Advertisement

எஸ்.ஆர்.எம்., கல்லூரியில் பொங்கல் விழா

சென்னை:எஸ்.ஆர்.எம்., கல்லுாரியில், பொங்கல் பண்டிகை விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் உள்ள, உணவக மேலாண்மைக் கல்லுாரியின், நிறுவன வளாகத்திற்குள், அந்த பல்கலையின், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள், 12ம் தேதி, பொங்கல் விழா கொண்டாடினர்.

விழாவில், தென்கொரியாவில் உள்ள, ஹானம் பல்கலைக்கழகம் மற்றும் சிக்கம் மாநிலத்தில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். விழாவில், மாணவர்கள், பாரம்பரியமான, பரத நாட்டியம், கிராமிய நடனம், பரை மேளம் நடனம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளான, உரி அடித்தல், கயிரிழுத்தல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுகளையும் நிகழ்த்தினர்.
மாவிலையாலும், தோரணங்களாலும் அலங்கரித்து, மண்பானையில், பொங்கல் செய்து சாப்பிட்டனர். இந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு, பல்வேறு வகையான ருசியான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சியில், எஸ்.ஆர்.எம்., உணவக கல்லுாரியின், மேலாண்மை நிறுவன இயக்குனர் ஆண்டனி அசோக்குமார், மாணவர்களுக்கு அன்பளிப்பு வழங்கினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

    engume sothappal pongal panayai kalani aninthu thoduvathu sariya allathu thangalin veli nattu udai mokam kannai kattividukiratha

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement