Advertisement

இன்றைய (ஜன.,14) விலை: பெட்ரோல் ரூ.73.67; டீசல் ரூ.64.89

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.67, டீசல் விலை லிட்டருக்கு ரூ.64.89 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜன.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.67காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையிலிருந்து19 காசுகள் உயர்ந்து ரூ.64.89 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜன.,14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (8)

  • Anandan - chennai,இந்தியா

    நான் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை உயராதுனு சொல்லிட்டு கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவிற்க்கு குறைந்த போதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலையை உயர்த்தி நான் எப்போதும் பொய் மட்டுமே பேசுவேன் என்று நிரூபித்த மோடி. அடிமைகளுக்கு மோடி குடுத்த பரிசு பெட்ரோல் விலையேற்றம். அனுபவிங்க.

  • ஜானகிராமன்,மடிப்பாக்கம் -

    சத்தமே இல்லாமல் விலைவாசி ஏறுகிறது

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    காவி தீவிர வாதிகள், பிஜேபி ஆதரவாளர்கள், பாஜக மூர்க்கன்கள், திராவிடர்களை திட்டுகிற ஆரியர்கள், திராவிடர்களை திட்டுகிற திராவிடர்கள், இதை கஷ்டப்பட்டு சகித்துக் கொண்டு சிரிப்பு வேஷம் போட்டு கொண்டு இருக்கிறார்கள். நடுத்தர வர்க்க மக்களின் கஷ்டம் யாருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லையே. பஸ்ஸில் நெரிசலிலிருந்து விடுபட கஷ்டப்பட்டு காசு சேர்த்து பைக் வாங்கி நிமிருவதற்குள் பெட்ரோல் விலை ப்ளைட்ல போகுது.. வேலைக்கு போகும் அவசியம் இல்லாத பண வர்க்கமும், ரிடயர்டான தாத்தாக்களும், பயன்பாட்டைக் குறைக்க விலை ஏற்றுவதாக சொல்வார்கள்.

  • raghavan - Srirangam, Trichy,இந்தியா

    இப்படியே ஏறிக்கொண்டு இருந்தால் ஏற்கனவே தள்ளாடும் போக்குவரத்து கழகங்களின் நஷ்டத்தை சமாளிக்க விரைவில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்திவிடும்.

  • YesJay - Chennai,இந்தியா

    BJP has failed to fulfill it's poll promise to curb the petrol price. Even though crude oil price has remained same for past few years, the petrol price in India has been increasing steadily.

  • venkat - Chennai,இந்தியா

    பெட்ரோல் விலைக்கும் ஜியோ ஆபர்க்கும் ஏதோ தொடர்பு உண்டு

  • Gopalvenkatesh Sai - Chennai,இந்தியா

    இது ஒரு பகல் கொள்ளையே மூன்று மரத்திற்கு முன் 58 சில்லறை இப்பொது 64 .89 இந்த மாத முடிவில் 65 தாண்டும் . மொத்தமாக ஏற்றினால் மக்களுக்கு தெரிந்துவிடும் இப்படி பைசா பைசா வகை ஏற்றினால் மக்களை சுலபமாக ஏமாற்றலாம் . அரசாங்கம் மக்களுக்காகவே மக்களை ஏமாற்றுவதற்கு அல்ல , இதே நிலையில் போனால் ஏப்ரல் மாதம் வி லை 100 ஐ தாண்டிவிடும். மற்றநாடுகளை ஒப்பிடும்போது இது மிக அதிகம்

  • L.Pannneerselvam - chennai,இந்தியா

    அநியாயமாக விலை ஏற்றி வருகிறார்கள். விலையேற்றத்தை, குறிப்பாக பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை குறைப்பேன், கட்டுப்படுத்துவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் இப்போது இதை பற்றி பேசுவதுகூட கிடையாது. அதற்கு பதிலாக ஜால்ராக்கள் வழக்கம்போல இதற்கும் ஆதரவு தெரிவித்து, இல்லாத பொருந்தாத காரணங்களை அடுக்கும்.அதைத்தான் காங்கிரஸ் சொன்னதே, இப்போது நீங்களும் அப்படி செய்தால் சரியா என்று கேட்டால், உடனே "ஏண்டி இந்தியன்" என்று சொல்வார்கள். மக்கள்தான் இவர்களது பித்தலாட்டத்தை புரிந்துக்கொண்டு, காலம் வரும்போது தக்க பதில் சொல்லவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement