Advertisement

பருவநிலை மாற்ற போராட்டம் : இந்தியா, சீனாவுக்கு ஐ.நா பாராட்டு

நியூயார்க்:பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா, சீனா ஆகியவை உறுதியுடன் உள்ளதாக ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பேசியதாவது:பருவநிலை மாற்றத்தின் அச்சுறுத்தல்களை நாம் சமாளிக்க தவறியதால், அதன் பாதிப்புகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்நிலையில், உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகள், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை ஏற்று அதன் பாதிப்புகளிலிருந்து நம்மை காக்க முயற்சி செய்து வருகின்றன
பருவநிலை மாற்றம் குறித்த போராட்டத்தில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. அவைகள் நம்மை தோற்கடிக்க அனுமதிக்கக் கூடாது இப்பிரச்னையில் ஆப்ரிக்க நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. உலக பொருளாதாரத்தில் பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வரும் சீனா மற்றும் இந்தியா இப்போராட்டத்தை முன்னின்று நடத்தி செல்ல உறுதி கொண்டுள்ளன. மற்ற நாடுகள்.இந்த போராட்டத்தில் பங்கேற்பதில் தயக்கம் காட்டி வருகின்றன. என தெரிவித்தார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

  • Kelan - Chennai,இந்தியா

    நம் நாட்டில் மட்காத வேதிபொருட்களால் தயாரிக்கும் பொருட்களை தடைசெய்ய வேண்டும் எளிதில் மட்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் நதி நீர் கடலில் கலப்பதை அணை கட்டி தடுக்க வேண்டும் பசுமையை பாதுகாக்க வேண்டும் விவசாயம் வளர்க்க வேண்டும் இவைகள் நிலைத்தால் நம் பாரத தேசம் தலை நிமிர்ந்து நிற்கும் நம் தலைமுறை வளமாக நாம் முயற்சி செய்வோம்

  • wellington - thoothukudi,இந்தியா

    பருவ நிலை மாறுபாடு ஒப்பந்தமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நசுக்கப்போகும் சதித்திட்டம் தான் ,இதில் இந்த முட்டாள்கள் கையெழுத்திட்டு வந்திருக்கிறார்கள் ,இதனுடைய முதல்படிதான் டெல்லி,சென்னை புகைமூட்டம் ,வேண்டுமென்றே உருவாக்கப்படும் இந்த மாசுக்களினால் ,மக்களிடம் பாருங்கள் மாசுபட்டுவிட்டது எனவே தொழில்சாலைகளை மூடவேண்டும் என்று கூறப்போகின்றனர் ,மக்களும் ஆமாம் போடப்போகின்றனர் எல்லா தொழில்களும் முடங்கப்போகின்றது அப்போது தெரியும் ஏமாந்துவிட்டோம் என்று .........

  • Agrigators - Chennai,இந்தியா

    விவசாயத்தை கண்ணாக நினைத்து பாதுகாத்து வளர்த்தெடுப்போம் மனிதம் போற்றுவோம் அணைத்து உயிரினங்களுக்கும் உணவளிப்போம் பூமித்தாயை பேணி பாதுகாப்போம் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் agrigators india

  • Sekar - Madurai

    what you want, all need to follow you else will die ?

  • Christians -

    கொத்துக் கொத்தாய் சாகும் இந்து, புத்த சாமியார்கள். பாவத்தின் சம்பளம் மரணம்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    இவரை சென்னைக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்க வேண்டும். வேளை கெட்ட வேளையில் இந்த "பாராட்டு".. வேடிக்கை தான்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement