Advertisement

சிறுவன் கொலை தாய்மாமன் சரண்

ஆவடி:ஆவடியில், குடிபோதையில், 17 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில், அவரது தாய்மாமன், நேற்று போலீசில் சரணடைந்தார்.
ஆவடி, பக்தவச்சலபுரம், முதல் தெருவைச் சேர்ந்தவர் சேவியர், 55. இவருடைய மகன் பாலாஜி, 17; தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
அவரது தாய்மாமன் பிரான்சிஸ் சேவியர், 50, அதே தெருவில் வசித்து வருகிறார். 11ம் தேதி இரவு, குடிபோதையில் வந்த பிரான்சிஸ் சேவியர், குடும்ப தகராறில், பாலாஜியை, கத்தியால் குத்தி கொலை செய்து தப்பினார்.
பிரான்சிஸ் சேவியரை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று, பிரான்சிஸ் சேவியர், ஆவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement