக் கட்டாயமாக்கி சட்டம்போடுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement