Advertisement

பெண்களிடம் செயின் பறிப்பு

கே.கே.நகர்:கே.கே.நகர், திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர், சாவித்ரி, 40. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், வீட்டின் அருகே உள்ள, மளிகை கடைக்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, இரண்டு மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த, 4 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர். கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.மற்றொரு சம்பவத்தில், கொளத்துாரை சேர்ந்தவர், ஆதிரை, 47. அவர், நேற்று காலை தன் உறவினருடன், இருசக்கர வாகனத்தில், 200 அடி சாலை வழியாக, சென்று கொண்டிருந்தார். பாடி மேம்பாலம் அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், ஆதிரை அணிந்திருந்த, 4 சவரன் செயினை பறித்துச் சென்றனர். வில்லிவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement