Advertisement

'இண்டிகோ' மருத்துவமனை நிறுவனர் நாள் கொண்டாட்டம்

சென்னை:'இண்டிகோ' மருத்துவமனையின் நிறுவனர் நாள் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு, கருத்தரிப்பு குறித்த இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சென்னை, அண்ணாநகர், இரண்டாவது அவென்யூவில், இண்டிகோ, பெண்களுக்கான கருத்தரிப்பு மைய மருத்துவமனை இயங்கி வருகிறது. இம்மருத்துவமனை நிறுவனர், நடிகர் சோபன்பாபு.
பெண்களுக்காக இயங்கும் இம்மருத்துவமனையில், கருத்தரிப்பு, கர்ப்பக்கால சிகிச்சை, குழந்தையின்மை சிகிச்சை, பெண்களுக்கான உடல் எடை குறைப்பு ஆகியவற்றுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, குழந்தை பேறு வழங்கிய, இம்மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு, நிறுவனர் தினம், நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு, மருத்துவமனை தலைமை மருத்துவ ஆலோசகர் சரத் பாட்டினா, மேலாண் இயக்குனர் சுரக்சித் ஆகியோர், பெண்களுக்கான கருத்தரிப்பு குறித்த, இலவச ஆலோசனைகளை வழங்கினர்.மருத்துவமனை மேலாளர் மிருதுளா சரத் பாட்டினா, கிளீனிக்கல் இயக்குனர் ஸ்ரீலதா ஆகியோர், மருத்துவமனை ஊழியர்களை கவுரவப்படுத்தினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement