Advertisement

நீதிபதியுடன் பார்கவுன்சில் உறுப்பினர்கள் சமரச முயற்சி

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் போர்க்கொடி தூக்கிய பிரச்னையில் தீர்வு காணும் விதமாக மூத்த நீதிபதி செல்லமேஸ்வரரை பார் கவுன்சில் குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.

தீர்வு காண விருப்பம்சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வரர், குரியன் ஜோசப், மதன் லோகூர், ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட 4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் பார்கவுன்சில் தீவிரமாக இறங்கியுள்ளது. பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்திய இந்த கவுன்சில், நீதிபதிகளை சந்தித்து பேச முடிவு செய்தது. பிரச்னையை அமைதியான முறையில் தீர்ப்பதே எங்களின் விருப்பம் என பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கூறினார். தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைஇந்நிலையில், மனன்குமார் மிஸ்ரா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு ஒன்று மூத்த நீதிபதி செல்லமேஸ்வரரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு நீதிபதி வீட்டில் நடந்தது. மற்ற 3 நீதிபதிகளையும் சந்திக்க உள்ள இந்த குழு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவையும் சந்திக்க முடிவு செய்துள்ளது. இதனிடையே, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நான்கு நீதிபதிகளையும் சந்தித்து பேசுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தலையிட தேவையில்லைஇந்த பிரச்னை தொடர்பாக நீதிபதி குரியன் ஜோசப் கூறுகையில், இந்த விவகாரத்தில், வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. கோர்ட் நிர்வாகத்தின் மூலமே பிரச்னை தீர்த்து கொள்ளப்படும் எனக்கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  எதனை பெரியார்கள் வந்தாலும் அது அதுவாகவேதான் இருக்கிறது?அதன் ஆளுமைக்கு அளவுகோலே இல்லை?

 • Thaen Tamil - Salem,இந்தியா

  'why Justice Ranjan Gogoi revolted Against Dipak Mishra who re ed 1982 Sikh Riot Case against Congress. because of his family loyalaity to Congress His father Keshab Chandra Gogoi was a former Chief minister of Assam(Indian National Congress), how can he tolerate any Decission against Congress whether its sikh Riot, bofors, 2G scam etc.... This is called Blood loyality. I wish All Political appointees are removed from Judicial tem, Revamp and reform it like IPS, IAS.'

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நீதித்துறை காவித்துறையாகுதா ? பணமதிப்பு இழப்பு மாதிரி நீதிக்குப்பதிலாக அநீதி ?

 • ஷாஜஹான் முஹமது - Jeddah,சவுதி அரேபியா

  யார் இந்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா? மோதலின் பின்னணி என்ன? "சினிமா தியேட்டரில் தேசீய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்" என தேசப்பற்றுக்கு பரபரப்பான தீர்ப்பை வழங்கியவர் தான் தீபக் மிஸ்ரா. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா இவருடைய மாமா ஆவார். 1979 ல் வழக்கறிஞர் ஆக வாழ்க்கையை ஒடிசாவில் துவக்கி, மத்திய பிரதேசம், பீகார் என தலைமை நீதிபதி பொறுப்புகளை வகித்தவர். தீர்ப்புகளில் பண்டைய இலக்கியம், ராமாயணம், மகாபாரதம் எல்லாவற்றிலிருந்தும் கருத்துக்களை சொல்லி தீர்ப்பை வழங்கும் பக்திமான். 1985 ல், "நான் ஒரு பிராமணன். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எந்தவொரு நிலமும் இல்லை " என உறுதிமொழி கொடுத்து, இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஓட்டியபொழுது, கட்டாக் மாவட்ட நீதிமன்றம் இவருடைய மோசடியை கண்டு பிடித்து ரத்து செய்த பின்னரும் நிலத்தை ஓட்டிக் கொண்டு இருந்த நீதிமான் 2012 CBI விசாரணை போதுதான் இந்த நில மோசடி அம்பலமானது. அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ பூவ் தற்கொலை கடிதத்தில் தீபக் மிஸ்ரா பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது. பாஜக RSS பரிவாரத்திற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான தீர்ப்புகள், வழக்குகள் இவரது கையில் இருந்தது இருக்கிறது. Master of Roaster என்று எதேச்சதிகாரியாக சுப்ரீம் கோர்ட்டிற்கு வரும் வழக்குகள் அனைத்தும், யாரிடம் போக வேண்டும் என சிலருக்கு சாதகமாக முடிவு செய்கிறார். நீதிமன்ற நிர்வாக நடைமுறைகளை மிதிக்கிறார். CJI ஆக பதவி ஏற்ற பின், இவருக்கு அடுத்த சீனியர் நீதிபதியான செல்லமேஸ்வர் , "உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊழல்களை விசாரிக்க SIT ஒன்று அமைப்பது தேவையா ? "என்ற முக்கியமான வழக்கில் 2017 நவம்பரில் 5 பேர் கொண்ட அமர்வு அமைத்தார் அதை மறுத்து 3 பேர் கொண்ட அமர்வை தீபக் மிஸ்ரா அதிரடியாக அமைத்தார். 1)மும்பை வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கு விவகாரத்தில், அவரது இறுதியான கருணை மனுவை மிக அவசரமாக நள்ளிரவில் விசாரித்து "தூக்கில் போடச் சொன்ன நீதிமான் இவர் தான் " 2)உச்ச நீதிமன்றத்திற்கு வந்துள்ள அயோத்தி பாபர் மசூதி - ராமஜென்ம பூமி நில விவகார வழக்கில் மூன்று பேர் கொண்ட பெஞ்ச் /அமர்வின் தலைவர் இவரே 3)பாஜக தலைவர் அமித் சா நேரடியாக சம்பந்தப்பட்ட சோராபுதீன் சேக் கொலை வழக்கை விசாரித்து வந்த CBI நீதிபதி லோயா சந்தேகமான முறையில் இறந்தார். லோயா சந்தேக மரணத்தை விசாரிக்க கோரும் வழக்கில் அமித் சா பெயர் அடிபடுகிறது. இந்த வழக்கை ஒரு இளைய நீதிபதியிடம் வழங்கிவிட்டார், தீபக் மிஸ்ரா. இதில் அமித் சாவை பாதுகாக்க தலைமை நீதிபதி முயற்சிக்கிறார் என்பதும் மூத்த நீதிபதிகளின் தற்போதைய குற்றச்சாட்டு ஆகும். 4) ஏர்செல் மேக்சிஸ் பேர வழக்கின் விசாரணையிலும், இவர் தந்திரமாக விலகி கொண்டார். இன்னும் ஏராளம், ஏராளம் செய்திகள் உள்ளன. நன்றி . Chandra Mohan

 • Anandh Palani - toronto,கனடா

  இந்த காங் .........70 வருடங்களாக இந்தியாவிற்கு பிடித்த சனியன் .2019 உடன் விலகிவிடும்.

 • Anandh Palani - toronto,கனடா

  இந்த குரியன் அவங்களுக்கு உள்ள பேசணும்னு இப்போ சொல்றாரே ,இது மீடியாவிலே பேசறதுக்கு முன்னே எங்க போச்சு

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நாட்டாமைகளுக்கு நாட்டாமை பண்ணும் அவலம் .

 • Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து

  நீதிபதிகளை வைத்து காங்கிரஸ் போட்ட திட்டம் பிசுபிசுப்பு.... இழுத்த இழுப்புக்கு வராத தலைமை நீதிபதியை பதவியிழக்கை வைக்க 5-நட்சத்திர-மாஃபியா வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் திட்டம் பிசுபிசுப்பு.... சகிப்பின்மை போராட்டம், முற்போக்குகளின் அவார்டு வாப்ஸி போராட்டம், மாணவர்கள் போராட்டம், சிறுபான்மை பயத்தில் வாழ்கிறார்கள் என்று போராட்டம், பீஃப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், ஜிக்னேஷ் மேவானி போன்றோரை கொண்டு போலி-தலித் போராட்டம் என அத்தனை போராட்டங்களும் தோற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கயவர்கள் கையிலெடுத்திருப்பது நீதிபதிகள் போராட்டம். இதன் பின்னணியில் சீனா பாகிஸ்தான் நாடுகளும் , காங்கிரஸ் கம்னியுஸ்ட் கட்சிகளும் இருப்பது தெளிவாக தெரிகிறது ,, காங்கிரஸ் காரர்களுக்கு நாடு எப்படி போனாலும் பதவியில் இருக்கணும் ,, கம்னியுஸ்ட் கட்சிக்கு நாட்டை பிரிக்கணும் ,, பாகிஸ்தான் காரனுக்கு இந்தியா விழனும், இதுதான் இப்போதைய ஒவ்வொருவர் ஆசை ,, சமீபத்தில்தான் ரகசிய கூட்டம் பாகிஸ்தான்காரன் மற்றும் இங்குள்ள காங்கிரஸ் சதிகாரர்கள் இணைந்து நடத்தினர்,, இது போல் சீனாக்காரர்களை யாரெல்லாம் சந்த்தித்தார்களோ ..இது பெரிய அரசியல் விளையாட்டு, பல நாடுகளின் யோசனைப்படி மோடிக்கு எதிராக நடக்கும் சதி . கூட்டிக்கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும் > >இந்த போராட்டமும் சொதப்பி, மோடிக்கு சாதகமாவதை எப்படி தாங்குவார்கள் கயவர்கள்…. 'ராகுல் காந்தி இதை அரசியலாக்க கூடாது' என்று ராகுலை குறிப்பிட்டு பார் கவுன்சில் அறிக்கை விட்டிருப்பது சிறப்பு (செருப்படி). மாநிலம் முழுதும் பயன் தரக்கூடிய ஒரு நர்மதா அணையை கட்டுவதற்குள் பல இன்னல்களை மோடி அடைந்தார் - குஜராத் முதல்வராக இருந்த போது. அந்த திட்டம் வரவிடாமல் தடுத்தது ஒரே ஒரு நபர்: மேதா பாட்கர். - மேதா பாட்கர் அமெரிக்காவில் $ பெற்று நர்மதாவுக்கு எதிராக போராட்டங்களையும் வழக்கையும் நடத்தியனார். அந்த விவரங்கள், அவர் தனது அமெரிக்க என்.ஜி.ஓ தலைவருக்கு எழுதிய இமெயில் மூலம் வெளியானது. சர்ச்சையை கிளப்பியது. இது போக, அந்த வழக்கில் நீதிமன்றம் விலைபோன விவரங்களும் அந்த இமெயிலில் குறிப்பிட பட்டிருந்தது. நர்மதா வழக்கில் மேதா பாட்கருக்கு சாதகமாக தீர்ப்பளித்தவர் அல்த்தமஸ் கபீர். இவர் பிற்காலத்தில், தான் ஓய்வு பெறும் நாளில். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகி, நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்தார் - மேதா பாட்கருக்கு எதிராக ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு குஜராத் காங்கிரஸ் MP கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்க படாததற்கு சோனியா காரணம். ஒரு தனி நபரால் ஒரு மாநிலமே பயனடைய முடியாமல் செய்ய முடிந்தது. இந்த 5 நீதிபதிகளில் ஒருவர் சோனியாவால் உருவாக்கப்படடவர் ,, இன்னொருவர் மேகாலயா காங்கிரஸ் முன்னாள் முதல்வர் மகன் அதுவும் சோனியா அல்லக்கைதான் ,, இன்னொருவர் கம்னியுஸ்ட், ( கம்னியுஸ்ட், என்றால் கேக்கவே வேண்டாம் நாட்டு நலன் சார்ந்தவராக இருக்க மாட் டார், இன்னொருவர் ஓய்வு பெற போகிறவர் ,, - ஃபோர்டு ஃபௌண்டேஷன் $ வாங்கி இயங்கிய என்.ஜி.ஓ சோனியா கைக்கூலி தீஸ்தாவுக்கு மும்பை நீதிமன்றம் கைது ஆணை பிறப்பிக்க, அதை எதிர்த்து தொலைபேசி அழைப்பு மூலம் உச்சநீதிமன்ற பெயில் வாங்கித்தந்த கபில் சிபலுக்கு ( அந்த அளவுக்கு செல்வாக்கு உள்ள கபில் சிபல் ) அதே உச்சநீதிமன்றத்தில் பழைய 'மரியாதை' இல்லை என்று கதறுகிறார் . ராம்ஜன்ம பூமி வழக்கில் ராமர் கோவிலுக்கு எதிராக ஆஜராகும் கபில் சிபல் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ராவிடம், 'நீங்கள் அக்டோபரில் ஓய்வு பெறுகிறீர்கள். அதற்குள் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. எனவே, வழக்கை 2019 தேர்தலுக்கு பின் விசாரிக்க ஒத்தி வையுங்கள்' என்று சொல்ல, பதிலுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, 'நான் கேட்டு முடித்து விடுவேன். வழக்கு ஒத்தி வைக்கப்பட மாட்டாது' என்றதோடு, சிபலை பல முறை கண்டித்தும் பேசினார். இது கபில் சிபலுக்கு மிகவும் மரியாதை குறைவாக நினைக்கிறார் ஏனென்றால் ராமர் கோவில் தீர்ப்பு அளித்து விட்டால் அது 2019 தேர்தலில் பிஜேபி க்கு சாதகமாகி விடும் என்பதனால் காங்கிரஸ், கம்னியுஸ்ட் கடும் எதிர்ப்பு செய்கிறார்கள் ,, ஏனென்றால் தீபக் மிஸ்ரா மோடி காலத்தில் பதவிக்கு வந்தவர் இதற்கிடையில் இன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் பிரகாஷ் காரத் ராம ஜன்ம பூமி வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரிக்க கூடாது நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என்கிறார். இவருக்கு நிதியிடம் என்ன வேலை ராமர் கோவில் வழக்கை எங்கள் 5 பேரிடம் தர வேண்டும் என்பது தான் இவர்கள் கோரிக்கை ,, ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியம் ராமர் கோவில் வழக்கு ,, ஒரு வழக்கை எங்களிடம் தாருங்கள் என்று கேக்க இவர்கள் யார் ,, பிறகு எதற்கு தலைமை நீதிபதி ,, ஒரு வழக்கை யாரிடம் கொடுக்கணும் என்பதை அவரே முடிவு செய்வார் - ராம் மந்திர் வழக்கில் கண்டிக்கப்பட்ட இன்னொரு மூத்த வழக்கறிஞர் தவான், 'எனக்கு மரியாதை இல்லை. நான் வக்கீல் தொழிலை விட்டே போகிறேன்' என்றார் (திரும்பி வந்தார் என்பது வேறு விஷயம்) மேலும் பிரதாப் பூஷன் என்ற வழக்கறிஞர் ,இவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வாதாடுபவர் இந்த பிரசாந்த் பூஷனுக்கு ரூ 25 லட்சம் அபராதம் விதித்தார் தீபக் மிஷ்ரா. இது போன்ற செயல்களால் தொலைபேசியில் பெயில் வாங்கும் கபில் சிபல், நடு இரவில் தீவிரவாதிக்காக தலைமை நீதிபதி கதவை தட்டும் தீவிரவாத ஆதரவு, ஹிந்து விரோத, ஆக்டிவிஸ்ட் வக்கீல்கள் இந்திரா ஜெய்சிங், பிரசாந்த் பூஷன், ராஜிவ் தவான் போன்றோருக்கு 'பழைய மரியாதை' இல்லை. - மூத்த வழக்கறிஞர்களையும் வரிசையில் வர சொல்கிறார் மிஷ்ரா. . மூத்த வழக்கறிஞர்கள் என்பதற்காக அவர்கள் வழக்கை முந்தி கேட்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுநல வழக்கு ஒருவர் போட்டால் அந்த வழக்கை நன்கு ஆராய்ந்து அதன் அவசியம் என்ன என்று கேட்டு அது நாட்டு நலன்களுக்கு எதிராக இருந்தால் அந்த பொதுநல வழக்குகளை ஒழிக்க முயல்கிறார் தலைமை நீதிபதி. மிஸ்ரா,, தலைமை நீதிபதியின் இந்த முயற்சிக்கு சட்ட அமைச்சும் ஆதரவு தெரிவித்துள்ளது. ,, இது இவர்களுக்கு எரிச்சல் பொதுநல வழக்குகள் இல்லாமல் போனால், பல ஆக்டிவிஸ்ட்டுகளின் பிரபலத்துவமும் பறி போய்விடும் எனபதால் டாக்டர் சுப்ரமணியன் ஸ்வாமி, கபில் சிபல், பிரசாந்த் பூஷன், இந்திரா ஜெய்சிங் உட்பட பலரும் எதிர்க்கிறார்கள் இந்த திட்டத்தை. எனினும், இந்த பொது நல வழக்குகள் இனி தலைமை நிதிபதியால் சரி பார்க்க பட்ட பின்னர் நாட்டு நலனுக்கு எதிராக இல்லாத பட்ச்சத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்ற நிலை வர போவது நிச்சயம் என்றே தெரிகிறது . முக்கியமானது இஸ்ரேல் பிரதமர் நாளை வருகிறார் அதற்குள் உலக அரங்கில் மோடியை கேவலப்படுத்துவது இது போக…. 1 - ராம ஜன்ம பூமி. 2 - ஆதார். 3 - 1984 சீக்கிய படுகொலை. 4 - சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களாயிருக்கும் வழக்கறிஞர்கள், சட்ட பயிற்சியை கைவிட வேண்டும், 5- வழக்குகளில் ஆஜராக கூடாது என்ற வழக்கு. 6 - அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு அனுமதி. 7 - அரசியல் வாதிகள் போன்ற உயரிய வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வேண்டுகோள் இதுவெல்லாம் காங்கிரஸ் கட்சி விரும்பாத செயல்கள்,, ஏனென்றால் அவர்கள் குடும்பமே 6 வழக்குகளில் சிக்கி உள்ளது ,, இது மிக பெரிய தலைவலியை உருவாக்கி விட்டது லாலு பிரசாத் இரண்டாவது வழக்கிலும் தண்டனை. மூன்றாவது நான்காவது வழக்குகள் முடிவு விரைவில் (மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் உள்ள 90+ வழக்குகளில் வழக்குகளில 6 வழக்குகள் லாலுவுக்கு எதிராக ). ….. என பல முக்கிய விவகாரங்கள் இந்த ஆண்டில் முடிவுக்கு வரவிருக்கின்றன. முத்தலாக் விவகாரத்தில் தோற்ற காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் உள்ளிட்ட போலி செக்குலர் கூட்டம், 'ராமர் கோவில் வராமல் தடுத்தால் சிறுபான்மை வாக்கு வங்கியை உறுதி செய்து கொள்ளலாம்' என அந்த வழக்கை தடுக்க பெரும்பாடுபட்டு வருகின்றன. இந்த ஊழல் கூட்டத்திற்கு தீபக் மிஷ்ரா சரிப்படமாட்டார் என்பதால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நால்வரைக் கொண்டு ஊடகங்களை சந்திக்க ஏற்பாடானது. “ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது” என்று கூறிய இந்த நால்வர், காங்கிரஸ் ஆலோசனை படி தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் ஊடகங்களுக்கு வழங்கினர். பிரச்சினை என்னவென்றால், சில வழக்குகளை விசாரிக்க இந்த நால்வரும் ஆர்வம் காட்டுகின்றனர். தலைமை நீதிபதியோ அந்த வழக்குகளை மீதமுள்ள 20 நீதிபதிகளுக்கு நியமிக்கிறார் - அவருக்கு அளிக்கப்பட்ட உரிமை அது. இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இந்த நால்வரும், “எங்களுக்கே அந்த வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டனர். தலைமை நீதிபதி அந்த வழக்குகளை இதர நீதிபதிகளுக்கு ஒதுக்குவது குற்றம் என்றால், அந்த குறிப்பிட்ட வழக்குகளை நாங்களே விசாரிக்க வேண்டும் என்று இவர்கள் கோருவது மிகப்பெரிய குற்றம். இவர்களுக்கு அந்த வழக்குகளில் ஏன் தனிப்பட்ட ஆரவம்? காங்கிரசும், கம்யூனிஸ்ட்டும் இந்த நால்வரை ஆதரிக்கின்றன. இந்த நால்வருக்கே அந்த வழக்குகளை ஒதுக்குங்கள் என்று கேட்பது இந்த கூட்டத்தின் பின்புலம் யார் என்பதை உறுதி செய்வதோடு, 'ராகுல் காந்தி இதை அரசியலாக்க கூடாது' என்று ராகுலை குறிப்பிட்டு பார் கவுன்சில் அறிக்கை விட்டிருப்பது சிறப்பு (செருப்படி) . பல சொதப்பல்கள். ==================== நால்வரும் ஊடகங்களை சந்தித்த போது, அந்த நால்வரின் பின்னும் ஊடக வியாபாரி சேகர் குப்தா நின்று அவர்களிடம் கிசு கிசுத்தது, ஊடக கூட்டத்திற்கு நடுவே வழக்கறிஞர் - ஆக்டிவிஸ்ட் இந்திரா, ஜெய்சிங் வந்தது, ஊடகத்தோடு ஊடகமாக இந்திரா ஜெய்சிங்கும் கேள்வி கேட்டது, ராபர்ட் வதேரா வழக்கு வழக்கறிஞர் துளசி எதற்காக இந்த நீதிபதிகள் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் சொதப்பல்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, டேனியல் ராஜா சென்று நீதிபதி சலமேஸ்வரை சந்தித்து அது நிருபர்களின் கேமராக்களில் பிடிபட்டது ஜனநாயகம் செத்துவிட்டது என்று சொன்ன இந்த நால்வரும், ஜனநாயக முறைப்படி தங்கள் பிரச்சினையை தீர்க்க எந்த முயற்சியும் செய்யாதது வெட்கக்கேடு. இவர்கள் தங்கள் பிரச்சினையை தீர்க்க, சட்ட அமைச்சகத்தை நாடவில்லை. அவர்களின் திட்டம் முழுதும் பாழானது. பிற நீதிபதிகளையும் கூடி விசாரிக்கவில்லை. ஜனாதிபதி கோவிந்தை இவர்கள் நாடவில்லை. பிரதமரை நாடவில்லை இத்தனையையும் விட்டு ஊடகங்களை நாடியது ஜனநாயக முறையில்லை. ஆக இவர்கள் எதிர்பாராத வகையில் பல சொதப்பல்கள். 1997இல், உச்சநீதிமன்றத்தில் வகுத்த நீதிமன்ற நெறிமுறையில் 16 விஷயங்கள் முடிவு செய்யப்பட்டன. அதில் இரண்டு விஷயங்களில் ஒன்று, 'நீதிபதிகள் பொதுவிவாதத்தில் ஈடுபடக்கூடாது' என்பது. அதன்படி, நீதிபதிகள் ஊடகங்களை சந்திப்பது தடை செய்யப்பட்ட ஒன்று. முன்னாள் அட்டார்னி ஜெனரல் உள்ளிட்ட பலரும் இந்த நால்வருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இவர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர். அந்த நால்வரில் தவறை உணர்ந்த இருவர் இப்போது வெளிவந்து, 'எல்லா பிரச்சினையும் தீர்ந்து விட்டது. எவ்ரிதிங்க் இஸ் நார்மல்' என்று மழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களது போராட்டதின் மூலம், உச்சநீதிமன்றத்தின் வெளிப்படைத்தன்மையற்ற, நமக்கு-நாமே நீதிபதிகள் நியமன திட்டம் 'கொலீஜியம்' மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உறவினர்களும் ஆதரவாளர்களும் எப்படி நீதிபதியாகிறார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்ததும் கொண்டு வந்த முக்கியமான சட்டம் - நீதிபதிகள் நியமனத்தை சரிசெய்யும் - தேசிய நீதிமன்ற நியமன குழு சட்டம். அந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரித்து, அந்த சட்டம் செல்லாது என தள்ளுபடி செய்து கொலீஜியத்தை தொடர்ந்தது உச்சநீதிமன்றம். இப்போது இந்த நால்வரும் தொடுத்த போர்க்கொடி, மீண்டும் கொலீஜியத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதோடு, தேசிய நீதிமன்ற நியமன குழுவிற்கு உயிர் கொடுக்க வாய்ப்பாக அமைகிறது. நால்வர் கலகம் நாட்டுக்கு நன்மையில் முடிய வாய்ப்பிருக்கிறது. வரும் வாரங்களில் கொலீஜியம் நிலைமை என்னவாகும் என்று தெரியும் >> நீதித்துறையின் வெளிப்படை தன்மையை அதிகரிக்க, அதை கணினிமயமாக்க மோடி அரசு எடுத்த முடிவுகளை முன்னாள் தலைமை நீதிபதி டாக்கூர் தடுத்தார். அவரையடுத்து வந்த கேஹர் ஆதரவோடு அந்த திட்டம் பெருமளவில் - கீழ் கோர்ட்டுகளில் - நிறைவேற்றப்பட்டு வருகிறது. நீதிபதிகளின் - எத்தனை வழக்குகள், எத்தனை தீர்ப்புகள், ஒவ்வொரு வழக்கும் எவ்வளவு காலம் எடுத்து கொண்டார் - என விவரங்கள் பகிரப்படுவதால், இந்த நீதிபதிகள் வரும்காலங்களில் பதவி உயர்வளிக்கப்படும்போது அவரது தரம் வெளிப்படையாக தெரியும்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தீபக் மிஸ்ரா காங்கிரஸ் குடும்பத்தவர் காங்கிரஸ் எம்பி & நீதிபதியாக இருந்தவருமான ரங்கநாத் மிஸ்ராவின் மருமகனும் ஜூனியருமாவார் எதிர்க்கும் நீதிபதிகளோ அரசால் நியமிக்கப்பட்டவர்களில்லை தீபக் மிஸ்ராவைப் போல கொலீஜியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இவர்களுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. அரசுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயமெதுவுமில்லை ஆனால் எதற்கு அடித்துக்கொள்கிறார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை (ஆளுக்காள் டு ஜி சொத்துக்குவிப்பு போல பசையான வழக்கு வேணும்னு கேட்டால் என்ன அர்த்தம்? ) அரசாலோ நம்மாலோ இவர்களை மாற்றமுடியாது.. நுகர்வோர் கலாச்சாரம் பரவிவிட்ட இந்த நூற்றாண்டில் சுயநலத்துக்குக் குறைவேது?

 • Sahayam - cHENNAI,இந்தியா

  இந்த நீதிபதிகள் தவறு செய்து இருந்தால் மத்திய அரசு மற்றும் உச்ச நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  " நீதிபதி குரியன் ஜோசப் கூறுகையில், இந்த விவகாரத்தில், வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. கோர்ட் நிர்வாகத்தின் மூலமே பிரச்னை தீர்த்து கொள்ளப்படும் எனக்கூறினார்." அப்படி இருக்க எதற்க்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் இவர்? ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் பத்திரிக்கையில் ஒரு செய்தி வந்தாலோ அல்லது பொது மக்களுக்கு நேரடியாக ஒரு செய்தியை தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலுமே அவர்கள் விமரிசனத்திற்கு ஆளாவார்கள் அலலது உட்பட்டவர்கள், All public personalities are liable for criticism , இதில் யாரும் விதி விலக்கு அல்ல. வந்தே மாதரம்

 • M Manivel - Madurai,இந்தியா

  மாண்புமிகு இந்த நீதிபதிகள் கூறுவது சரி என்றால் மாண்புமிகு நீதிபதி கர்ணன் கருத்தும் கட்டாயம் சரியாகத்தான் இருக்கும் அதனை சீர்தூக்கி பாராது சிறைத் தண்டனை கொடுத்தது தவறு என்றாகிறது. இந்த நான்கு நீதிபணிகளுக்கும் தண்டனை கொடுக்க நினைத்து பார்க்க முடியுமா? ஆனால் ஏன் பாகுபாடு??? நீதிதேவதை தடுமாறுகிறதா

 • mthahir - Kuwait,குவைத்

  பிறகு எப்படி மோடி & அமித்ஷா திட்டதை நாட்டு மக்கள் அறிவது

 • Veeran - Kanyakumari,இந்தியா

  இவர்கள் வெளியே ஏன் வந்து சொல்லர்கள் அது நமக்காக அமித் ஷா சம்பத்தப்பட்ட வழக்கு ஒரு ஜூனியர் நீதிபதியிடம் விட்டு இருக்குறார் தலைமை நீதிபதி இது மாதிரி நிறைய பிரபலங்க உள்ள வழக்கு சந்தேகப்படும் படியாக செயல் இருந்தது அதனால் தான் ஜனநாயக இந்தியாவில் நீதித்துறையை நம்பி இருக்கும் சாதாரண மக்களுக்கு இவர்கள் கடவுள்

 • Raja - chennai,இந்தியா

  குரியன், நீ இந்த பிரச்சினை மக்கள் முடிவு செய்யட்டும் என்று அரசியலாக்கி விட்டு, வெளியாட்கள் யாரும் தலையிட தேவை இல்லை என்றால் என்னத்துக்கு மீடியாவிடம் வந்து பேசினாய்?. மனநிலை சரியில்லாதவர்கள் தீர்ப்பு வழங்க கூடாது.

 • raja - Kanchipuram,இந்தியா

  இந்த நாட்டில் எந்த ஒரு துறையும் ஒழுங்கானது இல்லை. மக்கள் எப்படியோ அதன்படியே அனைத்தும் அமையும்

 • vnatarajan - chennai,இந்தியா

  வெளியாட்கள் தலையிடத் தேவையில்லை கோர்ட் நிர்வாகம் மூலமே பிரச்னையை தீர்த்துக் கொள்வோம் என்று இப்போது கூறும் நீதிபதி ஏன் அன்று அவசர அவசரமாக மீடியாவை அழைத்து அவர்கள் மூலம் தேவையில்லாமல் மக்கள் முன்னிலையில் வைத்தீர்கள் என்று புரியவில்லை. இனிமேலாவது எந்த பிரச்னைவந்தாலும் உங்கள் நிர்வாகத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வழியை பாருங்கள் நம்ம நீதி துறையைப்பார்த்து இனிமேலும் உலகம் சிரிக்க வைக்காதீங்க

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  பார்கவுன்சிலு யாரோட அப்ரசண்டிகள் நைனா?

 • karthikeyan -

  கமிஷன் கொடுத்தால் போதும் எல்லாம் முடியும்

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  சரி சரி, விறுவிறுன்னு சரி பண்ணுங்க. வெளியே சிரிப்பா சிரிக்குது..

 • Giridharan Srinivasan - Chennai,இந்தியா

  நீதிபதி கர்ணனுக்கு ஒரு நியாயம், இந்த நான்கு நீதிபதிகளுக்கு ஒரு நியாயமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement