Advertisement

இந்தியா மீது அணுஆயுத தாக்குதல் : பாக்., பகிரங்க மிரட்டல்

இஸ்லாமாபாத் : பாக்.,ன் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராணுவ தளபதி கூறிய இந்த கருத்திற்கு தற்போது பாக்., பதிலளித்திருப்பதுடன், இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டலையும் விடுத்துள்ளது.


பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய ராணுவ தளபதியின் பேச்சு மிகவும் பொறுப்பற்றது. இது அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணுஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார். ஒருவேளை அது தான் இந்தியாவின் ஆசை என்றால், அவர்கள் வந்து எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.


இவரைத் தொடர்ந்து பாக்., வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பாசில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற, மிரட்டல் தோணியிலான பேச்சு இந்தியாவின் கெட்ட எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது. பாக்.,ம் தனது தாக்குதல், தடுப்பு திறனை காட்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எந்த வகையில் அவர்கள் எங்களை தவறாக எடைபோட வேண்டாம். பாக்., தன்னை காத்துக் கொள்ள முழு திறனுடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (33)

 • Sukumar Talpady - Mangalore ,இந்தியா

  இப்படித்தான் 1970-71 ல் பாகிஸ்தானின் உப படை தலைவர் Lt.Gen .Amir Abdulla Khan Niazi என்பவர் சவடால் vittaar. பங்களா தேஷ் போரில் பாக்கிஸ்தான் இந்தியாவை தோற்கடித்து தங்கள் மூதாதையரின் பெருமையை காப்பாற்றுவோம் என்றார் . அவரின் மூதாதையர் யாரென்று அவருக்கே தெரியாது . விட்டார் சவடால் . நடந்தது என்ன ? பாகிஸ்தான் துண்டாடப் பட்டது . இதை இந்த பாக்கிஸ்தான் வெளி உறவு அமைச்சருக்கு நினைவூட்ட வேண்டும் . இந்திய தளபதி ஒன்றும் மிரட்டல் விடும் முறையில் பேச வில்லை . அரண்டவனுக்கு மிரண்டதெல்லாம் பேய் என்று தோன்றுமாம் .அதுதான் நடந்துள்ளது .

 • INDIAN - Mamallpuram ,இந்தியா

  நுணலும் தன் வாயால் கெடும்.

 • mossad - madurai

  k bhai mathi ipa edum paniradinga...unga nanban israel pma alika vandinganu ninachu gunda kinda potruvanga israel kita adi vangitu ungala vaala mudiyathu pathu

 • appavi - cumbum,இந்தியா

  ஹி ஹி ஒரு சின்ன சந்தேகம் ......அப்படி ஒரு வேளை அணுகுண்டு வீசினால் இங்கு உள்ள அந்த நாட்டு விசுவாசிகள் என்ன ஆவார்கள்....

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  இவனுக திருந்த மாட்டானுக

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  இதைவிட அநாகரீகமாக பேசும் நம்ம நாட்டில் இருக்கும் சமூக விரோத அமைப்புகள் கட்சி என்ற போர்வையில் இயங்கிக்கொண்டு இருக்கிறதே அதற்க்கு???? வந்தே மாதரம்

 • rama - johor,மலேஷியா

  இந்தியாவை இந்த அளவுக்கு பாகிஸ்தான் மிரட்டுவது, தவறு பாகிஸ்தானிடம் இல்லை இந்தியாவிடம் தான் இவ்வளவு திறமையான விஞ்ஞானிகள் இருந்தும் கூட நாட்டை அமெரிக்கா போன்ற ராணுவபலம் கொன்ட நாடாக உருவாக்க முடியவில்லை, இந்தியாவின் திறமையான விஞ்ஞானிகள் இன்று அமெரிக்காவில் வேலை செய்கின்றனர் தவரு யாருடையது. ஊழல் மற்றும் நேர்மையற்ற இந்திய அரசியல் வாதிகள் தான். காரணம்

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அடிக்கடி இவர்கள் இவ்வாறு சொல்வது, நாம் அமைதி காப்பது இவையெல்லாம் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பொறுப்பான நாடு என்ற பெயரைப் பெற்றுத்தர உதவும் .... நமது தரப்பிலும் யாராவது இடையில் எப்பொழுதாவது ஒருமுறை "இந்தியாவும் அலங்காரப் பொருளாக அணு ஆயுதத்தை வைத்துக் கொண்டிருக்காது" என்று சொல்ல வேண்டும் .....

 • Indhuindian - Chennai,இந்தியா

  அதான் 1948 இல் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமே இன்னும் புத்தி வரவில்லையா அல்லது வெறும் உதாரா?

 • venkatan - Puducherry,இந்தியா

  இந்த மாதிரியான வாய் சவடால் விடும் கோழைகள், காஷ்மீரிலும், ஊடுருவும் இடங்களிலும், pok ilum, cold வார் நடத்தி பிழைப்பு நடத்தும் பாக்கிகளையும் நிர்மூலம் பண்ண இந்த உலகில் பல வல்லரசுகள் உள்ளன என்பதை மறந்து கொக்கரிக்கிறது குள்ள நரிக் கூட்டம். சண்டைக்கு போக மாட்டோம்.வந்தா பாக்கி வைக்கமாட்டோம்

 • rama - johor,மலேஷியா

  தமிழ்நாட்டை பின் வழியில் கைப்பற்ற நினைக்கும் பாஜகவுக்கும் இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தானுக்கும் வித்தியாசமிலலை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பாகிஸ்தானை நாலாக உடைத்தாலன்றி பிரச்சினை தீராது...

 • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

  ஓ. ஆத்தா... சொல்லி வை அவனிடம்.... வீராப்பு பேச்சு வேண்டாம்.... " பாக்.,ன் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார்".... அவர் அணு ஆயுதம் பத்தி எதயும் சொல்லவில்லை.... ஆனால் நீ நம்பி இருப்பது வெறும் அணு ஆயுதத்தை மட்டுமே... உண்மை... திருட்டு தனமாக நீ எங்களை விட அதிகம் தயாரித்து வைத்து இருக்கே... ஆனால் ஒண்ணு... அதை சரியா யூஸ் பண்ண தெரியணும்.... சத்தியமாக அந்த தெறமை உன்னிடம் இல்லை.... உன் அணு ஆயுதம் வழியிலேயே தகர்க்கப்படும்... அந்த டெக்னாலஜி எங்களிடம் உண்டு... நீ ஒரு நாத்தும் புடுங்க முடியாது... PNS Ghazi கு 1971 இல் என்ன நடந்தது?.... கடலுக்குள் அமுக்கிவிட்டோம்லெ... ஸ்மார்ட் போன் எல்லாரும் வைச்சிருக்கான்... ஆனால் அதை முழுமையா யூஸ் பண்ண எத்தனை பேருக்கு தெரியும்.... அந்த கதைதான் உன் கையில் உள்ள அணு ஆயுதமும்....

 • தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா

  ஏதாவது ஒன்றை சீக்கிரம் முன்னெடுத்து செய்யவும். எத்தனை நாள் புலி வருது, புலிவருது என்று பாணா சுற்றிக்கொண்டு இருப்பது.. எப்படியும் இருபுறங்களிலும் இழப்புகள் இருக்கும். நாள்தோறும் பிரச்சினைகளால் மண்டைக்குடைச்சல் ஏற்படுவதை விட, ஒருமுறை பலப்பரீட்சை-இறுதிவரை -பார்த்துவிடுதல் நலம்..

 • N.Purushothaman - Cuddalore,இந்தியா

  டேய்...மொதல்ல வச்சி இருக்கிற குண்டுங்க எல்லாம் வெடிக்குதான்னு டெஸ்ட் பண்ணி பாருங்கடா.. .எல்லாம் நமத்து இருக்க போவுது...இல்லாங்காட்டி வெயில்ல நல்லா காய வச்சி எடுத்து வைங்கடா...

 • Sanny - sydney,ஆஸ்திரேலியா

  இந்த சீனாகாரன் திருந்தினாலும்,இந்த பாக்கிகள் திருந்தவே, திருந்தாது.

 • Endless - Chennai,இந்தியா

  முயற்சி செய்யட்டும்.... நம்மிடம் இருக்கும் "Multi Tier Missile Defence Technology" யை பற்றி அறியாமல் பேசுகிறார்.... இந்த தொழில்நுட்பத்தில் நாம் உலகின் நான்காவது (அமெரிக்கா, ருசியா, இஸ்ரேலுக்கு அடுத்து) இடத்தில இருக்கிறோம்...... PAD (Prithvi Air Defence) அதிக உயரத்தில் எதிரிகளின் அந்த விதமான ஏவுகணையையும் அழிக்கும் திறன் கொண்டது... Advanced Air Defence (AAD) Missile குறைந்த உயரத்திலேயே எதிரிகளின் அந்த விதமான ஏவுகணையையும் அழிக்கும் திறன் கொண்டது...... இன்னும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.... ஒன்று நிச்சயம், "கெடுவான் கேடு நினைப்பான்" என்பதை நாம் கண்கூடாக காணப்போகிறோம்........

 • Ravichandran - dar salam ,தான்சானியா

  ரெண்டு பெரும் அணுகுண்டை வச்சி விளையாடுறீங்க சூப்பர். கொஞ்சம் காஸ்ட்லீ கேம் தளபதிகளே பார்த்து.

 • Pravin - Coimbatore

  Ipo parunga sila peru Pakistan & China ku sombu thooka varuvanga...

 • NRajasekar - chennai ,இந்தியா

  The congress is ready to join with them along with. Some. Letter pad. Parties

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  வடிவேலு நானும் ரவுடிதான்னு சொன்னால் சிரிப்பு வருமே, அதுபோல இருக்கு இந்த பாக்கியின் பேச்சு.. போர் வந்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகும்..

 • Radheyen - Aingani,கேமரூன்

  யார்ராஆ உன்ன தடுத்தா போட்றா போட்டுத்தான் பாரு ....................

 • குவாட்டர் கோவிந்தன் - Koyambedu,இந்தியா

  வாடா வாடா நீ வாடா..உன்ன வெச்சி செய்வோம்டா நைனா...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement